(Reading time: 35 - 70 minutes)

ந்த அணைப்பை கூட தவறே இல்லை…என்னைப் பார்த்து ஏன் பயப்படுறன்னு கிண்டல் செய்தவன் தானே…..அதோடு நடந்தது தப்பு கிடையாது….பட் நாங்க திரும்ப செய்ய மாட்டேன்னு தானே சித்திட்ட சொன்னான்…….

இவன் இஷ்டபடி பழகிக்கிறதுதான் சிவிலைஸ்ட், மத்தபடி ஒழுக்கமா இருக்கிறது அன்சிவிலைஸ்ட் என்பது போலவும் இவன் நம்புகிறான்.

ஆக இவளது பெண்மைக்குரிய இயல்பான தற்காப்பு உணர்வுகளையோ, திருமணம் பற்றிய ஒழுக்க உணர்வுகளையோ, ஏன் காதல் சார்ந்த வெட்கம் தயக்கம் போன்ற மென் உணர்வுகளையோ கூட இவன் மதிக்கப் போவது இல்லை…..எல்லாம் அப்பாவால வந்தது என்று அலட்சிய படுத்துவான்….அவள் மனதில் இப்படி நினைவு ஓட

நின்றிருந்த இடம் கடற்கரை அல்லவா. அதே நேரம் ஏதோ ஒரு பால் நண்டு அவள் காலில் ஏறி ஓட, அது என்னவென்று உணராமல் அனிச்சையாய் ‘அச்சோ…’ என்று சொல்லியபடி துள்ளியவளின் உதடுகள் சென்று நிலைப் பெற்ற இடம் எதிரில் இவளிடம் சற்று குனிந்து நின்று பேசிக் கொண்டிருந்தவனின் உதடுகளிலேயே தான்.

துள்ளியதில் அவன் மீது விழுந்திருந்தாள்.

அதுவரை கட்டி கறும் மலையாய் காத்திருந்த அவன் கண்ணியத்தில் இது ஆட்டம் பாம் அட்டாக். பூமாலையாய் மார் சாய்ந்து தீ செய் தேனாய் இதழ் தீண்டி கடக்கமுடியாத இவன் கற்பு சுவரில் ஒரு கீறல் செய்தாள் பெண். சூழலும் காரணம்.

காற்றாய் கலைந்த தன் மனதை ஒருமுகப் படுத்தி, தன் மீது விழுந்திருந்தவளுக்கு எழும்ப உதவ தொடங்கிய சரன் கண்களில் மீண்டுமாய் அவள் ஈர இரு இதழ்கள்…., பேலன்சிற்காக சற்று கடித்திருந்தாள் அவள் அதை இப்பொழுது….

நிலை, இயல் எல்லாம் மறந்து எனக்கே எனக்கானவள் என்ற ஒற்றை உணர்வில், அவளை பின் கழுத்தில் கை வைத்து பிடித்து தன்னை நோக்கி இழுத்தான். அவள் இதழே இவன் குறி.

அவள் நடப்பதை உணர்ந்த நொடி அவன் நோக்கத்தை நிறைவேற்றவிடாமல் இடக்கையால் தன் இதழ் மறைத்து, வலக்கையால் ஓங்கி ஒன்று வைத்தாள் அவன் கன்னத்தில். ஏற்கனவே அவள் மனதில் தாறுமாறாய் அவனை பற்றி ஓடிக் கொண்டிருந்த எண்ணங்களுக்கும்….அவனது இச்செயலுக்கும்….ஷாலுவின் ரியாக்க்ஷன் அது.

அரை நொடிக்கும் குறைவான நேரத்தில் அத்தனையும் நடந்துவிட குற்ற மனப்பான்மையில் குறுகினான் சரன். கண்கள் மூடி நெற்றியில் கை வைத்து தன்னை சமன்படுத்த அவன் முயல கார் ஸ்டார்ட் ஆகும் சத்தம். ஷாலுதான். ‘வா கிளம்பலாம்’ என்ற கோப அறிவிப்பாகத்தான் அவள் அதை செய்தாள். அதற்கு மேலும் அவன் ப்ரச்சனை செய்வான் என அவள் அப்போது நினைத்திருக்கவில்லை.

அவள் இப்பொழுது ட்ரைவிங் படித்திருந்தாளே…… காரை எடுத்துக் கொண்டு எங்கோ போகப் போகிறாளோ?….அவள் கோபத்தில் ரியாக்ட் செய்யும் விதம் இவன் அறியாததா? இப்படியாய் எண்ணிய சரித்ரன்

” ஏய்..….நில்லு…. அவசரமாக இவன் புற முன் கதவின் வழியாய் உள்ளே ஏறியவன் ட்ரைவர் இருக்கையில் அமர்ந்திருந்தவளைக் கடந்து காரின் சாவியை எடுப்பதற்காக சாய்ந்து கை நீட்ட, ஏறத் தாழ அவள் மடியில் படுக்கும் பொஷிஷன். ஆனால் ஷாலு துள்ளிய விதத்தில் சாவி இவன் கையில் கிடைப்பதாய் இல்லை.

அவளது இந்த மன நிலையில் காரை செலுத்திவிட்டால்….????? அவசரமாக அவள் இயக்கத்தை நிறுத்தும் வண்ணம் அவன் சாய்ந்திருந்த நிலையிலேயே அவளை இறுக்கிப் பற்றினான். எங்கு அவள் மீது அவன் கரம் பற்றுகிறது என்று நினைக்கின்ற நிலையிலெல்லாம் அவன் இல்லை. பதற்றம்.

