(Reading time: 27 - 53 minutes)

ஜோனத், அரண், சுகவிதா……இத்தனை காலம் வெறும் காட்சிப் பொருட்களாய் தெரிந்தவர்கள், இன்று மனமும் உணர்வும் உள்ள மனிதர்களாய், இவள் மனதிற்கு நெருங்கியவர்களாய்…. சொல்லப்போனால் சொந்தங்களாய் தெரிய…… மீண்டும் செலிப்ரெடிகளாய் மட்டுமே இனி இவள் அவர்களை பார்க்க வேண்டிய நிலைக்கு போயாக வேண்டும்….. திரும்ப இவங்க யாரையும் பார்க்க முடியாது… என்ற நினைவு மூச்சடைக்க நெருஞ்சி முள்ளாய் நெஞ்சம். நிறைந்திருக்கும் போது இலவம் பஞ்சாய் எடையற்று இருப்பதும்…..இழப்பின் வெறுமையில் கிலோ கிலோவாய் கணப்பதும் இது என்ன வினோத இதயம்….???

வர மறுத்த மனதை தர தர என இழுத்துக் கொண்டு, அரணிடம்  விடை பெற்று அவனது வீட்டிற்கு சென்றாள்.

அரணுக்கு ஆபத்தோ? ஜோனத்தையும் அரணையும் பிரிக்க பார்காங்களோ? இவ விஷயத்தை ஜோனத்ட்ட சொன்னது யாரு?? இந்த சிந்தனை அடி மனதில் ஓட…..பிரிவு துயர் பெருமளவில் ஆட்டிப் படைக்க தனக்கான அறைக்கு சென்று, குளியலோடு ஒரு அழுகை. பாட்டி இறந்த பொழுதும் இப்படித்தான் இருந்தது. அதன் பின் சமாளிக்க வில்லையா…. சரியாகிவிடும் மனம் பின்னொரு நாளில். சமாதனாம் செய்து கொண்டாள் தன்னுள். தான் வந்த அன்று போட்டிருந்த சல்வாருக்கு மாறிக் கொண்டாள். பின் அவளுக்கு கொடுக்கப் பட்டிருந்த அனைத்தையும் ஒழுங்கும் கிரமுமாய் அடுக்கி வைத்தாள். இப்பொழுது கிளம்பி ஆக வேண்டும்.

ஜோனத்திடம் தான் அரண் டைரியை ஏன் எடுத்தேன்…அதற்காக எப்படி இப்பொழுது மனம் வருந்துகிறேன் என இவள் சொல்லாமலே சென்றாக வேண்டுமே. ஆக அதை ஒரு கடிதமாக எழுதி வைத்துவிட்டுப் போகும் எண்ணத்தில் ஹாஸ்பிட்டலில் இருந்து வரும்போதே ஏதோ ஒரு பில்லோ அல்லது பழைய ப்ரெஸ்க்ரிப்ஷனோ எதையோ எடுத்து வந்திருந்தாள். அதன் பின் பக்கம் எழுத வெற்று இடம். இவளை வீட்டில் விட வந்த கார் ட்ரைவரிடம்

 “ ஒரு பென் கிடைக்குமா…கொஞ்சம் அவசரமா வேணும்….” ஆக பென்னும் இவள் வசம்.

You might also like - Manathora mazhai charal... A family oriented romantic story 

ரத்தின சுருக்கமாக அதை எழுதி நிச்சயத்திற்கென இவளுக்கு கொடுக்கப்பட்ட நகைகள் அடங்கிய ஜ்வெல் பாக்சிற்கு மேல் வைத்து விட்டு கிளம்பினாள். அறையை விட்டு வீட்டு வாசலை நோக்கி இவள் செல்ல எங்கிருந்தோ விழுகிறது சுகவிதாவின் சத்தம் “அப்பா ப்ளீஸ் சொன்னா கேளுங்க….இன்னேரம் ஆன்டியப் பார்க்க நீங்க ஹாஸ்பிட்டல் வந்துருக்கனும்…. ”

ஏற்கனவே ஜோனத்தின் நிம்மதி என்ற ஒரே காரணத்திற்காக கிளம்பினாலும் இந்த பாம்ப்ளாஸ்ட் இத்யாதியில் இவள் அரணுக்கு எதையோ அரை குறையாய்…செய்ய முடிந்த உதவியை……செய்ய வேண்டிய கடமையை செய்யாமல் போவதாய் ஒரு குறுகுறுப்பு.

