(Reading time: 26 - 52 minutes)

" ருள் உனக்கு ஒரு நல்ல ஜோடி தான் வேலைக்கு சேர்ந்திருக்கா .. யூ வில் லைக் ஹேர் " என்று மனதிற்குள்ளேயே சொன்னாள்  சாஹித்யா .. ( ஹா ஹா வேலைக்கு மட்டும்தான் ஜோடியா சத்யா மேடம் ? )

அதே நேரம் வானதியும் சத்யாவை பற்றி நிறைய தெரிந்து கொண்டாள் .. சத்யா இயல்பிலேயே கலகலப்பானவள், நிறைய விட்டு கொடுப்பவள், முகத்திற்கு நேராய் திட்டுவதற்கு கூட தயங்குபவள் இதை அனைத்தையும் விட அருள் மீது  அவள் வைத்திருக்கும் அன்பு... இந்த ஒரு மணி நேரத்தில் எழுபது சதவிகிதம் அவள்  பேசியது எல்லாமே " அருள் இப்படி , அருள் அப்படி , அருளுக்கு இதான் பிடிக்கும் , இது பிடிக்காது " என்பதுதான் ...

" கொடுத்து வைத்தவர் அருள் சார் நீங்க " என்று அவள் மனதிற்குள் சொல்லி முடிக்கும்போதே அந்த அறையில் ஸ்டைலாய் பிரவேசித்தான் அருள் .. " நீயா ?" என்று அவள் கேட்ட கேள்வி சாஹித்யாவை பார்த்துதான் .. ஆனால் அவன் ஆச்சர்யபட்ட விதத்திலும் குரலின் தொனியிலும் இருவருமே எழுந்து நின்றனர் ..

" நீ இங்க என்னடி பண்ணுற ?" என்று சத்யாவைப்  பார்த்துக் கேட்டவன் 

" ஹாய்  வானதி .. ஐ எம் அருள் .. அருள்மொழிவர்மன் " என்று  வானதியுடன் கைக் குலுக்கினான்..

" உ .... உனக்கு வானதியை ஏற்கனவே தெரியுமா " என்று ஆச்சர்யாமாய் கேட்டாள்  சாஹித்யா .. வானதியும் அதே கேள்வியுடன் தான் அவனை நோக்கினாள்  .. சிரிக்கும் விழிகளுடன் இருவரையும் பார்த்தான் அருள்.. மெல்ல வானதியின் கையை விடுவித்து தன் இருக்கையில் அவன் அமரும்போதுதான் இத்தனை நேரம் அவன் கைகளைப்  பற்றியப்படியே நின்றது வானதிக்கு உரைத்தது .. சில வினாடிகள் என்றாலும் கூட " இப்படி அவனது கரங்களை பிடித்துக் கொண்டு நிற்பது ?" என்று தன்னையே மானசீகமாய் கொட்டிகொண்டாள் .. சத்யாவும் வானதியும் இன்னும் அருளையே கேள்வியாய்ப்  பார்க்க " என்ன ?"  என்பது போல புருவம் உயர்த்திப் பார்த்தான் அவன் .. பிறகு கேலியாய் சிரித்தப்படி

" ஹெலோ மேடம்ஸ், வானதியோட அப்போயின்மெண்ட்  லெட்டரில் கையெழுத்துப் போட்டது யாரு , நான்தானே ? அப்போ எனக்கு வானதியை தெரியாதா ?" என்றான் இயல்பாய் ..

" அருள், நேத்து நான் போனில் உளறியதும்  கூட வானதிக்கிட்டத்தான்  " என்றாள்  சத்யா மெதுவாய்..

