(Reading time: 18 - 35 minutes)

 

" துக்காக "

" நாம இங்க இருக்க வேணாம் ப்ளீஸ் "

" நான் அவங்களுக்கு நன்றி கடன் பட்டு இருக்கேன் அண்ணி .. அவங்க கம்பனிலயும்  நாம வேலை செய்ய போறோம்  ... நம்மளை நம்பி இவ்வளவு பெரிய வீட்டை தந்திருக்காங்கன்னா  அவங்க எவ்ளோ பெரிய நற்குணம் உடையவங்க .. இப்படி அவங்களை ஏமாத்தலாமா ?"

" அதில்லை வானதி நான் .................... "

" இதுதான் என் முடிவு ..  !" என்றுவிட்டு கோபமாய் நடந்தாள்  வானதி .. இப்போதைக்கு அவளுக்கென்று இருப்பதே வானதியும் ஜீவாவும்  தான் .. இங்கு இருப்பதுதான் அவளது ஆசை என்றால் அதை தான் ஏன் கெடுக்க வேண்டும் ? என்று எண்ணினாள்  கவிமதுரா .. வேலைன்னு ஏதோ சொன்னளே ! என்ன வேலை ? யார் இந்த வீட்டிற்கு சொந்தமானவன் ? என்று பொறுத்திருந்து பார்ப்போமே என்று தனக்குள்ளேயே சொல்லி கொண்டாள்  கவிமதுரா .. எவ்வளவு தடுத்தும் கிரிதரனின் நிழலில் தான் பத்திரமாய் இருப்பது போல தோன்றும் அவளது உள்ளுணர்வை அவளால்  கட்டுபடுத்தவே முடியவில்லை .. நிம்மதியின் பிரதிபலிப்பாய்  தோன்றிய மெல்லிய புன்னகையை அணிந்து கொண்டு  அன்றைய தினத்தை தொடர்ந்தாள் கவிமதுரா ..

ங்கு அவன் அமைத்த வீட்டில் அவள் நிம்மதியை பெற்ற நேரம், கிரிதரன் தன் தாயார் மீராவதியின்  மடியில் படுத்து நிம்மதியை தேடினான் .. நடந்தவை  முடித்ததின் சாயலை கண்ணபிரான், மீராவதி , கிரிதரன் மூவரின் கண்களிலும் கண்ணீர் .. முதலில் இயல்புநிலைக்கு வந்தவர் கிரிதரனின் தந்தை தான் ..

"  கிரி ... "

" சொல்லுங்கப்பா "

" சமுதாயம் என்பதை உருவாக்கியது நாமதான் .. அதுனால நம்ம சொந்தபந்தம் என்ன சொல்லுவாங்க எது சொல்லுவாங்க என்பதில் எனக்கு எந்த கவலையும் இல்லை ... எனக்கு என் பையன் ..என் பொண்ணு வாழ்க்கை தான் முக்கியம் .. "

" ..."'

'"  என்ன பார்க்குற கிரி ? மது நம்ம வீட்டுக்கு மருமகளாய்   வந்தாலும்  வரலைன்னாலும் அவதான் என் .மகள்... நீ யோசிச்சு சொல்லு பா " என்று மறைமுகமாய் தனது சம்மதத்தை சொன்னார் அவர் .. கிரிதரன் தன் தாயின் முகத்தை கேள்வியாய்  பார்த்தான் ..   அவரோ தன் கணவரை விட ஒருபடி உயர்ந்து

" கூட்டிட்டு வந்திருப்பா .. என்  மருமகளையும் என் பேரனையும் என்கிட்ட கூட்டிட்டு வந்திடு " என்றார் .. சட்டென எழுந்த கிரிதரன் தன்  கட்டிக்கொண்டு ஆனந்தத்தில் அழுதான் .. சரியாய் அதே நேரம் அவனை அழைத்தாள்  வானதி

" ஹெலோ அண்ணா "

" சொல்லும்மா "

" என்னண்ணா குரல் சரியாய் இல்லையே "

" அதெல்லாம் ஒன்னும்  இல்லம்மா .. மதுரா ???"

" தூங்குறாங்க .. வேலையை பத்தி கேட்குறாங்க .. நான் என்ன சொல்லட்டும் "

" நான் அப்பாக்கிட்ட இதை பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டு சொல்றேண்டா.. நீயும் நம்ம கம்பனியில சேர்ந்திடலாமே டா "

" இல்லை அண்ணா .. அது சரியா வராது.. எனக்கு நல்ல வேலை கிடைச்சிருக்கு அதை  மிஸ் பண்ண விரும்பல ..நெக்ஸ்ட்   நான் அண்ணி பக்கத்துலேயே இருந்தா அவங்களுக்கு அவங்களின் பழைய வாழ்க்கை ஞாபகம் வரும் .. உங்ககிட்ட பேச ரொம்ப தயங்குவாங்க "

"  நான் உனக்கு நிறைய கடமை பட்டு இருக்கேன் வானதி .. "

" ஹா ஹா ..  அண்ணன் தங்கச்சிக்கு நடுவில் கடன் எங்க இருந்து வந்தது?  இப்படி எல்லாம் பேசாதிங்க அண்ணா ... நான் என் கம்பனி விஷயமா ஒரு கால் பண்ணனும் ... அப்பறமா பேசறேன் "

" ஓகே மா " என்று போனை வைத்தான் கிரிதரன் .. அடுத்து வானதி அழைக்க இருந்த அந்த நபர் சாட்சாத் அருள் தான் ...  ஆனால் போனை எடுத்தது நம்ம சாஹித்யாவே தான் ..

" ஹெலோ மே ஐ ஸ்பிக் டூ மிஸ்டர் அருள் "

" ஒன்  மினிட் ..... " என்ற சத்யா வேண்டுமென்றே அவளுக்கு கேட்கும் குரலில்

" ஹே அருள் ..உனக்குத்தான் போன் .. டேய் முதலில் சிகரட்டை கீழே போடு ......... கொஞ்ச நேரம்  முன்னாடிதானே ஒரு பொண்ணு கால் பண்ணிச்சு ...இப்போ இன்னொன்னா ? எப்போடா திருந்த போகிற நீ  ? சீக்கிரம் வா .. ஏஞ்சல்  வைட்டிங் " என்றாள் .... சத்யாவின்  பேச்சை கேட்டு அருளின் குணத்தை தவறாய் யூகித்து  கொண்டு " ச்சி  இடியட் " என்று மனதிற்குள் திட்டி போனை வைத்தாள்  வானதி .. அருளோ " ஹே போனை குடுடி " என்று  ஜன்னல் வழியாக கை நீட்டி போனை பிடுங்க பார்த்தான் .. அவனை அறை  வெளியே நிற்க வைத்து கதவை தாளிட்டு இருந்தவளோ 

" மாட்டேன் போ ...என்னய்யா சீண்டினே ? மவனே நீ காலி " என்று சிரித்தாள் ..

விதியும் சிரிக்கின்றதோ? தவம் தொடரட்டும்

Episode # 04

Episode # 06

{kunena_discuss:838}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.