(Reading time: 26 - 52 minutes)

" நான் ஒன்னும் உனக்கு ஹெல்ப் பண்ணாமல் இல்ல டா .. பட் அதே நேரம் நீயும் கொஞ்சம் பொறுமையா யோசிச்சு பாரு நீ பண்ணுறது சரியா இருக்கான்னு ... ஒரு கையில் காயம் இன்னொரு கையால் எப்படி காரோட்டிட்டு வர நீ  ? அப்படி என்ன அவசியம் உனக்கு ?"

" எனக்கு இல்ல ... உனக்காகத்தான் வந்தேன் ... வானதி உன்னை தப்பா நினைக்க கூடாதுன்னு தான் "

" அவ எனக்கு யாரு சது  ? அவ தப்பா நினைச்சா என்ன நினைக்கலைன்னா தான் என்ன ? உனக்கு ஏதும் ஆகி இருந்தா ?"

" அவன்னு இல்ல  வரு... உன் விஷயத்துல யாரும் உன்னை தப்பா நினைக்க கூடாது ..அவ்வளவுதான் .. அதுக்காக நான் எவ்வளோ பெரிய ரிஸ்க் வேணும்னாலும் எடுப்பேன் .. ஏன்னா எனக்கு நீதான் ரொம்ப முக்கியம் .. "

" ஷ்ஷ்ஷ்ஷ் போதும் டீ ...காதுல இருந்து ரத்தம் வருது .... " என்று போலியாய் நடித்தவன் மனதில் உருகித்தான் போனான்...

" போடா குரங்கு " என்றவள் அவனுடன் இணைந்து சிரித்தாள்.

அங்கு வானதிக்கு ஏன் என்று புரியாமல் எரிச்சலாய் தொடங்கிய காலை, சாஹித்யாவிற்கும் அருளிற்கும் மனதில் இதத்தை தந்த காலை, கவிமதுராவிற்கு பிரம்மிப்பைத்  தந்து கொண்டிருந்தது.. வருணின்  உதவியின் மூலம் தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை உணர்ந்தவளுக்கு ஆச்சரியமும் சந்தேகமும் சேர்ந்தே எழுந்தது .. இதை வானதியிடமே கேட்டுக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தவள், தனது வேலையைத் தொடங்கினாள் ..

" ஓகே வருண் சார் ..எனக்கு நம்ம ஸ்டாப்ஸ் டிடைல்ஸ் எல்லாமே வேணுமே " என்றாள் ..

" யா ...நான் உங்களுக்கு இப்போவே மெயில் அனுப்புறேன் " என்றபடி அந்த அறையிலிருந்து வெளியேற எண்ணிய வருண் சட்டென திரும்பி

" மேடம் " என்றான்

" சொல்லுங்க சார் .. "

" இல்லை .. நீங்க என்னை சார்ன்னு கூப்பிட வேணாமே ..வருண் நு பெயர் சொல்லி கூப்பிடுங்க" என்றான்..

" ம்ம்ம்ம்ம்ம் " என்று யோசனையாய்  அவனை ஆராய்ந்தாள்  கவிமதுரா. அவன் பார்வையில் கல்மிஷம் இல்லை என்பதை உணர்ந்தவள் ஏதோ ஒரு உந்துதலில்

" நான் உங்களை வருண் அண்ணான்னு கூப்பிடவா ?" என்றாள்... மலர்ந்த முகமாய் புன்னகைத்தான் வருண்.. அவனுக்குமே தனது நண்பனின் மனம் கவர்ந்தவளை தங்கையாய்  பார்க்க ஆசைத்தானே.. கிரிதரன் அவர்களை பற்றி கூறியவுடனேயே இந்த வேலைக்கு ஒப்புக் கொண்டவன் வருண் .. அதனால் அவளுக்கு அண்ணனாய் இருக்க அவனுக்கும் முழு சம்மதமே.

" அப்படியே கூப்பிடுங்க  மேடம் " என்றான் வருண்

" அப்போ நீங்களும் என்னை கவிதான்னு கூப்பிடலாமே " என்றாள்  கவிமதுராவும்..

" ம்ம்ம் கண்டிப்பா .. காபி எதும் வேணுமா கவிதா ?"