இந்த சத்தத்தில் அதே போல் அவள் இன்னுமொன்றை  அரைகுறையாய்  விட்டுச் செல்கிறாள் என தோன்றிவிட்டது. ஜோனத் கூட சொன்னானே அனவரதன் அங்கிள்ட்ட ரிப்போர்ட் செய்துடுன்னு….. இந்த நேரத்தில் அனவரதன் தன் ஆஃபீஸில் தான் இருப்பார். சொல்றதே சொல்றோம் செவிட்ல அறஞ்ச மாதிரி சொல்லனும்…. அப்பதான் இந்த மாதிரி ஆள்களுக்கு காது கேட்கும்.

அரண் வீட்டை விட்டு வெளியே வந்து ஆட்டோ அல்லது பஸ் கிடைக்குமா என காத்திருக்க ஆரம்பித்தாள். இப்பொழுது இவள் மொபைல் சிணுங்குகிறது. இவளோட மொபைலதான் ஜோனத் எடுத்துகிட்டானே….சோ அவன் ஞாபகமா அவன் கொடுத்த இந்த மொபைலை கொண்டு போறது தப்பில்ல என்ற சமாதானத்தோடு இவள் எடுத்து வந்திருந்த அந்த மொபைல் தான்….. ஏதோ நம்பர். யாரா இருக்கும்? எடுத்து காதில் வைத்தாள்.

“கிளம்பிட்டியா…?” ஜோனத்தான். இத்தனைக்குப் பிறகும் இவள் கிளம்பி இருக்க மாட்டாள் என என்ன ஒரு நம்பிக்கை இவள் மேல்…. ஆனாலும் அவன் குரல் கேட்கவும் அடி மனதில் இது என்ன உணர்வு?? பலை நிலத்தில் பாதை மாறி வந்து விழுந்த பாலாறு போல்.

“ம்…அரண் சார் வீட்ல இருந்து கிளம்பிட்டேன்…..இப்ப அந்த செவிட்டு அனவரதனுக்கு ரிப்போர்ட் செய்ய போய்ட்டு இருக்கேன்….” இயல்பாய் இருப்பதாய் காண்பித்துக் கொள்ள முயன்றாள்.

கண்ணில் இருந்து ஏன் கண்ணீர் வழிகிறது? இந்த கால் முடியாமல் அப்படியே கன்டின்யூ ஆகாதா என ஏன் தோன்றுகிறது?

“தென் ஓகே…” என்று கால் முடிவுக்கு வருகிறது என்ற வெறுமை உணர்வை இவளுக்குள் கொணர்ந்தவன்

“ பைதவே இந்த விஷயமா என்ன ப்ரச்சனைனாலும் நீ என்னை போன்ல காண்டாக்ட் செய்……ஆனா அம்மாவ பார்க்க மட்டும் வந்து நின்னுடாத….”

இவளுக்கு பதில் சொல்லும் வாய்ப்பை கூட தராமல் கால் கட். இன்னும் கூட இவ திரும்பி வந்து நிப்பாளோன்னு இவனுக்கு பயம் இருக்கு போல…. பஸ் வரவும் அதில் ஏறிக் கொண்டாள்.  ஒரு கட்டத்தில் பஸ்ஸிலிருந்து ஆட்டோவுக்கு மாறி அனவரதன் அலுவலகம் நெருங்கும் நேரம் அங்கு போய் என்ன பேச வேண்டும் என்ற ஆராய்ச்சி….

அவரை சந்திக்க. இவள் செல்லும் போது அவர் அலுவலகத்தில் இல்லை. அப்புறமும் வந்தவுடன் இம்பார்ட்டன்ட் மீட்டிங் என்றனர். ஏறத்தாழ இவளை சந்திக்க அவர் அப்பாய்ண்ட்மென்ட் கொடுத்த போது இருட்ட தொடங்கி இருந்தது. அதாவது முழு பகலும் அவருக்காக காத்திருந்திருக்கிறாள். எதுவும் அட்வான்ஸ் கேட்டு வந்திருப்பாள் என்ற எண்ணம் அனவரதனுக்கு.

“இப்பவே எதுக்கு வந்த…?”

