(Reading time: 15 - 29 minutes)

ங்களவர ஒன்னும் குழப்பிக்க வேண்டாம்னு சொல்லுங்க ப்ரீத்தா… என்னால உங்க வாழ்க்கையில எந்த தலையீடும் இருக்காது….” சொல்ல நினைப்பதை சொல்ல இவ்வளவு கஷ்டமாக இருக்குமா?

நெஞ்செல்லாம் அறுபடுவது போல்….அவன் இறந்துவிட்டான் என்று உணர்ந்த பொழுதைப் போல்….உங்களவர் என்று சொல்வதற்க்குள் உயிர் போய் வருகிறதே….. கண்ணில் நீர் மல்க இழுத்து வரவழைத்த ஒரு போலி புன்னகையுடன் தலையாட்டினாள் இசை அவர்களுக்கு விடையளிக்கும் பொருட்டாக….

போயிடு மதுர்…..என் கண்முன்னால நின்னு என்னை அழவைக்காத….மனது குமுறியது.

“ ஸோ முதல் விஷயம் தெளிவாயிடுச்சுன்னு நினைக்கிறேன்…” மதுரனின் குரல் இன்னுமாய் இரும்பில் இழுக்கும் ஆணி போல்…. இவளை அவன் மறந்தே இருக்கட்டும். இந்த நிலையில் ஒரு பெண் மனது எப்படி இருக்கும் என்று கூடவா இவனுக்கு தெரியாது?

“இப்ப அடுத்த விஷயம் இந்த குழந்தை…”

குழந்தைக்கென்னவாம்? புரியாமல் பார்த்தாள் இசை.

“குழந்தை பேரு அவிவ்னு சொன்னாங்க….” அந்த ப்ரீத்தா மதுரனிடம் சொன்னாள். ஏனோ அவன் எரிச்சலை குறைக்க இந்த ப்ரீத்தா முயல்வதாகவே இவளுக்குப் படுகிறது.

“ம்…இந்த அவிவ் …எப்டிப் பார்த்தாலும் எங்க வீட்டு குழந்தை, அவன இப்டி பொறுப்பில்லாம நான் விட்டு வைக்க முடியாது….அதனால அவன் இனி எங்க வீட்லதான் இருப்பான்…”

“வாட்…?” நிச்சயமாக இதை மதுரனிடமிருந்து எதிர்பார்க்கவில்லை இசை. நவ்யா அவன் சித்தப்பா மகள் என்ற வகையில் அவிவ் மீது அவனுக்கு உரிமை அதிகம் தான். அதற்காக?

“ என்ன வாட்? குழந்தைய இனிஷியல் இல்லாம தெருவுல விட என்னால முடியாதுன்னு சொல்றேன்….அவனுக்கு அம்மா அப்பா ன்னு முழு குடும்பம் வேணும்…அவன் சன் ஆஃப் மதுரனா சட்டப்படி சமுதாயப்படி எல்லா உரிமையோடும் எங்க வீட்லதான் வளருவான்…எனக்கும் ப்ரீத்தாவுக்கும் இனி மூத்த குழந்தை அவந்தான்” அவன் சும்மா சொல்லிக் கொண்டிருக்கவில்லை என்பது தெளிவாக புரிகிறது.

“குழந்தைய கூட்டிட்டுப் போகத்தான் வந்தோம் …கிளம்புறோம்….வா ப்ரீ, அவிவ் வெளியதான் இருப்பான் அப்டியே கூட்டிட்டுப் போய்டலாம்…” மதுரன் திரும்பி நடக்க

துள்ளி எழுந்தாள் நல்லிசை படுக்கையில் இருந்து. “மதுர் இது அநியாயம்…டூ மச்…நிச்சயமா என்னால முடியாது…எனக்குன்னு இருக்றது அவன் மட்டும்தான்….நான் அவன லீகலா அடாப்ட் செய்துருக்கேன்… “ கை காயம் வாகில்லாமல் இப்பொழுது இழுபட்டுவிட்டது போலும். சுரீரென்றது தோளோடு

