(Reading time: 26 - 52 minutes)

"ண்டா உன் போனை கேட்டேனே , எதுக்குன்னு கேட்க மாட்டியா ?"என்றாள் சத்யா  ...

" அடியே இது யாரு வீடு "

" இதென்ன கேள்வி "

" பதில் சொல்லடி எரும "

" ப்ச்ச்ச் நம்ம வீடு "

" அது யாரு காரு "

" நம்ம காரு "

" மிஸ்டர் அண்ட் மிசர்ஸ் அர்ஜுன் யாரு "

" நம்ம அப்பா அம்மா "

"மிஸ்டர் அண்ட் மிசர்ஸ் ரவிராஜ் யாரு "

" நம்ம அப்பா அம்மா தான் "

" ஹ்ம்ம் இப்படி நமக்கு மத்தியில் இருக்குற எல்லாமே உனக்கும் எனக்கும்னு தானே ? எல்லாத்துலயும் நமக்கு ஈக்குவல்  ரைட்ஸ் இருக்குதானே ? "

"ஆமா "

"அப்பறம் ஏன் நான் கேட்கணும் ?"

மிக இயல்பாய் பதில் சொல்லி விட்டான் அவன் ..ஆனால் அவள்தான் கொஞ்சம் பேச்சிழந்து  போனாள் ..மனதிற்குள்  அவனை எண்ணி நெகிழ்ந்துவிட்டு வெளியில்

" சிவாஜி சார் உயிரோடு இருந்திருந்து அவர் நீ பேசுறதை கேட்டிருந்தா கூட, தம்பி என்னால இவ்வளோ உருகி பேச முடியாதுப்பா ன்னு சொல்லிருபார்  டா "என்றாள்  அவள் சிரிக்காமல் ..

"அவர் இல்லன்ன என்ன டீ ? உன்னை வெச்சு படம் எடுக்குறேன் ... வானரம் ஆயிரம்ன்னு .. எப்படி உனக்கு குரங்கு கேட் அப்  போட்டிடலாமா ? இல்ல வேணாம் ...மேக் அப் இல்லாமல் இருந்தாதான் நீ ரியல் குரங்கு மாதிரி இருக்க .." என்று அவன் சொல்லி முடிக்கவும் அவள் அவனை துரத்தி அடிக்கவும் சரியாய் இருந்தது ..

நேற்றைய நினைவில் மலர்ந்து சிரித்தாள் சாஹித்யா .. " இந்த குரங்குக்கு என்னை குரங்குன்னு ஒரு நாள் கூட சொல்லாமல் இருக்க முடியாதே " என்று எண்ணிக் கொண்டாள் .. ஒரே புனகையுடனே லாவகமாய் காரை பார் செய்துவிட்டு அவர்களது ஆபிசில் நுழைந்தாள் ..

சாஹித்யாவிற்கு இசையில் தான் ஆர்வம் அதிகம். அதனாலேயே இசை மற்றும் ஒலி பொறியியல் துறையை தேர்ந்தெடுத்து படித்தாள் . இருப்பினும் அப்பாவுக்கு தப்பாமல் பிறந்த மகளாய், அர்ஜுனின் உதவியோடு கம்பனி நிர்வாகத்தையும் கற்றுக்கொண்டாள் .. அவளைப்போலவே அருள்மொழிவர்மனும் தனக்குப் பிடித்த போட்டோக்ராபி துறையில் படித்து ரவிராஜின் வழிக்கடுதலின் மூலம் கம்பனி பொறுப்பையும் ஏற்றுக்கொண்டான் .. சாஹித்யா-அருள் இருவருக்குமே அந்த கமபனியில் சமஉரிமை இருந்தாலும், அருள்தான் பெரும்பாலான பொறுப்புகளை எடுத்துக் கொண்டான் ..

