(Reading time: 35 - 70 minutes)

ல்லோரும் நல்லா இருக்காங்கடா….அம்மம்மாக்குதான் உடம்பு முடியலை…ஃப்யூ அவர்ஸ்னு………..ஹம்….ஃபியூ அவர்ஸ்னு சொல்றாங்க…உன்னை பார்க்கனுமாம்….லாஸ்ட் விஷ்….” சொல்லி முடிக்கும் முன் அவன் பட்ட பாடைப் பார்த்தவளுக்கு அதற்கு மேல் அவனிடம் எதை எப்படி கேட்க என தெரியவில்லை.

தன் சொந்த தாய் தந்தை இருவழிப் பாட்டிகளையும் இவள் பார்த்ததே கிடையாது. தாய் கூட இன்றி வளர்ந்தவள் ஷாலு. ஆக இந்த பாட்டி பாசம் எல்லாம் அவளுக்கு தியோரிடிக்கல் நாலெட்ஜ்தானே தவிர அனுபவிக்க எப்படி இருக்கும் என்றெல்லாம் தெரியாது. சரித்ரன் பாட்டியிடம் இவள் பேசியிருக்கிறாள் தான் அவ்வப்பொழுது. விஷயம் கேட்க கஷ்டமாக இருக்கிறதுதான். ஆனால் அவள் பெரிதாக உணர்ச்சி வசப்பட்டாள் என்று இல்லை.

ஸோ அவளால் சூழ்நிலையை யோசிக்க முடிந்தது. வெயிட்டிங் ரூமில் இவர்கள் இப்பொழுது காத்திருக்கிறார்கள். இன்னும் சற்று நேரத்தில் ஃப்ளைட்டில் போர்ட் ஆக வேண்டி இருக்கும். அப்பாவுக்கு விஷயம் தெரிந்திருக்கும் வாய்ப்பு கம்மி. அவர் மொபைல் ரீச்சில் இல்லையே….தெரிந்தால் இப்படி இவளை தனியாக அவனுடன் செல்ல நிச்சயமாக அனுமதிக்கமாட்டார். சித்தப்பா சித்தியுடன் சென்று வரச் சொல்லலாம்….

சரித்ரனைப் பார்த்தாள் அவன் இன்னும் மொபைலில்….

அதற்குள் சித்தியே இவளை அழைத்தார்.

“சித்தி… சரன் கூட ஏர்போர்ட்ல இருக்கேன் சித்தி….”

இதற்குள் இவர்கள் ஃப்ளைட்டிற்கான போர்டிங் அனவ்ன்ஸ்மென்ட் அலறத் தொடங்க மக்கள் கசகச வென கலையத் தொடங்க சரனின் பற்றிய கையைப் பின்பற்றி நகரத் தொடங்கினாள். சித்தியின் சத்தம் காதில் விழ மறுத்தது.

“ சித்தி….சித்தி நீங்க பேசுறது கேட்க மாட்டேங்குது சித்தி….”

ஃப்ளைட்டில் நுழைவதற்கான அந்த பேசேஜில் நுழையவும் தான் மறுபடியும் கேட்கிறது சித்தி குரல்…

“போர்ட் ஆகிட்டீங்களோ….?”

“அல்மோஸ்ட்…”

“சித்தப்பா அப்பாட்ட பேசத்தான் ட்ரை செய்துட்டு இருக்காங்க ஷாலுமா….ஆனா….ப்ச் சரி இனிமே என்ன செய்ய முடியும்…? போர்ட் ஆகியாச்சு…கிளம்பு…நைட் ஃப்ளைட்ல நாங்க வந்துடுவோம்….”

“அப்பா….இதுக்கு ஒத்துப்பாங்களா சித்தி…?” இப்பொழுது சரன் இவளைத் திரும்பிப் பார்க்கிறான். இழப்பும் தவிப்பும் வலியுமாய் அவன்…..