ஒரு நொடி ஆச்சர்யமாய் வானதியின் முகம் பார்த்தவன், மீண்டும் தனது கணினியைப் பார்த்துக் கொண்டே

" ஓஹோ அதான் நீ காலையிலேயே சமாதானக்கொடி பறக்க விடுவதற்காக ஆபீஸ் வந்தியா" என்றான். " என்ன ஒரு பார்வை இது  ? ஆச்சர்யபட்டானா ? அல்லது அலட்சியப்படுத்தினானா ?" என்று குழம்பித்தான் போனால் வானதி..

கணியியில் பார்வை பதித்திருந்தாலும் அவ்வப்போது வானதியை அவனும் பார்க்காமல் இல்லை .. இதழோரம் ரகசிய புன்னகை உதிர்த்தவன் இண்டர்காமில் வளர்மதியை அழைத்தான் ... வளர்மதி, சாஹித்யா- அருள் இருவருக்குமே வலது கை .. அவர்கள் ஆபிசில் இல்லாத வேளைகளில் அனைத்து பொறுப்புகளையும் கவனித்துக் கொள்பவள் .. அருளை மீறி கூட ஆபிசில் ஏதாவது நடந்துவிடலாம் .. ஆனால் வளர்மதியின் பார்வையில் இருந்து  எதுவுமே தப்பாது..

அவள் அங்கு வருவதற்குள் தனது பங்கிற்கு சில கேள்விகளை வானதியிடம் கேட்டான் அருள் .. மருந்திற்கும் அவளிடம் அவன் புன்னகைக்கவில்லை ..

" சரியான கடுவன் பூனையாய் இருப்பான் போல .. கொஞ்ச நேரம் முன்னாடி சிரிச்சுகிட்டு தானே இருந்தான் .. என்னைப்  பார்த்து மட்டும்தான் முறைக்கிரானோ ?" என்று தன்னையே கேட்டுக்கொண்டாள்  வானதி .. அது உண்மைத்தான் என்பதுப்போல வளர்மதியை பார்த்தவுடன் முகம் மலர்ந்து சிரித்தான் அருள் .. இருவரையும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைத்தவன், வானதிக்கு பொறுப்புகளை கொடுக்கும் வேலையை வளர்மதியிடம் கொடுத்துவிட்டு சத்யாவுடன் கிளம்பினான் அருள்..

" பிடிக்கலைன்னா எதுக்கு இவன் என்னை வேலைக்கு வைக்கணும் ? என்னமோ சொத்தை எழுதி கேட்ட மாதிரி லுக்கு விட்டான் .. இப்போ அவன் பாட்டுக்கு போய்ட்டான் .. நான் அவனுக்கு பி ஏ  வா இல்லை இந்த ஆபிஸிற்கா ? " என்று கேட்டவளுக்கு " ஆபீசுக்கு தானே !!" என்று உடனே பதில் உரைத்தது உள்மனம் ... அருள் மீது பாய்ந்துக் கொண்டிருந்த எண்ண  அலைகளைக்  அடக்கிவிட்டு வளர்மதியைப்  பின் தொடர்ந்தாள் வானதி ..

கிட்டத்தட்ட சத்யாவை காரில் தள்ளி கதவை அறைந்து சாத்தினான் அருள்மொழிவர்மன். அவனது செயலே அவனது கோபத்தைக்  காட்டிவிட, எதுவும் வாய்க் கொடுக்காமல் அமைதியாய் அமர்ந்திருந்தாள்  சாஹித்யா  ( ரொம்ப உஷார் தான் பாஸ் நீங்க ).. அடிக்கடி அவனது முகத்தைப்  பார்ப்பதும் பிறகு சாலையை வெறிப்பதுமாய்  இருந்தாள்  அவள். அவனை எதுவும் பேசுவான் என்று எதிர்பார்த்தவளுக்கு கிடைத்தது மௌனம் மட்டுமே ..

"ரொம்பதான் அலும்பல் " என்று முணுமுணுத்தவாறே  தனக்கு பிடித்த பழைய பாடல்களை உயிரபித்தாள் ..