அதனாலேயே என்றும் இல்லாத திருநாளாய்  காலையிலேயே சாஹித்யா வந்து ஆபிசில் நிற்கவும் அனைவரும்   ஆச்சர்யமாய் பார்த்தனர் ..

" குட் மோர்னிங் மேடம் " என்று வாழ்த்திய அனைவருக்கும் புன்னகையுடன் பதிலுக்கு வணக்கம் சொல்லிவிட்டு  தனது அறையில் நுழைந்தாள் . தனது இருக்கையில் அமர்ந்தவள் பக்கத்திலே இருந்த அருளின் இருக்கையை பார்த்தாள் .. அவர்கள் இருவரும் முதன்முதலில் கம்பனி பொறுப்பை ஏற்றப்போது  அருள்மொழிவர்மன் கூறிய முதல்  கட்டளையே "எங்க ரெண்டு பேருக்கும் தனித்தனி ரூம் வேணாம் ... இதே ரூமில் சத்யாவுக்கும் ரெடி பண்ணுங்க " என்பதுதான் ..

" பாசக்கார பயபுள்ள தான் " என்று வாய்விட்டே சொல்லியவள் " ஹ்ம்ம் ஆனா என்ன , கொஞ்சம் தூங்கு மூஞ்சி இவன் " என்றும் சொல்லிக் கொண்டாள் ..ஆம் இங்கு சாஹித்யா ஆபிசில் நுழைந்த நேரம் தான் அங்கு கண் விழித்தான் அருள். கடிகாரத்தில் நேரம் பார்த்தவன்

" போச்சுடா இன்னைக்கு நிறைய வேலை இருக்கு ..நான் பாட்டுக்கு தூங்கிட்டேனே "என்று தன்னைத்தானே கடிந்துக் கொண்டு அவசரமாய் கிளம்பினான் ..

" சுமிம்மா சத்யா எங்க ? ஆளையே காணோம் ? டெய்லி  நான் கொஞ்சம் அதிகம் தூங்கினாலும் நம்ம பிசாசுக்கு மூக்கு வியர்த்திடுமே .. எங்கே அவ ?" என்றான்

" உனக்கு தெரியாதா அருள் ? உன்கிட்ட சொல்லிட்டதா சொன்னாலே ?"

" என்ன சொன்னா "

" வெளில போறேன் .. அருளுக்குத்  தெரியும்மா .. எதுவா இருந்தாலும் அவனை கேளுங்க எனக்கு டைம் ஆகுதுன்னு , போய்ட்டாளே "

" எப்படி போனா ? அவளுக்குத்தான் கை காயமா இருக்கே "

" நானும் எவ்வளவு சொன்னே அருள் ... ரொம்ப சின்ன காயம் தானேம்மா .. நான் மேனேஜ் பண்ணிக்குவேன் .. அதுவும் நம்ம டாக்டர் அருள்  பெர்மிஷன் கொடுத்ததுனாலதான் நான் கெளம்புறேன்னு  சொன்னா " என்று சொன்ன சுமித்ராவுக்கும்  பதட்டம் தொற்றிக் கொண்டது ..

" எப்போ பார்த்தாலும் ஏதாச்சும் பொய் சொல்லி என்னை மாட்டி விடுறதே இவளுக்கு வேலையா போச்சு " என்று அவளை  மனதிற்குள் தாளித்தான் அருள் .. எனினும் வெளியில் " ச்ச காலையில் இருந்து தலைவலிம்மா  அதான் மறந்துட்டேன் .. அவ என்னையும் சீக்கிரமா வர சொன்னா .. நான் கெளம்புறேன் " என்று கார் சாவியை எடுத்துக் கொண்டு நடந்தான் ..

" சாப்பிடுட்டு போ அருள் "

" இட்ஸ் ஓகே மா .. பக்கம்தானே , இந்த எருமையையும் கூட்டிட்டு வந்து சேர்ந்து சாப்பிட்டுகறோம் " என்றான்..காரை வேகமாய் எடுத்தவன்  சாஹித்யாவை அழைத்தான் .. அவளோ அவன் பெயரை பார்த்தும் போனை எடுக்காமல் கட் செய்தாள் ..

