(Reading time: 23 - 45 minutes)

 

ஜத்தின் மனைவி ப்ரிஸில்லா மிர்னாவை விட சில வயது மூத்தவளாக இருக்க வேண்டும். ஏறத்தாழ ஒத்த வயது, இயல்பான நட்பும், வாய் ஓயாத பேச்சுமாய் இருந்தவளை மிர்னாவுக்கு பிடித்ததில் ஆச்சர்யமில்லை.

ரஜத்தின் அன்னையைப் பார்க்க மட்டும் கொஞ்சம் பயமாக உணர்ந்தாள். தன் பாட்டி வயது அவர்களுக்கு இருக்கும் என்று தோன்றியது. ரஜத் வெகு நாள் கழித்து பிறந்த மகனோ...?

தன் பாட்டியை பார்த்து இயற்கையாக முதியவர்கள் பால் ஒரு சிறு அச்சம் அவளுக்கு. எதற்கு கோப படுவார்களோ என்ற ஒரு எண்ணம்.

ஆனால் அவரோ அவள் வாசல் தாண்டி வரவேற்பறையை அடைந்ததும்

“மோளே” என்று இவள் கை பிடித்து தன் அருகில் நிறுத்தியவர் “என்ட ஏசுவே எந்த தீங்கண் வன்கண் பொறாமை கெட்ட எண்ணம் எதுவும் மோள தொடாம உங்க ரத்தத்தால மூடி பாதுகாத்துகனும் என்று தமிழிலும் மலையாளத்திலுமாக ஜெபித்துவிட்டு அவளது நெற்றியில் முத்தமிட்டார்.

இத்தனை நேரம் ஒருவர் கூட தன்னை தன்னவராக உணர்ந்து உரிமையுடன் பாராட்டவில்லை என்று அவள் மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்த ஒரு ஏக்கம் அணைந்தது அந்நொடி.

“அம்மா அப்பாவை நினச்சு கவலபட வேண்டாம்...எல்லாம் சரி ஆகிடும்...” என்றவர் நான் ஸ்கூல் படிச்ச காலத்துல வல்லிய அத்லெட்டாங்கும்.... ஆனா அடுத்து பெருசா எதையும் செய்ய முடியல...கல்யாணம் குடும்பம்னு  போய்ட்டு...நீ தைரியமா இவ்ளவு தூரம் வந்து இருக்கிறதே பெருசு....ஒலிம்பிக் வின் பண்ணதும் உன்னைவிட உன் அம்மா அப்பாதான் அதிகமா சந்தோஷபடுவாங்க...பாரு..எத்தனை பேரோட நிறைவேறாத கனவை நீ நிறைவேத்த போற.....”

அவள் இரு கன்னங்களிலும் கைவைத்து ஆசையும் ஆசீவாதமுமாக அவர் பேச மிர்னாவிற்குள் எங்கோ கல்லாய் இருந்த ஒரு பகுதி மனம் உருகுவது போல் ஒரு உணர்வு.

உறவுகள் இத்தனை சுகமானதா?

“பாட்டி..” என்றபடி கட்டிக்கொண்டாள் அந்த முதியவரை.

அதே நேரம் யாரோ தன் காலை பிடித்து தள்ளுவதை உணர்ந்த மிர்னா வேகமாக விலகி பார்த்தால் அந்த வீட்டு குட்டி வாண்டு தன் உரிமை பாட்டியை யாரோ கொஞ்சுவதா என்ற வெறுப்பில் டாமைப் பார்த்த ஜெர்ரி போல் இடுப்பில் கைகள் ஊன்றி காதுகள் விடைக்க முறைத்தபடி நின்றிருந்தது.

அவ்வளவுதான் மிர்னாவிற்கும் வயது மூன்றாகிப் போனது.

“நாம க்ளவ்னி க்ளவ்னி விளையாடலாமா...?” கேட்டது  மிர்னா

“அப்பதின்னா....?

“அப்டின்னா....7 அப், ஸ்டோன் பேப்பர் ஸிஸ்ஸர், ஹைட் அன்ட் சீக் இப்படி எதுனாலும் நாம விளையாடலாம்...ஒவ்வொரு கேம்லயும் ஜெய்ச்சவங்க தோத்தவங்கள க்ளவுன் ஆக்கனும்...முத தடவை தோத்தா க்ளவ்ன் நோஸ் அவங்க ஃபேஸ்ல ட்ரா பண்ணலாம்....அப்புறம் அதே மாதிரி... “ பேசிக்கொண்டே ரியாவும் மிர்னாவும் வீட்டின் தோட்டத்திற்குள் சென்றனர்.

இதை கவனித்தும் கவனிக்காதது போல் நின்றிருந்த வியன் சில நிமிடங்கள் மேல் ஆவல் தாங்காமல் ஒலிம்பிக் போக போகிறவள் உள்ளூரில் என்ன விளையாடுகிறாள் என பார்க்க சென்றான்.  கண்டிப்பா இவன் ரசிக்கும் விதமாக ஏதாவது இருக்கும்...

ஒரு மர நிழலில் இருவரும் நின்றிருப்பது தெரிந்தது. ரியா கையில் வாட்டர் பாட்டில்.

“வாத்தரை மௌத்ல ஃபில் செய்துத்து யார் அதை ரொம்ப தூரம் தொதுற மாதிரி கொப்பளிக்காங்களோ..”

ரியா ரூலை சொல்லிகொண்டு போக ..படு சின்சியராய் தலை ஆட்டிக்கொண்டிருந்தாள் மிர்னா.