" இல்ல வேணாம் ..அப்பறமா பார்த்துக்கலாம் " என்று புன்னகைத்தாள்  கவிமதுரா.. அவன் வருவதற்குள் தனக்கு தேவையான சில விவரங்களை தேடி சேகரித்து கொண்டாள்  கவிதா .. அதே நேரம் அறையில் இருந்து வெளிவந்த  வருணும் கிரியை அழைத்தான் ..

" மச்சான் "

" சொல்லுடா ... என்ன முகத்துல பல்ப்  எரியுது ? என்ன சொல்லுறா உன் சிஸ்டர் ?"

" அடப்பாவி என்னமோ ஐ பி எல் மேட்ச் பார்க்குற மாதிரி நீ எல்லாத்தையும் கேமரா ல பார்த்துகிட்டு இருக்கியா ?? "

" ஐடியா தந்தவனே நீதானே ? சரி சரி விஷயத்துக்கு வா "

" சிஸ்டர் என்னை அண்ணான்னு கூப்பிடட்டுமான்னு கேட்டாங்க டா "

" சரி அதுக்கு ?"

" என்னடா அதுக்குன்னு சொல்லுற ? எனக்கு எவ்வளவு சந்தோசம் தெரியுமா உனக்கு ?"

" டேய் ஊரு உலகத்துல இருக்குற பொண்ணுங்க எல்லாமே உன்னை அண்ணான்னு தானே கூப்பிடுறாங்க ..? ஏதோ புதுசா நடக்குற மாதிரி பீல் பண்ணுறியே " என்று வாரினான் கிரிதரன் ..

" ம்ம்ம்ம்ம்கும்ம்ம் ஏன் டா சொல்லமாட்ட.. எல்லாம் என் தலைஎழுத்து "

" சரி உன் தலையெழுத்தை அப்பறமா மாத்தி எழுதிக்கலாம் .. அவ  இப்போ ஏதும் சாப்பிட்டாளா ?"

" இல்லடா ..காபி வேணுமான்னு கேட்டேன் ..அப்பறமா குடிக்கிறேன்னு சொல்லிட்டா "

" நீ என்ன பன்னுறேன்னா, சுட சுட ப்ளேக் காபி சக்கரை கொஞ்சம் தூக்கலா போட்டு அவளுக்கு கொடு...."

" என்னை பார்த்தா உனக்கு சர்வர் மாதிரி இருக்கா ?"

" உன் தங்கச்சிக்காக செய்யமாட்டியா மச்சான் ?"

" சரி சரி போதும் .. போனை வை டா " என்று சிரித்தவாறு போனை வைத்தான் வருண் ..

" என்னடா கிரி மதுரா என்ன சொல்லுறா ?" என்று சிரித்தப்படி வந்தார் கண்ணன் ..

" அட போங்கப்பா அவ கிட்ட நான் போனில் பேசிட்டாலும் .. வருண் தான் பேசினான் .. " என்று பெருமூச்சு விட்டான்  கிரி ..

" மதுரா அமைதியா இருந்து நீ பேசுற காலம் இதுதான் கிரி. இப்போவே இதை எல்லாம் அனுபவிச்சிக்கோ ..  கல்யாணம் ஆகிட்டா நமக்குபேச வாய்ப்பே இருக்காது ... " என்று அவர் முடிக்கும் நேரம் அங்கு வந்து நின்றார் மீரா ..

" ஆமா டா ..அனுபவசாலி சொல்றார் கேட்டுக்கோ ... நீயே பாரு கிரி .. கல்யாணம் ஆகிட்ட புருஷங்க வாயே திறக்க முடியாதாம் .... உங்கப்பா தூங்கிற நேரத்தை தவிர மத்த நேரத்தில் வாயை மூடி நீ பார்த்து இருக்கியா ?" என்று வாரினார் மீரா ..

"அது உன் அழகை பார்த்து பிரமிச்சு " ஆ" ன்னு வாயை திறந்துட்டு இருந்திருபேன் மீரூ " என்றார் கண்ணன் குறும்புடன் .. தன் தாய் தந்தை இருவரின் வார்த்தை விளையாடலை வெகுவாய் ரசித்தான் கிரிதரன் .. தனக்கே திருமண  வயது எட்டிவிட்டது ஆனாலும் அல்ல அல்ல குறையாத அக்ஷயப்பாத்திரம் போல அவர்களின் காதல்  நாளுக்கு நாள்  பெருகிக் கொண்டுதான் இருக்கிறது .. விட்டுகொடுத்து வாழ்வது எப்படி என்பதை அவன் மீராவிடம் கற்றுக்கொண்டது போல   மனைவியை நேசிப்பது எப்படி என்பதை அவன் கண்ணனிடம் தான் கற்றுக்கொண்டான்.

