(Reading time: 13 - 26 minutes)

கொடுக்கவில்லை அவன். அவள் கரம் பற்றி அதை அவளுக்கு அணிவித்தான். மெல்ல நகர்ந்த அவன் விரல்கள் அவள் விரல் பற்றி இதமாக அழுத்தின. அந்த ஸ்பரிசத்தில் பழைய காதலும், அது கொடுத்திருந்த உரிமையும் இருந்ததா இல்லையா? புரியவில்லை அவளுக்கு. நட்பாய் ஒரு புன்னகை அவனிடத்தில்.

'தேங்க்ஸ்டா ....' வெகு இதமாக சொன்னான் அவன். நீ எவ்வளவு பெரிய ஹெல்ப் பண்ணி இருக்கேன்னு உனக்கே தெரியல. உன் பேரை கெடுத்துகிட்டு நிறைய பேரோட நிம்மதியை காப்பாத்தி இருக்கேடா...'

இத்தனை நாட்கள் பாரமாக கிடந்த மனம் இலவம் பஞ்சாக மாறிவிட்ட ஒரு உணர்வில் இமைகள் தாழ புன்னகைத்தாள் அஹல்யா.

'உன்னை நான் அவ்வளவு திட்டி இருக்கேன் அதுக்கப்புறமும் நீ... இவ்வளவு தூரம்... நீ அத்தனை எஸ்.எம்.எஸ் அனுப்பி இருக்கே... முதலிலேயே நான் அதெல்லாம் பார்த்திருந்தா இன்னும் கொஞ்சம் முன்னாடியே சுதாரிச்சிருந்திருக்கலாம்.. தப்பு என்னோடதுதான்டா...' ஒரு ஆழமான மூச்செடுத்தான் சஞ்சா.

'நீ பேசினவுடனேயே அவங்க எல்லாரும் கலைஞ்சு போனதுமே புரிஞ்சது இது யார் வேலைன்னு... உனக்கு இதெல்லாம் எப்படி தெரிஞ்சது அஹல்யா???'

'அவங்க பேசிட்டு இருந்ததை கேட்டேன் சஞ்சா' என்றாள் அஹல்யா. 'அந்த குழந்தை யாருன்னு எனக்கும் தெரியலை சஞ்சா. ஆனா அந்த குழந்தை ரிஷியோடது அப்படின்னு நிரூபிக்க அவங்ககிட்டே ஏதோ ஒரு போட்டோ இருக்கு சஞ்சா. அவன் வந்து பேசுவான், பேசலைன்னாலும் அந்த ஆதாரத்தை எல்லார் முன்னாடியும் தூக்கி போட்டு அவனை தலை குனிய வைக்கணும். சஞ்சீவுக்கு எல்லா உண்மையும் தெரியும் ஆனா அவன் கண்டிப்பா எல்லார் முன்னாடியும் அதையெல்லாம் சொல்ல மாட்டன்னு சொன்னங்க சஞ்சா.' சொல்லிவிட்டு நிறுத்தினாள் அஹல்யா. பின்னர் மெதுவான குரலில் அவன் முகம் ஆராய்ந்த படியே கேட்டாள் அவள் 'இந்த குழந்தை யாரோடது சஞ்சா.?

'ம்? அதுவா? அது .... அது அப்புறமா இன்னொரு நாள் சொல்றேனே...' வெகு நாசூக்காக மறுத்தான் சஞ்சா. நண்பனின் இரகசியத்தை யாரிடமும் திறக்கும் எண்ணமில்லை அவனுக்கு. 'ஆமாம் அந்த வாடஸ் ஆப்..'' அவன் எதோ சொல்ல வர  சரியாய் அந்த நொடியில் சட்டென உள்ளே நுழைந்தார் அஹல்யாவின் அம்மா.

You might also like - Rojavai thalattum thendral... A breezy romantic story 

வழக்கமான நலம் விசாரிப்புகளுக்கு பிறகு அவர்களை பேசிக்கொண்டு இருக்க சொல்லி விட்டு அங்கிருந்து அகன்றான் சஞ்சா. ஆனால் அம்மாவின் முகத்தில் தொற்றி இருந்த ஏதோ ஒரு பதற்றத்தையும் அவரை அழைத்து வர தான் அனுப்பிய டிரைவர் திரும்பி வராததையும் அந்த டிரைவரின் இடத்தில் உள்ளே வந்திருக்கும் வேறொரு நபரை பற்றியும் அறிந்திருக்க வில்லை சஞ்சா.

அதே நேரத்தில் அங்கே ஒரு கையில் சாப்பாடு தட்டும் ஒரு கையில் குழந்தையுமாக அந்த மண்டபத்தின் தோட்டத்தில் நின்றிருந்தான் ரிஷி. அவன் செய்கைகளை ரசித்தபடி கைக்கெட்டும் தூரத்தில் அருந்ததி.

