(Reading time: 15 - 29 minutes)

 

வீட்டில்.....

"ராகுல் கொஞ்சம் சாப்பிடுப்பா...."-ராஜேஸ்வரி.

"வேணாம் பாட்டி!"

"ராகுல்  ஏன் அடம் பண்ற சாப்பிடு..."-ரகு.

"வேணாம்ப்பா."

"ராகுல் சாப்பிடுடா.."-நிரஞ்சன்.

"மாட்டேன்."

"என்னாச்சு?"-ஆதித்யா.

"சாப்பிட மாட்டிக்கிறான் மச்சி..."

"ஏன் செல்லம்?"-ராகுல் பதில் பேசவில்லை.விழித்தான்.

"நீ வா...!"-என்று அவனைத் தூக்கிக் கொண்டு தனியாக சென்றான் ஆதித்யா.

"என்னாச்சுடா?யாராவது எதாவது சொன்னாங்களா?"

"ஆமாம்.."

"யாரு?"-கோபமாக கேட்டான் சரண்.

"ரம்யா ஆன்ட்டி..."

"என்ன சொன்னா?"

"என்னை எதுவும் சொல்லலை.மதுவை தான்......"-என்று காலையில் நடந்தவற்றை ஒன்று விடாமல் கூறினான் அவன்.

"மது அழுதுட்டே போயிட்டா....."-அவ்வளவு தான் அவன் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டான்.

"போய்...மதுவை கூட்டிட்டு வா...உன் மதுவை அழ வைத்தவளை...இனிமே...சிரிக்கவே முடியாதப்படி பண்றேன்."-அவன் ஒன்றும் புரியாமல் அங்கிருந்து சென்று,அவளை அழைத்து வந்தான்.அவள் கண்களைப் பார்த்த உடனே புரிந்துவிட்டது,அவள் பயங்கரமாக அழுதிருக்கிறாள் என்று! அவள் ஆதித்யாவின் முகத்தை நிமிர்ந்துப் பார்க்கவில்லை....

"வா...!"-என்று அவள் கையைப் பிடித்து ரம்யாவின் அறைக்கு சென்றான்.கதவை உடைக்காத குறையாக திறந்தான்.அவனது இந்த நடவடிக்கை புரியாமல்,ராஜேஸ்வரியும் அவர்கள் பின்னால்,சென்றார்.ராகுலும் உடன் வந்து சேர்ந்தான்.

"ரம்யா...."-ஆத்திரமாக கத்தினான்.அவள் சற்றே பயத்தோடு அவன் முன்னால் வந்து நின்றாள்.அவள் வந்து நின்றது தான் தாமதம்,'பளார்.'என்று ஓங்கி அறைந்தான் அவன்.அவன் அடித்த அடி மதுபாலாவையே கலங்க வைத்துவிட்டது.

"என்னடி நினைச்சிட்டு இருக்க நீ?யாரைப் பார்த்து என்ன பேசுன நீ?பொண்ணாடி நீயெல்லாம்?அசிங்கமாயில்லை...அப்படி பேச?மன்னிப்புக் கேளு....மதுகிட்ட மன்னிப்புக் கேளு..!"

"நான் மன்னிப்புக் கேட்கணுமா?அதுவும் இவக்கிட்ட...?"

"ஏ....கேளுடி...இல்லை...மரியாதை கெட்டுவிடும்...கேளு!"-அவன் குரலில் அவள் பயந்தேவிட்டாள்.

"மன்னிச்சிடு மது...!"-ரம்யா தலை குனிந்தாள்.மதுபாலா தலை நிமிர்ந்தாள்.

"நல்லாக் கேட்டுக்கோ! இவ என் பொண்டாட்டி!என்னோட சரி பாதி இவதான்.இவளை அவமானப்படுத்துறது...என்னை அவமானப்படுத்தறதுக்கு சமம்...என்னை அப்படி பண்ணா நான் சும்மா இருக்க மாட்டேன்.ஞாபகம் வச்சிக்கோ! நானும்,இவளும் வேற வேற இல்லை..."-மீண்டும் அவள் கையை பிடித்து,அவன் அறைக்கு அழைத்துச் சென்றான்.மதுபாலாவின் கண்களில் கண்ணீர் திரண்டிருந்தது.அவன் அவளை தன் எதிரில் நிற்க வைத்தான்.

"ஏன்டி...என்கிட்ட சொல்லலை?"

".............."-ஆதித்யா அவள் கையை அழுத்தமாக பிடித்தான்.

"உனக்கு ஒண்ணுனா...நான் கேட்க மாட்டேனா?சொல்லுடி...?"

"..............."

"என்னைப் பாருடி...! பதில் சொல்லு...!"-அவன் பிடி இன்னும் அழுத்தமானது.அது அவளுக்கு வலிக்கின்றது என்பதை அவள் முக பாவனை நிரூபித்தது.அவன் அவள் கையை தளர விட்டான்.பின்,அவன் அவள் கன்னத்தை பிடித்துத் தலையை உயர்த்தினான்.அவனது,கேள்விக்கு மதுவிடம் பதில் இல்லை என்பதை அவள் கண்கள் சிந்திய கண்ணீர்த்துளி நிரூபித்தது.

