(Reading time: 12 - 23 minutes)

"னக்கு அவ என் பொண்ணு இல்லைன்னு ஏற்கனவே தெரியும்!என்னோட வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்தவடா என் வெண்ணிலா!நான் அவளை கஷ்டப்படுத்தினதுக்கு காரணம் நீங்க தான்!எனக்கு தெரியும் உனக்கும் உன் அத்தைக்கும் என் சொத்து மேலே தான்னு!அதனால,அவளை வெறுக்கிறா மாதிரி நடித்து அவளை  பாதுகாப்பான இடத்துல ஒப்படைத்தேன்! உனக்கு இன்னொரு விஷயம் தெரியுமா?என் நிலாவுக்கு கல்யாணமும் ஆயிடுச்சி!"-திடுக்கிட்டான் சங்கர்.

"உன்னால அவளை எதுவும் பண்ண முடியாது!"-அவன் கண்களில் வெறி அதிகமானது.

"அப்படின்னா,தெரிந்தே எல்லாத்தையும் பண்ணி இருக்க!அவளை எதுவும் பண்ண முடியாதா?வர வைக்கிறேன்!இந்த வீட்டுக்கு அவளை வரவழைக்கிறேன்!உன் மேலே இன்னும் அவளுக்கு பாசம் இருக்குல்ல!உனக்கு ஒண்ணுனா அவ துடிக்கிறாளான்னு பார்க்கிறேன்!"-சங்கர் துப்பாக்கியை எடுத்து மூன்று முறை அவரை சுட்டான்.பிரபாகரன் அலறியப்படி மண்ணில் சாய்ந்தார்.

"அவ எனக்கு மட்டும் சொந்தம்!"

"உன்னால அவனை மீறி என் பொண்ணோட நிழலைக்கூட  நெருங்க முடியாது!"

"சாகும்போதும் உன் திமிர் அடங்கலை!"-என்று மீண்டும் சுட்டான்,அவர் உயிர் பிரிந்தது.

அவர் மனைவியின் முகத்தில் எந்த சலனமும் இல்லை.

"என்ன பண்ண போற?"

"பார்த்துட்டே இரு!சிங்கத்தோட குகையில மாட்டப்போற மானுக்காக விரிக்கப்பட்ட வலை இது!"

"ம்மூ!"

"ஆ.."

"உன் போன் அடிச்சிட்டே இருக்கு!"

"வரேன் செல்லம்!"-வெண்ணிலா தலையை துவட்டியப்படி வந்தாள்.

"யாருடா?"

"தெரியலை!"-அவள் கைப்பேசியை வாங்கிய நேரம் மீண்டும் அது சிணுங்கியது.

எடுத்து பேசினாள்.கைப்பேசியில் கூறப்பட்ட செய்தி அவள் சர்வ நாடியையும் ஒடுக்கியது. அவள் கால்கள் தரையில் நிற்க மறுத்தன.அவள் தடுமாறி கட்டிலில் சாய்ந்தாள்.கண்கள் குளமாயின.கைப்பேசி நழுவி கீழே விழுந்தது.அவள் செய்வதறியாது நின்றாள்.காலம் சிறிது கடந்தது.நிலை உணர்ந்து விரைந்து பிரபாகரனின் இல்லம் நோக்கி புறப்பட்டாள்.

மனம் வலித்தது.கண்களில் கண்ணீர் தவிர்க்க முடியாமல்  வெளிவந்தது. அவள் எவ்வளவு தான் வெறுத்திருந்தாலும் மனதின் பாசம் வெளி வர தான் செய்தது. அவள் கார் பிரபாகரனின் இல்லத்தை அடைந்தது. ஊரார் துக்கம் விசாரித்துக்கொண்டிருந்தனர். நிலா அழுதப்படி உள்ளே வந்தாள்.ஹாலில் உயிரற்ற நிலையில் இருந்தார் பிரபாகரன்.

"அப்பா!!"-கண்ணீரோடு ஓடிவந்து அவரருகே மண்டியிட்டாள் நிலா.

அவளைக்கண்ட  சங்கரின் கண்கள் சிரித்தன. அடுத்த சில நொடிகளில் மகேந்திரன் முதலியானோர் வந்தனர். அவர்மனம் கலங்கியது.

"என் நிலாவை உங்கக்கிட்ட ஒப்படைக்கிறேன்!அவ உங்க மேலே அதிகப்பட்ச பாசத்தை வைக்கிறா மாதிரியும்,என் மேலே வெறுப்பை காட்டுறா மாதிரியும் வளருங்க!"-அன்று மகேந்திரனிடத்தில் பிரபாகரன் கூறியது!!

மகேந்திரனை பார்த்தவள்,

"அப்பா!"-என்று அவர் மார்பின் மீது ஓடிச்சென்று முகம் புதைத்தாள்.

அதை பார்த்தவனுக்கு கண்கள் கனலாய் தகித்தன.

