(Reading time: 10 - 19 minutes)

 

வள் செய்யும் செயல்கள் எல்லாவற்றிலும் அவன் மனம் மிகவும் வேகமாக நல்லதை தேடி பிடித்து கண்டறிந்து மகிழ்வது அவனிர்க்கே ஆச்சர்யமான ஒன்று.

கண்ணாடி சுவரை தாண்டி கிறுக்குத்தனமாக எந்நேரமும் செய்வதெல்லாம் ஸ்கைபில் பாட்டியிடம் சொல்லிக்கொண்டிருக்கும் சௌமியா அவளை சிரித்துக்கொண்டே அவன் பக்கம் திசைதிருப்பும் கணேஷ் எரிச்சல் கிளப்பிகொண்டே இருந்தனர் காவியாவிற்கு.

"அப்படி என்ன என்னிடம் இல்லாதது இருக்கு வக்கீல் சார் அவளிடம்" கேட்ட அவளிடம் வெறும் சிரிப்பை மட்டு உதிர்த்து விட்டு அகன்றான் அவன். அந்த நிமிடம் காந்தியது அவளிற்கு. கணேஷின் பெறுமானமும் அவனின் ஆற்றலும் வாதாடும் திறமையும் நன்கு அறிந்தவள் அவள். இந்த காவியாவை தவிர வேறு யாராலும் இந்த கண்டிப்பான கணேஷை கையாள முடியாதே என்று நினைத்துக்கொண்டிருந்தவளிற்கு கணேஷ் சௌமியா மணம் மனதில் இடி.!!

"ந்த தம்பிக்கு கூட கவி எங்கே இருக்கா என்று தெரியலேம்மா " என்று வருத்தமாக சொன்னார் வேலுமுருகன் அவர் சின்னபெண் கார்த்திகாவிடம்.

"அப்பா அக்காவிற்கு என்ன வேலையோ!! எந்த மாதிரி சூழலோ கொஞ்ச நாள் பொருத்து பார்ப்போம்" என்றாள் கார்த்திகா சமாதானமாக உள்ளுக்குள் ப்பராத்தனைகளுடன்.

சின்னவள் ஆறுதலாக சொன்ன வார்த்தைகளுமே அவரை பயமுறுத்தின. சூழல் வேறு மாதிரி இருந்துவிட்டால்?!!. அவரை பொறுத்தவரை வீரவசனம் பேசினாலும் துணிவாக இருப்பதுப்போல் காட்டிக்கொண்டாலும் கவிதா உண்மையில் உள்ளுக்குள் இருட்டிற்கு பயப்படும் குழந்தையே.

அவரின் அமைதியான குணம் அவர் பெண்ணுக்கு எதிரியாக அமைந்து விட்டது. பாவம் அவள் சித்தி அவளை கண்டபடி பேசும்போதெல்லாம் இவர் தீயில் துழலும் புழுபோல யாருக்கும் ஆதரிக்க முடியாமல் தவிப்பார்.  அப்படி கவிதாவிற்கு ஆதரவாக அவர் பேசினால் வீடு நரகமாகிவிடும். வள்ளி பிறரி வார்த்தையில் காயப்படுத்துவதில் வல்லவள்.

அப்படி வள்ளி பெண்ணின் மனம் புண்படும் படி பேசினால் அவரால் அவளை சமாதனம் படுத்த முடியாது. அப்படி அவர் செய்தார், மூத்தவள் பெண் மட்டும் தான் இவருக்கு ஒசத்தி!!  நானும் என் பொன்னும் எங்கேனும் போறோம் என்று அழுது ஊரை கூட்டி பெரும் கலவரமே உண்டாக்கி விடுவாள் வள்ளி. இப்படி விளைவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தே பெரிய பெண்ணிடம் தூரமாகிவிட்டார் அவர்.

நாட்கள், இருபத்திநாலு மணி நேரம் என தானாக கடந்து விடும். எது செய்தாலும் செய்யாவிடினும் காலம் நிற்பதில்லை. உறவுகள் மாறும், தடம் மாறும், பாதைகள் மாறும், சுவடுகள் மட்டுமே தோன்றும், வலிகளிலிருந்து விடுதலை கிடைக்கும், வழி பிறக்கும், புதிதாக வலி தோன்றும் சுவாரசியம் கூடும் தேடல் தொடரும்.

சில நாட்களாக கவிதாவிற்கு அர்ஜுன் குறுகுறுப்புடன் பார்க்கும் பார்வையும், அவள் படபடப்பும் தவிர்க்க முடியவில்லை. ஆகாஷும் சிங்கப்பூரில் புதிதாக வாடிக்கையாளர் பிடிக்க என்று சுற்றுபயணம் கிளம்பியப்பின் கவிதாவும் அர்ஜுன் மட்டுமே என ஆனது. அர்ஜுனின் உதவியுடன் ஆகாஷின் வேலைகளையும் சேர்த்தே கவனித்தாள் கவிதா. அர்ஜுன் குத்தல் குறைந்து ஊக்கமாக பேச கவிதாவால் எல்லாமே எளிதாக கற்றுக்கொள்ளவும் கையாளவும் முடிந்தது. வேணிம்மாவின் ஒரு சில கேள்விகள் தவிர.

வயதானவர் உடம்பு முடியாமல் படுத்திருக்கும் போதும் கண்களில் ஒளியுடன் ஆசையாக "உனக்கும் அர்ஜுன் கல்யாணம் செய்திடுலாம், எனக்கு மனபாரம் குறைந்திடும்" என்றெல்லாம் அவர் பேசுகையில் உள்ளுக்குள் சுருக்கென்ற குத்தல் தாங்க முடிவதில்லை. தவறு சிறிதானாலும் பெரிதானாலும் தெரிந்தே செய்யும் போது அதன் விளைவு தாங்க முடியாததாக தான் இருக்கும்.

ரணங்களுடனே அவள் பயணம் தொடர்ந்தது. 

தொடரும்!

Go to episode # 08

Go to episode # 10


{kunena_discuss:700}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.