“என்னை வீட்டை விட்டு துரத்திட்டாங்க……சொல்லாம போனா வருத்தப் படுவீங்கன்னு வந்தேன்…. பேப்பர் கொடுத்தீங்கன்னா ரிப்போர்ட் எழுதி கொடுத்துடுவேன்….லஅப்டாப்னா ஐ’ல் டைப்…”

“இல்ல சொல்லு….”

“ஆன் ஒன் கண்டிஷன் பேசி முடிக்ற வரை இடையில பேசக் கூடாது…..” சொல்லிக் கொண்டே டேபிள் மேல் இருந்த பேப்பர் வெயிட் உட்பட சில சாமான்களை எடுத்து ஒரு கவருக்குள் போட்டு தனியே வைத்தாள். தூக்கி அடிச்சுடார்னா?

அனவரதன் ஒரு வகை இறுக்கத்துடன் அதை பார்த்திருந்தார். கண்டிப்பா வீட்ல நடந்த நிறைய விஷயம் இவளுக்கு தெரிஞ்சிருக்கு….. அரண் சொன்ன அரண் சுகவிதா சம்பவங்களை அப்படியே அவரிடம் சொன்னாள் சங்கல்யா.

“ஆக உன்னையும் ஏமாத்திட்டாங்க…..?” அனவரதன் தான்.

“ஃபார் வாட்?”

“அதான் இப்படி வந்து என்ட்ட சாட்சி சொல்ல…..”

“இந்த விஷயத்தை அரண் அண்ணா எப்ப என்ட்ட சொன்னாங்க தெரியுமா…? “ ஜோனத்துடனான எங்கேஜ்மென்டிலிருந்து, அனவரதன் சொன்னது, இவள் கோபத்தில் செய்த வேலை…பீச் இன்சிடென்ட்….போலீஸ் பயம்,  கத்தி வெட்டு, அரண்  சொன்ன காரணம் என எல்லாவற்றையும்  சொன்னாள். “இதுல நீங்க எங்க வர்றீங்க?”

“எப்டியும் ஒரு நாள் நீ என்ட்ட வந்து சொல்லனும்னு ஆப்பர்சூனிடிய யூஸ் செய்து உன்னை பொய் சொல்லி இம்ப்ரெஸ் செய்திருப்பான் அந்த அரண்…” அமைதியாய் அழுத்தமாய் அனவரதன்.

“அப்டி உங்களை நம்ப வைக்றதுல அவங்களுக்கு என்ன லாபம்…?...நீங்க தான் அவங்க எனிமி ஆச்சே…..நீங்க தனியா கிடந்து அழுதுகிட்டு கிடந்தா தானே அவங்களுக்கு சந்தோஷம்….”

“அவன் இத வச்சு செய்றதுக்குன்னு இன்னும் எதாவது ப்ளான் வச்சிருப்பான்…கன்னிங் ஃபெல்லோ…”

அவ்வளவுதான் சங்குவின் பொறுமை சாட் பூட் த்ரீ….ஓடி ஒளிஞ்சுகிட்டு.

“என்ன நானும்தான் பார்த்துகிட்டே இருக்கேன்…ஒரு அளவே இல்லாம முட்டாள்தனமா உளறிகிட்டே இருக்கீங்க….நம்பவே மாட்டேன்னு முடிவுல இருக்றவர் எதுக்கு என்னை அங்க அனுப்பி வைக்கனும்? அதுவும் கன்னா பின்னானு மிரட்டி…..? நானும் தான் கேட்கேன் பொறாமை பட்டு உங்க மக கேரியரை காலி செய்யன்னே கல்யாணம் செய்த அரண், சுகா கரியரை காலி செய்து கன்சீவாக்கி உங்க வீட்ல வந்து வீசிட்டுப் போய்ட்டு …..அப்றமா ஆள்  வச்சு சீக்ரெட்டா உங்க பொண்ணை போட்டுத் தள்றதை விட்டுட்டு, தான் செத்தா கூட பிரவாயில்லைனு தானே வந்து ஆக்சிடெண்ட் செய்து….அதுவும் தன் 7 நாள் குழந்தை உள்ள இருக்றப்ப அடிச்சுட்டு…..6 மாசமா கோமால விழுந்து , திரும்ப  எந்திரிச்சு வந்த உடனே  உங்க பொண்ண எதுக்கு திரும்பியும் கூட்டிட்டுப் போய்ட்டாராம்….??? மூளைனு ஒன்னு இருந்தா உங்களுக்கு இதெல்லாம் புரியும்….”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.