"அழாதேம்மா!அழாதே!அப்பா வந்துட்டேன்!"-அதன்பிறகு அவரது இறுதி சடங்குகள் எல்லாம் பூர்த்தியானது.நிலா மகேந்திரனை விட்டு ஒரு அடியும் விலகவில்லை.மூன்றாவது நாள்...

"நம்ம வீட்டுக்கு கிளம்பலாம்!"-அவள் கேள்வியாக பார்த்தாள்.

"அவங்க கேட்ட ஒரு மாசம் டைம் நேற்றோட முடிந்தது! திரும்ப வா!வெண்ணிலா மகேந்திரனா!!"

"அப்பா!"-தந்தை மற்றும் மகளின் பந்தம் அன்பின் உச்சக்கட்டமாகும்!!!ஈடு இணையில்லா பவித்ரம் அது!!!தாய்பாலைவிட மகத்துவம் வாய்ந்த பந்தம்!! 

நிலா கற்சிலையாய் நின்றாள்.

"கிளம்புறீயா?இல்லைன்னா,அடி வாங்க போறீயா?"-சிரித்தப்படி கேட்டார் மகேந்திரன்.

"கிளம்புறேன்!"-இப்போது  அவள் செல்கிறாள் அன்பை நோக்கி!!

"கொஞ்சம் இருங்க!"-தடுத்தது பிரபாகரனின் மனைவி.

"காரியம் முடியுற வரைக்கும் நிலா இங்கேயே இருக்கட்டும்!"-எதற்காகவோ அவள் தூண்டில் போடுவது தெரிந்தது.நிலா மகேந்திரனின் பின்னால் மறைந்தாள்.

"இல்லைங்க..."

"அவர் நிலாக்கூட இருக்க பிரியப்பட்டார்!அது நடக்காம போயிடுச்சு!அதான்..தயவுசெய்து!"-மகேந்திரன் நிலாவை பார்த்தார்.

அவள் வேண்டாம் என தலையசைத்தாள்.

"இல்லை...நிலாவை நான் கூட்டிட்டு போறேன்!"

"புரிந்து கொள்ளுங்கள்!ஒரு அப்பா பாசம் உங்களுக்கும் தெரியும் தானே!அவளுக்கு எதுவும் ஆகாது!"மகேந்திரன் பலமாக யோசித்தார்.

"செல்லம்!இருக்கியா?"

அவளால் அவரை மீறி பேசமுடியவில்லை.

"காரியம் முடிந்ததும் அனுப்பிடுங்க!"

"கண்டிப்பா!"-மகேந்திரன் கிளம்பினார்.

"ஜாக்கிரதை!"என்று கூறிவிட்டு புறப்பட்டார்.

அவர் கார் கிளம்பியதும் அந்த வீட்டின் வாயில் மூடப்பட்டது.

"ரொம்ப பெரிய பாசம் தான்!"-அவள் பின்னால் நின்று கேலி செய்தான் சங்கர்.

"அதைப்பற்றி தெரியாதவங்க!அதைப்பற்றி பேச அருகதை இல்லாதவங்க!"-பதிலுக்கு தாக்கினாள்.

"இந்த திமிர் தான்டி உன் பின்னாடி என்னை வரவழைத்தது!"

"அது கூடவே பிறந்தது!அதுக்கு நான் பொறுப்பல்ல!ஒழுங்கா என் வழ்க்கையை விட்டு போ!"-எச்சரித்துவிட்டு நகர்ந்தாள் நிலா. 

சங்கரின் திமிரான பார்வை அவளையே ஸ்பரிசித்தப்படி இருந்தது.

நாட்கள் நகர்ந்தன... பதினொன்றாவது நாள்!!இன்னும் 5 நாட்களே உள்ளன. நிலாவிற்கு ஒருபக்கம் மனம் வலித்தப்போதிலும் மற்றொரு பக்கம் அங்கிருந்து கிளம்பினால் போதும் என்றிருந்தது!!

அவள் பிரபாகரனின் அறையில் அமர்ந்திருந்தாள். யாரிடமாவது பேசினால் நலம் என்று தோன்றியது மனது!!! ஆனால் அருகே யாருமில்லை. பொழுதுபோக்கிற்காக கீழே இறங்கி வந்தாள்.

"என்ன?என்னை பார்க்காம இருக்க முடியலையா?கீழே வந்துட்ட?"-அதே ஆணவத்தோடு கேட்டான் சங்கர்.

அவள் வெறுப்போடு நகர சங்கர் அவளது கரத்தைப்பற்றினான்.

"என்ன பண்ற நீ?கையை விடு!"

"என்ன பிரச்சனை உனக்கு?ஏன் என்னை கவனிக்க மாட்ற?உனக்காக தினந்தினம் எவ்வளவு ஏங்குறேன் தெரியுமா?"

"ச்சீ..அந்த ஆசை வேற உனக்கு இருக்கா?"

"இருக்க கூடாதா?"

"உன்னோட ஆசை எந்த ஜென்மத்துலையும் நிறைவேறாது!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.