ஹான்...என்று ஒரு நொடி அதிர்ந்த வியன் இதுக்குமேல அங்க இருந்தா ஆட்டத்துக்கு தன்னை கூப்பிடாட்டாலும் கொறஞ்சபச்சம் ரெஃப்ரியாவது ஆக்கிருவாங்க ரெண்டுபேரும் சேர்ந்து என்று தோன்ற வந்த வழியே திரும்பினான்.

அரை மணிநேரம் போல் கடந்திருக்கும். அவன் எதிர்பார்த்திருந்த மிஹிர் வந்து சேர்ந்தான்.

மிஹிர் சில வருடங்களுக்கு முன் ஹை ஜம்ப்பில் நேஷனல் ஷாம்பியன். இப்பொழுது மிர்னாவிற்கு கோச்சாக பணியாற்ற விருப்பம் தெரிவித்திருந்தவர்களில் அவனும் ஒருவன். ரஜத்தின் மனைவி ப்ரிஸில்லாவின் தம்பி அவன்.

பலவகையில் இவர்களது சூழலுக்கு மிஹிர் கோச்சாக வருவதே சரியாக வரும் என தோன்ற அவனை சந்திக்க காத்திருந்தான் வியன்.

அவனுடன் எல்லோரும் சில நிமிடங்கள் பேசிமுடிக்க மிர்னாவை அறிமுக படுத்தவென அவளை அழைக்க சென்றான் வியன்.

சில நிமிட தேடலுக்கு பிறகே அவள் இருப்பிடத்தை பார்த்தவன் சிரித்தபடி அங்கு சென்றான்.

வீட்டின் தோட்டத்தின்  இட ஓரம் இருந்த பேஸ்கட் பால் போஸ்டில் பாதி உயரம் பனைமரம் ஏறுவதுபோல் ஏறி இருந்தாள் மிர்னா.

மேலே பேஸ்கட்டில் சிக்கி தொங்கிக் கொண்டு இருந்தது ஒரு பார்பி.

இவன் அழைத்தவுடன் மூக்கை சுருக்கியபடி இறங்கி வந்தவள், முறைத்தபடி இவன் அருகில் வந்து நின்றாள்.

“2 மினிட்ஸ்ல அந்த பார்பியை நான் எடுக்கலன்னா நான் திரும்பவும் தோத்துடுவேன்...” சிணுங்கினாள்.

மூக்கு மட்டுமல்ல வாய் கண்கள் எல்லாம் சர்கஸ் கோமாளிபோல் லிப்ஸ்டிக், ஐ ஷடோ கொண்டு வரைய பட்டிருக்க தலையில் ஒரு கோமாளி தொப்பி அதிலிருந்து பலவர்ண ப்ளாஸ்டிக் முடி தோள் வரை தொட முகத்தை போல் இருமடங்கு அளவில் ஒரு சிவப்பு நிற கண்ணாடி வேறு

சிரிப்பை அடக்கமுடியவில்லை வியனுக்கு. திரும்பி ரியாவைப் பார்த்தான் சிறு வரைதலெதுவும் இல்லாமல் படு சுத்தமாக நின்று கொண்டிருந்தாள் அந்த குட்டி.

“ஒரு தடவை கூட நீ ஜெயிக்கலையா...?” வியன் கேட்க இல்லை என்பதுபோல் தலையை இடவலமாக ஆட்டினாள் மிர்னா பரிதாபமாக .

“அதெப்படி...அந்த வாட்டர் ஸ்பிட் பண்ற கேம்ல கூடவா நீ ஜெயிக்கல...?”

“ஆங்...அது காக்ளிங் கிங்...3 சான்ஸ்...ஃபர்ஸ்ட் சான்ஸப்ப லாஸ்ட் மினிட்ல ரியா என்னை டிக்கிள் செய்துட்டா...வாட்டரை விழுங்கிட்டேன்...சொதப்பிட்டு......நெக்ஸ்ட் டைம் டச் செய்ய கூடாதுன்னு சொல்லிட்டுதான் செய்தேன் அவ வேற ட்ரிக் செய்துட்டா...”

சட்டென முகம்  சுருக்கி தன் இரு கண்களையும் இறுக்கி மூடி, தன் காதுகளை தன் கைகளால் பொத்திக் கொண்டாள் மிர்னா.

ரியா ஒரு ப்ளக்கரில்  கரப்பான் பூச்சி ஒன்றை பிடித்து ஆட்டிக்கொண்டிருந்தாள்.

வாய்விட்டு சிரித்தான் வியன்.

“தூ சான்ஸ் தொதர்ந்து ஸ்பித் பண்ணலன்னா அவங்களுக்கு தெர்த் சான்ஸ் கிதையாதுன்னு ரூல் .....” இவனுக்கு விளக்கிய ரியா

“இதுக்கெல்லாம் பயப்பதலாம மிர்னி...பாரு நான் இல்ல...” என்றபடி மிர்னாவின் பயத்தை போக்க முற்பட்டது..  

அதே நேரம்

“ஹாய் ஸ்வீட் ஹார்ட் ஐ வாஸ் ஜஸ்ட் லாங்கிங் ஃபார் யூ”  என்ற படி ஒரு முழங்கால் மடக்கி தரையில் அமர்ந்தான் மிர்னா முன்பாக மிஹிர்.

திருமணத்திற்கு ப்ரோபோஸ் செய்வதுபோல்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.