“ஹலோ…எது அநியாயம்…? உன் சுயநலத்துக்காக ஒரு குழந்தைய இந்த கேடுகெட்ட சொசைட்டில எப்டி ஒரு சூழ்நிலைல நிறுத்தப் போறேன்னு சொல்லிகிட்டு இருக்க…? செல்ஃபிஷ்னஸ்க்கும் ஒரு அளவு இருக்கனும்…முன்னால வேணா நீ பெரிய பணக்காரியா இருந்துருப்ப….இப்ப என்ட்டயும் கோர்ட்டுக்குப் போற அளவு காசு இருக்குதுமா.. வேணும்னா கோர்ட்டுகுப் போய் குழந்தைய வாங்கிக்கப் பாரு…” ஆக ஏதோ ஒருவகையில் பணமும் இவனது கோபத்திற்கு காரணமோ? அப்பா அப்படி எதுவும் செய்தாரோ? ஆனால் இவள் அதற்கு என்ன செய்வாள்?

இவள் கையிலோ மனதிலோ வடிகின்ற ரத்தத்தை ரத்தமாக என்ன தண்ணீராக கூட கவனிக்க மதுரன் தயாராக இல்லை.

அந்த ப்ரீத்தாவின் கையைப் உரிமையாய் பற்றி அழைத்துக் கொண்டு நடக்க தொடங்கினான். அவனைத்தாண்டி ஓடி குழந்தையை பிடுங்கி தன்னோடு  வைத்துக் கொள்ள முடியும் என்றெல்லாம் இசைக்கு தோன்றவில்லை.

“நிக்கி….அவிவப்…”இவள் அலற ஆரம்பிக்க, இதற்குள் கையில் தூக்கிவைத்திருந்த குழந்தையுடன் அறைக்குள் வந்தான் நிக்கி.

“ஹே…இசை…என்னமா…என்னதிது….?” இவள் தோளிலிருந்து வடியும் ரத்தத்தைப் பார்த்தவன் “நர்ஸ்…” சத்தமாய் கூப்பிட்டான்.

“அம்மா” துள்ளிக் கொண்டு பாய்ந்தான் பிள்ளை.

“அவிவ்வை மதுர்ட்ட கொடுத்றாதீங்க நிக்கி…எனக்கு அவன் வேணும்…”

“குட்டிப்பா அங்கிள்ட்டயே இருமா….இல்லனா இந்த இவங்க உன்ன அம்மாவிட்டு தூக்கிட்டிட்டுப் போய்டுவாங்க….” மகனிடம் மதுரனையும் ப்ரீத்தியையும் சுட்டிக் காண்பித்தாள்.

நிக்கியிடம் பம்மினான் குழந்தை. அவனைப் பிடித்திருந்த நிக்கியின் பிடியும் இறுகியது.

“குழந்தையக் குடுடா…அவன் எங்க வீட்டு குழந்தை……” மதுரன் உறுமினான்.

“கோர்ட்ல போய் இதச் சொல்லி கேட்டுப்பாரு….”நிக்கி அழுத்தமாய் அறிவிக்க, இதற்குள் நர்ஸ் வந்திருந்தார்.

“ஏய்..என்ன இது….ஹாஸ்பிட்டல்ல வச்சு……பேஷண்டை வேற டிஃஸ்டர்ப் செய்துகிட்டு….முதல்ல எல்லோரும் வெளிய போங்க…”

அடுத்து நர்ஸ் ரத்தத்தை சுத்தம் செய்து காயத்திற்கு மருந்திட்டு. எதோ ஒரு இஞ்செக்க்ஷனிட்டு மீண்டும் வெளியேறும் வரை ப்ரீத்தியுடன் மதுரன் முனுமுனு என ஏதோ பேசிக் கொண்டிருந்தான். மற்றபடி அமைதியே. குழந்தை நிக்கியின் தோளில் முகம் புதைத்து கழுத்தோடு தொவ்வியிருந்தான். பயம்.

