(Reading time: 21 - 41 minutes)

தவை திறந்தார் அந்த மனிதர். உயிருடன் இருக்கிறார். மனோவின் அப்பா உயிருடன் இருக்கிறார். அத்தனை அருமையான மனிதரை இழந்து விட்ட வலி சட்டென்று மறைந்து விட்ட மகிழ்ச்சியை தவிர்க்கவே முடியவில்லை அவனால்.

 மௌனமாக நடந்து 'சொல்லுங்க சார்' என்றபடி அவர் எதிரே அமர்ந்தான் வசந்த்.

என்னப்பா? என்றார் அவர். இன்னும் சார்ன்னு கூப்பிடுறே?

அப்ப அப்பான்னு கூப்பிடவா? என்றான் சட்டென. உங்களை எப்பவும் அப்படிதானே கூப்பிடுவேன்.

ம்? திடுக்கென்று நிமிர்ந்தார்.

இல்லை உங்களை அப்படி கூப்பிடணும்னு தோணுது எனக்கு.

சரிப்பா புன்னகைத்தார் அவர். 'நானெல்லாம் மனுஷனே கிடையாதுப்பா. நான் நிறைய தப்பு பண்ணியிருக்கேன்....

அவர் முடிப்பதற்குள் 'உங்களாலே தப்பே பண்ண முடியாதுப்பா..... புன்னகையுடன் இருக்கையின் பின்னால் சாய்ந்து அவர் கண்களை ஊடிருவினான்.

முடியவில்லை அவரால் அவன் கண்களை சந்திக்கவே  முடியவில்லை.

அதை தவிர்த்தபடியே எழுந்தார். ' என் பொண்ணை பார்த்துக்கோப்பா'

நீங்க சொல்லவே வேண்டாம்பா நான் கண்ணுக்குள்ளே வெச்சு பார்த்துப்பேன்.

சரிப்பா நான் ஊருக்கு கிளம்பறேன். நகர்ந்து படி இறங்கினார் அப்பா.

அடுத்த பதினைந்து நிமிடங்களில் கிளம்பி விட்டிருந்தார் அப்பா. அவரை அனுப்பி விட்டு உள்ளே சென்று விட்டிருந்தாள் அர்ச்சனா.

காம்புவண்டு சுவற்றில் கைகளை ஊன்றியபடி நின்றிருந்த மனோவின் அருகில் வந்து அவன் தோளை அணைத்துக்கொண்டான் வசந்த் 'என்னடா?' என்றபடி

புன்னகையுடன் திரும்பினான் மனோ 'என்னடா?

ஒரு பெருமூச்சுடன் மெல்லிய குரலில் அவன் கண்களையே பார்த்தபடி கேட்டான் வசந்த் 'இப்போ ஊருக்கு போனது யாரு?'

திடுக்கிட்டு அதிர்ந்து போய் ஏன்? ஏன்? அர்ச்சனாவோட அப்பாதான் ஏன் ? என்றான் மனோ.

கீழுதட்டை மடித்து கடித்தபடி மெல்ல இடம் வலமாக தலையசைத்தான் வசந்த் 'ஏன்? ஏன்? இப்படி டென்ஷனாறே?

அதெல்லாம் ஒண்ணுமில்லை. உனக்கு ஏன இப்படியெல்லாம் டவுட் வருதோ? முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டான் மனோ.

வேண்டாம் மனோ. என்கிட்டே பொய் சொல்ல முயற்சிப்பண்ணாதே. உன்னாலே முடியாது. திரும்பவில்லை மனோ

அவர் ஹிந்தியிலே பேசினதை நான் கேட்டேன். அர்ச்சனாவோட அப்பாவுக்கு ஹிந்தி தெரியாது. உண்மையை சொல்லு மனோ. என்றான் அழுத்தமாக.

சரேலென்று திரும்பினான் மனோ. 'ஆமாம். அவர் என் அப்பாதான். இந்த விஷயம் ஸ்வேதாவுக்கு கூட தெரியாது. விவேக்குக்கு மட்டும்தான் தெரியும்.

அதிர்ந்து போனான் வசந்த் 'ஏண்டா? ஏண்டா? இப்படி பண்ணே?

வேறே வழியே இல்லைடா. அர்ச்சனா தாங்க மாட்டா. என்றான் மனோ.

நாங்க ஊருக்கு போறதுக்கு முன்னாடியே தூக்கத்திலேயே போயிட்டார். நினைச்சு பாருடா. முதல் தடவையா அவ மனசுக்கு மரியாதை கொடுத்து தைரியமா பேசியிருக்கா. திடீர்னு இப்படின்னு தெரிஞ்சா காலம் பூர குற்ற உணர்சியிலேயே செத்துடுவாடா. எங்கப்பா என்னை புரிஞ்சுப்பார். எங்க ரெண்டு பேரையும் சேர்த்து வெச்சிடுவார்ன்னு அவ்வளவு நம்பிக்கைடா அவளுக்கு. இது தெரிஞ்சா உடைஞ்சு போயிடுவாடா.

அதுக்காக? என்றான் வசந்த. இது துரோகமில்லையாடா? என்னாலே அவகிட்டேயிருந்து மறைக்க முடியாது.

சுள்ளென்று கோபம் பொங்கியது மனோவிற்கு குரலில் ஏறிய உஷ்ணத்துடன் சொன்னான் ' சரி. போடா போய் சொல்லுப்போ. கதறட்டும். மயக்கம் போட்டு விழட்டும் என்ன வேணும்னாலும் நடக்கட்டும். முகத்தை வேறு பக்கமாக திருப்பிக்கொண்டான் மனோ.

