(Reading time: 27 - 53 minutes)

ல்லில்லா வாயால் தகப்பனை கடிக்க முயன்று கொண்டிருந்த குழந்தை தன் கால் முட்டுகளை கூட்டி அரண் மார்பில் இரண்டு இடி துள்ளலாய்…..பின் சட்டென அனவரதனைப் பார்த்து முழு நீள பொக்கை வாய் சிரிப்புடன் இரண்டு கைகளை தூக்கிப் போட்டுக் கொண்டு ஒரு தாவல்…. கண்ணில் நீர் கட்டி விட்டது அனவரதனுக்கு…… அந்த நொடி அவருக்கும் அரண் குடும்பத்திற்கும் இடையில் இருந்த அத்தனை கசப்பு சுவர்களும் உடைந்து விழுந்ததாகத் தான் தோன்றியது சங்கல்யாவுக்கு.

எத்தனைதான் தவறான புரிதல் இருந்தாலும் அடிப்படையில் நம்மிடம் உண்மை இருந்தால் பிரிவுச் சுவர் ஒரு நாள் உடைந்து விழுந்துவிடும் தான் போலும். இப்படித்தான் தோன்றியது அவளுக்கு. அதுவே சற்று முன் கடவுளிடம் கேட்ட கேள்விக்கும் விடையாயும் தோன்றியது உள்ளுணர்வில்.

ஜோனத் அரணிடம் இவள் ஒரு ரிப்போர்ட்டர், அனவரதன் அனுப்பி வந்திருக்கிறாள் என்றவரை உண்மையை சொல்லி இருக்கிறான் என்பது தெளிவு. பின் இந்த பியான்சி கதைக்கு ஆவசியம் என்ன? தன் அம்மாவிடம் வேறு அதைத்தான் சொல்லி   இருக்கிறான். ஏன்? எல்லாவற்றிற்கும் மேலாக அரண் இவளை ஜோனத்தின் ஃபியான்சி எனதான் முழு மனதாக நம்புகிறான்….. அப்படியானால் உண்மையில் இவள் ஜோனத் அளவில் என்னதாய் இருந்திருக்கிறாள்???? இது நேற்று அரண் தன் வாழ்க்கையை பத்தி இவளிடம் பகிர்ந்து முடிக்கும் போதே  புரிந்துவிட்டது….அப்பொழுதுதான் அன்பரசி அம்மா பற்றி ஃபோன் கால்….அதற்கு மேல் அந்த ஃபியான்சி கதையை ஆராய அவள் சூழல் இடம் தரவில்லை.

இப்பொழுது எப்படி பார்த்தாலும் ஜோனத் வகையில் இவள் மீது விருப்பம் இருந்திருக்கிறது என புரிகிறது. புரிதலே பெண்ணை வானத்தில் பறக்கச் செய்கிறதுதான். காதல் ஒன்றும் பயங்கரமானதாய் பயமானதாய் இப்பொழுது இல்லை….ஜோனத் இவள் அப்பாவைப் போல் இருக்க மாட்டான்….அரண் அண்ணா போல் தான் அவன். ஆனால் இவள் அரண் டைரி விஷயத்தில் நடந்து கொண்ட விதத்தில் இப்பொழுது கொதித்துப் போய் இருக்கிறான் ஜோனத். நியாயமான கோபம். இவள் இன்னும் என்னவெல்லாம் செய்து வைப்பாளோ என்ற எண்ணம் அவனுக்கு. அதுவும் நியாயமான உணர்வே….இவள் செய்து வைத்திருக்கும் வேலை ஒன்றும் சின்னதில்லையே…..

You might also like - Rose and Thorn... Free English romantic story 

ஆனால் இவள் இப்போது உண்மையை புரிந்து கொண்டாள்….இனி இவள் பதையில் உண்மை இருக்கும்….ஆக ஜோனத்தின் இவள் பற்றிய புரிதல் தான் தவறானதாகி விடுகிறது. ஆனால் அடிப்படையில் உண்மை இருப்பதால் இப்போதைய பிரிவு சுவர் இடிந்து விழுந்து விடும் தான் இனி வரும் நாளில்…..அதுவரை அரணைப் போல் சுகவிதா போல் இவள் பொறுமையாக இருந்தால் போதும்…..

இது தான் இந்த திருமணம் தான்…இவளுக்கான நியமிக்கபட்ட பாதை என தோன்றிவிட்டது அவளுக்கு. சோ அவனா நிறுத்தினா நிறுத்திக்கட்டும்….நானா நோ சொல்லப் போறதில்லை… எனக்கு விருப்பமான்னு கேட்டா ஆமாம் விருப்பம் தான் …இது தானே உண்மை…. அவன் பக்க உண்மையை அவன் தான் பேச வேண்டும். முடிவெடுத்துக் கொண்டாள் சங்கல்யா. ஆனால் அந்த முடிவொன்றும் அத்தனை எளிதாய் இருக்கப் போவதில்லை என அவளுக்கு அப்போது தெரியவில்லை. இப்பொழுது சுகவிதா வந்து இவள் அருகில் அமர்ந்தாள். கையில் ஏதோ சாப்பாடு.