“ஓகே….இப்ப என்ன குழந்தை கூட நீ இருக்கனும் அவ்ளவுதான…? எப்டியும் குழந்தையப் பார்த்துக்கவும் ஒரு ஆள் வேணும்….சோ நீ எங்க வீட்ல வந்து தங்கிக்கிடலாம்…பட் ஞாபகம் வச்சுக்கோ ஒன்லி ஒரு பேபிசிட்டரா…சர்வென்ட்மெய்ட் அளவுதான் உரிமை…என் மனச முதல்லயே சொல்லிட்டேன்….அதுவும் ப்ரீங்க போய்தான் இவ்ளவாது சரின்னு சொல்றா…”

கேட்டபடி மதுரன் இசையைப் பார்க்க, ஒரு விபத்தில் ஒரு மனித குணம் இப்படியா கீழ்ப் பட்டுப் போகும் என நம்பமுடியாமல் பார்த்திருந்தாள் அவள்.

“ஓகே உனக்கு ஒன்டே டைம்….நீயா குழந்தையோட வீடு வந்து சேரு….இல்லனா குழந்தைய எப்டி கொண்டு போகனும்னு எனக்கு தெரியும்….24 மணி நேரமும் இப்டி பாடி கார்டோடவா இருப்ப நீ…” இசையிடம் சொன்னவன், நிக்கியிடம் ஒரு பார்வையை செலுத்திவிட்டு

 “நீ வாம்மா” என்றபடி அந்த ப்ரீத்தாவின் கையைப் பற்றி கூட்டிப் போய்விட்டான்.

செய்கையற்று திகைத்து நின்றாள் நல்லிசை. மதுரன் சொன்னது உண்மைதானே 24 மணி நேரமும் பாடி கார்டுக்கு எங்கு போவாள் இவள்? மதுரன் அவிவை தூக்கிப் போனபின் இவள் சட்டபடி கேஸ் நடத்தி, தீர்ப்பு இவளுக்குப் ஃபேவராகத்தான் வரும் என்றாலும் கூட அதுவரைக்கும் குழந்தையப் பிரிந்திருப்பது எப்படியாம்? அப்படி தீர்ப்புவர எவ்வளவு காலமாகுமாம்?

சிங்கிள் பேரண்ட் அடாப்ஷனுக்கு சட்டங்கள் மிகவும் அனுகூலகமாக இல்லை என முன்பு இவள் லாயர் சொன்னதும் ஞாபகம் வருகிறது.

மதுரனும் ப்ரீத்தாவும் தம்பதியாக குழந்தையை கேட்கும் போது என்ன நடக்கும்?

இதில் அவிவ்வின் மனம் என்ன பாடு படும்?. மூன்று வயது வரை அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவன் அவன். இப்பொழுதுதான் அந்த ஞாபகங்கள் அவனுக்கு மறந்திருக்கின்றன….

மீண்டும் ஒரு காயமா?

எத்தனையோ போராடிவிட்டாள் வாழ்க்கையில் ஆனாலும் இது…? ஏன் வாழ்க்கை இவளை துரத்தி துரத்தி இழப்புகளை மட்டுமே பரிசளிக்கின்றது? இவளது ஆடுகள் எல்லாம் எப்போதும் பலி பீடத்திற்குத்தானா?

இவள் ஆசைகளை கொள்வதும் அதை படைத்தவர் பார்த்திருந்து  அழிப்பதும்….தெய்வமே இந்த முறை என்னால் முடியாது…எனக்கு இரங்கும்….சோர்ந்து போய் அமர்ந்தாள்.

“அம்மா அந்த பேட் அங்கிள் போய்ட்டாங்களாமா? நான் உங்கட்ட வரட்டுமாமா?” இன்னும் பயம் நீங்காமல் அவிவ்தான் கேட்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.