(Reading time: 18 - 35 minutes)

 

து யாரோட கார் வானதி ? நாம எங்க போறோம் ?" என்று  மெல்லிய குரலில் கேட்டாள்  கவிமதுரா ... அந்த ஆடம்பரமான காரில், அவள் ஜீவாவுடன் பின்  அமர்ந்து இருக்க டிரைவர் அருகில் வானதி அமர்ந்து இருந்தாள் .. இரயிலில் கிரிதரனிடம் பேசிய அடுத்த 30 நிமிடங்களில் அவன் செய்த ஏற்பாடுகள் இவை .. அந்த காரை அனுப்பியது அவன்தான் .. அவர்கள் தங்கவிருக்கும் வீடும் அவனது ஏற்பாடுதான் .. அதை எல்லாம் சொல்லாமல்

" நம்ம முதலாளியின் ஏற்பாடு.... நாம அவர் ஏற்பாடு பண்ண வீட்டில் தான் தங்க போகிறோம்  " என்று மட்டும் பதில் அளித்தாள்  அவள் .. அவள் சொல்லி முடிக்கும்போது அவர்களது கார் அந்த வீட்டின்    முன் நின்றது ..

கவிமதுராவிற்காக  அவன் அனுப்பிய ஆடம்பர  காரை பார்த்த வானதி , ஓரளவிற்கு அந்த வீடும் இப்படித்தான் இருக்கும் என்று யூகித்து இருந்தாள்  ... அவன் செயலில் ஆடம்பரத்தை விட அன்பே அதிகமாய் இருப்பதாய்  அவள் உணர்ந்தாள் .... .. " கலக்குறிங்க அண்ணா ..." என்று மனதிற்குள் சிலாகித்து கொண்டாள்  வானதி.. " இறங்குங்க அண்ணி " என்று அவள் பின்னால் திரும்பி சொல்லும்முன்னே காரில் இருந்து இறங்கிய கவிமதுராவின் முகம் காட்டிய உணர்ச்சிகள் ஆயிரம் .. !

என்றோ கிரிதரனுடன் பேசிய சின்ன சின்ன ஆசைகளுக்கு உயிர்  தந்தது போல இருந்தது அந்த வீடு .. ஆயிரம் உணர்ச்சிகளை பிரதிபலித்த அவளது முகத்தை கண்ட வானதி, எதுவும் பேசாமல் அவள் கையிலிருந்து குழந்தையை வாங்க, அதற்காகவே காத்திருந்தது போல அந்த வீட்டிற்குள் நுழைந்தாள்  கவிமதுரா ..

தரூ - மதுரா என்று இருவரும் ஒருவருக்கொருவராய் வாழ்ந்த காலத்தில் பேசிய வார்த்தைகள் அனைத்தும் செவியோரம் மிக அருகில் கேட்பதாய்  உணர்ந்தாள்  கவிமதுரா ..

அந்த பிரம்மாண்டமான வீட்டின் வாசலிலே  அழகாய் துளசி மாடம் அமைக்கபட்டு அதில் அவளுக்கு பிடித்த பிள்ளையாய் சிலை இருந்தது .. அதுவும் அதே சந்தன நிறத்தில் .. அன்று போனில் பேசிய வார்த்தைகள் ஒவ்வொற்றும் அவள்  கண் முன் காட்சியை விரிந்தது ..

" சொல்லு மதுரா .. உன் கற்பனை வீடு பத்தி "

" ஹா ஹா .. உங்க மொத்த சொத்தும் வித்தா கூட அந்த மாதிரி வசந்த மாளிகையை கட்ட முடியாது தரூ "

" இட்ஸ் ஓகே .. அட்லீஸ்ட் உனக்கு இப்படி ஒரு ஆசை இருந்துச்சு அப்படின்னாவது தெரிந்து வைச்சுக்குறேன் சொல்லு "

" ஹ்ம்ம் ஓகே .. வாசற்கதவை திறந்ததுமே ஒரு பெரிய துளசி மாடம் இருக்கணும் .. அது நடுவில் ரொம்ப பெருசாவும் இல்லாம சின்னதாகவும் இல்லாம  கண்ணை கவருற மாதிரி பிள்ளையார்  சிலை இருக்கணும் .. அதுவும் சந்தன பிள்ளையார் "

" அதென்ன சந்தன பிள்ளையார் "

" அதெல்லாம் சொல்ல முடியாது ... பார்த்தாலே தெரியும் அது சந்தன பிள்ளையார்ன்னு .. "

" ஹா ஹா நெக்ஸ்ட் ?"

