(Reading time: 15 - 29 minutes)

பேட் அங்கிள்!!!! கடைசியில் இதுதானாடா நீ!!! உனக்காகத்தான் இத்தனையை சந்தித்தேனா!!! மனதளவில் விதைவையாக வாழ்ந்தேனே!!!!! இவள் மனதின் மரணத்தை உறுதி செய்தன நினைவு ஈட்டிகள்.

அவள் அருகில் அவிவை வைத்தான் நிக்கி. கைகாயத்தின் நிமித்தம் இவளை அணைக்காமல் மடியோடு படுத்தான் குழந்தை. குழந்தைக்கு இருக்கும் புரிதல் கூட இந்த மதுரனுக்கு இல்லாமல் போயிற்றே…...

இவள் முகம் தொட்டுப் பார்த்துக் கொண்ட அவிவ், வயிற்றோடு அணைத்தான். குழந்தையின் மென் ஸ்பரிசம் ஒரு புறம் உயிர்ப்பையும், மறுபுறம் இது எத்தனை நாள் நிலைக்கும் என்ற உயிர்வரையான பயத்தையும் கொண்டு வருகிறது இவளுள். ஆனாலும் மனம் குழந்தையோடே நின்று போனது. பிள்ளையை லயத்தோடு தட்ட மெல்ல தூங்கிப் போனான்.

இவளுக்குமே சுய நிலை எதற்குள்ளோ நழுவுகிறதோ?  தூக்கமா வருகிறது?

அதுவரையிலும் அமைதியாய் இவர்களையே பார்த்திருந்தான் நிக்கி. பின் தன் அலைபேசியில் யாரையோ அழைத்தான்.

“நிக்கிக்கு மேரேஜ், பொண்ணு பேரு நல்லிசை. இன்னைக்கு ஈவ்னிங் 4 ஓ க்ளாக்  வெட்டிங், இது அவங்களுக்கு ரொம்பவும் பெர்சனல் விஷயம். அவங்க ப்ரைவசிய நீங்க ரெஃஸ்பெக்ட் செய்யனும்ங்கிற மாதிரி எதாவது மெசேஜ் மீடியாவுக்கு கொடுத்துடுங்க”

தொடர்ந்து வந்து தாக்கிய அதிர்ச்சிகளா, விரக்தியா, வேதனையா, மரத்திருந்த மனமா, இழப்புகளின் உணரதக்க உயரமா, குழந்தையை இழந்து விடக் கூடாதே என்ற பயமா, மதுரன் விஷயத்தில் நொருங்கி இருந்த அவளது சுயமா,  எதுவென்று தெரியவில்லை ஏனோ அவளால் பெரிதாக எதையும் யோசிக்க கூட முடியவில்லை. அதிரக் கூடமுடியாமல் அவனைப் பார்த்தாள் இசை. செத்த மனம் அதிருமா என்ன?

“ப்ளீஃஸ் நிக்கி எனக்கு போராட தெம்பு இல்ல….நீயும் என்ன கொல்லாத….என்ன விட்டுடேன்….” அத்தனை சோர்வான குரல். நர்ஃஸ் போட்ட இஞ்செக்க்ஷன் தூக்கத்திற்கா?

“இன்னும் ஹால்ஃப் அன் அவர்ல மெசேஜ் மீடியாவுக்குப் போய்டும்….வெட்டிங்க்கு என்ன ட்ரெஸ் வேணும்னு சொன்னனா அரேஞ்ச் செய்ய வசதியா இருக்கும்….”

“அதே மீடியாட்ட நீ என்ன ஃபோர்ஸ் செய்றன்னு சொல்லுவேன் நான்….” பேசப் போராடத்தான் வேண்டி இருந்தது. நாக்கு ஒத்துழையாமை இயக்கம்.

“இல்ல நீ சொல்ல மாட்ட …..ஏன்னா உனக்கு அவிவ் வேணும். அவன் வேணும்னா இந்த கல்யாணம் நடக்கனும்….நடந்தே தீரனும்….”

ஆக குழந்தை இவனுக்கும் பகடைக்காய்… கண்ணை திறந்து நிறுத்த தடுமாற்றம்.

