(Reading time: 15 - 30 minutes)

ளவரசன் முகத்தில் திடீரென்று சந்தோசத்துடன் ஒரு துள்ளல் வந்து வந்த வேகத்திலேயே அது உடனே மறைந்தது.

அவனையே பார்த்துக் கொண்டிருந்த அனைவரின் முகமும் வாடியது.

பாலு தான் தேற்றிக் கொண்டு “என்ன மாப்பிள்ளை சார். ஏன் இந்த அளவுக்கு சோகம். நீங்க ஏன் உங்களை போட்டு இப்படி வருத்திக்கறீங்க. உங்க கல்யாணம் கண்டிப்பா நடக்கும். நீங்க கவலை படாதீங்க” என்றான்.

“இல்ல பாலு. கல்யாணம் நடக்கும். அதெல்லாம் சரி தான். ஆனா யாரோட மனசும் கஷ்டப்பட்டு இந்த கல்யாணம் நடக்க கூடாது. எனக்கு அது தான் கஷ்டமா இருக்கு. எப்படி எல்லாரையும் சரி பண்றதுன்னு தான் யோசிச்சிட்டு இருக்கேன். அதான் இந்த டென்ஷன் எல்லாம்” என்றான் சோகமாக.

பொறுமையிழந்த ஜோதி “இப்படி எல்லாம் ஏன் சோகமா பேசிட்டிருக்கீங்க. ஒரு நெகடிவ் வைப்ரேஷனை எங்களுக்கு எல்லாம் ஏன் பாஸ் பண்றீங்க. எல்லாம் நல்லபடியா நடக்கும்னு நாங்க எல்லாம் நம்பறோம். நீங்களும் நம்புங்க. அவ்வளவு தான்” என்றாள்.

சந்துரு அதிசயமாக ஜோதியை பார்த்தான்.

“என்ன அண்ணி அசத்தறீங்க.” என்றான்.

“பின்ன என்னவாம். இவரே இப்படி பீல் பண்ணா இனியாக்கு எப்படி இருக்கும். நமக்கு இருக்கற நம்பிக்கையும் இவர் கெடுத்திடுவார் போலருக்கே”

“சரி சரி விடு ஜோதி. சகலை நினைக்கரதுலையும் எந்த தப்பும் இல்லை. யாருக்கும் எந்த கஷ்டமும் வரக் கூடாதுன்னு தானே நினைக்கறாரு, நீங்க இதெல்லாம் போட்டு குழப்பிக்காதீங்க. அவங்க பேரண்ட்ஸ்ன்ற இடத்துல இருந்து பேசறாங்க. சோ அவங்களையும் தப்பு சொல்ல முடியாது. நீங்க சொல்ற மாதிரி யாருக்கும் எந்த கஷ்டமும் கொடுக்காம உங்க கல்யாணத்தை நடத்த வேண்டியது என் பொறுப்பு. ஓகே வா. அப்புறம் இந்த சகலையை மறந்துடாதீங்க. ஓகே வா” என்றான்.

“கண்டிப்பா” என்றான் இளவரசன் குரல் தழுதழுத்து.

இது எல்லாவற்றையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த அபி இளவரசனிடம் “அப்ப நீங்க தான் எங்க சித்தியை மேரேஜ் பண்ணிக்க போறீங்களா” என்றாள்.

“ஆமா டா குட்டி”

“அப்ப நீங்க ஏன் என் கிட்ட பெர்மிஷன் கேட்கலை” என்றாள் அபி.

“என்னடா இது” என்ற இளவரசன் தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான்.

அவன் நிலையை பார்த்த எல்லோரும் சிரித்தனர்.

“உன் கிட்ட எதுக்கு டா பெர்மிஷன் கேட்கணும்” என்றான் இளவரசன்.

“ம்ம்ம். என் சித்தியை மேரேஜ் பண்ணிக்க என் கிட்ட பெர்மிஷன் கேட்டு தான் ஆகணும்”

“அது சரி. டேய் சந்துரு. இவங்க பாமிலி புல்லா ஒரு முடிவா தான் டா இருக்காங்க. பார்த்தியா என் நிலைமையை. நான் இந்த குட்டி கிட்ட எல்லாம் பெர்மிஷன் கேட்கனுமாம்”

“சித்தி. நீங்க இவங்களை மேரேஜ் பண்ணிக்காதீங்க. பாருங்க. இவங்க என் கிட்ட கேட்கவே இல்லை” என்றாள்.

இனியாவும் “சரி அபி செல்லம். நீ சொல்லிட்ட இல்ல, நான் பண்ணிக்கவே மாட்டேன். எனக்கு அபி குட்டி தான் முக்கியம்ப்பா. அபி சொல்றவங்களை தான் நான் மேரேஜ் பண்ணிப்பேன்” என்றாள்.

அபி பெருமையாக இளவரசனை பார்த்து “பார்த்தீங்களா” என்றாள்.

எல்லோரும் இளவரசனை பார்த்து சிரிக்க ஆரம்பித்தனர்.

“என்னண்ணே உனக்கு டேப்பாசிட்டே போச்சி” என்றான் சந்துரு.

“நீ பேசுவடா பேசுவ. எனக்கு ஒரு டைம் வரும். அப்ப பார்த்துக்கறேன்” என்று அவனிடம் சொல்லிவிட்டு அபியிடம் திரும்பி “அபி மேடம். உங்க பவர் தெரியாம பேசிட்டேன். நீங்க தான் முதல்ல எனக்கு பெர்மிஷன் தரனும். ப்ளீஸ்” என்றான்.