" சீக்கிரம் நம்ம வீட்டுக்கு வந்திடு மதுரா ...எனக்கும் உன்னை இதே மாதிரி காதலிக்கனும் போல இருக்கு " என்று மனதிற்குள்  சொன்னான் கிரிதரன் ..அதே நேரம் வருண் தந்த காபியை குடித்த கவிமதுரா சட்டென இருமினாள் ..

" யாரோ உன்னை நினைக்கிறாங்க கவிதா "

" என்னை யாருன்னா நினைக்க போறாங்க ?" என்றவளின் எண்ணம் அவளது தரூவை நாடியது .. இது சரியல்ல என்று தலையசத்தவள்

" இன்னும் ஒரு மணி நேரத்தில்  மீட்டிங்க்கு அர்ரெஞ்  பண்ணனும் அண்ணா .. நீங்க ஹெல்ப் பண்ணுறிங்களா  ? நான் ஜீவாவை  தூங்க வெச்சிட்டு வந்திடுறேன் " என்றாள் ..

" ம்ம்ம் ஓகே ம்மா " என்றவன் புன்னகையுடன் வேலையை ஆரம்பித்தான்..

ஒரு வாரம் கடந்து இருந்தது.... " அன்பினொளி " என்ற அந்த இல்லத்தின் முன் காரை நிறுத்தினான் சந்தோஷ். நம்ம சந்தோஷ் சந்தோஷமாக நிர்வகிக்கும் பொறுப்பு இந்த அன்பினொளி இல்லம் தான் .. ஒரு பக்கம் முதியோர்களையும் இன்னொரு பக்கம் சிறுவர்களையும் ஆதரித்து அன்பை மட்டுமே ஆதாரமாய் கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு அவன்தான் அங்கு ராஜா .. இதுதான் அவனது மாளிகை .. புன்னகையுடன் காரை நிறுத்தி அவன் இறங்கி வரவும் அவன் காலை கட்டிக் கொண்டாள்  சங்கிதா .. 3 வயது சிறுமி ...

" அப்ப்ப்ப்ப்ப் பா ஆஆஆஅ "

" ஹே குட்டிமா ... எப்படி நீங்க வெளில ஓடி வந்திங்க " என்றவாறு அவளை தூக்கிக் கொண்டு மழலை மொழி பேசினாள்  அவள் .. 

" அதுவா , நான் அப்பா பார்தேனா, சிவா அண்ணா வேலையா இருந்தாங்களா, நான் அப்படியே ஓடி வந்துட்டேனே  " என்று சிரித்தாள் அவள்..

" அடடே .. ஆனா குட்டிமா அங்க பாருங்க எவ்ளோ கார் வருது .. நீங்க குட்டி பாப்பா ஆச்சே ..அதுவும் இவ்ளோ கியூட் பாப்பா... உங்களை யாரும் தூக்கிட்டு போயிட்டா  "

" ஐயோ வேணாம் ..பயம் "

" ம்ம்ம்ம் ஆமா அப்பாவுக்கும் பயம் "

" அப்பாவுக்கு நோ பயம் .. பாப்பா இருக்கு அப்பாவுக்கு .."

" அப்போ பாப்பா சமத்தா இருக்கணும் சரியா டா ?" என்று கொஞ்சினான் சந்தோஷ்.. சங்கீதாவும்சரியென தலை அசைக்க , அவன் அவளது பட்டுக்கன்னத்தில் முத்தமிட

" அப்பா மீசை ..குத்தி " என்று முனகினாள் சிறுமி ..

" அச்சோ அப்பா நாளைக்கு ஷேவ் பண்ணிக்கிறேன் செல்லம் " என்று அவனும் சிரித்தான் .. இங்கு அவன் அவளை கொஞ்சி ரசிப்பதை   வியப்பாய் பார்த்து ரசித்து புன்னகைத்தாள்  சாஹித்யா, தனது இதயம் அவன் பக்கம் சாய்வதை  உணராமல் !

அன்பினொளி இல்லத்தில் நம்ம சத்யா என்ன பண்ணுறாங்க ?? அதை அடுத்த எபிசொட் ல சொல்றேன் ..

தவம் தொடரும்

Episode # 06

Episode # 08

{kunena_discuss:838}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.