(Reading time: 23 - 45 minutes)

 

ப்பொழுதுதான் முதல் தடவையாக மிஹிரைப் பார்த்த மிர்னாவிற்கு மனதிற்குள் சுள்லென்றது.

வேர்ல்ட் கப் வென்யூல விறகு விக்க வந்தானாம் வெங்கி... வெறும் கிணத்துல விரால் வளப்பேனான்னாம் அவன் தம்பி...எவன்டா இவன் சம்பந்தம் இல்லாம சைக்கிள் கேப்ல சடுகுடு ஆடுறது...மாத்திபோட்டு மத்தளம் வாசித்தேன்னா மாங்காயும் தேங்காயுமா டெவலபாகிடும் உன் மங்கி முகம்...

நிமிர்ந்து வியன் முகத்தைப் பார்த்தாள் அவன் புன்னகையோடு நின்றிருந்தான். பொங்கிக்கொண்டு வந்தது அவளுக்கு. ஓ அவ்ளவு தூரம் ஆகிபோச்சா..

“நச்சு பிச்சுன்னு நல்லதா இன்னும் நாலு மூஞ்சிய காமிங்க அப்புறமா என் ரேஞ்சுக்கு ஏத்தாப்ல எதாவது ஒரு ப்ரின்ஸை பிக்கப் செய்றேன்...” வியன் முகத்தைப் பார்த்தபடி கடித்து துப்பினாள் மிர்னா.

ஒரு கணம் அதிர்ந்த வியன் பின்பு அவள் குழப்பத்தை புரிந்தவனாக “ஏய் வாலு” என்று செல்லமாக அதட்டினான்.

இதற்குள் பேந்த விழித்த மிஹிரும் வெடித்துக் சிரித்தான்.

அப்பொழுதுதான் புரிந்தது அவளுக்கு மிஹிர் முழங்காலிட்டது ரியாவிற்காக என்று.

“நீ இவ்ளவு ஜாலி டைப்னு எனக்கு தெரியாது மிர்னி” என்றபடி ரியாவை அள்ளிக்கொண்டு எழுந்தான் மிஹிர். அவனுக்கு மிர்னா தப்பாக புரிந்து கொண்டு பேசுகிறாள் என தெரியவில்லை.

விளையாட்டாய் தன்னை கிண்டல் செய்கிறாள் என்றே எண்ணிக்கொண்டான். அவள் கோமாளி வேசமும் அதற்கு காரணம்.

அதனால்  ஆரம்பம் முதலே அவளிடம் தயக்கமின்றி பழகதொடங்கினான் மிஹிர்.

ரவு உணவு வரை எல்லாம் இலகுவாக செல்வதுபோல்தான் இருந்தது மிர்னாவிற்கு. அடுத்து வியன் விடை பெறுவான். இவள்??? என்னதான் பழக இனியவர்களாக ரஜத் குடும்பம்  இருந்தாலும் அவளுக்கு அது அடுத்த வீடல்லவா?

அத்தனை சண்டை போட்டிருந்தாலும் அவர்களின் செயல் எதுவும் இவளுக்கு பிடிக்கவில்லை என்றானாலும் பெற்றோர் வீடும் அவர்களது அருகாமையும்....அதன் பாதுகாப்பு உணர்வும்....

கடும் தனிமையை உணர்ந்தாள்.

அந்த எண்ணமே அவளை சரியாக சாப்பிட கூட அனுமதிக்கவில்லை.

ரஜத் குடும்பம் கேரளத்தை பூர்விகமாக கொண்டவர்கள். அதனால் இரவு உணவு சாதமும் மீனும். ரஜத்துக்கு அருகில் அமர்ந்து உணவு உண்டு கொண்டிருந்த வியன் சிறிதுநேரம் இவள் உணவை அளைவதை பார்த்திருந்தவன் எழுந்து வந்து இவளுக்கு அடுத்து இருந்த காலி இருக்கையில் இயல்பாய் அமர்ந்தான்.

இவள் தட்டில் பரிமாறி இருந்த மீனை, முள்நீக்கி பக்குவமாக சாப்பிடும் படி சிறு துண்டுகளாக எடுத்து  வைக்க தொடங்கினான். “ மீன் சாப்பிட கஷ்டபடுவியோ...? இன்னைக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ....நாளைல இருந்து நான் பார்த்துகிடுறேன்......இன்னைக்கு நீ ஒழுங்காவே சாப்பிடலை ...இப்பவாவது கொஞ்சம் சாப்பிடு ....” மீன் பிய்க்கும் வேலையில் கவனமாக தட்டை பார்த்துக்கொண்டே வியன் சொல்ல அழுகை பொங்கியது அவளுக்கு..