முன்வாசல் முதல் வீடு வரை ஒரு நீண்ட பாதை வழி இருந்தது .. அந்த பாதை முழுவதும் ரோஜா, சாமந்தி, மல்லிகை வாடாமல்லி என வித விதமான பூச்செடிகள் பூத்து குலுங்கின ..

" நெக்ஸ்ட் வீட்டை சுத்தி பூக்கள் இருக்கணும் தரூ .. கலர்புல் இருக்கணும் .. ஆனா பூவை எல்லாம் பறிக்க கூடாது "

அப்போ நான் டெய்லி  பூந்தோட்ட காவல்காரனாய்  தான் இருக்கணும் .. "

" அதெல்லாம் நான் பார்த்துப்பேன் "

அதானே .. எனக்கு நடமாடும் பூவனம் உன்னை பார்க்கவே நேரம் பத்தாதே "

" சாமியார் மாதிரி இருந்தவரு எல்லாம் என் அம்மாவை மாமியார் ஆக்க பார்க்கறார் டா சாமி " என்று பெருமூச்சு விட்டாள்  கவிமதுரா .. அதையும் ரசித்து ..

" ..வாவ்  கவிதை கவிதை .. கவி  மதுரான்னு சும்மாவா பேரு வெச்சாங்க என் அத்தை மாமா ? ...... சரி அதிருக்கட்டும்... துளசி மாடம், பிள்ளையார், தோட்டம் .... நெக்ஸ்ட் ? "

அந்த தோட்டங்களை தாண்டி வாசலுக்கு வந்தாள்  கவிமதுரா . வானதி அவளிடம் சாவியை கொடுத்தாள்  ..

" இது எப்போ கிடைச்சது வானதி "

" டிரைவர் அண்ணா தான் கொண்டு வந்தாரு அண்ணி " ... கவிமதுராவின் பார்வை மீண்டும் கதவின் மேல் படிந்தது ... ஏதோ உந்துதலில் கதவை திறந்தாள்...

" நெக்ஸ்ட் , நம்ம வீட்டு உள்ள போகலாம் தரூ ... வீடு கலர் லைட் மஞ்சள் இல்லனா வெள்ளை கலர்ல இருக்கணும் .. furniture எல்லாமே கருப்பு இல்லன்னா  கபிலநிறம் ..."

" ஏன்  டா ?"

" எனக்கு   அதுதான் பிடிக்கும் .. எனக்கு கருப்பும் பிடிக்காது வெள்ளையும் பிடிக்காது ..ஆனா ரெண்டும் சேர்ந்து இருந்தா ரொம்ப அழகா இருக்குற மாதிரி  எனக்கு தோணும் "

" அதே அதே ..  எனக்கும்தான் .. நீ தனியா இருக்குற மாதிரி நெனைச்சு பார்த்தாலும் எனக்கு பிடிக்காது .. நான் தனியா இருக்குற மாதிரி நெனச்சு பார்த்தாலும் பிடிக்காது .. நாம ஒண்ணா சேர்ந்து இருந்தாலே தனி அழகு .. "

" தரூ .. போன் ஈரமா இருக்கான்னு பாருங்களேன் .. ஜொள்ளு தாங்கல .. "

" ஹா ஹா ஹா .. சரி நெக்ஸ்ட் ?"

