(Reading time: 17 - 33 minutes)

 

யாரவது என் கூட இப்பவே வர தயாரா இருந்தா வரலாம்.’ பொதுவாக சொன்னார் அனந்தராமன். அதை ஏனோ தாங்கிக்கொள்ளவே முடியவில்லை மைதிலியால்.

இத்தனை ஆண்டுகள் தன்னுடன் வாழ்ந்து இரண்டு குழந்தைகளுக்கு தாயான மனைவியை என்னுடன் வந்துவிடு என்று ஒரு முறையாவது அழைத்திருக்க வேண்டாமா அவர்? செய்யவில்லை அனந்தராமன். அவர் மனதில் அப்போது நிறைந்திருந்தது தனது மகனை பற்றிய கவலைகள் மட்டுமே. மகனைக்கூட்டிக்கொண்டு நடந்தார் அவர்.

நான் கோபக்காரிதான், என் மகனின் மனதை புரிந்துக்கொள்ள வில்லை தான். ஆனால் ஒரு மனைவியாக, தாயக, மனைவியாக என் கடமைகளை செய்ய நான் தவறவில்லையே? எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்க வேண்டுமென்று யாருக்குமே தோன்றவில்லையா?

பரத்தின் அப்பாவின் மறைவுக்கு பிறகு பெசன்ட் நகருக்கும், மைலாப்பூருக்கும் மகளையும் மருமகனையும் சேர்த்து வைக்க நடையாக நடந்தார் தாத்தா. எதுவுமே சரியாக வரவில்லை.

அப்போது அனந்தராமன் சொன்னது ' ஒண்ணும் அவசரம் இல்லை மாமா. அவளுக்கா எப்போ வரணும்னு தோணுதோ அப்போ வரட்டும் நான் காத்திட்டு இருப்பேன்'.

மைதிலியின் மனம் ஒன்றே ஒன்றை மட்டுமே எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருந்தது. தனது கணவன் ஒரே ஒரு முறை 'நீ என்னுடன் வந்துவிடு' என்று அழைக்க வேண்டும். இல்லை என்றால் தான் பெற்ற மகனாவது 'அம்மா நீ எனக்கு வேண்டும் நீ நம் வீட்டுக்கு வந்துவிடு' என்று அழைக்க வேண்டும்.

நடக்கவில்லை அது. காலங்கள் இப்படியே கடந்துக்கொண்டிருந்தன.

அவர்கள் பிரிந்து கிட்டத்தட்ட ஆறு, ஏழு வருடங்கள் கழித்து வந்தது அந்த நாள்.

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு. .......

மைதிலிக்கு தனது கணவரை பற்றி தொடர்ந்து சில நாட்களாகவே கெட்ட கனவுகள் வந்துக்கொண்டிருக்க,  அவரை பார்த்து விட வேண்டுமென்ற எண்ணம் மனதில் மேலோங்க துவங்கியது.

அந்த தினமும் வந்தது. அன்றுதான் விஷ்வா தனது வேலை நிமித்தம். அமெரிக்காவுக்கு கிளம்பிக்கொண்டிருந்தான்.

மனதில் பொங்கி எழுந்த தவிப்பை, கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் அன்று தனது கணவரை அழைத்தார் மைதிலி.

'எனக்கு உங்களை பார்க்கணும் போலே இருக்கு வரீங்களா?' மனைவியின் குரல் அவர் காதுகளை சேர, உருகிப்போனார் அனந்தராமன்.

ஏனோ தந்தையை விட்டுப்போக மனமே இல்லாமல் அமெரிக்காவுக்கு கிளம்பினான் விஷ்வா.

விமான நிலையம் அடைந்து விமானம் ஏறி விட்டிருந்தான் விஷ்வா..

சரியாக அந்த நேரத்தில் தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டார் அனந்த ராமன். 

தொடரும்...

Go to episode # 14

Go to episode # 16

{kunena_discuss:726}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.