(Reading time: 35 - 70 minutes)

சென்ற முறை இவன் புறம் தவறு இல்லை என்பது சரித்ரனின் நம்பிக்கை. இந்த முறை அப்படி இல்லையே…..ஷாலு புரிந்து கொண்டு அவளாக திரும்பி வர வழி இல்லை. இவன் தான் போய் புரியவைத்தாக வேண்டும். திரும்பி வருவாளா? அஸ்திவாரம் ஆடுவதாக உணர்வு.

இவன் முக கலக்கத்தைப் பார்த்ததும் உருகிவிட்டார் அத்தை. “போன தடவை அவ இங்க கூட வரலை….ஸ்டில் கொஞ்ச நாள்ள உன்ன தேடி வந்தால்ல…..இப்ப அந்த அளவு கூட கோபமா இல்லையே…. இங்க வந்து தான கிளம்பிப் போறா…..உன்னப் பத்தி ஒன்னுமே சொல்லவும் இல்ல…..பயப்படாதே….எல்லாம் சரியாகிடும்….”

“…………………….” போன தடவை தன்னால் சித்தப்பா சித்தி அனுபவித்த மன வேதனையை அறிந்தவள் இங்கு வந்திருப்பாள் இம்முறை, மற்றபடி கோபமெல்லாம் குறைவாக இருக்காது என்பது சரித்ரனுக்குத் தெரியும்.

“இன்னைக்கே நீ போய் நின்னா அங்க பெரியத்தானுக்கு எதாவது வித்யாசமா படும்… ஷாலு உங்களுக்குள்ள சண்டைன்னுல்லாம் அவ அப்பாட்ட சொல்லிகிட்டு இருக்கமாட்டா….பட் அவங்களுக்கே உங்க ரெண்டு பேர் முகத்தையும் பார்த்ததும் தோணிடும்…அது இந்த நிலையில நல்லதுக்கு இல்ல…ஒரு ரெண்டு நாள் கழிச்சு போலாம்…” அத்தையிடம் தலையாட்டி வைத்தான் சரித்ரன்.

ஷாலுவின் மொபைலே இவன் காரில் இருந்ததால் அவளை தொடர்பு கொள்ள வேறு வழி தெரியவில்லை அவனுக்கு.

னால் மறு நாள் காலை தெங்கோட்டை ரேயாவின் வீட்டில் “அன்றில் ஒரு சந்தோஷமான விஷயம்…..அக்காவ பொண்ணு பார்த்து பூ வைக்க இன்னைக்கு மாப்ள வீட்ல இருந்து வர்றாங்க….ஈவ்னிங் ஃபங்க்ஷன் இருக்கும்…நீ அவட்ட சொல்லி ரெடியாக சொல்லு…..பார்லர், டிரெஃஸ்நு எல்லாம் அவ இஷ்டம்தான்….நீ பார்த்துப்பல்ல…நான் மாமா வீட்டுக்கு பேசப் போறேன்…அப்டியே ஆல்வி வீட்டுக்கும்….ப்ளைட் பிடிச்சாவது அவன வரச் சொல்லனும்…..” ராஜ்குமார் ரேயாவிடம் சொல்லிக் கொண்டு போனார்.

கல்யாண விஷயம், மாப்பிள்ளை இந்த விஷயங்களை எல்லாம் பிள்ளைகளிடம் பகிரும் அளவு அப்பா மாறிவிடவில்லை என்பது ரேயாவுக்குத் தெரியும், அதற்கு காரணமான காயம் ஒன்றும் சின்னது இல்லையே…ஆனாலும் அப்பா சொல்ல மாட்டாரா என ஆவலாகப் பார்த்தாள்.

“மாப்ளை யாருன்னு பார்க்கிறியா….கோயம்புத்தூர்ல என் ஃப்ரெண்ட் டேவிட் இருக்கான்ல அவன் மகன் ஆதிக்..” அப்பா சொல்ல சொல்ல ரேயாவுக்குள் படு சந்தோஷமே….ஆதிக்கிற்கு தெரிந்த யாரையோ சொல்லப் போகிறார்….இவளிடம் ஆதிக் சொல்லிய படி ஷாலு மேரேஜில் அவன் கை இருந்திருக்கிறது…

ஆனால் அதற்கு மேல் அப்பா எதுவும் சொல்லவில்லை…

பே என விழித்தாள்.

“என்னமா அதுக்குள்ள மறந்துட்டியா….உன்னை கூட கோவால கொண்டு போய் விட்டாரே அந்த ஆதிக் தான்மா உன் அக்காவுக்கு பார்த்திருக்க மாப்ள….உன் அத்தானப் பத்தி நீயே உன் அக்காட்ட சொல்லிடு….”

இடி மின்னல் பூகம்பம் எதுவும் இல்லை இதற்கு ஈடு.

“அப்பா…” ஏதோ இவள் கேட்க நினைக்க அத்தான்னு 1000 தடவை இம்போஷிஷன் எழுத சொல்வேன் அவன் சொன்னது ஞாபகம் வருகிறது. அக்கா கணவரை அத்தான் என்று அழைப்பதுதான் இங்கு வழக்கம். ஹஸ்பண்டை யார் அத்தான்னு கூப்டுறாங்களாம் இந்த காலத்தில்? என்ற எண்ணம் ஓடுகிறது அவள் மனதில்.

“என்னமா?”

“அவங்க வீட்ல …..”

“அவங்க இன்னைக்கு ஈவ்னிங் இங்க இருப்பாங்களாம்…அக்சுவலி மாப்ள நேத்து நைட் தான் இன்டியா வந்தார் போல….இன்னைக்கே முடிச்சுடனும்னு சொல்லிட்டாராம்…..ஒன் வீக்ல எங்கேஜ்மென்ட் அரேஞ்ச் செய்யனும்…3 வீக்‌ல கல்யாணம் வைக்க முடியுமா அங்கிள்னு என்ட்டயே கேட்டார் மாப்ள…நாம ஏன் தள்ளிப் போடனும்னு நினைக்கேன்…” அப்பா முகமெங்கும் மலர்ச்சி. இவ்வளவு இந்த விஷயத்தில் அவர் இவளிடம் சொன்னதே அதிகம்.

 

தொடரும்

Episode # 11

Episode # 13

{kunena_discuss:876}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.