" நெக்ஸ்ட் அங்கங்கே  ஆரஞ்சு  கலர் லைட் இருக்கணும் "

அது ஏன்னு  எனக்கு தெரியுமே தெரியுமே "

" அப்படியா தரூ ? எங்க சொல்லுங்க பார்ப்போம் "

" அப்போதான் ரொமாண்டிக் மூட் இருக்கும் "

" ஆண்டவா இதெல்லாம் அநியாயம் "

அந்த வீடும் அப்படியேதான் இருந்தது ... அங்கு ஒரு கண்ணாடி கதவு இருந்தது .. அதை திறந்து உள்ளே நுழைந்தவளின் விழிகள் மேலும் விரிந்தன ... நான்கு புறம் பளிங்கு தூண்கள்  இருக்க அதன் நடுவில் நின்று நிமிர்ந்து பார்த்தாள்  அவள் .. உச்சி வெயில் அவள் மேனியை தொட்டது ..

" சரி அடுத்த ஆசை என்னவோ ?"

" அடுத்த ஆசை வீட்டில் ஏதாவது ஒரு பக்கம் மழையில் நனையுறதுக்கு  இடம் இருக்கணும் .. வீடுக்குள்ள  சின்ன இடம் .. அங்க இருந்து வானத்தை பார்க்கணும் .. நைட் ஆனா என்னைக்காவது அங்கேயே படுத்து நட்சத்திரம் எண்ணனும் .. மழை தூரும்போது சுதந்திரமாய் நனையனும் "

" சூப்பர் டா .... நெக்ஸ்ட் "

வானதியின் அங்கு வந்தாள் .. " என்ன அண்ணி இங்கயே நின்னுட்டிங்க ... வாங்க ரூம் பார்க்கலாம் "

ஒவ்வொரு அறையாக பார்த்து கொண்டு இருந்தனர் .. அது ஒரு நூலக அறை  போலும் .. மீண்டும் அன்றைய நினைவுகள் !

" தரூ எனக்கு வீட்டுக்குள்ள லைப்ரரி இருக்கணும் .. அதுவும் அங்கேயே ஒரு ஊஞ்சலும் இருக்கணும் .. "

" ஓஹோ அப்போ இரவும் பகலும் மேடம் ஊஞ்சல் ஆடிகிட்டே  புக் படிப்பிங்க ... நான் அப்போ என்ன பண்ணுறதாம் ?"

" ஹான் .. வேணும்னா ஊஞ்சல் ஆட்டி விடுங்க "

" ம்ம்ஹ்ம்ம்ம் மாட்டேனே ... ஊஞ்சலை புத்தகத்தோடு ஆட விட்டுட்டு நான் உன்னை தூக்கிகிட்டு போயிருவேன் .... "

" வெவ்வெவ்வெவ்வெவ்வெவ்வெ ...அப்போ நான் ஊஞ்சல் முன்னாடியே ஒரு நிலைக்கண்ணாடி வெச்சுருவெனெ .. " என்று களுக்கென சிரித்தாள் கவிமதுரா..

அதேபோல அந்த அறையில் ஊஞ்சல் இருந்தது .. ஊஞ்சல் கம்பிகளில் முகத்தை புதைத்து அழுதாள்  கவிமதுரா ..

" தரூ .. தரூ " என்று முணுமுணுத்தவள்  கண் திறக்க அங்கு நிலைக்கண்ணாடியில் தன்னிலையை பார்த்தாள் ...தான் இப்போது ஒரு கைம்பெண்.. இன்னொருவனின் மனைவி எப்படி அவனை நினைக்கலாம் ??

" அப்படியா மனதிற்கு கடிவாளம் இடத் தெரியாதவள்  நான் ?" என்று கண்ணீர்விட்டாள் கவிமதுரா .. அவளது தேம்பல் அதிகமாக

" என்னாச்சு அண்ணி ?" என்றாள்  வானதி ..

" இது யாரு வீடு  வானதி "

" அதான் சொன்னேனே "'

" இல்லை .. இது எனக்கு என்னவோ ரொம்ப தெரிஞ்சவங்க வீடு மாதிரி உணர்வு தருது "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.