(Reading time: 18 - 35 minutes)

 

" ப்போ எதுக்காக வானதி என் மேல அவ்வளவு கோபம் ?"

" நீங்க எங்க வீட்டுல இருக்கனும்ல அதான் .. "

" வாட் ??"

"  அண்ணா இருந்தவரை என் அம்மா கொஞ்சம் அடக்கி வாசிச்சாங்க ....ஆனா அவன் போனதும் அவங்களுக்கு உங்க மேல ஏகப்பட்ட கோபம் ... உங்களுக்கு ஒரு விஷயம் அண்ணா சொன்னானா தெரில அண்ணி ... என் அம்மா என்  அப்பாவின் இரண்டாவது மனைவி .. நான்தான் அவங்க பொண்ணு .. அண்ணா பெரியம்மாவின் மகன் .. அதனால்தான் உங்க மேல அம்மாவுக்கு வெறுப்பு ... எங்க உறவையும் உரிமையையும் பங்கு போட நீங்க வருவிங்கன்னு பயந்து .. உங்களை இப்படி எதிர்த்து கூட பேச முடியாத அளவுக்கு அடிக்கடி மட்டம் தட்டி அடக்கி வைச்சதுக்கும் அதுதான் காரணம் ...  நானும் உங்களுக்கு சப்போர்ட் பண்ணி வரிஞ்சு கட்டிட்டு நின்னா, நான் இல்லாத  நேரமா பார்த்து, உங்களை வீட்டை விட்டே அனுப்பி இருப்பாங்க .. அதுனாலத்தான் நானும் அவங்களை மாதிரி கோபமா இருக்குறதா நடிச்சேன் .. என்னை நம்பி அம்மாவும் உங்களை வீட்டை விட்டு அனுப்புறத பத்தி என்கிட்டையே பேசினாங்க ..எனக்கு என்ன செய்றதுன்னு தெரியலை .. உண்மையிலேயே நம்ம ரெண்டு பேருக்கும் வாழ்க்கை தந்தது  யார் தெரியுமா ?"

 கண்கள் கலங்கிட " யார் " என்று கேள்வி கேட்க கூட முடியாமல் இருந்தாள்  கவிமதுரா .. அதை உணர்ந்து வானதியே  தொடர்ந்து பேசினாள்  வானதி ..

" ஜீவாதான் !!"

" ..???"

" ஜீவாவை காரணம் காட்டிதான் என் படிப்பு முடியுற வரை காத்திருந்தேன் .. நான் உங்களுக்கு சப்போர்ட் பண்ணிட்டு  நேத்து வீட்டை விட்டு வந்திருக்கலாம் .. ஆனா என் அம்மா அதுக்கும் உங்களைதான் காரணமாய் சொல்லுவாங்க .. சாபம் தருவாங்க .. எனக்கு இதெல்லாம் பிடிக்கல " என்றவள் கண்கள் மூடி தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டாள்  ..

" இப்போதைக்கு இவ்வளவுதான் என்னால சொல்ல முடியும் அண்ணி .. ப்ரண்ட்ஸ்  ??" என்று  கை நீட்டினாள்  வானதி ..

" ம்ம்ம் ப்ரண்ட்ஸ் ....குட் ப்ரண்ட்ஸ்  தரூ " என்று தன்னையும் மீறி பழைய மதுராவை கை கொடுத்தவள் அப்போதுதான் தான் " தரூ " என்று சொன்னதை உணர்ந்தாள் .. வானதியோ ஜீவாவை பார்த்து கொண்டிருந்தாள் ..

" நல்லவேளை அவள் கவனிக்கவில்லை " என்று எண்ணி பெருமூச்சு விட்டாள்  கவிமதுரா ..

" ம ....தூ .... ரா " என்று அவளது தரூ அழைப்பது போல ஒரு பிரம்மை தோன்றியது ..

ங்கு சந்தோஷின் காரில்  அவளை எண்ணி தாளம் போட்டு கொண்டே  பாடிக்கொண்டிருந்தான் அவள் தரூ என்று அழைத்த கிரிதரன் ..

நந்தவனம் இதோ இங்கே தான்

நான் எந்தன் ஜீவனை நேரினில் பார்த்தேன்

நல்லவளே அன்பே உன்னால் தான்

நாளைகள் மீதொரு நம்பிக்கை கொண்டேன்

நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய்

அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய்

முதல் பார்வை நெஞ்சில் என்றும்

உயிர் வாழுமே உயிர் வாழுமே

"பாட்டு பட்டைய கிளப்புது அண்ணா "

" ஹா ஹா .. ஆமா ஆமா ..  மலரும் நினைவுகளின் தாக்குதல் டா சந்தோஷ் .. நீயும் லவ் பண்ணி பாரு ... தெரியும் ... "

" லவ் ஆ ? நானா ?" என்று யோசித்தவனின் கண்களின் முன் அழுது கொண்டிருந்த சாஹித்யா தான் தெரிந்தாள் ...

" ம்ம்ம்கும்ம்ம் நான் லவ் பண்ணா, ஒரு சூப்பர் அமுல் பேபியை தான் லவ் பண்ணுவேன்  அண்ணா " என்றான் சந்தோஷ் ..