அபி யோசிப்பது போல் கன்னத்தில் கை வைத்து “ம்ம்ம். அப்படின்னா நான் கேட்கறது எல்லாம் நீங்க வாங்கி தருவீங்களா” என்றாள்.

“எல்லாமே வாங்கி தருவேன் டா”

“எங்க சித்தியை நல்லா பார்த்துப்பீங்களா” என்றாள்.

“ஓ ரொம்ப நல்லா பார்த்துப்பேன் டா.”

“அப்படின்னா சரி. சித்தி நீ இவரையே மேரேஜ் பண்ணிக்க” என்றாள்.

இனியா அபியை கட்டிக் கொண்டு “பார்த்தியாக்கா.  நீங்க யாராச்சும் இப்படி கேட்டீங்களா. என் அபி குட்டிக்கு என் மேல எவ்வளவு அக்கறை பார்த்தீங்களா.” என்றாள்.

“ஆமா ஆமா ரொம்ப அக்கறை தான். முதல்ல அவளுக்கு வேண்டியதை வாங்கி தர சொல்லி கேட்டுட்டு அப்புறம் தான் உன்னை பத்தி எல்லாம் பேசுறா. தெரிஞ்சிக்க”

“போ மம்மி என்னை குறை சொல்லாம எதாச்சும் சாப்பிட எடுத்துட்டு வா” என்று தாயை அதட்டினாள் அபி.

“சரிங்க பெரிய மனுசி. நீங்களும் வாங்க. அப்புறம் என்னை ஏதும் குறை சொல்வீங்க” என்றபடி அவளையும் அழைத்துக் கொண்டு ஜோதி உள்ளே சென்றாள்.

“சரி வா. நாமளும் போய் அவங்களுக்கு ஹெல்ப் பண்ணலாம்” என்று பாலு சந்துருவையும் அழைத்தான்.

“போங்கண்ணே. உங்க வோய்ப்க்கு நீங்க போய் ஹெல்ப் பண்ணுங்க. என்னை ஏன் கூப்பிடறீங்க”

“பாலு. நீ இவ்வளவு டுயூப் லைட்டா இருப்பன்னு எனக்கு தெரியாது. இப்ப நீ இப்படி நந்தி மாதிரி இல்லாம ஹெல்ப் பண்ணா தான் நாளைக்கு நாங்க எல்லாம் ஹெல்ப் பண்ணுவோம் அதை தெரிஞ்சிக்கோ” என்றவாறு அவனை இழுத்து சென்றான் பாலு.

“என்னென்னவோ நடந்து போச்சி இல்ல” என்றான் இளவரசன்.

அவனையே உற்று நோக்கிய இனியா “ரொம்ப வருத்திக்காதீங்க இளா” என்றாள்.

“இல்ல டா. என்னவோ என்னால தான் இதெல்லாம்னு எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. இப்ப பாரு அத்தை ரொம்ப பீல் பண்றாங்க. அம்மாவும் ஒத்துக்க மாட்றாங்க. இவங்களை எல்லாம் எப்படி சரி பண்றதுன்னு எனக்கு ஐடியாவே இல்லை இனியா” என்றான்.

“எல்லாம் சரி ஆகிடும். நீங்க பீல் பண்ணாதீங்க. இப்ப தான் இந்த பிரச்சனை நடந்திருக்கு. எல்லாருக்கும் இதை ஏத்துக்க நாம டைம் கொடுக்கணும். அதை விட்டுட்டு நாம உடனே எல்லாம் சால்வ் ஆகணும்னு நினைச்சி ஏதும் பண்ணா இன்னும் பிரச்சனை தான் ஆகும். எல்லாத்தையும் பொறுமையா ஹான்டில் பண்ணலாம் இளா”

“ம்ம்ம். நானும் அப்படி தான் நினைக்கறேன். பட் என்னால அது முடியலை டா. அம்மா, அத்தை இவங்க எல்லாம் பீல் பண்றதை என்னால பார்க்க முடியலை”

“ம்ம்ம். எனக்கு புரியுது. பட் நாம இந்த விசயத்துல பொறுமையா தான் இருக்கணும்.”

“ம்ம்ம்”

டுத்த நாள் இனியா ஹாஸ்பிடலில் இருந்து வந்த போது அவள் தந்தையும் இளவரசனும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

இனியா அமைதியாக வந்து அங்கு அமர்ந்தாள்.

“இல்ல மாமா. அம்மா கிட்ட என்னால ஏதும் பேச முடியலை. ஆனா சந்துரு சொன்ன விவரம் இது தான் மாமா. அம்மாவா ஏதோ தேவை இல்லாம நினைச்சிட்டு அதுல ஸ்ட்ராங்கா இருக்காங்க”

“சரி விடுப்பா. நான் பேசி அவளுக்கு புரிய வைக்கறேன். அவ புரிஞ்சிப்பா. அது என் பொறுப்பு. நீ அதை நினைச்சி பீல் பண்ணாத”

இனியா “வேண்டாம்ப்பா. நீங்க யார் கிட்டவும் போய் பேச தேவையில்லை. எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்” என்றாள்.

“இனியா” என்ற இளவரசனால் அதற்கு மேல் ஏதும் பேச இயலவில்லை.

“என்னம்மா என்ன சொல்ற. ஏன் இப்படி எல்லாம் பேசற” என்றார் ராஜகோபால் பதரியவராக.

“இந்த கல்யாணம் வேண்டாம்” என்றாள் இனியா தெளிவாக.

இளவரசன் அவள் முகத்தையே கேள்வியாக பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் புறம் பார்த்த இனியாவால் அவன் கண்களை பார்க்க இயலவில்லை.   

தொடரும்

En Iniyavale - 18

En Iniyavale - 20

{kunena_discuss:679}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.