இடைவழியாய் கையோடு சேர்த்து குறுக்காக பிடித்திருந்தான் அவன், அதோடு அவனது ‘சிவிலைஸ்ட் சொசைட்டி’ பற்றிய அவள் புரிதலும், சற்று முன் அவன் முயன்ற முத்தமும், இவளது அறைக்குப் பின் அவனது இந்த செயலும், அவன் அவளை இப்பொழுது இழுக்கும் விதமும் ஷாலுவுக்கு மொத்தமும் வேறாக தோன்றிவிட்டது. அட்டெம்ப்ட் ஆஃப் ரேப்????? பயம்.

அடுத்த நொடி ட்ரைவர் இருக்கைக்கு அருகில் இருந்த கதவைத் திறந்தவள் “காப்பாத்துங்க காப்பாத்துங்க…ஐயோ ஹெல்ப் மீ….” ” என கத்திக் கொண்டே தன் முழு பலத்தையும் பயன் படுத்தி அவனிடமிருந்து விடு படும் நோக்கில் திமிறினாள்.

வள் அலறிய பின் தான், அவள் எதை எதாக நினைக்கிறாள் என சரன் உணர அவசரமாக அவன் தன் பிடியை விட, காரைவிட்டு துள்ளி இறங்கியவள்,

இவன் பின் தொடர்வது தாமதப் படவேண்டும் என்ற நினைவில் கதவை ஓங்கி அறைந்துவிட்டு ஓடத் தொடங்க…கதவில் மாட்டியிருந்த மேக்‌ஸி இப்பொழுது கிழிபட தொடங்குகிறது…அவசரமாக உடையை கதவிலிருந்து பிடுங்கிக் கொண்டு வேகமாக ஓடினாள்.

இன்னும் அந்த ஹெல்ப் மீ…காப்பாத்துங்க…வேறு தொடர்கிறது. தான் உதறிய வேகத்தில்விடு பட்டுவிட்டதாக அவள் நினைத்தாளே தவிர, இவன் அவளை விட்டதாக அவள் நம்பவில்லை.

தூரத்தில் யாரோ வருவது தெரிகிறது சரித்ரனுக்கு. மை காட்!!!!! இரவும் அவள் கிழிந்த உடையும் அதனோடான அலறலும்….யார் இவனை நம்ப…?

அவசரமாக எழுந்து காரைவிட்டு இறங்கி இவன் அவளை சென்று தடுக்கும் முன் அவள் எவ்வளவு தூரமோ ஓடி இருந்தாள். ‘ரன்னிங்ல மட்டும் தான் நான் ரேயுவ ஜெயிப்பேன்……’அவள் சொன்னது ஞாபகம் வருகிறது.

இப்பொழுது இவனும் ஓடினான். அவளை தடுக்கும் நோக்கில் தான். “ஸ்ரீ ப்ளீஸ் சொல்றத கேளு….நீ நினைக்ற மாதிரிலாம் எதுவும் கிடையாது…..பேசி தீர்க்க வேண்டிய சின்ன விஷயத்தை வாழ் நாள்லெல்லாம் வலிக்ற மாதிரி ஒரு இன்சிடென்ட்டா மாத்திடாத… ப்ளீஸ்டா…. வில் ஐ ஹார்ம் யூ…? உனக்கு பிடிக்காத எதையாவது செய்வனா நான்?”

தூரத்தில் ஓடுபவளை நோக்கி சத்தமாக கேட்டுக் கொண்டே ஓடினான். வெளியாட்கள் யாரும் தலையிடும் முன் இந்த ஓட்டம் நின்றாக வேண்டுமே….

ஆனால் இதற்குள் ரிசார்ட்டின் முன் பகுதியை அடைந்திருந்தவள் அங்கு நின்ற டாக்சியை அணுகுவது தெரிகிறது. இவன் அதற்கு பக்கத்தில் செல்லும் முன் டாக்சி ரிசார்ட் கேட்டை கடந்துவிட்டது.

அவசர அவசரமாக மீண்டும் தன் காருக்கு வந்து கிளப்பிக் கொண்டு பறந்தான் அந்த டாக்சியின் பின்னால். ஈசிஆரில் தலை தெறிக்கும் ஒரு சேசிங் சீன்…டாக்சி தன் அத்தை வீட்டை நோக்கிப் போவதைப் பார்த்ததும் ஒரு வகையில் நிம்மதி, ஆனால் இந்த நேரத்தில் போய், ஷாலு இந்த கோலத்தில் அழுதபடி நின்றிருக்க, இவன் போய் என்ன பேச முடியும்? இரவு கழியட்டும் காலை சற்று எல்லோரும் குளிர்ந்த பின் போய் பேச வேண்டியதுதான். அத்தை வீட்டிற்க்குள் செல்லாமலே திரும்பிவிட்டான்.

ஷாலுவுக்கு புரிய வைத்துவிடலாம். ஆனால் அத்தைக்கு என்ன சொல்ல?. மனம் கணக்க கணக்க தன் வீடு வந்தவனுக்கு இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. இரவே பேசியிருக்கலாமோ….? காலை விடிந்தும் விடியாமலும் அத்தை வீட்டை அடைந்தான்.

“என்னடா ஆச்சு….? அவ முகமே சரி இல்லை…….எனக்கு அப்பாவ இப்பவே பார்க்கனும் சித்தின்னு அழுது பிடிச்சு நேத்து நைட்டே ஊருக்கு போய்ட்டா….என்ன செய்த நீ…?”

“என்னவென்று சொல்வான்? நான் அவட்ட பேசிக்கிறேன் அத்த…நானும் இன்னைக்கே தென் கோட்டைப் போறேன்….”

அத்தை முறைத்தார். “சண்டை போடுறதும்…அடுத்து ஒருத்தர் பின்னால ஒருத்தர் ஓடுறதுமே உங்களுக்கு வேலையாப் போச்சு….”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.