(Reading time: 26 - 52 minutes)

" ம்ம்ம்ம்ம் தெரியும் .. நாம கொஞ்சம் தெளிவா பேசலாம் வானதி .. முதலில் என்ன நடந்ததுன்னு சொல்லுங்க ?" என்றான் கிரிதரன் ..

" ம்ம்ம்ம் ..... நான் வானதி ... என் அண்ணா தான் அரவிந்த் ..அவருக்கும் அண்ணிக்கும்  கல்யாணம் ஆனது கூட முதலில் எங்களுக்குத் தெரியாது .. சில மாசம் முன்னாடித்தான் கல்யாணம் பண்ணிகிட்டேன்னு  சொல்லி அண்ணியை எங்க வீட்டுக்கு அழைச்சிட்டு வந்தாரு.. எங்க வீட்டில் யாருக்கும் இதில் சம்மதமில்லை.. அதுக்கு அவங்கவங்களுக்கும் ஆயிரம் காரணம் இருந்துச்சு .. ஆனா எனக்கு பிடிக்காததுக்கு இருந்த ஒரே காரணம் என் அண்ணாவின் வேலை.. உயிருக்கு உத்திரவாதம் இல்லாத வேளையில் இருந்துகிட்டு கிட்ட தட்ட என் வயசில் இருக்குற பெண்ணை கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டன்களேன்னு ரொம்ப கோபம் ...

சரி அவங்கதான் அப்படி முடிவெடுத்தாலும் கவிதா அண்ணி ஏன் இதை தடுக்கலைன்னு கோபம்.. அதுனாலத்தான் அவங்ககிட்டயும் சரியா பேசலை .. அண்ணா இறந்ததும் வீட்டில் அண்ணிக்கு  எங்க அம்மாவினால நிறைய பிரச்சனைகள் வந்தது .. எனக்கு சென்னையில் வேலை கிடைச்சிருக்கு ... அதான் அண்ணியை கூட்டிட்டு நான்  வீட்டை விட்டு வந்துட்டேன் " என்று இரத்தின சுருக்கமாய் நடந்ததை சொல்லி முடித்தாள் வானதி .. அதை சொல்லியவளை விட , அனுபவித்த கவியை விட அதிகமாய் கண்ணீர் வடித்தான் கிரி ..

" விட்டுருக்க கூடாது  மதுரா .. யாருக்காகவும் உன்னை நான் விட்டுட்டு போயிருக்க கூடாது .. உங்க அப்பா பேச்சுக்கு நான் கட்டுபட்டு இருக்க கூடாது " என்று தன்னைத்தானே நொந்துகொண்டு அழுதான் ...

" நீங்க யாருன்னு சொல்லலியே ?? இந்த போட்டோ ?"

" நான் கிரிதரன்.. எனக்கும் கவிமதுராவுக்கும் திருமணம் பேசினாங்க .. சில காரணங்களினாலே நாங்க சேர முடியலை .. " என்றவன் அதற்கு மேல் பேச முடியாமல் அமைதியானான் ..

" உங்களுக்கு கல்யாணம் ஆச்சா ?" என்று தயக்கமாய் வானதி கேட்க மறுப்பாய்  தலையசைத்தான் கிரிதரன் ...

" எனக்கொரு ஹெல்ப் பண்ண முடியுமா வானதி ?"

" சொல்லுங்க "

" அவளை இப்போ  மாதிரி கடைசிவரை நல்லா பார்த்துப்பிங்களா  ? நான் உங்களுக்கு எந்த உதவி வேணும்னாலும் செய்றேன் .. ப்ளீஸ் அல்வேய்ஸ் பீ வித் ஹேர் " என்றான்

" ம்ம்ம்ம் ...ஆனா அவங்களுக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு தானே ??? அவங்க மாறனும் .."

" நிஜம்தான் ... !மதுராவுக்கு இப்படி உங்க நிழலில் இருக்குறது  கண்டிப்பா பிடிக்காதே !"