“நீங்க ஊருக்கு போகலையா? “

“உன்னை விட்டுட்டா?  ரஜத் வீடும் டெல்லியும் என்ன ஆறது....நோ  வே...எனக்கு என் தாய் நாடும் தலை நகரமும் நண்பனும் ரொம்ப முக்கியம்...”

அவள் பேசும் பாவனையில் சொல்லிய வியன் அவள் கண்களைப் பார்த்து ஆறுதலாய் தலை அசைத்தான்.

அழுகையும் சிரிப்புமாய் அவனை பார்த்தவள் சாப்பிட ஆரம்பித்தாள்.

உணவிற்கு பின் அனைவரும் தூங்க கிளம்ப வியனிடம் அவள் கேட்க நினைத்த எதையும் கேட்கும் வாய்ப்பு வரவே இல்லை.

அவனை பரிதாபமாக திரும்பி பார்த்துக்கொண்டே பிரிஸில்லாவுடன் அவள் இவளுக்காக காட்டிய அறையை நோக்கிச் சென்றாள்.

குளித்துவிட்டு இரவு உடையில் பக்கத்தில் வந்து கவின் படுத்தபோது பதட்டமாக இருந்தது வேரிக்கு. சில நொடி. பின் மீண்டுமாக அவள் சிந்தனைக்குள் நழுவினாள்.

இவளைப் பார்த்து சின்னதாக சிரித்தான் கவின். மீண்டும் கவனம் அவன் மீதே திரும்பியது. பக்கத்தில் பார்த்தாலும் தூரத்தில் பார்த்தாலும் எப்பொழுதும் இவன் அழகு. மனதிற்குள் அவனை ரசித்துக்கொண்டாள்.

பகலில் இவளுக்கு தேவையானது என இவளை கூட்டி கொண்டுபோய் அவன் வாங்கி குவித்த விதம் ஞாபகம் வந்தது. இப்படி இவன் என்னை விரும்ப அப்படி என்ன என்ட்ட இருக்குது....?

மனதிற்குள் மீண்டும் அமில ப்ராவகம்.

கூடவே மிர்னா வியன் திருமண திட்டம் ஞாபகம் வந்தது. இது மட்டும் நடந்துவிட்டால்...? இந்த குடும்பத்தில் இவள் நிலை இன்னுமாய் உறிதிப்பட்டுவிடுமோ? ஒரு நொடி அப்படி நினைத்தவள் தன்னையே கடிந்து கொண்டாள்.

அவர்கள் விரும்புகிறார்கள் அதனால் அவர்கள் திரும்ணம் நடைபெற வேண்டும். இதென்ன இவளுக்காக அவர்கள் திருமணம் நடைபெற வேண்டும் என நினைப்பது...?

எப்படியாவது கவின் தனக்கு நிரந்தரமாய் கிடைத்துவிட மாட்டானா என தன் மனம் அலைபாய்கிறது என அவளுக்கு தெளிவாக புரிந்தது அந்த நொடி .

அவள் முகத்தையே கவின் பார்த்துக்கொண்டிருக்கிறான் என புரிய “குட் நைட்” என்றுவிட்டு கண்மூடி படுத்துக் கொண்டாள்.

மனதிற்குள் கவின் பெற்றோரை எப்படி மிர்னாவை ஏற்க வைப்பது என்ற சிந்தனை ஓட தொடங்கியது அவளுக்கு.

சிறிது நேரம் அவளைப் பார்த்திருந்த கவின் ஒரு நிறைவுடனே தூங்கிப்போனான். காரணம் இன்று முழுவதும வேரி அவனிடம் மனம் வேறுபடவில்லை என்ற நினைவு.

ஆனால் எதோ தோன்ற இடையில் விழிப்பு வர அருகில் வேரி  இல்லை.

எழுந்து வெளியே சென்று முதல் தளத்திலிருந்த அவனது அறை சாவி துவாரத்தின் வழியாக பார்த்தால் அன்று போல் தரையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தாள் வேரி. கையில் மொபைலை பிடித்திருந்தாள்.

யாரிடமாவது பேசிக்கொண்டே தூங்கிவிட்டாளா?  இவன் முன் பேசாமல் இப்படி ரகசியமாக வந்து பேசவேண்டுமென்றால் அந்த நபர் யார்?????

தொடரும்

Ennai thanthen verodu - 06

Ennai thanthen verodu - 08

{kunena_discuss:831}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.