பெருமூச்சு வந்தது சித்தியிடமிருந்து “கஷ்டம் தான்…பட் சித்தப்பா பேசுறதுல எப்டியும் கூல் ஆகிடுவாங்க பெரியத்தான்…நீ குழப்பிக்காம போய்ட்டு வாமா…..இதுக்கும் சேர்த்து கவலப் படுறதுல என்ன மாறிடப் போகுது சொல்லு…”

சித்தியே அனுமதி கொடுத்தாயிற்று, அதோடு அவர் சொல்வதும் உண்மைதானே கவலைப் பட்டு ஆகப் போவதென்ன? சரித்ரனையாவது கவனிக்கலாம்…பாவம் ரொம்பவும் உடைந்து போய் இருக்கிறான்.

அதுவரை அவளைப் பற்றியிருந்த அவனது கையை தான் பற்றினாள் ஷாலு. ஃப்ளைட்டில் இருக்கையில் அமரவும் அவன் காதோடு பிடித்திருந்த மொபைலை எடுத்து ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்தாள். சற்று சரிந்து அமர்ந்த அவனுக்கு சீட் பெல்ட்டை மாட்டி வைத்தாள்.

தன் அம்மம்மா பற்றி அவனுக்கு தோன்றியதை எல்லாம் பேசிக் கொண்டே வந்தான் சரித்ரன். ஃப்ளைட்டில் வந்த சாப்பாடை அவனை சாப்பிட வைத்தாள் இவள். போனபின் நிலைமை என்னவாகுமோ? அதன் பின் இவன் எப்போது சாப்பிடுவானோ?

மும்பையில் இவர்கள் நேராக சென்றது மருத்துவமனைக்குத்தான். இவளது கையை பற்றியபடி தன் அம்மம்மாவின் முன் நின்றிருந்தான் சரித்ரன்.

இருவரையும் கொஞ்சி முத்தமிட்டு, வாழ்த்தி , ஆசீர்வதித்து, திருமணப் பரிசாக தான் ஷாலுவுக்காய் வைத்திருக்கும் நகை வரை சொல்லிவிட்டுதான் மயக்கத்தில் ஆழ்ந்தார் பாட்டி. ஆத்ம திருப்தி அவரிடம். சிறிது நேரம் மயக்கத்தில் இருந்தவரின் அருகில் அமர்ந்திருந்துவிட்டு அறையைவிட்டு வெளியில் வந்தனர் இருவரும்.

இவாஞ்சலின் குடும்பத்தில் பலரும் மும்பைவாசிகள் என்பதால் அநேகர் வந்து மருத்துவமனையில் குழுமி இருந்தனர் அந்த முதியவருக்காக. “பரவாயில்ல வரப்போற பேத்தி வரைக்கும் எல்லோரையும் பார்த்துட்டாங்க” என அவர்கள் ஆறுதல் பட்டுக்கொள்ள

“ நேர ஏர்போர்ட்ல இருந்து இங்க வந்திருக்கீங்க….வீட்டுக்கு போய்ட்டு வரலாம் “என சரித்ரனின் தந்தைதான் இவர்கள் இருவரையும் வீட்டிற்கு அழைத்தார்.

வழியிலேயே சொல்லிவிட்டாள் ஷாலு….” தரு என்ன தப்பா எடுத்துக்காதீங்க, தயவு செய்து என்ன இப்பவே சென்னைக்கு அனுப்பிடுங்க…”

ஆயாசமாய் பார்த்தான் அவளை சரித்ரன்.

“ஷாலு சொல்றதும் சரிதான் சரனா, நீ அம்மா கூட இரு…நான் வேணா பார்த்து ஷாலுவ ஃப்ளைட்ல அனுப்பிட்டு வந்துர்றேன்…”

ஷாலுவா? தனியாகவா? கிண்டி டூ வேளச்சேரிக்கே அவ டென்ஷன் ஆவாளே… “இல்லப்பா அவ தனியா போய்கிடமாட்டா…” சரன்தான் மறுத்தான்.

