(Reading time: 30 - 59 minutes)

" மா சுமிம்மா , அதுவும் கல்யாணமே வேணாம்னு சொன்னவ , இப்போ மனசு மாறி சந்தோஷ் குடும்பத்தோடு இணக்கமா இருக்குறது நல்ல விஷயம் தானே  ? இதற்குத்தானே ஆசை பட்டோம் சுமித்ரா மம்மி " என்று செல்லம் கொஞ்சியபடி   சாஹித்யாவிற்காக  பரிந்து பேசினான் ..

" என்னவோ போங்க " என்று சலித்து கொண்டாலும் அருளின் வார்த்தைகளில் நிம்மதி அடைந்தார் சுமித்ரா ..

மீராவதியின் வார்த்தைக்கு மறுப்பு சொல்ல முடியாமல் அவர்களுடன் காரில் பயணிக்க சம்மதித்தாள்  கவிமதுரா .. அங்கு ஓடி வந்த சாஹித்யாவோ வானதியிடம்

" அருள் உங்களை கூப்பிட்டான் " என்று கூறினாள் .. நேற்றுவரை ஒருமையில் அழைத்தவள் இப்போது மரியாதையாய் அழைப்பதை மனதில் குறித்து கொண்டாள்  வானதி ..

" நான் அண்ணி கூடவே வீட்டுக்கு போயிடுறேன் சத்யா "

" அது நீங்களே அவன்கிட்ட சொல்லிடுங்களேன் " என்றாள்  சாஹித்யா .. சரியென நினைத்து அருளை தேடி போனாள்  அவள் ..தனக்காக யோசித்து தான் வானதியை அவள் அனுப்பி வைத்திருப்பதாக நினைத்து கொண்டான் அருள் .. கிரிதரன் மட்டும் அவர்களது கண்களில் படாமல் அங்கிருந்து சென்றுவிட, நேரடி சண்டை இல்லாமலே மனதளவில் அருளை விலகி சந்தோஷின் குடும்பத்தோடு பயனித்தாள்  சாஹித்யா .. ஏனோ கண்கள் கரித்தது , சுவாசம் நிற்பது போன்ற உணர்வு அவளுக்கு ..

" என்னம்மா பண்ணுது ? ஏண்டா அமைதியா இருக்க ? எதாச்சும் வேணுமா ? தலை வலிக்கிறதா ?" இப்படி பல குரல்கள் அவளை ஆறுதல் படுத்தியும் , சந்தோஷ் பார்வியினாலேயே அவள்  மனதை அறிய முயன்றும் எல்லாம் தோல்வியில்தான் முடிந்தது .. ஜானகி தேவியில் தோளில்  சாய்ந்து கொண்டே , சைந்தவியின் கைகளை ஆறுதலாய் பற்றி கொண்டாள்  அவள் .. ஒரே நாளில் தங்கள் குடும்பத்தோடு பிணைந்து கொண்டவளை அனைவருக்கும் பிடித்து போனது .. இங்கு பாசமும் பிணைப்பும் மேலோங்கி நிற்க அங்கு அருளின் காரில் பூகம்பமாய் பொங்கினாள்  வானதி ..

" இப்போ என்னதான் சொல்ல வர நதி நீ ?"

" நான் என்ன சொல்லுறது அருள் ? இந்த ரெண்டு வருஷமா நான் சொன்னைதை தான் நீங்க கேட்கவே இல்லையே ! எத்தனைமுறை சொன்னேன் சத்யாகிட்ட இதை சொல்லிடுங்கன்னு " என்றாள்  வானதி கோபமாய் ..

" இப்போ அப்படி என்னம்மா ஆச்சு ?" என்றார் அர்ஜுன் ..

" என்ன மாமா , உங்களுக்கு கூடவா சத்யா முகம் வாடிப்போனது தெரியல .. "

" அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை ..எனக்கு ஒரு நல்லது நடந்த முதல்ல சந்தோஷ படுறது அவதான் ,,"

" நானும் அதான் சொல்றேன் .. முதல்ல சந்தொஷபடுரவ கிட்ட நீங்க முதலிலேயே சொல்லிருக்க வேணாமா ? "

" இட்ஸ் ஓகே வானதி நான் ரெண்டு அதட்டல் போட்டா அவ சரி ஆகிடுவா " என்றார் சுமித்ரா ..

" இல்லைங்க அத்தை ..எனக்கிது சரின்னு படல .. நீங்க திட்டுறதா இருந்தா உங்க பையனை திட்டுங்க .. எய்தவனை விட்டுட்டு அம்பை நோக வேண்டாம் ... அருளும் சத்யாவும் எவ்வளவு பெஸ்ட் ப்ரன்ற்ஸ்ன்னு நேரில் பார்க்கல என்றாலும் கூட எனக்கே ஓரளவு அவங்களின் உறவு புரியுது ..அப்போ தினம் தினம் கண்கூட பார்க்குற உங்களுக்கு  எப்படி இது தோணாமல் போச்சு .. ஒரு பேச்சுக்கு கேட்குறேன் , ஒருவேளை இவர் அவர் மனசுல இருக்குறதை உங்ககிட்ட சொல்லாமல் என் குடும்பத்தோடு இணக்கமா இருந்தா நீங்க அதை சாதாரணமா எடுக்க முடியுமா ? நம்ம பையன் நம்மள விட்டு தூரம் போயிட்டானான்னு உங்க மனசு தவிக்காதா ? அப்படிதானே அவளுக்கும் இருக்கும்  ? அதில் தப்பு இல்லையே !"  அவளது கேள்வியில் அனைவரும் மௌனமாய் இருந்தனர்.