" ஆனா நான் பார்த்தவரை அவங்க இப்படித்தான் அமைதியா இருக்காங்க "

" அமைதியா ?? மதுராவின் அகராதியில் அந்த வார்த்தையே கிடையாது ..எப்பவும் துருதுருன்னு இருப்பா .. ஏதாச்சும் வம்பு பண்ணனும் அவளுக்கு .. அட்வைஸ் பண்ணா அவளுக்கு புடிக்காது ...ஆனா அன்புக்கு கட்டுப்படுவா .. பட்டாம்பூச்சி அவ " என்றான் அவன் காதலுடன் ..

" அப்போ அந்த பட்டாம்பூச்சியை மீண்டும் பறக்க வைக்க நீங்க எனக்கு உதவலாமே " என்றாள்  வானதி ..

" கண்டிப்பா .. பட் எப்படி ??"

" இப்போதைக்கு அவங்களுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கணும் .. நடந்ததை முதலில் அவங்க மறக்கணும் .. அவங்களுடைய கூட்டுக்குள்ள இருந்து அவங்க வெளிவரணும். "

" அதுக்கு நான் ஏற்பாடு பண்ணுறேன் " என்றவன் அப்போதே தன் நண்பன் வருணை அழைத்தான் .. கிரிதரனின்  அன்பு  நண்பன் வருணை மதுராவிற்கு தெரியாது .. அதனால் அவனை வைத்தே அவளுக்கு உதவிட திட்டம்  போட்டான் .. வருணோ கிரிதரனின் வாழ்வில் நல்லது நடந்தால் போதும் என்றான் .. அதற்காக வருண்  எடுத்த அதிரடி  முடிவு , தனது கமனியின் நிர்வாகத்தையே அவள் கையில் கொடுப்பது .. ஆம் ..! கிரிதரனால் தனக்கு வேலை கிடைத்தது தெரிந்தால் நிச்சயம் கவிதாவிலகி சென்று விடுவாள் .. அதனாலேயே, வருண் தனது கம்பனி நிர்வாகத்தை அவளிடம் ஒப்படைக்க விரும்பினான் .. மேலும் அடிப்படையும் தைரியமாஉ இருந்த கவிமதுராவிற்கு  இது போன்ற பெரிய பொறுப்புகளே அவளை மீட்டுக் கொண்டு வரும் என்று நம்பினான் அவன் .. அனைத்தையும் திட்டமிட்டுவிட்டு  திரும்பி செல்ல எத்தனித்த வானதி

" அண்ணா " என்று கிரிதரனை அழைத்தாள் .. ஆச்சர்யம் பொங்க 

" என்னம்மா " என்று அவன் கேட்க

" என் அண்ணியை நீங்க கல்யாணம் பண்ணிப்பிங்களா  ? அவங்க வாழ்க்கை துணையா இருப்பிங்களா ?" என்று மனதில் தோன்றியதை கேட்டே விட்டாள்  அவள் !

திகைத்துத்தான் போனான் அவன் ..அதைவிட மகிழ்வில் திளைத்தே போனான் ..

" கண்டிப்பா வானதி .. இனி விதியே என்னை அவகிட்ட இருந்து பிரிக்க முயற்சி பண்ணாலும் நான் விட மாட்டேன்"  என்றான் .

அதன்பிறகு பொறுமையாய் திட்டமிட ஆரம்பித்தான் கிரி..எந்த வகையிலும் தான் அவளை கண்காணிப்பது அவளுக்குத் தெரிய கூடாது என்று கவனமாய் இருந்தான் கிரிதரன் .. அதனாலே, மிக முக்கியாமான நம்பிக்கை பாத்திரமாய் இருக்கும் சிலரை வைத்து அந்த  ஆபிசையே மாற்றி அமைத்திருந்தான் அவனும் வருணும்  .. யாரையும் மீறி அவளால் அவனை தெரிந்துகொள்ள முடியாதவாரு  அனைத்து  தகவல்களையும் மாற்றி இருந்தான் .. கவிமதுராவை பொருத்தவரை யாரோ வெளிநாட்டில் இருக்கும் ஒரு  முதலாளியின் கம்பனி இது ..

