(Reading time: 23 - 45 minutes)

 

யோ!!! வேண்டாம்..... நான் நல்லாத்தான் இருக்கேன்...”

“முதல் தடவை உன்ட்ட இருந்து இதை கேட்கிறேன்.... ஆக கவின் ஒரு மந்திரவாதின்னு. தெரிஞ்சு போச்சு....”

வேரி மெல்ல திரும்பி அருகிலிருந்த கவினின் முகத்தைப் பார்த்தாள். இருவரும் அவனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தனர். அவன் முகத்தில் இளம் புன்னகை. இவளை ரசனையோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

இவன் மந்திரவாதி போலவா இருக்கிறான்? எதிர் புறம் திரும்பிக்கொண்டாள் வேரி.

“இல்ல.....மிர்னா...அவங்கள பத்தி நீ தப்பா புரிஞ்சு வச்சுருக்க...அவங்க.....நல்ல டைப்தான்..” சிறு குரலில் சொன்னாள். மிர்னாவிற்கு கேட்க வேண்டும் அதே  நேரம் கவினுக்கு கேட்க கூடாதே என்ற ஒரு தவிப்பு அவளுள்.

“அதெப்டி ஒரே நாள்ல உனக்கு தெரிஞ்சிட்டாம்...?”

“இரெண்டு நாள் ஆச்சே !!!”

“ஹப்பா.....எவ்ளவு நாள் ஆச்சு...இது ரொம்ப ஜாஸ்திதான் ஒத்துகிறேன்பா..”

“போ  மிர்னா...நீ கிண்டல் பண்ற....இதுல உன்ட்ட சொல்ல வந்த விஷயமே மறந்து போயிடும்...” சிணுங்கினாள் வேரி.

“சரிப்பா.....சொல்லு..”

“அது...வந்து சாரி மிர்னா.... நான் உன்னை கூட இவ்ளவு நாளா நம்பலையோன்னு இப்ப தோணுது....நீ எல்லாத்தையும் என்ட்ட மனம் விட்டு பேசி இருக்க....நான் எதையும் உன்ட்ட சொல்லலை..”

“ஹேய்...என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை...? இப்படில்லாம் பேசினா பேசுறது வேரின்னு நான் எப்படி நம்ப...?”

“ ப்ளீஸ் மிர்னா...பேசவிடு என்னை ..இல்லனா எனக்கு ஃப்ளோ போய்டும்..”

“சரிங்க மேடம் சொல்லுங்க...”

“நீ இப்ப செலவுக்கு என்ன பண்றன்னு தெரியலை....அம்மா கூடயும் நீ இல்லதான..? எனக்கு பாட்டி கொடுத்த பணம் இருக்குது...அதை நீ வச்சிக்கோ....ப்ளீஸ் வேண்டாம்னு மட்டும் சொல்லிடாத....அதோட என் ப்ராப்பர்ட்டியையும் விக்றதுக்கு அரேஞ் செய்தா...”

வேரி இப்பொழுது கவினின் முகத்தைப் பார்த்துக் கெஞ்சிக்கொண்டிருந்தாள்.

சின்னதாய் சிந்திய ஒரு புன்னகையுடன் அவளைப் ஒரு நொடி பார்த்தவன் மீண்டுமாக தன் லாப் டாப்பிற்குள் குனிந்து கொண்டான்.

கவின் எப்படி எடுத்துக் கொள்வான் என வேரி கலங்கி இருக்க, அது தாக்கியதோ மிர்னாவை.

பாட்டி வீட்டிலிருக்கும் வரை வேரி இவளிடம் பேசகூட மாட்டாள் என்று சொல்லிவிடலாம். அந்த அளவிற்கு இவளை ஒதுக்குவாள். பாட்டியுமே வேரியின் பாட்டியாகதான் இவளுக்கு தோன்றும். இவள் பாட்டியாக இவள் உணர முடிந்ததே இல்லை. மரணத்திற்கு முன்பாக தன் சொத்தனைத்தையும் தன்னிடிடத்திலிருந்த பணத்தின் பெரும் பங்கையும் வேரிக்கும், எதனாலோ ஒரு பங்கை இவளுக்கும் என பாட்டி பிரித்து கொடுத்துவிட்டு போனார்.

வேரிக்கு எவ்வளவு பணம் சென்றிருக்கிறது என்றே இவளுக்கு தெரியாது. ஆனால் அதை பற்றி வருத்தமும் இவளுக்கு இல்லை. இருப்பினும் அப்படி இருந்த வேரி இன்று இப்படி சொல்வதானால்....?

“உன் அக்கவ்ண்ட் நம்பர் கொடு ...நான் ட்ரான்ஸ்ஃபர் பண்ணிடுறேன்... ப்ளீஸ்...”

வேரியின் வார்த்தையில் சுயநிலைக்கு வந்தவள்....”ஹேய் பெரிய மனுஷி .....கல்யாணம் ஆகிட்டுன்ன உடனே...நீ ரொம்ப பெரியாளாகிட்டியோ...? இதெல்லாம் நாங்க பார்த்துகிடுறோம்...ஒழுங்கா உன் வீட்டுகாரரை கவனிக்கிற வேலைய மட்டும் பாரு...”

