(Reading time: 15 - 29 minutes)

 

"தி...உன் பாதுகாப்பு இருக்கிற வரைக்கும்,நம்ம குடும்பத்துக்கு  எதுவும் ஆகாது...ம்...பெரிய சி.பி.ஐ.இப்படி பயப்படுவாங்களா?"-அவள் 'நம்ம குடும்பம்' என்று குறித்த விதம் அவனுக்கு பிடித்திருந்தது.

"உனக்கு எதாவது?"-அவன் தயங்கினான்.

"ஒருத்தர்கிட்ட பேசும் முன்னாடி என்ன பேசுறோம்! யார்கிட்ட பேசுறோம்ன்னு தெரிஞ்சிட்டு பேசணும்.நான் யார்ன்னு தெரியுமா?ஆதித்யா சரணோட மனைவி ஆகப் போறவ நினைவு இருக்கட்டும்."

"அப்படிங்களா?உங்க ஆதித்யா என்ன அவ்வளவு கோபக்காரனா?"

"ஆமாம்..."

"அப்போ...அவர் கோபத்தையும் தான் பார்த்துவிடுவோமே!"-அவள் புரியாமல் விழித்தாள்.

"ஏன் இப்படி முழிக்கிற?"

"நீ பேசுறதே...புரியலை ."

"புரிய வச்சிடுறேன்."-அவன் கைகள் அவள் இடையை சுற்றி வளைத்தன.அவன் முரட்டுத்தனமாக அவனுடைய பிடியுள் அவளை செலுத்தினாள்.

"ஆதி...விடு!"

"என்ன விடு?ஒவ்வொரு தடவையும் இப்படி தான் தப்பிக்கிற?இன்னிக்கு மாட்டின!"

"ஏ...இது நியாயமே இல்லை.இது தப்பு...!"

"என்ன தப்பு?அதுலாம் என் காது கேட்காது...!"-அவன் பிடி இன்னும் இறுகியது.அன்றுவரை தனக்காக துடித்த இதயம்,அன்று அவர்களுக்கென துடிக்க தொடங்கியது.மெல்லிய செவ்விதழ்களை தன் வசமாக்கிக் கொண்டவன்...அவள் உயிர் மேல் உணர்வென தன் காதலை எழுதினான்.மதுபாலா தன் நிலை உணர்ந்து,அவனிடமிருந்து விலக முயன்றாள்.சிறிது நேர நெருக்கத்தின் பின் கிடைத்த இடைவேளை,அவர்களை உலகத்திற்கு அழைத்து வந்தது.

"இப்போ...என்ன பண்ணுவராம்?உங்க சி.பி.ஐ."-அவள் தலைக் குனிந்தாள்.ஆதித்யா அவள் தாடையைப் பிடித்து முகத்தை மெல்ல உயர்த்தினான்.

"என்னடி பேச மாட்டியோ?"

"..........."

"மிஸஸ்...ஆதித்யா சரணுக்கு கோபமோ?"

"................"

"இப்போ நீ பேசலை?மறுபடியும் முதல்ல இருந்து...."

"இல்லை..."

"ம்...இப்படிலாம் மிரட்டுனா தான் வேலை நடக்குது!"

"எனக்கு நேரமாயிடுச்சி! நான் போகணும்."

"எதுக்கு?"

"எதுக்குன்னா...?அக்கா தேடுவாங்க!"

"அதுல்லாம்...தேட மாட்டாங்க!"

"விடு...ஆதி!"

"பவித்ரா நல்ல பொண்ணு....தேட மாட்டா!"

"யாராவது வந்திடப் போறாங்க...!"

"அதுல்லாம் யாரும் வரமாட்டாங்க."-அப்போது சரியாக,

"ஆதி..."-என்று கத்தியப்படி ராகுல் உள்ளே நுழைந்தான்.சட்டென்று நிகழ்ந்த அந்த விஜயத்தைக் கண்டு இருவரும் அவசரமாக விலகினர்.

"மது...நீ எப்போ இங்கே வந்த?"-மதுபாலா அவனருகே சென்று,

"இப்போ தான் செல்லம்..."

"எதுக்குடா?இப்படி ஓடி வர?"-ஆதித்யா.

"என்னை எங்கேயாவது வெளியே கூட்டிட்டுப் போ!"

"டேய்..!மழைப் பெய்யுது....இப்போலாம் போகக் கூடாது...!"

"அதெல்லாம் முடியாது.கூட்டிட்டுப் போ!"

"முடியாதுடா!"

"ஆதி...சின்ன பையன்கிட்ட இப்படியா பேசுவ?-மதுபாலா.

"இதோப்பாரு ராகுல்...வெளியே மழைப் பெய்துல்ல! இந்த சூழ்நிலை உனக்கு ஒத்துக் கொள்ளாது! அதுனால,மழை மழை விட்ட உடனே போகலாம்.சரியா?"

"நிஜமா?"

"நிஜமா."

"அப்போ சரி.."

"அநியாயம் அக்கிரமம்.இதை தட்டிக் கேட்க யாருமே இல்லையா?டேய்...நான் நீ பிறந்ததுல இருந்து உன்னைப் பார்த்துட்டு இருக்கேன்.என் பேச்சைக் கேட்க மாட்ட..அவ பேச்சை கேட்கிற?"

"மது ரொம்ப நல்ல பொண்ணு..நீ கெட்டவன்."

"போடா! உன் மதுவை கவனிச்சிக்கிறேன் இரு!"-என்றான் மதுபாலாவைப் பார்த்துக் கண்ணடித்தவாரே!

"சரி செல்லம் நான் கிளம்புறேன்."

"வேணாம்."

"ஏன்?"

"இங்கேயே இரு!"

"சரி...நீ வா வீட்டுக்குப் போகலாம்."

"எனக்கு போரடிக்குமே!"

"அடிக்காது...நான் இருக்கேன் வா!"

"ம்....சரி."

"டேய்...என்னை கழட்டிவிட்டுப் போற?"

"நீயும் வா....!"

"உன்னை....."-அவன் ஏதோ கூற வாய் எடுக்கையில் அவன் கைப்பேசி அவனை அழைத்தது.

"இருடா வரேன்."-என்று கூறியவாரே அதை எடுத்துக் கொண்டு பால்கனிக்கு சென்றான்.

"வசீகரன் தாத்தா தான் பண்ணிருப்பாரு மது...அவன் வர மாட்டான் நம்ம போகலாம் வா...!"

"சரி வா..."-என்று இருவரும் கீழே இறங்கினர்.அப்போது-

"மதுபாலா..."-கர்வமாக அழைத்தது ஒரு பெண் குரல்.

"ரம்யா?"

"ஞாபகம் இருக்கா?"

"எப்படி இருக்க ரம்யா?"

"எனக்கென்ன?மகாராணி மாதிரி இருக்கேன்.என்ன இந்தப் பக்கம்?"

"ஆதித்யா கூப்பிட்டு இருந்தார்..."

"இருந்தாரா...?அப்படி என்ன விஷயம்?"

"................."

"மேலே ஏதோ காதல் கதை ஓடிட்டு இருந்ததுப் போல?"

".............."

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.