இப்போதைக்கு அவளுக்கு நல்ல வேலையும், தனது மகனை பார்த்து கொள்ள தகுந்த வசதியும் தேவை .. அதை  அறிந்து   அதற்கேற்ப அந்த ஆபிசை மாற்றி இருந்தனர்  அவனும் வருணும்  .. மேலும் அவளை வீட்டில் இருந்துக்கொண்டே  கவனிப்பதற்கு ஏதுவாக  சி சி டி வி வசதியும் அமைத்து வைத்திருந்தான் ... அதையும் மீறி அவளுக்கு அங்கு வலது கரமாய் இருக்கப்போவது அவனது ஆருயிர் நண்பன்  வருண் தான்!!! .. தன்னை சுற்றி இவ்வளவும் நடப்பது தெரியாமல் எதிர்பார்ப்பும்  ஆர்வத்துடனும் காத்திருந்தாள்  கவிமதுரா ..

இரண்டு பிரம்மாண்டமான கட்டிடங்களின் முன் வந்து இறங்கினர் பெண்கள் இருவரும். அருளின் கம்பனியின் பக்கத்தில் தான் கவிமதுராவின் கம்பனியும் இருந்தது.

"ஆல் தி பெஸ்ட்"  என்று ஒருவரை ஒருவர் வாழ்த்திவிட்டு அவரவர் ஆபிசிற்குள் நுழைந்தனர் இருவரும். அதற்கு சரியாய் அரைமணி நேரம் முன்புதான் அதே அலுவலகத்தில் சீரான வேகத்தில் காரை செலுத்திக்கொண்டே நுழைந்தாள்  சாஹித்யா. நேற்றிரவு நடந்ததை மீண்டும் அசைபோட்டு கொண்டிருந்தாள் சாஹித்யா.

  தன் மீது தவறு இருந்தும் கூட கொஞ்சம் கண் கலங்கியவுடனே  பேச்சை மாற்றிய அருளை எண்ணி நெகிழ்ந்து கொண்டாள்  சத்யா ..அவனுடன் இணைந்து நடந்தவள் அவனது பேச்சுகளுக்கு "ம்ம்ம்ம் " கொட்டிக்கொண்டு இருந்தாலும் அவளது சிந்தனை மொத்தமும் அவன் மீதுதான் இருந்தது ..

"எத்தனை நல்லவன் என் அருள் .. என் மேல உயிரையே வெச்சு இருக்கான் ..எப்போதும் கேலியாய் பேசினாலும்கூட அவனால் என்னை விட்டு கொடுக்கவே முடியாது ..என்னை நானே வெறுத்த நாட்கள் கூட என் வாழ்வில் இருந்திருக்கலாம் ... ஆனா அருள் ? அவன் என்னை வெறுத்ததும் இல்லை ..இனி அப்படி நடக்கப்போவதும் இல்லை ... ..இவனை போயி யாரோ ஒரு பொண்ணு தப்பா நினைக்கிறதுக்கு நான் காரணமா இருக்கலாமா ?" என்று தன்னைத்தானே கடிந்து கொண்டவள்,

" அருள் உன் போனை கொடு "என்றாள் ..

"ஏன் ?"என்ற கேள்வியே இல்லாமல் போனை கொடுத்துவிட்டு வானத்தை பார்த்து நட்சதிரங்களை  ரசித்துக் கொண்டு நின்றான்  அவன் ... சாஹித்யா சிறு வயதில் இருந்தே கணிதத்தில் சுட்டி.. அவளால் எவ்வளவு நீளமான எண்களையும்  பார்த்த மாத்திரத்தில் நினைவில்  வைத்திருக்க முடியும்.. போனில் வானதியின் எண்ணை  பார்த்தவள் அதை மனதிற்குள் பதிய வைத்துக் கொண்டாள் ..பிறகு

"இந்தா "என்று அவனிடமே போனை கொடுத்தான் .. அப்போதும் அருள்மொழிவர்மன் அமைதியாகவே இருக்க

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.