'இப்படி உட்காருவோமாடா? சொல்லிக்கொண்டே அங்கே இருந்த ஒரு வட்ட மேஜையின் அருகில் சென்று அமர்ந்து குழந்தையையும் அமர வைத்தான் ரிஷி. அவர்கள் அருகில் வந்து அங்கே இருந்த இன்னொரு நாற்காலியில் அமர்ந்தாள் அருந்ததி.

'இவளுக்கு என்ன வேலை இங்கே?' என்பதைப்போல் ஒரு குறுகுறுபார்வை அவனிடம். அவள் பார்வையோ குழந்தையின் மீதே. அதன் கூர்மையான நாசியும், துறுதுறுவென சுற்றும் சின்ன கண்களும் ரிஷியை நினைவு படுத்துவது போலே தோன்றியது அவளுக்கு. தட்டில் இருந்த சப்பாத்தியை எடுத்து குழந்தைக்கு ஊட்ட முயன்றான் ரிஷி. மெல்ல திரும்பி அவன் முகம் பார்த்தாள் தீக்ஷா

'அப்பா அங்கிள்...' அது மெல்ல அழைத்த விதத்தில் பட்டென சிரித்தே விட்டனர் கணவனும் மனைவியும். இவர்கள் ஏன் சிரிக்கிறார்கள் என்று இருவரையும் மாறி மாறி பார்த்தது குழந்தை. பின்னர் மறுபடியும்

'அப்பா அங்கிள்... நானே சாப்பிடுவேன்' என்றது அது.

'அப்படியா... அவ்வளவு குட் கேர்ளா நீ? எங்கே சாப்பிடு பார்ப்போம்....'

அது சாப்பிட ஆரம்பிக்க கொஞ்சம் திடுக்கென்றது ரிஷிக்கும் அருந்ததிக்கும். உணவை இடக்கையால் எடுத்து சாப்பிட ஆரம்பித்திருந்தாள் தீக்ஷா. அவள் சாப்பிடுவதை பார்க்கும் போதே அவள் இடக்கை பழக்கம் உடைய குழந்தை என்பது நன்றாக தெரிந்தது. ரிஷியும் இடக்கை பழக்கம் உடையவனே. இருவரும் குழந்தையையே பார்த்திருக்க அதன் ஒன்றிரண்டு செய்கைகள் ரிஷியை அப்படியே ஞாபக படுத்துவது போலே இருந்தது. ரிஷியின் முகத்தில் வியப்பும், சுவாரசியமும் கூடிப்போயிருந்தது. திகைப்பின் உச்சியில் இருந்தாள் அருந்ததி.

அருந்ததியின் முகம் படித்தவன் சின்ன புன்னகையுடன் 'அட இது எப்படிடா பட்டு செல்லம். நீங்க அப்படியே என்னை மாதிரியே இருக்கீங்களே? அப்பா பொண்ணா நீங்க?'  என்றான் அவள் முகத்தை விட்டு தனது பார்வையை விலக்காமல். பார்வையை திருப்பிக்கொண்டாள் அருந்ததி. விடவில்லை அவன்.

'பதில் சொல்லுடா பாப்பா அப்பா பொண்ணா நீ?'

என்ன புரிந்ததாம் அதற்கு? 'ஆமாம்....'  பெரிதாக தலை அசைத்தது குழந்தை.

'ஹே...' குழந்தையை பார்த்து கட்டை விரல் உயர்த்தி சிரித்தவன் 'நம்ம லிஸ்ட்லே நிறைய  பொண்ணுங்க இருக்காங்களே' என்றபடியே ஓரக்கண்ணால் அவளை பார்த்தபடியே விரல் விட்டு ஏதோ எண்ணினான் ரிஷி. 'ஏழெட்டு இருக்கும் போலிருக்கே? இதிலே நீ யார் பொண்ணுன்னு தெரியலையே...' என்று அவளுக்கு மட்டும்  குரலில் அவன் சொல்ல

'யோவ்... ' எழுந்தே விட்டாள் அருந்ததி. 'இங்கே என் ஒருத்தியை கரெக்ட் பண்ணி வசீ கூப்பிட வைக்க வழியக்காணோம். இதிலே உனக்கு ஏழெட்டு இருக்காக்கும்? இதை நாங்க நம்பணும்' 

இப்படி ஒரு அதிரடியை அவளிடமிருந்து எதிர் பார்க்காதவனாக யாராவது பார்கிறார்களா என்று ஒரு முறை சுற்றும்முற்றும் பார்த்துக்கொண்டான் ரிஷி. அவன் திகைப்பை ரசித்தபடியே பார்வையை ஒரு சுழற்று சுழற்றி விட்டு அமர்ந்துகொண்டாள் அருந்ததி.