" இன்னைக்கு என்கிட்ட இவ அடி வாங்கத்தான் போறா " என்று பற்களைக்  கடித்தான் அருள் ..

சரியாய் அதே நேரம் சத்யாவின் அறையில் இருந்தாள்  வானதி ..

" ஐ எம் சாரி அகின் வானதி " என்றாள்  சத்யா உண்மையான வருத்தத்தில்..சத்யாவை பார்த்து சிநேகமாய் புன்னகைத்த வானதி "இவள் பூஞ்சை மனம் கொண்டவள் " என்பதை கணித்து இருந்தாள் .. அதே போல வானதியின் ஒவ்வொரு அசைவினையும் நேற்று போனில் பேசியதையும் வைத்து " இவள் திறமைசாலி " என்றுஎடைப்போட்டுத்தான் வைத்திருந்தாள்  ..

" இட்ஸ் ஓகே மேடம் ..அதுக்குத்தான் நீங்க நேத்து நைட் போனிலே மன்னிப்பு கேட்டிங்களே "

" இருந்தாலும் நேரில் சொல்லுற மாதிரி ஆகாதே "

" சரிதான் .. அதுனாலத்தான் நானும் போனில் நீங்க அருள் சாரை பற்றி சொன்னதை நம்பவில்லை " என்றாள்  இயல்பாய் ..

" நம்பலையா ? அடிபாவி நேத்து நைட் அவனுக்கு தெரியாமல் உன் காதில ரத்தம் வந்தாலும் பரவாயில்லைன்னு அவ்ளோ கிளாஸ் எடுத்தேனே " என்று நினைத்தவளின் முகம் அஷ்டக்கோணல் ஆனது ..

" ஐ மீன் நீங்க விளையாட்டுக்கு அவரை பத்தி தப்பா பேசினதை நான் நம்பவில்லைன்னு சொல்ல வந்தேன் " என்று விளக்கம் தந்தாள் வானதி .சத்யாவிற்கு வானதியின் தெளிவும் குணமும் மிகவும் பிடித்து இருந்தது. எப்போதும்  அனைவரிடமும் இன்முகம் காட்டி பழகும் அவளுக்கு வானதியுடன் பேசுவதற்கும் தோழமையை உருவாக்கிக் கொள்வதற்கும் எந்தவொரு தடையும் தோன்றவில்லை . மேலும், தனக்கு முதலாளியாய்  இருப்பவளிடம் நட்பெயர் வாங்க வேண்டும்  என்பதற்காக எதையும் தனியாய் அலட்டிக் கொள்ளாமல் இயல்பாய் இருந்தவளை சத்யாவிற்கு மிகவும் பிடித்தது..

" ஐ லைக் யூ வானதி .. உங்ககிட்ட ஒரு யூனிக்னஸ்  இருக்கு " என்று மனம் திறந்தே பாராட்டினாள்  அவள் .. மனதிற்குள் அவளது பாராட்டை ஏற்றுக் கொண்டு கொஞ்சம் குத்தாட்டம் போட்டாலும் கூட வெளியில் பவ்யமாய்

" தேங்க்ஸ் " என்றாள்  வானதி .. அதன் பிறகு வானதியின் வேலையை பற்றி சத்யாவே விவரமாய் எடுத்துக் கூறினாள் . இடையிடையில்  வானதி கேட்ட சந்தேகங்களை தீர்த்துவைத்தவள் அவளது நுணுக்கமான பார்வையையும் மனதிற்குள் மெச்சினாள் .. என்னத்தான் விளையாட்டுப் பிள்ளை போல இருந்தாலும் வேலை விஷயத்தில் அருள்மொழிவர்மன்  மிகவும் கறாரானவன் ...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.