"என்னை மன்னிச்சிடு ஆதி...!-ஆதித்யா அவளை தன் மார்பில் சாய்த்துக் கொண்டான்.அவள் கண்ணீர்த்துளி சரணின் மனதை ஈரமாக்கியது.காதலின் கரங்கள் மதுபாலாவின் தலையை வருடியது.

"அங்கே நான் பேசுனதெல்லாம்..அவளுக்கு மட்டுமில்லை உனக்கும் தான்...இன்னொரு முறை எந்த பிரச்சனையா இருந்தாலும் சரி...அதை சமாளிக்கிற தைரியம் என்கிட்ட இருக்குன்னு....அழுதுட்டு இருந்த அவ்வளவு தான்....நான் இருக்கேன்டி...உனக்காக...!"-அவள் அழுகை இன்னும் பலமானது.அவள் முழுவதுமாக அழுது முடிக்கட்டும் என்று காத்திருந்தான் ஆதித்யா.சிறிது நேரம் கழித்து....அவள் அழுகை குறைந்தது.

"ச்சே....தேவையில்லாம வாஷிங் மெஷின் வாங்கி போட்டேன்."-அவள் கேள்வியோடு நிமிர்ந்தாள்.

"என்னைப் பார்க்கிற?அதான் அழுதே என் சட்டையை துவைத்துவிட்டேயே!"-அப்போது தான் மதுபாலா தான் சரணின் நெருக்கத்தில் இருப்பதை உணர்ந்தாள்.அவனிடமிருந்து சட்டென விலகினாள்.

"என்னடி என்னாச்சு?"

"ஒண்ணுமில்லை...நான் கிளம்புறேன்."-ஆதித்யாவின் இதழில் ஒரு புன்னகை தவழ்ந்தது.

"ஏன்?"

"நேரமாயிடுச்சி."-என்ற அவள் விலக முயல,

"அம்மூ...!"-என்று அவள் கையைப் பற்றி அவனருகே இழுத்தான் சரண்.சில்லென்று ஜன்னல் வழியே வீசிய பனிக்காற்று,மதுபாலாவின் நெற்றி மீது இருந்த ஒற்றை முடிக்கீற்றை கலைத்துவிட்டது.ஆதித்யாவின் கரங்கள் அதனை விலக்கிவிட்டன.அவன் அவர்கள் இருவருக்கு இடையே உள்ள,இடைவேளையை குறைக்க எண்ணி அவளை நெருங்க...மதுபாலா பின்னால் நகர்ந்தாள்.இறுதியில்,அவள் சுவரருகே சென்று,அவன் பிடியில் சிக்கிக் கொண்டாள்.

"ஆதி...வேணாம்.."-அவன் அவள் இதழ்களில் தன் சுட்டு விரலை வைத்து,

"உஷ்....!என் பொண்டாட்டியை நான் என்ன வேணாலும் செய்வேன்..."-என்று இன்னும் நெருங்கினான்.மதுபாலா தன் கண்களை இறுக மூடி கொண்டாள்.

"அம்மூ..."-அவள் கண்களை திறந்தாள்.

"பயந்துட்டியா?"

".............."-ஆதித்யா அவளிடமிருந்து விலகினான்.

"பயப்படாதே...!நான் எதுவும் பண்ண மாட்டேன்.உனக்கு நேரமாயிடுச்சி..இதுக்கு மேல நீ இங்கே இருக்கிறது...மற்றவங்களுக்கு சரியாப்படாது..நீ கிளம்பு!"

"ம்...."

"ஏ...உன்கிட்ட ஒண்ணு சொல்லட்டா?"

"ம்..."

"ஐ லவ் யூ...!"-அவள் பார்வை ஏதோ சொல்ல வந்தது.

"என்னடி ஆச்சு?"

"இந்த நிமிஷம் இப்படியே என் உயிர் என்னைவிட்டுப் போனாலும்,சந்தோஷம் ஆதி...!"

"ஏ...என்னப் பேசுற நீ?பைத்தியமா நீ?உயிர் போனா பரவாயில்லையாம்...இதோப்பாரு...உனக்கு உள்ளே இருக்கிறது என் உயிர் மறந்துடாதே...!இப்படி பேசின மனுஷனா இருக்க மாட்டேன்.புரியுதா?"

"ம்...இனி...இப்படி பேச மாட்டேன்."

"வா...போகலாம்!"-ஆதித்யா மதுவின் கரங்களை தன் கரங்களோடு பிணைத்துக் கொண்டான்.காதலில் விழுந்த இரு இதயங்களின் அந்தப் பிணைப்பானது,நீர்,நிலம்,நெருப்பு,காற்று,ஆகாயம் என பஞ்ச பூதங்களையும் வென்று...கிழக்கு,மேற்கு,வடக்கு,தெற்கு என நாற்றிசையும் கடந்து...மண்ணுலகம்,விண்ணுலகம்,பாதாள உலகம் என மூவுலகையும் யாசிக்க செய்து...நல்வினை,தீவினை என்ற இரு வினைகளையும் உடைந்தெறிந்து...வெற்றிக் கொண்ட ஒற்றை வேந்தனாய்,தன் பயணத்தைத் தொடங்கியது.இனி...இவ்விதயங்கள் ஒன்று தானே?இரண்டு இல்லை...சரிதானே?????

தொடரும்...

Go to EUU # 06

Go to EUU # 08

{kunena_discuss:722}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.