(Reading time: 17 - 33 minutes)

15. உள்ளம் வருடும் தென்றல் - வத்ஸலா

வாய் விட்டு சொன்னான் பரத். நீ எப்படியும் வந்திடுவேன்னு நினைச்சேன். இப்படி பண்ணிட்டியேடா கண்ணம்மா.’

லவ் யூ .... என்று தேம்பி தேம்பி அழுதாளே அன்று.

'தெரியும்டா. அப்படியே நீ என்னை ஏமாத்த நினைச்சாலும் நீ தோத்துப்போற இடமும் அதுதான்னும் தெரியும்' உறுதியாக சொன்னானே அவன். அது பொய்யாக போய் விடுமா என்ன?

Ullam varudum thendral

அது அவள் மீது அவன் வைத்திருக்கும் நம்பிக்கை. அவள் நேசத்தின் மீது அவன் கொண்டிருக்கும் நம்பிக்கை. அந்த நம்பிக்கை உடைந்து போவதை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. 'அவள் என்னவள் என்னை ஏமாற்ற முடியாது அவளால்.' திரும்ப திரும்ப  தனக்குள்ளே சொல்லிக்கொண்டான் அவன்.

.நிமிடத்திற்கு ஒரு முறை அவள் வந்துவிடுவாள் என்ற நம்பிக்கையுடனே வாசல் பக்கம் சென்று சென்று திரும்பிக்கொண்டிருந்தது அவன் பார்வை. அவள் வருவதாக தெரியவில்லை.

அவன் உள்ளமெங்கும் பல்வேறு குழப்பத்தின் அழுத்தங்கள். அதையெல்லாம் மீறி அவள் வரவையே எதிர்பார்த்திருந்தன அவன் கண்கள்.

கண்களை மூடினால் கண்களுக்குள் அவள் முகம் வந்து போனது. அவள் மீது கோபப்பட்டுவிட கூட முடியவில்லை அவனால் .'சில நாட்களுக்கு முன்பு வரை இருந்த பரத் இல்லை நான்' என்றே தோன்றியது அவனுக்கு. என்னை இப்படி மாத்திட்டியே கண்ணம்மா.

கண்கள் மறுபடியும் ஒரு முறை வாசல் பக்கம் சென்று திரும்பியது. 'இல்லை வரமாட்டாள் அவள்'. துவண்டது மனம். கண்கள் மூடி, இடம் வலமாக தலை அசைத்துக்கொண்டு ஒரு அழுத்தமான சுவாசத்துடன் அந்த இடத்தை விட்டு நகர முற்பட்ட போது சட்டென அவன் அருகில் வந்து நின்றது அந்த குழந்தை.

அவன் கையை பற்றி அது இழுக்க அதன் அருகில் மண்டியிட்டு அமர்ந்தான் அவன். 'என்னமா?'

அதன் கையில் ஒரு சாக்லேட். 'அந்த ஆன்ட்டி உங்க கிட்டே இதை கொடுத்து ஹாப்பி நியூ இயர்' சொல்ல சொன்னாங்க.

சரேலென எழுந்தவனின் கண்கள் இங்குமங்கும் துறு துறுவென சுற்றின  வந்து விட்டாளா? வந்தே விட்டாளா? 'எங்கே, எங்கே அவள்?' கண்ணில் தென்படவில்லை அவள்.

அவன் கையை பற்றி இழுத்தது அந்த குழந்தை 'சாக்லேட் வாங்கிக்கோங்க அங்கிள்'

சாக்லேட்டை வாங்கிக்கொண்டு, அதன் கன்னத்தில் முத்தமிட்டு அனுப்பி விட்டு, நிமிர்ந்தான் பரத்.

தோட்டத்தின் இன்னொரு பக்கத்தில், யாருமில்லாத அந்த பகுதியில், சுவற்றின் பின்னாலிருந்து   அவனையே பார்த்திருந்தன அவள் கண்கள்.

எங்கே மறைந்திருக்கிறாள் அவள்? அலைபாய்ந்தது அவன் பார்வை. ஒரே நொடியில் சட்டென மலர்ந்து போன அவன் முகமும், தவிக்கும் அவன் பார்வையும் அவளை என்னவோ செய்தது.

அப்படியே ஓடிப்போய் அவன் முன்னால் நின்று விட விழைந்தது அவள் மனம். முடியவில்லை அவளால்.

வெளியே நின்றிருந்த  விஷ்வாவின் வண்டி அவன் உள்ளேதான் இருக்கிறான் என்பதை அவளுக்கு உணர்த்திக்கொண்டே இருந்தது. அவன் கண்ணில் மட்டும் பட்டுவிடக்கூடாதே என்ற பயம் அவளை குடைந்துக்கொண்டே இருந்தது.

அந்த நேரத்தில் யாரோ அந்த பக்கமாக செல்ல சுவற்றின் பின்னால் பதுங்கிக்கொண்டாள் அபர்ணா..

இப்படி பதுங்கிக்கொண்டு நிற்பது யார் கண்ணிலாவது பட்டால் நன்றாகவா இருக்கும்? எப்படியோ வந்து பரத்தை வாழ்த்தியாகி விட்டது. இங்கிருந்து கிளம்பி விடுவதே நலம் இல்லையா?

யோசித்தபடியே கொஞ்சமாக அவள் எட்டிப்பார்க்க அவன் நின்றிருந்த இடத்தில் பரத் இல்லை. எங்கே சென்றான் இவன்? சரி நாம் கிளம்புவதே நலம் என்று யோசித்து ஒரு அடி எடுத்து வைக்க முனைந்த நேரத்தில், தன்னவனின் அருகாமையை அவளுக்கு சட்டென உணர்த்தியது அவளது உள்மனம்.

