(Reading time: 12 - 23 minutes)

 

ள்ளே ரகு சரண் கைகளை கெட்டியாக பிடித்தப்படி அமர்ந்திருந்தான்.அவள் வந்ததைப் பார்த்து,

"என்னம்மா? நீ இன்னும் வீட்டிற்கு போகலை? "

"இல்லை...அது...சரணை செக் பண்ணிட்டு போகலாம்னு வந்தேன்."-ரகு ஏதோ புரிந்தவனாய்,

"சரிம்மா...நான் வெளியே இருக்கேன்.நீ பாரு...!"-என்று வெளியேறினான் ரகு.மதுபாலா மெல்ல அவனருகில் சென்றாள்.சரண் உறங்கிக் கொண்டிருந்தான்.அவன் தலையில் கட்டுப் போடப்பட்டிருந்த இடத்தில், மெதுவாக, மிருதுவாக கை வைத்தாள்.அது வரையில், அசைந்தே கொடுக்காத மரங்கள், சில்லென்று தென்றல் காற்றை வீசின.அவள் அவன் தலையை தடவிக் கொடுத்தாள்.அவள் கண்களில், நீர் பெருக்கெடுத்தது,

"என்னை...மன்னிச்சிடு ஆதி!நான் உன்னை தப்பா புரிஞ்சிக்கிட்டேன்.12 வருஷமா உனக்கு ரொம்ப பெரிய தண்டனையை தந்துட்டேன்.நான் செய்த இந்த தப்புக்கு என்னை மன்னிச்சிடுடா!"-அவள் சிந்திய கண்ணீர்த்துளி ஒன்று அவன் கன்னத்தை நனைத்தது.அவன் கண்கள் அதை உணர்ந்து மெல்ல திறந்தன.திறந்தவன் கண்கள் ஆச்சரியத்தால் தானே நிரம்பி இருக்க முடியும்? இத்தனை வருடங்களாய், இந்த பொழுதுக்காக தானே காத்திருந்தான் அவன்.தன் அருகில் அமர்ந்திருப்பது, அவள் தானா? இது கனவா? புரியாமல் குழம்பினான்.அவனது, குழப்பத்தை தீர்க்கும் வகையில், , "ஆதி."-என்றாள் மதுபாலா.கனவல்ல...நிஜம் தான்.இவள் என் மதுதான்.உள்ளுற சொல்லிக் கொண்டான் அவன்.

"என்னை...மன்னிச்சிடுடா!"-அவளது இந்த வார்த்தை அவனுக்கு ஒரு நம்பிக்கையை தந்தது.இனி, இவள் தன்னை விட்டு விலக மாட்டாள் என்ற நம்பிக்கை தான் அது.அவனது, வலது கரம் மெல்ல எழும்பி அவள் கன்னத்தை வருடி தந்து, அவள் கண்ணீரை துடைத்தது.அவன் இதழ்களில், 12 வருடங்களுக்கு பிறகு, அழகிய குறும்போடு சேர்ந்து, ஆதரவான புன்னகை தவழ்ந்தது.இதுப் போதுமே இந்த ஜென்மம் தீரும் வரை வாழ்வதற்கு!

காதலின் சுவாசமானது, எதில் வாழ்கிறது? நீரிலா? நிலத்திலா? நெருப்பிலா? தென்றலிலா? ஆகாயத்திலா? உடலிலா? உயிரிலா? கண்களிலா? மௌனத்திலா? எதிலும் இல்லை....அது உணர்வுகளில் வாழ்கிறது.அதற்கு, அழிவு என்பதே இல்லை.பிரபஞ்சத்தின் அளவு தான் என்ன? இறைவனின் உருவம் என்ன? உணர்வுகளின் சங்கமம் எங்கே? அனைத்திற்கும் ஒரே பதில்....காதல்.மந்திர வார்த்தை இது.கல்லிலும் கலை வர்ணத்தை காணும் வார்த்தை இது.சிலைக்கும் உயிர் தந்த சிற்பி இது!

அதிகாலை சூரியன் விண்ணில் தன் கதிர்களை பரவ விட்டிருந்தான்.

"ரகு....ராத்திரி எல்லாம் தூங்கலையா நீ? "-மதுபாலா.

"இல்லம்மா....அது...."

"நல்ல நண்பன் நீ!ஆதித்யாக்கு ஒண்ணுமில்லை.நீ வீட்டுக்கு போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு! நான் இருக்கேன்."

"இல்லம்மா....அவன் முழிச்சிக்கிட்டானா...எதாவது கேட்பான்."

"சரி...அப்போ நிரஞ்சனை வர சொல்லிட்டு போ! தூங்கிட்டு இருக்கவன் எழுந்தான்னா...நான் காலி..."

"தேங்க்ஸ் மது..."