“யோசிச்சுப் பாரு…இந்த மேரேஜுக்குப் பிறகு லீகலியோ பிசிகலியோ வேற யாரும் குழந்தை மேல கைவைக்க நினைக்க கூடமாட்டாங்க….”

அவிவ் இந்த நிக்கோலின் குழந்தை எனும் போது எனக்கு தெரியாமல் குழந்தை தத்து கொடுக்கப்பட்டிருக்கிறது என இவன் வாதாடும் போது நவ்யாவின் பெரியப்பா மகனாகிய மதுரனுக்கு குழந்தை எப்படி கிடைக்க முடியும்? ஆனால் ரேப்பிஸ்ட் இவன்… நினைக்கத்தான் முடிகிறது பேச முயன்ற முயற்சி வெற்றி பெறவில்லை.

“ அவிவ் கதை மீடியாக்கு போகனும்னு நீ நினைச்சா கொண்டு போ…அத எப்டி கவ்ண்டர் செய்யனும்னு எனக்கு தெரியும்…” அவன் சொல்லிக் கொண்டு போக

சுருண்டு போனாள் நவ்யா. அவிவ் கதையை மீடியாவிற்கா? குழந்தை மேல் இவனுக்கு என்ன அக்கரை இருக்கிறது? கண்கள் மூடிவிட்டன….

 “அ…அவிவ்க்காக கொ..கொஞ்சமே கொ..கொஞ்சமாவது யோ…யோசிக்க மாட்டியா நி…நிக்கி?

“எஸ் அஃப்கோர்ஸ்…பட் அதுல எனக்கு இப்டி ஒரு ஃப்ராஃபிட் எடுக்க வழி இருக்றப்ப நான் ஏன் விட்டுக் கொடுக்கனும்? ஐ நீட் யூ…ஐ’வ் வெய்ட்டட் சோ லாங் பேபி…”

இவளுள் அருவருப்பாய்…. வெறுப்பாய்….. ஓர் அலை………….

“பை த வே மேரேஜ்னு நான் சொன்னது உண்மையான மேரேஜ்…….அதாவது அஸ் அ ஹஸ்பண்ட் என்னோட எந்த உரிமையையும் விட்டுக் கொடுக்க மாட்டேன்…… ”

இவள் மடியில் படுத்திருந்த குழந்தையை தன் தோளில் எடுத்துப் போடுகிறான் நிக்கி என தெரிகிறதுதான். ஆனால் சுண்டுவிரலை கூட அசைக்க முடியவில்லையே இவளால்.

“நீ இப்போ ரெஸ்ட் எடு….டூ ஓ க்லாக் டிஃஸ்சார்ஜ்….என் கார் வந்து உன்ன பிக்கப் செய்துகிடும்….3 க்கு ரெடியாகுற…4க்கு வெட்டிங்….அப்போ அவிவ் என் கூட இருப்பான் வந்து வாங்கிக்கோ…”

அடுத்து அவன் எதுவும் சொன்னானா, நிற்கிறானா சென்றுவிட்டானா எதுவும் அவளுக்கு தெரியவில்லை. தூங்கி இருந்தாள் நல்லிசை.

மீண்டும் அவளுக்கு விழிப்பு வரும் போது யாரோ அவளை எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.

“மேம் நீங்க கிளம்பனும்….” நர்ஸ்தான். இன்னும் தூக்கம் வருகிறது என்றாலும் சமாளிக்க முடியாத நிலை என்றெல்லாம் இல்லை. எழுந்து உட்கார்ந்தாள். நிர்மலாமாய் ஒரு உணர்வு.

 “மேம் கிளம்புறீங்களா…? உங்கள டிஃஸ்சார்ஜ் செய்தாச்சு…” அருகிலிருந்த யாரோ ஞாபகபடுத்துகிறார்கள். அவிவ் சாப்டுறுப்பானா? ஞாபகம் வருகிறது.

சில நிமிடங்களில் நிக்கியின் காரில் இருந்தாள் நல்லிசை.

அடுத்த சில மணி நேரத்தில் நிக்கியுடன் தொடங்கி இருந்தது நல்லிசையின் திருமணம்.

தொடரும்

Episode # 06

Table of Contents

Episode # 08

{kunena_discuss:878}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.