" நீ நினைக்கிற அளவு இது பெரிய விஷயம் இல்ல நதி .. அவ என்னை புரிஞ்சுப்பா .. எனக்குள்ள குற்ற உணர்வு இல்லாததுக்கு காரணமே சத்யா என்னை எப்பவும் தப்பா நினைக்க மாட்டா என்ற நம்பிக்கை தான் "

" அந்த நம்பிக்கை உங்களுக்கு பலம் அருள் ..பட் அதை வெச்சு நீங்க சத்யாவை பலவீனபடுத்தகூடாது இல்லையா " என்றாள்  அவள் தன்மையான குரலில் ...

" இப்போ நான் என்னதான் பண்ணனும் ?"

" அதை சத்யா தான் சொல்லன்னும் "

" சரியான லுசு டா நீ .. நீ வேணும்னா பாரேன்.. வீட்டுக்கு போனதும் சத்யா கூட சேர்ந்து உனக்கு கால் பண்ணி , என்  சத்யா அப்படி இல்லைன்னு நான் நிரூபிக்கத்தான் போறேன் ..நீ என்கிட்ட இருந்து பல்ப்  வாங்கத்தான் போற " என்று சிரித்தான் அவன் ..

" நீங்க சொல்றது மட்டும் நடந்த , அதைவிட பெரிய சந்தோசம் எனக்கு இல்லை அருள் " எஎன்றாள்  வானதியும் தீவிரமாய் .. வெளியில் சிரித்தாலும் கூட மனதிற்குள் அருளும் அதிர்ந்து தான் போயிருந்தான் ..ஒருவேளை நாம் சாஹித்யாவிடம் இதை  சொல்லி இருக்க வேண்டுமோ ? சரி நம்ம சத்யா தானே பார்த்துக்கலாம் " என்றெண்ணி கொண்டே வானதியின் வீட்டின் முன் நின்றான் .

சுபாஷின் காரில் இருந்து கவிமதுராவும் , அருளின் காரில் இருந்து வானதியும் இறங்கி கொண்டனர் . மீராவதியின்  மடியில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் ஜீவா .. அவனை பிரிய மனமே இல்லாமல் இருந்தனர் இருவரும் .. அதை உணர்ந்து கொண்டவள்

" அடிக்கடி வீட்டுக்கு வாங்க அத்தை , மாமா " என்றாள் .

" சரிம்மா " என்று ஆமோதித்தனர்  இருவரும். சாஹித்யாவும் காரில் இருந்து இறங்கி கொண்டாள் ..

" என்னம்மா ?" - ராமன் ..

" இல்ல மாமா , சைந்தவி அக்காவுக்கு ரொம்ப அயர்வா இருக்கும் .. நீங்க பெரிய அத்தை வீட்டுக்கும் போகணும்ல ? நான் அந்த காரில் வீட்டுக்கு போயிடறேன் .. " என்றாள் .. இரவு மணி 10 நெருங்கி கொண்டிருக்க அவர்களுக்கும் அவளது ஆலோசனை சரியென பட்டது ..

" சரிம்மா .. இரு நான் கார்வரை வரேன் " என்று இறங்க வந்தார்  ராமன் ..

" அடடே , எதுக்கு இந்த பார்மாலிட்டிஸ் மாமா ? அம்மா அப்பாகிட்ட நான் சொல்லிகிறேன் .. '" என்றாள் ..

" அப்பா நானே உங்க மருமகளை காரில் ஏற்றி , வேணும்னா காரை அவ வீடு வரைக்கும் தள்ளிட்டு வரேன் " என்று குறும்பாய் சிரித்தான் சந்தோஷ் ..

" தம்பி , நீங்க விட்டா சத்யாவை தோளின்மேல் தூக்கிகிட்டு வீடுவரை நடப்பிங்கன்னு எனக்குதெரியும் " என்று சிரித்தாள் சைந்தவி ..

குறும்புடன் அவளை பார்த்து கண்ணடித்தபடி

" இந்த டீலிங் நல்லா இருக்கே ..உனக்கு ஓகயா சத்யூ ? " என்றான் அவன் ..

" ஐயோ , ஆளைவிடுங்க .." என்று அவள் வெட்கத்துடன் நடக்க சந்தோஷும் அவளோடு சற்று தூரத்தில் இருந்த அருளின் காரை நோக்கி நடந்தான் ..

" சத்யூ "

" ம்ம்ம்ம் "

" இந்த நாளை என்னால மறக்கவே முடியாது டா "

" எனக்கும்தான் .. ஒரு கண்ணில் மழை மறுகண்ணில் இடி " என்று உளறினாள்  அவள் ..

" ஏன் ஒரு மாதிரியா இருக்க நீ ?"

" ஒண்ணுமில்ல சந்து "

" இதை நான் நம்பனுமா ?"

" நம்பிக்கை ,,... இந்த வார்த்தைக்கு தான் இப்போ அர்த்தமே இல்லாம போச்சே "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.