"எதுக்கு? "

"ஆதியை புரிந்துக் கொண்டதற்க்கு."

"அப்படி பார்த்த அவனை புரீஞ்சிக்க வைத்ததற்கு நான் தான் தேங்க்ஸ் சொல்லணும்."-அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே ஆதித்யா கண் விழித்தான்.

"ரகு....ரகு...."

"சொல்லுடா! இப்போ எப்படி இருக்கு? வலி இருக்கா? "

"ஸாரிடா..."

"எதுக்கு? "

"நேற்று நான் உன் பேச்சை கேட்காம கார்ல....."

"அதை விடு! வலி எதாவது இருக்கா? "

"நடக்க கஷ்டமாக இருக்கு!"-ரகு மதுவை பார்த்தான்.

"கவலைப்படாதே!2 வாரத்துல சரியாயிடும்."-அப்போது தான் சரண் மதுவை கவனித்தான்.ஏதோ வெகு நாட்களாய் கைக்கு எட்டாத ஒன்று, கைக்கு எட்டும் தருவாயில் இருந்தப் போதும், ஒன்றும் செய்ய முடியாமல் தவிக்கும் தவிப்பு அவன் பார்வையில் தெரிந்தது.அவன் கவனித்த காரணத்தாலோ! ரகு தன் தொண்டையை செறுமினான். சட்டென்று, தன் நிலை உணர்ந்தவனாய்,

"ராகுல்கிட்ட பேசுனியாடா? "

"ராகுல்கிட்ட தானே பேசிடுவோம்! பேசிடுவோம்!"

"என்னடா? ஒரு பொறுப்பான அப்பா மாதிரியா பேசுற? "-அவனது, இந்த மாற்றம் நிறைந்த பேச்சைக் கேட்டு ஆனந்தம் அடைந்த போதிலும், அவனை கேலி செய்ய,

"நீ பொறுப்பானவனா இருடா! அதுக்கு அப்பறம் என்னை சொல்லுவ..."

"நான் என்ன பண்ணேன்? "-ரகு மதுவையும், சரணையும் பார்த்துவிட்டு,

"நான் வீட்டுக்கு கிளம்புறேன்.நிரஞ்சனை அனுப்பி வைக்கிறேன்."-என்று கூறிவிட்டு நகர்ந்தான்.மதுவிற்கு அவன் நடவடிக்கை ஒன்றும் விளங்கவில்லை.சரணுக்கு அது விளங்கியது என்பதை, அவன் உதிர்த்த புன்னகை விளக்கியது.

"நான் என் ரூம்ல இருக்கேன்...உனக்கு எதாவது வேணும்னா கூப்பிடு!"-என்ற அந்த தனிமையை தவிர்க்க நகர்ந்தவளை, கைப்பிடித்து நிறுத்தினான் சரண்.

"எங்கேடி போற? "-அவனது அந்த கேள்வியிலும், நடவடிக்கையிலும் தடுமாறியவள், மெல்ல சுதாரித்துக் கொண்டு,

"விடு...ஆதி..!"

"ம்....முடியாது என்ன பண்ணுவியாம்? "

"விளையாடாதே...விடு!"

"விளையாடட்டா? "

"உன்னை...நேற்று வரைக்கும் சிடு சிடுன்னு இருந்துட்டு, இப்போ என்ன ரொமான்ஸ் வேண்டி இருக்கு? "

"ஏ....அம்மூ...ஸாரிடி!"

"இல்லடா! நான் தான் ஸாரி கேட்கணும்...நான் உன்னை கஷ்டப்படுத்திடேன்ல? "

"லூசு....என்ன நீ? "-அவள் கண்களில் கண்ணீர் திரண்டதை கவனித்தவன்,

"உடனே! அழ ஆரம்பிச்சிடு! அது எப்படி எல்லா பொண்ணுங்களும் ரெடி மேடா...கண்ணுல கண்ணீர் வச்சிருப்பீங்களா? "-அவள் பதில் கூறவில்லை.சரண் அவளை தன் பக்கம் அமர்வித்தான்.மெல்ல அவள் நெற்றியில், இதழ் பதித்தான்.

"இதோப் பாரு....இனிமே அழுதன்னா? என்ன, ஏதுன்னு பார்க்க மாட்டேன்...என்ன தோணுதோ பண்ணிடுவேன்."