“எப்ப சாப்டீங்கன்னு தெரியலை …சாப்டுங்க…” எந்த மறுப்பும் சொல்லாமல் வாங்கிக் கொண்டாள். இந்த நாளை கோத்ரூ செய்ய இவளுக்கு எக்கச்சக்க  தெம்பு தேவை…

ஸ்பூனில் எடுத்து இவள் சாப்பிட்டுக் கொண்டிருக்க

“தேங்க்ஸ் லியா ….எங்க அப்பாவுக்கும் அரணுக்கும் என்ன ப்ரச்சனைனு கூட எனக்கு தெரியாது….ரெண்டு பேருமே என்ட்ட சொன்னது இல்லை….ஆனா இன்னைக்கு அவங்கள சேர்ந்து பார்க்றப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு….நீங்க தான் அப்பாட்ட பேசுனீங்கன்னு அம்மா சொன்னாங்க….”

இவள் என்ன சொல்ல? அதற்குள் புஷ்பம் வந்தார். அடுத்து அனவரதன். “என்னப்பா வந்துட்டீங்க?”

“ரொம்ப சிம்பிளா இருக்கனும்னு ப்ரபு சொல்றான்மா….அதுவும் சரி தானே….….”

“ரிங் எக்சேஞ்சாவது இருக்கட்டும்பா….”

ப்ரபாத் சம்மதித்து இருப்பது சங்கல்யாவுக்கு புரிகிறது. ஆக அடுத்த அரை மணி நேரத்துக்குள் அன்பரசி முன்னிலையில், உலகத்திலேயே சிம்ப்ளஸ்ட் வெட்டிங். இருவரின் சம்மதத்தையும் முதலில் கேட்டுக் கொண்டு தான் செருமனியை துவக்கினார் திருமணம் நடத்துபவர்.

“என்னம்மா உனக்கு இந்த வெட்டிங்ல இஷ்டம் தானா?” இவளிடமாய் அவர் கேட்க இவள் மண்டையை உருட்டுவதை திரும்பிப் பார்த்ததோடு சரி ஜோனத் அதன் பின் இவளைப் பார்க்கவே இல்லை.

முறையாய் உடன்படிக்கை ஷேரிங்….

யெஸ், ஐ வில், ஏமென்….

பின் பைபிள் மாற்றிக் கொள்ளும் போது அவன் முகத்தைப் பார்த்தாள். ஆனால் அவன் பைபிளைப் பார்த்திருந்தான். தென் ரிங் எக்சேஞ்ச்…..சுகவிதா தர இவள் பங்கை இவள் செய்தாள். ஆனால் இவள் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை.

எல்லாம் முடிந்தது என இவள் நினைக்க “என்ன ப்ரபு லியாக்கு செயின் எதுவும் போடலியா…என் செயின்…” என அவர் ஆரம்பிக்க

“செயின் தானமா…ஒன் மினிட் “ என்ற ப்ரபாத் தன் கழுத்திலிருந்ததை கழற்றி அவள் கழுத்தில் அணிவித்தான்.

சில்லிட்டிருந்த இவள் தேகம் தொட்ட அதன் சூடு….கடும் கோபத்தில் இருக்கிறானோ? இவள் நினைத்துக் கொண்டிருக்க இவள் சற்றும் எதிர் பாரா விதமாய் சின்னதாய் இவளை அணைத்து நெற்றியில் ஒரு சிறு முத்தம். அவன் பரந்த மார்பும், அவன் ஸ்பரிசமும்….மூச்சடைக்க நொடியில் இவளை விடுவித்தான்.

“இப்ப ஓகே தானம்மா…?”

அவன் கண் சிமிட்டி கேட்பதும், அன்பரசி சிரிப்பது இவள் ஓரக் கண்ணில் படுகிறது. அனைவரும் சிரிப்பதை நிமிர்ந்து பார்க்க இவளுக்கு நிச்சயமாய் தெம்பு இல்லை.

“இப்ப சந்தோஷமா போய்ட்டு வருவீங்களாம்….” சொல்லியபடி அவன் அம்மாவுக்கு ஒரு முத்தம்…

அடுத்து சற்று நேரத்தில் சர்ஜரி. இவள் பார்வை தொடும் தூரத்தில் அரண் அருகில் ஜோனத். கன்னா பின்னாவென எதாவது எதிர்மறை நியாபகம் வரும் நேரம் ஓடிப் போய் அவன் கையை பிடித்துக் கொண்டு அவன் அருகில் உட்கார வேண்டும் என்று தோன்றுகிறது….. அவ்வப்பொழுது தன் இரு கைகளால் அவன் தன் முகத்தை தேய்த்துக் கொள்ளும் நேரமும் இவளுக்கு இந்த உந்துதல் அதிகமாகிறது. அதை செயல் படுத்த முடியுமா என்ன? அவன் இவள் புறம் திரும்பக் கூட இல்லை.

தொடரும்

Episode # 13

Episode # 15

{kunena_discuss:879}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.