(Reading time: 15 - 29 minutes)

 

"து எப்படி யாரைப் பார்த்தாலும் முகத்தை திருப்பிட்டுப் போறவன் உன்னைப் பார்த்தா மட்டும் அமைதியா இருக்கான்?"

"இப்போ உனக்கு என்ன தான் தெரியணும்?"-அமைதியாக கேட்டாள் மதுபாலா.

""அப்படி என்கிட்ட இல்லாதது எது உன்கிட்ட இருக்கு?"-மது பாலா  சட்டென நிமிர்ந்தாள்.

"நீ பேசுறதுல்ல தப்பான அர்த்தம் வருது ரம்யா."

"தப்பான அர்த்தமா?யாருக்குத் தெரியும் அது உங்களுக்கு சரியாக் கூட இருக்கலாம்."

"ரம்யா...."

"கத்தாதேடி...!எதைக் காட்டி சரணை மயக்கின?"-மதுபாலா அவளது கேள்விகளில் உடைந்தே விட்டாள்.கட்டுகடங்காத கண்ணீர்த்துளி அவள் கண்களில் தாண்டவமாடியது.அவள் ராகுலைக் கூட கவனிக்காது,அங்கிருந்து சென்றுவிட்டாள்.பாவம்....! நடந்தவற்றை கண்டு ஒன்றும் புரியாமல் விழித்தது அந்த பிஞ்சு மனது!!!

வாழ்வினில்,அனைவருக்கும் தான் கஷ்டங்கள் வருகின்றன.ஆனால்,காதலிப்பவர்களுக்கு மட்டும் கூடுதல் கஷ்டங்களை வழங்குகின்றது காலம்.சில நேரத்தில் அதனால்,காதல் மீதே பலருக்கு வெறுப்புத் தட்டி விடுகின்றது.ஆழமாக பாதிக்கப்பட்ட மனமானது,எந்த ஒரு ஆறுதலையும் நிச்சயம் ஏற்காது.

ன்று மாலை......

"செல்லம்...வெளியே போயிட்டு வரலாம் வாடா!"- ஆதித்யா.

"நான் வரலை..."-ராகுல்.

"என்னடா ஆச்சு?காலையிலலாம் வெளியே கூட்டிட்டு போன்னு அடம் பண்ண?"

"நான் வரலை...ஆதி!"

"சரி....நான் போயிட்டு வந்திடுறேன்.உனக்கு எதாவது வேணுமா?"

"வேணாம்."

"என்ன ஆயிற்று இவனுக்கு.?"

-என்று காரை எடுத்துக் கொண்டு சென்றான் ஆதித்யா.அவன் மனம் எதிலும் லயிக்கவில்லை.ஏதோ ஒன்று தவறாகப்பட்டது அவனுக்கு.வெளியே சென்றவன்,எதையுமே வாங்காமல் வீடு திரும்பிக் கொண்டிருந்தான்.இருள் சூழ்ந்த சாலை வழியில் ஒருவரும் இல்லை.கார் ஜன்னல் வெளியே கவனத்தை செலுத்தியவன்,சட்டென காரை நிறுத்தினான்.அவன் இதழ்கள் தன்னிச்சையாக,

"அபி...!"-என்று மலர்ந்தன.

"யார் அவர்கள்?அவளை சுற்றி?இவள் ஏன் இப்படி நடுங்குகிறாள்?"-அவன் மனதுக்கு இது சரியாய் படவில்லை.காரை அவளருகே திருப்பினான்.

"என்னடி??ரொம்ப தான் பண்ற?"

"கிட்ட வராதே...!"

"வருவேன்டி....!"-அவன் பேச்சை தடை செய்யும்படி ஆதித்யா தன் கார் ஹாரனை அடித்தான்.

"யார்டா அது?"-அபி தன்னிச்சையாக,

"அண்ணா....!"-என்றாள்.

"அண்ணணா?அப்போ ஹீரோவா?வாங்க சார்...வாங்க."

"யார்டா நீங்க?"-ஆதித்யா.

"உன் மச்சாங்க..."-அவனுக்கு கோபம் தலைக்கேறிவிட்டது.

"அபி....கார்ல ஏறு..!"-12 வருட இடைவேளைக்கு அவன் தன்னிடம் பேசியது,அவளை ஒரு நொடி ஸ்தம்பிக்க வைத்தது.

"ஏறு..."-கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டான் அவன்.அவள் ஏறிவிட்டாள்.கேட்கவா வேண்டும் அவன் கோபத்தைப் பற்றி???அவ்வளவு தான்....மனதில் இருந்த தீராத குழப்பங்களில் மேலிருந்த கோபத்தையும் அவர்கள் மீதே காட்டினான்.