"என்ன? "-அவன் குறும்போடு கண்ணடித்தான். அவனின் அந்த பதிலுக்கு எந்த பாவனை செய்வதென்றே தெரியாமல்,

தலை குனிந்தாள் மதுபாலா.அங்கே இரு நெஞ்சங்களின் காதல் பயணமானது, தொடங்கிவிட்டது.ஆனால், அந்த பயணமானது, யார் வாழ்விலாவது மாற்றம் அளிக்க போகிறதா? ? நிச்சயமாக இல்லை....அது மாற்றத்திற்கு துணைப் புரிய போகிறது, ஆதித்யா சரண் ஒருவன் வாழ்வில் மட்டுமல்ல, பலரது வாழ்வில் வழங்க போகிறது.நிழலில் மட்டுமில்லாமல் நிஜத்திலும் அது தானே உண்மை.என்ன விந்தையடா இது? எங்கிருந்தோ வந்த உறவு ஒன்று விதியையே மாற்றும் வல்லமை பெற்றிருக்கிறது.உரிமையோடு அது நடத்தும் போராட்டமானது, மாற்றத்தையும் மாற வைக்கிறதே!!!!

சிறிது நேரம் அமைதியாக சென்றது.....இரு மனம் பேசிய பாஷயை சரணின் கைப்பேசி அழைப்பு கலைத்தது.

"ஹலோ...."

"நான் வசீகரன் பேசுறேன்ப்பா...!"

"ச்சீப்...எஸ்...ச்சீப்..."

"அட...!அந்த ச்சீப்பை விடு...நிரஞ்சன் அப்பாவா பேசுறேன்...ஏன்டா!உனக்கு ஆக்ஸிடன்ட் ஆயிடுச்சின்னு ரகு சொன்னான்.என்னப்பா ஆச்சு? "

"அது ஒண்ணுமில்லை அங்கிள், சின்ன ஆக்ஸிடன்ட் தான்.அதுக்குள்ள டெல்லி வரைக்கும் நியூஸ் வந்திடுச்சா? "-அவனது இந்த பேச்சு அவருக்கு சற்று அல்ல!அதிரடியான அதிர்ச்சியை தந்துவிட்டது.

"சரண்? "

"சொல்லுங்க அங்கிள்.."

"நீ தானே பேசுற? "

"ஆமாம்...அங்கிள் சரண் தான்...வேணும்னா ஓட்டர் ஐ.டி., லைசன்ஸ், ஆர்சி புக்,  பாஸ் புக், பாஸ்போர்ட், எல்லாத்தையும் அனுப்பி வைக்கட்டா? "

"இல்லப்பா....வேணாம்...நான் கொஞ்சம் குழம்பி போயிருக்கேன்.அப்பறமா பேசுறேன்."

"சரிங்க அங்கிள்."-போனை துண்டித்து, மதுவிடம்,

"பார்த்தியா? உன்னால எனக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சின்னு எல்லாரும் நினைக்கிறாங்க."-என்றான் மதுவிடம்.

"நான் என்ன பண்ணேன்.? "

"நீயா? என்ன பண்ணன்னு சொல்லட்டா? "-என்று அவளை தன்னோடு, சேர்த்து அணைத்துக் கொண்டான்.

"ஆதி....இது ஹாஸ்பிட்டல்!"

"ஓ....அப்போ வீடா இருந்தா பரவாயில்லையா? "

"ச்சீ...விடுடா!"-என்று அவனை தள்ளிவிட்டு அங்கிருந்து ஓடியே விட்டாள் மதுபாலா.வழக்கமாக மருத்துவமனை சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்ததாள் அவளை யாரும் கவனிக்கவில்லை.மிகுந்த நாள் இடைவேளைக்கு பின் கிடைத்த இந்த நெருக்கம்,

"பயப்படாதே!இனி நீயும் நானும் வேறல்ல!"-என்று அவனுக்கு சொல்லிற்று.கண்கள் மூடி ஓய்வு எடுக்க ஆயத்தமானான் சரண்.அவன் நினைவிற்கு சட்டென ஒன்று எட்டியது.

"இது தேவை தானா? இந்த பாதுகாப்பு பணியில் அவன் எடுத்துக் கொண்ட பொறுப்பு அவனுக்கு மட்டுமல்ல, அவனை சுற்றி இருப்பவர்களுக்கு ஆபத்தை, விளைவிக்க கூடிய ஒன்று.அவனது, ஆசாபாசங்களுக்காக மற்றவர் உயிரோடு விளையாட வேண்டுமா? அதுவும், இப்போது எடுத்துக் கொண்ட இந்த பொறுப்பு, தன்னோடு தொடர்புடையவர்களை எவ்வாறெல்லாம் பாதிக்கும்? இதனால் தானே, அவன் ரகுவையே தன்னோடு வர வேண்டாம் என்று கூறினான்? இதற்கு என்ன தான் வழி? "-மிகுந்த போராட்டத்திற்கு பிறகு, அவன் மனம் ஒரு முடிவை எடுத்தது.என்ன முடிவு அது? ? பொறுத்திருந்து பார்ப்போம். 

தொடரும்...

Go to EUU # 04

Go to EUU # 06

{kunena_discuss:722}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.