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்

நெருப்பாய் சுடுகிறது

என் மலருக்கு என் மேல் என்னடி கோபம்

முள்ளாய்  மாறியது

சாஹித்யாவை முறைத்துக் கொண்டே பாட்டை நிறுத்தினான் அருள். இந்த இடத்துல நான் ஒரு உண்மையை சொல்லியே ஆகணும் .. அதுதான் நம்ம அருளுக்கும் சத்யாவிற்கும் உள்ள ரசனைகள் .. என்னத்தான் சத்யா அருளுக்கு விழி மாதிரி, அருள் சத்யாவிற்கு உயிர் மாதிரி இருந்தாலும் அடிப்படையில் ரெண்டு பேருக்கும் இருக்கும் ரசனைகள் வெவ்வேறு. சத்யாவுக்கு பழைய பாடல் கேட்டால் கண் விழிச்சுகிட்டே கனவு வரும் ..  அருளுக்கு தூக்கம் வரும்.. அருளுக்கு  புதுப்பாடல்கள்  கேட்டா புத்துணர்ச்சி வரும். சத்யாவிற்கோ தலைவலி வரும்.. இப்படி இசையில் தொடங்கி எல்லா விஷயத்திலுமே வெவ்வேறு ரசனை உள்ளவர்கள்  அதை விட்டுகொடுத்து இணைஞ்சு  இருக்குறது தான் இவங்க உறவின் அழகு ! பழைய பாட்டு போட்டு சத்யா அவனது  பொறுமையை சோதிக்கவும், இப்போது அவளது பொறுமையை சோதிப்பது அவனது முறையானது !

என் வாழ்க்கைய தேடி நானும் போறேன்

காண்டுல பாடும் பாட்டுக்காரன்

போதையில் பாடும் சோகப்பாட்டை

சோடாவை கலந்து பாடப்போறேன்

"ஐயோ " என்று அவள் காதைப்  பொத்திக்கொள்ளவும்  அருள் அதை ஓர பார்வையால்  ரசித்து சிரித்தான் ..இருந்தாலும் அது நம்ம  சத்யா கண்ணில் படாமல் இருக்குமா ?

" ஹப்பாடா சிரிச்சுட்டான் " என்று முணுமுணுத்தவள்

முஸ்தப்பா முஸ்தப்பா

டோன்ட் வொர்ரி முஸ்தப்பா

காலம் நம் தோழன் முஸ்தப்பா

என்று பாடலை வைத்துவிட்டு அவன் தோளில்  சாய்ந்து கொண்டாள் ..

" ம்ம்ம்கும்ம்ம் இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை டீ உனக்கு .. பண்ணுறது எல்லாம் குரங்கு சேட்டை  "

" ப்ச்ச்ச் ....என்ன பண்ணிட்டேன்னு என்னுடைய ஏ  வி எம் ஸ்டுடியோ இவ்ளோ கோபப்படுது ?"

" ஏன்டீ கேட்கமாட்ட நீ ?? உன்னை யாரு இந்த கைய வெச்சுக் கிட்டு காரை ஓட்ட சொன்னா ? ஏதாச்சும் ஆனா என்ன ஆகுறது  சது  ??? " (ரொம்ப எமோஷனல் ஆனா நம்ம சாஹித்யாவை அருள் சார் "சது" ன்னு தான் கூப்பிடுவாங்க )

" அதெல்லாம் ஒன்னும் ஆகாது வரு " ( அருள்மொழிவர்மன் ல வர்மனை உருவி அதையே சுருக்கி வருன்னு  கூப்பிடுவது நம்ம சதுக்கும்  வழக்கம் தான் )

" பச்ச்ச் குரங்கே .... அதுவும் வீட்டுல எனக்கு தெரியும்னு அள்ளி விட்டுருக்கே நீ ...சுமிம்மா என்னை கேள்வியா பார்க்குறாங்க !"

" எனக்காக அட்ஜஸ்ட்  பண்ண மாட்டியா டா ? "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.