"ஏன்டா??நான் யாரு உனக்கு?"

"அண்ணா! விட்டுவிடுங்கண்ணா!"

"நல்லா கேளுங்க..அவ என் தங்கச்சி.இன்னொருத் தடவை உங்களை பார்த்தேன்."

"ஐயோ...தங்கச்சி பின்னாடி நாங்க வரவே மாட்டோம்ணா..."

"தங்கச்சியா?என்னடா...?இந்த அடிக்கே இப்படி ஆயிட்டீங்க?"

"அடியா?இடி மாதிரி இறங்குச்சே...!"

"போ...என் கண்ணுலை மாட்டக் கூடாது...!"-அவன் காரில் ஏறி வண்டியை கிளப்பினான்.அபிநயாவிடம் எதுவும் பேசவில்லை.சிறிது நேரம் அப்படியே சென்றது.அந்த மௌனத்தை கலைக்க விரும்பியவனாய்,

"இந்த நேரத்துல தனியா எதுக்கு வந்த?யாரையாவது கூட்டிட்டு வந்திருக்கலாம்ல?"-அந்த விசாரிப்பு அவர்களின் விலகலை,உடைத்து நொறுக்கியது.

அபிநயா விசித்திரமாய் பார்த்தாள்.

"இன்னும் என் மேல கோபம் போகலையாடா?"

"அண்ணா....?"

"நான் தான்...!"

".........."

"இளவரசி பேச மாட்டிங்களோ?"

"அண்ணா....!"

"என்னடா?என்னாச்சு?"

"உனக்கு என் மேல கோபம் இல்லையாண்ணா?"

"இல்லைடா...நான் இத்தனை நாள் பேசாம இருந்ததுக்குக் காரணம் வேற...என்று விளக்கமாக கூறினான்.

"அப்போ...! எல்லாத்துக்கும் காரணம் மதுதான்.அவளை என்ன பண்றேன் பாரு...!"

"பார்த்துடா....அவளுக்கு எப்பப்பார்த்தாலும்,கண்ணுல ரெடியா தண்ணீர் இருக்கும்."

"கவலைப்படாதீங்க...அண்ணியை அந்த அளவுக்கு இம்சை பண்ண மாட்டேன்."

"அண்ணியா?"

"அண்ணி தான்...!"

"நீ எதோ முடிவு எடுத்துட்ட....நடக்கட்டும்."

"அப்போ...நீ முடிவு எடுக்கலையா?அண்ணா?"

"அப்படியும் சொல்ல முடியாது."

"உனக்கு ஒரு விஷயம் தெரியுமாண்ணா?இனிமே நீ என் கூட பேசவே மாட்டன்னு நினைச்சிட்டு இருந்தேன் தெரியுமா....!ஆனா...ரொம்ப சந்தோஷமா இருக்குண்ணா!"

"உன் அண்ணன் பாசம்னா என்னன்னு தெரியாதவன் இல்லைடா....மறைச்சு வச்சிருச்சிருந்தேன்.இப்போ மாட்டிக்கிட்டேன்.

"என்னது மறைச்சிட்டு இருந்தியா?உன்னை....என்ன பண்றேன் பாரு....!"

"ஏ...அடிக்காதடி...வலிக்குது...வலிக்குதுடி...."

"வலிச்சாலும் பரவாயில்லை."

"வண்டி ஓட்டணும்...அப்பறம் அவ்வளவு தான்."

"நானே பரவாயில்லை...குரு உன் மேல கொலைவெறியில இருக்கான்."

"அப்போ...அவன் கண்ணுலயே நான் பட மாட்டேன்."

"சரிடா....வீட்டில விட்டுவிடட்டா?இல்லை...என் கூட வரியா?"-அபி மௌனமாய் அமர்ந்திருந்தாள்.

"புரியுதும்மா...நான் அங்கே வர மாட்டேன் நீ இங்கேயே இறங்கிக்கோ!"-அவள் ஏதோ கூற வந்து பின்,

"சரிண்ணா...."

"குருவை வீட்டுக்கு வர சொல்லு."

"சரிங்கண்ணா..!"-அவள் வீட்டிற்குள் செல்லும் வரை  அங்கிருந்து அவன் நகரவில்லை.அவள் கைக்காட்டிவிட்டு சென்றப்பின்,அவன் காரை வீட்டிற்கு திருப்பினான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.