" அருள் வீட்டுக்கு போக பயம்மா இருக்கு டா .. "

" பிசாசு உனக்கே பயம்னா அப்பாவி ஜீவன் நான் எல்லாம் என்னம்மா பண்ணுவேன் ?"

" டேய் .. நீ எனக்கு இப்போ ஹெல்ப்  பண்ணனும் .. அந்த ஒரு காரணத்துக்காக உன்னை சும்மா விடுறேன் " என்று சொல்லி கொண்டே காரில் இருந்து இறங்கினாள்  சாஹித்யா .. அவர்களுக்காக காத்திருந்த அர்ஜுன் உடனே வாசலுக்கு இறங்கி வந்தார் ..

" கை இப்போ எப்படி இருக்கு சத்யாம்மா ? அப்பா பயந்துட்டேன் டா "

" ரொம்ப லேசான காயம் அப்பா ..ஆனா அம்மா என்ன சொல்வாங்க தெரில " என்று சோகமாய் சொல்லிய மகளின் தோள்  மீது கை போட்டுக் கொண்டு நடந்தார் அர்ஜுன் .. சாஹித்யாவும் அருளை திரும்பி கூட பார்க்காமல் தந்தையுடன் நடந்தாள்  ..

" பிசாசு .. கஷ்டபட்டு வர்ற வழியிலேயே போன் பண்ணி இந்த டிக்கெட் எல்லாரையும் கரக்ட் பண்ணி வெச்சா, ஒரு தேங்க்ஸ் கூட சொல்லாம போறா பாரு "

" எனக்கு நானே தேங்க்ஸ்  சொல்லிக்க மாட்டேண்டா தகர டப்பா தலையா .. சும்மா வாசலில்  நின்னு புலம்பாதே .. அம்மா பழைய சோற்றை தூக்கிகிட்டு வந்திட போறாங்க  "

" இருடீ வரேன் " என்று பற்களை கடித்து கொண்டே அவளை துரத்தி கொண்டு வந்தான் அருள் ..

" சுமி, சத்யா வந்துட்டா பாரு " என்று அர்ஜுன் குரல் கொடுக்கவும் ஓடி வந்தனர்  சுமித்ராவும் சுஜாதாவும்

" ரொம்ப வலிக்கிறதா டா ?", " பசிக்கிதா ? " , " ஜூஸ் குடி " , " போய்  படுத்துக்கோ "  என்று ஏகபட்ட உபசரிப்பு .. அருளே  கொஞ்சம் எரிச்சலில் " ஹான் ... அப்படித்தான் நல்லா கொஞ்சுங்க ...இவ இன்னும் நல்லா கை காலை வெட்டிகிட்டு வந்து நிற்கட்டும்"  என்றான் ...

ரவிராஜோ " ஏன்டா , நீதானே போன் பண்ணி, நான் அவளை ரொம்ப திட்டிட்டேன் நீங்களும் திட்டாதிங்க .. பாவம்னு சொன்ன ? இங்க  வந்து தலை கீழா பேசுற ? " என்று உண்மையை போட்டு உடைத்தார் ..

"  அடடே .. நான் சென்னை வர்றதுக்குள்ள  பெரிய பெரிய வேலை எல்லாம் பார்த்து வெச்சு இருக்க போல தம்பி .. யாரந்த அமுல் பேபி  ?"

" அட ஒரு பேச்சுக்கு சொன்னேன் அண்ணா "

" ம்ம்ம் நம்பிட்டேன் நம்பிட்டேன் "

" ஐயோ அப்பா " என்று தலையில் அடித்து  அருள்மொழிவர்மன் .. சாஹித்யாவோ அருகில் வந்து

" டேய் இங்க வாயேன் .. கிட்ட வா " என்று அவன் முகத்தை மிக அருகில் பார்த்து விட்டு

" ஓகே ஓகே .. மீசையில் மண்ணு ஒட்டலை  டா " என்றாள்  சிரிக்காமல் ..

" ..அடிங்க .குரங்கு .... உன்னை நல்லா மாட்டி விட்டு இருக்கணும்னு டீ .. காப்பாத்தி விட்டேன் பாரு " என்றான் ..

" ஹா ஹா.,. விடு .நண்பா . அதான் நீ தான் நல்ல நட்புக்கு இலக்கணமா என்னை காப்பத்தியாச்சே .. இனி அதை பத்தி ஏன் பேசுற ?  நான் இப்போ என் நட்பை காட்ட வேணாமா ?  இரு உனக்காக மில்க் ஷேக் கொண்டு வரேன்" என்றாள் ..

" இந்த கைய வெச்சுகிட்டு நீ சர்கஸ் காட்ட வேணாம் .. ஒழுங்கா நீ குணம் ஆனதும் , கடைக்கு கூட்டிட்டு போயி   வாங்கி தரனும் .. இப்போதான் சாபிட்டச்சுல நீ , வா .. வந்து மருந்து சாப்பிடுட்டு தூங்கு " என்றவன் அத்தோடு நிறுத்தாமல் அவள் உறங்கும் வரை அவளோடு இருந்தான் ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.