“இல்ல தரு, யாரவது வந்து என்ன ஏர்போர்ட்ல ட்ராப் செய்தா போதும்…இப்பதான் வந்தமே..அதே மாதிரிதான….மேனேஜ் செய்துப்பேன்…”

ஆக அது இது என்றாகி கடைசியில் சரித்ரன் அவளை ஏர்போர்ட்டில் வந்து வழி அனுப்பி வைத்தான். ஷாலு பேக் டூ சென்னை.

ஷாலு ஃப்ளைட்டில் இருக்கும்போதே அம்மம்மா ஆண்டவருக்குள் நித்திரை அடைந்துவிட்டார்.

ஷாலுவின் எண்ணமுமே அதுதான். அப்படி அவருக்கு ஏதாவதாகி இவள் பக்க உறவினர் யாராவது வந்து இவளை மும்பையில் வைத்து பார்த்து வைத்தால்…..அதோடு அப்படி ஒரு சூழலில் இறுதி காரியங்கள் முடியும் வரை இவள் ஊர் திரும்பவும் முடியாது. அது நாளை என்றானால் இவள் எத்தனை நாள் அங்கு தங்க…? இப்பொழுதோ எப்படியும் அம்மம்மா இவளைப் பார்த்தாகிவிட்டது. இனி இவள் அங்கிருப்பதும் இங்கு இருப்பதும் பாட்டி வகையில் வித்யாசமில்லை. கிளம்பிவிட்டாள்.

ஷாலு சென்னைக்கு வரவும் மீண்டும் வீட்டிற்கு அழைத்தாள். அப்பாவைப் பற்றி தகவல் வேண்டுமே. ரேயு காலேஜ்ல இருந்து வீட்டுக்கு வந்திருப்பாளே…..ரேயு +2 வில் ரொம்பவே நல்ல மதிப்பெண்கள் தான். ஷாலுவின் கல்லூரியிலேயே யு ஜி கிடைத்திருக்கும்தான்….ஆனால் அப்பா அவளை சென்னைக்கு அனுப்பவில்லை. உள்ளூர் கல்லூரியிலேயே வைத்துக் கொண்டார். ஃபர்ஸ்ட் இயர் படித்துக் கொண்டிருக்கிறாள் அவள்.

“ஹாய் கே பி….என்ன இந்த நேரத்துல?” துள்ளியது ரேயாவின் குரல்

“என்னது கே பி யா…?”

“அது சில பேசத் தெரிஞ்ச பெரியவங்கல்லாம் அவங்க வீட்டு செல்லதங்கச்சிய இப்டித்தான் கூப்டுறாங்க…குட்டி பாப்பா….க்யூட்டா ஷாட்டா கே பி….” ஆதிக் சிமியை கூப்பிட்ட ஞாபகத்தில் சொல்லிக் கொண்டிருந்தாள் ரேயா. பார்வை படா தூரத்தில் இருந்தாலும் சிலரின் பழக்கவழக்கங்கள் நம்மை பாதிக்கின்றனதான்.

“ வர வர உனக்கு வாய் ரொம்ப நீளமாயிட்டு….நான் உனக்கு தங்கச்சியா….? ”

“பின்னே….ஒரு மூனடி முருங்கக்காய நான் எப்டி அக்கான்னு சொல்றதாம்….?”

“என்னது மூனடி முருங்கக்காயா?” கோபமாய் சொல்ல நினைத்தாலும் சிரிப்புத்தான் வருகிறது ஷாலுவுக்கு.

“ ஆமா…இங்கெல்லாம் வெளியூர்ல நின்னு படிக்காளே உன் தங்கச்சி அவ நல்லாருக்காளாம்மா…? அப்டின்னுதான் என்ட்ட விசாரிக்காங்களே…சரி அத விடு…இப்ப என்ன திடீர்னு அப்பாவை தேடி இருக்க? பானுக்கா சொன்னாங்க…”

“ அப்பா எங்க? “ ரேயாவிடம் சரித்ரன் பற்றியே இதுவரை ஷாலு பேசியது இல்லை. சின்னப் பெண்ணிடம் பேச வேண்டிய விஷயமில்லை இதெல்லாம். அதோடு இதையெல்லாம் எப்படி சொல்வதாம்?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.