அவள்  பின்னால் நின்றிருந்தான் பரத். அவனது perfume வாசம் அவள் நாசியை வருட, அவன் மூச்சுக்காற்று அவள் தோள் உரச ஒரு நொடி கண்களை இறுகமூடிக்கொண்டாள் அபர்ணா.

'என்கிட்டே பொய் சொல்றியே பொண்டாட்டி' அவன் வார்த்தைகள் நினைவுக்கு வர, ஏனோ அவளால் அவனை திரும்பிக்கூட பார்க்க முடியவில்லை. கண்களை மூடிக்கொண்டு அப்படியே நின்றிருந்தாள் அபர்ணா.

'யாருடா அது?' இப்படி ஒளிஞ்சு ஒளிஞ்சு எட்டி பார்க்குறது? அவன் மென் குரல் அவள் காதுமடல் வருடியது. பார்க்க என் பொண்டாட்டி மாதிரியே இருக்கு. எங்கே திரும்பு முகத்தை பார்ப்போம்'. அவன் குரலில் அன்பையும் நேசத்தையும் தவிர வேறெதுவுமே இல்லை.

திரும்பவில்லை அவள். 'நா... நான் சீக்கிரம் போகணும். கிளம்பறேன்' அப்படியே திரும்பாமலே  சொல்லி விட்டு, ஒரு அடி முன்னால் எடுத்து வைக்க எத்தனித்த நொடியில் அவன் கைச்சிறையில் இருந்தாள் அபர்ணா.

அவனது திடீர் அணைப்பில் கொஞ்சம் சிலிர்த்து சுதாரித்து 'ப்ளீஸ் கண்ணா.... யாரவது பார்க்க போறாங்க... அவள் உதடுகள் மெலிதான குரலில் சொன்னாலும், அவனை விலக்க தோன்றவில்லை அவளுக்கு.

கண்களை இறுக மூடிக்கொண்டு நின்றிருந்தாள் அவள்.

க.....ண்ண.....ம்மா.... உயிர் வருடும் அழைப்பில் அவள் இமைகள் தன்னால் திறக்க அதனுள்ளே இத்தனை நேரம் தேங்கி நின்ற வெள்ளம் கன்னங்களில் தஞ்சம் அடைந்தது. அவள் கண்களுக்கு மிக அருகே இருந்த அவன் கண்களை பார்த்தபடியே நின்றிருந்தாள் அவள்.

அவள் மனப்போராட்டங்களை புரிந்துக்கொள்ள அவனுக்கு வார்த்தைகள் எதுவுமே  தேவையாக இருக்கவில்லை. அந்த கண்ணீர் ஒன்றே எல்லாவற்றையும் சொல்லிவிட்டிருந்தது.

என்னதிது கண்ணம்மா? நியூ இயர் அன்னைக்கு அழுதிட்டு இருக்கே'? முதல்லே கண்ணை துடை.

கண்களை துடைத்தபடியே கேட்டாள் 'உங்களுக்கு என் மேலே கோபமே இல்லையா?

கோபமா எதுக்குடா?

நான் உங்ககிட்டே பொய் சொல்லி இருக்கேன்னே அதுக்கு.

பொய்யா? அப்படியா? எப்போடா சொன்னே எனக்கு எதுவுமே ஞாபகம் இல்லையே? என்றான் புன்னகையுடன். அந்த புன்னகையில் நிறைந்திருந்தது அவன் நேசம் மட்டுமே.

'இதெல்லாம் கொஞ்சம் ஓவர்' என்றாள் அவள்.

நிஜமாதாண்டா எனக்கு எதுவுமே ஞாபகம் இல்லை. அவள் நெற்றி முட்டி சொன்னான் பரத்.

அப்படியா? வசதியா போச்சு. நாளைக்கு இன்னும் ரெண்டு பொய் ஜாஸ்தியா சொல்றேன் அதையும் சேர்த்து மறந்திடுங்க. அவள் புன்னகையுடன் தலையசைத்து சொல்ல மலர்ந்து சிரித்தான் பரத்,

அவனுடைய மனதில் அவள் மீதிருந்த நம்பிக்கை இன்னமும் ஆழமானது போலே இருந்தது. '

உன்னாலே எனக்கு எதிரா எதுவுமே செய்ய முடியாது கண்ணம்மா 'தனக்குள்ளே சொல்லிக்கொண்டவன்  சிரித்தபடியே அவள் முகத்தை கையில் ஏந்திக்கொண்டு சொன்னான் 'ஹாப்பி நியூ இயர் கண்ணம்மா. என் கண்ணம்மா எப்பவும் சந்தோஷமா இருக்கணும்

'ஹாப்பி நியூ இயர் கண்ணா' அழகான சிரிப்புடன் சொல்ல, அவள் சிரிப்பில் அப்படியே மயங்கிப்போனவனாக சொன்னான் அவன், கண்ணம்மா... இன்னைக்கு எது ஸ்டார்ட் பண்ணாலும் அது நிலைச்சு நிக்குமாம். அதனாலே நாம இன்னைக்கே கொஞ்சம் ஸ்டார்ட் பண்ணிடுவோமாடா? என்றபடி அவன் முகம் அவள் முகத்தை இன்னமும் நெருங்கி வர சட்டென முகத்தில் பரவிய வெட்க ரேகைகளுடன் அவனை விலக்கி விட்டு விலகினாள் அபர்ணா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.