அந்த நேரத்தில் சரியாக வெளியே வந்தாள் அர்ச்சனா.

சட்டென இயல்பாகிப்போயினர் இருவரும்.

வாசலில் காய்ந்துக்கொண்டிருந்த துணிகளை எடுத்துக்கொண்டிருந்தவளிடம் கேட்டான் மனோ 'ஆமாம் நாலு மணிக்கு உன்னை தேடினேன். எங்கே போனே அர்ச்சனா? அவன் உதடுகளில் சிரிப்பு மிளிர்ந்தது.

எங்கேயும் போகலையே. மாடியிலே இருந்திருப்பேன்.

ஹேய்! என்றான் மனோ. பொய் சொல்லாதே. வசந்த் வீட்டுக்குதானே போயிருந்தே. ஒரு மணி நேரம் ஆளையே காணோம்.

'ஹேய்! அதெல்லாம் இல்லை' வெட்க புன்னகையுடன் வேகமாக தலையசைத்தாள் அர்ச்சனா.

நீ சொல்லுடா என்றான் வசந்த் பக்கம் திரும்பி ' அப்படி என்னதான் பண்ணீங்க ஒரு மணி நேரம்?

போடா என்றான் வசந்த். நாங்க என்னனமோ பண்ணோம். அதெல்லாம் உன்கிட்டே சொல்ல முடியுமா? என்ன அர்ச்சனா?

'சும்மா.  பொய் சொல்லாதே வசந்த். முகம் சிவக்க உள்ளே ஓடி விட்டாள் அர்ச்சனா.

அவள் உள்ளே சென்றதும் முகத்தில் படர்ந்த தீவிரத்துடன் வசந்தை பார்த்துக்கேட்டான் மனோ. 'இந்த  சிரிப்பையும், சந்தோஷத்தையும் மொத்தமா அழிச்சிடணுங்கறியா?

வசந்தால் பேச முடியவில்லை.

கடைசியா அவள் அப்பாவை பார்த்திட்டா, அழுதிட்டா. அது போதும்டா. உனக்கு தெரிஞ்சதெல்லாம் அப்படியே முழுங்கிடு.

நாளைக்கு விஷயம் தெரிஞ்சிட்டா. என்னடா பண்றது? என்றான் வசந்த்.

தெரியாது என்றான் மனோ. 'அப்படி தெரிஞ்சா நான் விழறேண்டா அவ காலிலே. அவளுக்கு. அப்பாவோட அன்பு எங்க அப்பா மூலமா கிடைக்கிற வரைக்கும் அவ நிம்மதியா. இருப்பா. கவலைப்படாதே.

இருவரும் உள்ளே வந்தனர். ஸ்வேதா உள்ளே இரவு உணவை சமைத்துக்கொண்டிருந்தாள்.

டைனிங் டேபிளில் அமர்ந்து சப்பாத்திக்கு உருண்டைகளை உருட்டிக்கொண்டிருந்தாள் அர்ச்சனா..

நிதானமாக நடந்து அவளருகில் வந்து நின்றான் வசந்த், மெல்ல மெல்ல கண்களை நிமிர்த்தி வசந்தையே பார்த்துக்கொண்டிருந்தான் மனோ.

அவனை பார்த்து புன்னகைத்த அர்ச்சனா 'பார்த்தியா வசந்த். நான் சொன்னேன் பார்த்தியா. அப்பா எவ்வளவு சந்தோஷமா ரெண்டு பேரையும் சேர்த்து வெச்சிட்டார்என் நம்பிக்கை எப்பவுமே வீணாப்போகாது .' என்றாள்.

வார்த்தைகள் வரவில்லை வசந்துக்கு. ஒன்றுமே பேசவில்லை அவன். அந்த புன்னகையை உடைக்க மனமில்லை அவனுக்கு

அவள் மகிழ்ச்சியும், நம்பிக்கையும் அப்படியே நிலைத்திருக்கட்டுமே. டைனிங்  டேபிளின் மீதிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து வாயில் கவிழ்த்துக்கொண்டான் வசந்த். மனோவின் அருகில் வந்தமர்ந்த படி சொன்னான் ' முழுங்கிட்டேண்டா'

சில நிமிடங்கள் கழித்து தட்டில் டிபனுடன் வந்து முதலில் மனோவிடம் நீட்டினாள் அர்ச்சனா.

முதல்லே உன் புருஷனுக்கு குடு இனிமே அவன்தான் உனக்கு முக்கியம் என்றான் மனோ.

ம்ஹூம். ம்ஹூம் என்றான் வசந்த். எனக்கும் சரி அவளுக்கும் சரி எப்பவுமே நீதாண்டா எல்லாம்.. உன்னை மாதிரி ஒரு அண்ணன் கிடைக்க அவ கொடுத்து வெச்சிருக்கணும் மனோவின் தோளை அணைத்துக்கொண்டான் வசந்த்.

தட்டை நீட்டிவிட்டு புன்னகையுடன் நகர்ந்த அர்ச்சனாவையே பார்த்துக்கொண்டிருந்தான் வசந்த். 'என்னை மன்னிச்சிடு அர்ச்சனா. உங்க அப்பா உனக்கு கொடுத்த அன்பை விட நூறு மடங்கு நான் உனக்கு கொடுப்பேன். உன் கண்ணிலே தண்ணி வர விட மாட்டேன் ' என்றான் மானசீகமாக.

இப்போதென்றில்லை இனி எப்போதும் அவளுக்கு ஒரு நல்ல கணவனாக, தந்தையாக இருப்பான் வசந்த்.         

நிறைந்தது!

Manathile oru paattu episode # 21

{kunena_discuss:683}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.