“ஐயோ ....நான் பெரியாளு அதனால தாரேன்லாம்  இல்ல...” இவள் பதில் அவளுக்கு அப்படி புரிய

“ஏய் வேரு.....ஏன் எல்லாத்துக்கும் இப்படி டென்ஷனாகிற....உன்னை நான் தப்பால்லாம் நினைக்கல...கல்யாணத்துக்கு அப்புறம் உன் பணம் கவின் பணம்னு எதுவும் தனியா கிடையாது...அதனால எதுனாலும் நீங்க ரெண்டு பேருமா ப்ளான் செய்து உங்களுக்கும் உங்க ஃபமிலிக்கும் எது நல்லதோ அதை செய்ங்க... அதோட பாட்டி உனக்குன்னு குடுத்தது...உனக்கும் உன் தலமுறைக்கும் ப்ரயோஜனபட்டாத்தான்.... ஆசீர்வாதம்....நான் எடுத்துகிட்டா....சாபமா போய்டும்...என்னை பத்தி கவலை படாத...எப்படியும் ஸ்பான்சர் கிடைக்கும்....”

மலங்க விழித்தாள் வேரி. மிர்னாவை எப்படி சம்மதிக்க வைக்க?

அவளிடமிருந்து மொபைலை வாங்கினான் கவின்.

“.ஹாய் மிர்னா....ஐம் கவின் ஹியர்....”

அவ்வளவுதான் மொபைலை வியனிடம் கொடுத்துவிட்டு கார் ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்க்க தொடங்கினாள் மிர்னா.

ஒன்றும் புரியாமல் ஒரு நொடி பார்த்த வியன் தன் அண்ணனிடம் சிறிது பேசிவிட்டு இணைப்பை துண்டித்தான்.

இவனை ஏற்றுக்கொண்ட மிர்னா கவினை புறக்கணிப்பதென்ன??

அவள் மொத்த உரையாடலையும் திரும்பவுமாய் நினைத்துப் பார்த்தவனுக்கு எதோ புரிந்தது போல் இருந்தது.

வெளிப்புறம் நோக்கி திரும்பி இருந்த அவள் முகத்தின் பக்கவாட்டு தோற்றத்தைப் பார்த்தான்.

எதோ ஒரு அமைதி அதில். இனம் புரியா மலர்ச்சியும் கூட.

தன் மொபைலில் தன் தோழி வென்யாவை அழைத்து பேச தொடங்கி இருந்தாள் மிர்னா. அவள் முகம் வெளிப்புறம் பார்த்து திரும்பி இருக்க அவளது இடக்கை வியனுக்கும் அவளுக்கும் இடையில் கார் சீட்டில்.

அந்த கையின் மேல் பதிந்தது வியனின் பார்வை.

ஒல்லியாய் நீண்ட விரல்கள். அவ்விரலில் அவன் அணிய போகும் மோதிரம் ஞாபகம் வந்தது. இப்பொழுதே அந்த கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக்கொள்ளும் ஆசை அவனுள்.

அவள் இன்று பாரை தவறின்றி தாண்டும் வரை அவன் உணர்ந்த அழுத்தமும் அந்நேரம் அவள் எப்படி உணர்ந்தாளோ என்று அவன் நினைத்ததும் அவள் தாண்டி முடித்தவுடன் ஓடிச்சென்று அவளை அணைக்க வேண்டும் என்று தோன்றிய எண்ணமும் ஞாபகம் வந்தது. காமமோ இச்சையோ அதில் துளியும் இல்லை......ஆனால் இதற்கு கூட உரிமை இல்லாமல்....

அவள் முட்டை கண்காளால் இவன் காதலை அறிய கெஞ்சும் தருணங்கள் மனதில் ஊர்வலம் வர

பாவம் என் எம்.எச்..என்னைத்தவிர இப்போ அவளுக்கு யார் இருக்கா....நானும் அவள நோக வைக்கிறனோ...பேசாமல் அவட்ட விஷயத்தை சொல்லிட்டா என்ன... இந்த கையை பிடிச்சுக்கிறத தாண்டி மனசை எல்லை கடக்காம வச்சுக்க முடியாதா என்ன....?என்று அவன் நினைத்த தருணம்

“சிட் செய்ய சீட் கொடுத்தா ஸ்லீப் செய்ய மேட் கேட்குமாம்....எம் ஓ என் கே இ ஒய் பிரைன்...”  மிர்னா வென்யாவிடம் எதோ சொல்லிக்கொண்டு இருப்பது இவன் காதில் விழுந்தது.

பல்ப்பு வாங்கினான் வியன். ஒரு நொடி திகைத்தவனுக்கு சிரிப்பு வந்தது. எதோ தோன்ற ரியர்வியூ மிரரைப் பார்த்தால் இவனைப் பார்த்து மௌனமாக குலுங்கிக் கொண்டிருந்தான் ரஜத்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.