'அது எப்படி அது? 'இந்த உலகமே இதுதான் உண்மைன்னு சொன்னாலும் நான் நம்ப மாட்டேன். எனக்கு என் சஞ்சாவை தெரியும்' அப்படின்னு சஞ்சா கிட்டே சொன்னே இல்ல அதேதான் எனக்கும். இந்த உலகமே இதுதான் உண்மைன்னு சொன்னாலும் நான் நம்ப மாட்டேன். எனக்கு என் ரிஷியை தெரியும். நீ நடத்து மாமா. நீ என்ன பண்ணாலும். நான் உன்னை சந்தேக படமாட்டேன்' அவன் முகம் பார்த்து சொல்லிவிட்டு அங்கிருந்து எழுந்து விறுவிறுவென நடந்தாள் அருந்ததி. சின்ன புன்னகையுடன் கண்ணிலிருந்து மறையும் வரை அவளையே பார்த்திருந்தான் ரிஷி.

ண்டபத்தின் உள்ளே வந்து அந்த அறையின் வாசலுக்கு வந்த அருந்ததி  உள்ளிருந்து அவள் செவிகளில் விழுந்த வார்த்தைகளில் அப்படியே நின்று விட்டிருந்தாள்.

உள்ளிருந்து வைதேகியின் குரல் கேட்டுக்கொண்டிருந்தது. 'நான் சொல்ல மாட்டேன் அவன்கிட்டே... என் வாயாலே சொல்ல மாட்டேன்... என் பையன்.... என் உயிர் அவன்......  நானே எப்படி அவன்கிட்டே போய் ........................................................................... சொல்லுவேன்? துவண்டு போயிடுவான் அவன். மாட்டேன். கண்டிப்பாமாட்டேன்....' கணவனிடம் புலம்பிக்கொண்டிருந்தார் அவர். அவர் சொல்லிகொண்டிருந்த உண்மைகள் அருந்ததியின் இதயத்தை கிழித்துக்கொண்டு கத்தி முனையாய் உள்ளிறங்கிக்கொண்டிருந்து. தீக்ஷா யாரென்ற கேள்விக்கான விடை கிடைத்திருந்தது.

'வைதேகி ஏன் இப்படி புலம்பறே? உன்னை நான் இப்படி பார்த்ததே இல்லை. என்னைக்காவது ஒரு நாள் அவனுக்கு உண்மைகள் தெரிஞ்சுதானே ஆகணும் சொல்லிடலாம் வைதேகி. சொல்லபோனா அந்த பொண்ணு அருந்ததிக்கும் நமக்கு தெரிஞ்ச இந்த உண்மைகள் தெரிஞ்சுதான் ஆகணும். சொல்லிடலாம். நாமே சொல்லிடலாம்' சொன்னார் ராமன்.

'ப்ளீஸ் ... இப்போ வேண்டாம். அதான் சஞ்சா எல்லாத்தையும் பார்த்துக்கறேன்னு சொல்லி இருக்கானில்லையா? அவனே பார்த்துக்கட்டும். அவன் சரியா செய்வான்..' ஒரு தாயின் பதைபதைப்பை நன்றாக உணர்ந்துக்கொள்ள முடிந்தது அருந்ததியால்.

ஒரு முறை ரிஷியின் முகம் கண் முன்னே வந்து போனது. பல நாட்களுக்கு பிறகு கட்டுப்படுத்திக்கொள்ளவே முடியாமல் கண்களில் நீர் கட்டிக்கொண்டது அவளுக்கு. இமைகளை தாண்டி கன்னம் தொட்ட நீரை துடைத்துக்கொண்டாள் அருந்ததி. கீழுதட்டை மடித்து கடித்து உணர்சிகளை கஷ்டபட்டு அடக்கினாள் அவள்.

சில நொடிகளில்  ஒருவாறாக தன்னை  சகஜ நிலைக்கு தள்ளிக்கொண்டு பாதி திறந்திருந்த அந்த அறையின் கதவை மெல்ல தட்டினாள் அருந்ததி.  பேச்சுக்குரல் சட்டென நிற்க மறுபடியும் முகத்தை துடைத்துக்கொண்டு எதுவுமே நடக்காதது போல் அறைக்குள் புன்னகையுடன் நுழைந்தாள் அருந்ததி.

வீட்டிலே எல்லாருக்கும் உடம்பு சரியில்லை, அண்ட் பையனுக்கு எக்ஸாம் டைம் என்பதால் இந்த வாரம் ரொம்ப ஷார்ட் அப்டேட். இதுக்கு மேல் கான்சன்ட்ரேட் செய்ய முடியலை. அடுத்த வாரம் கொஞ்சம் பெரிய அப்டேட் கொடுக்கிறேன். திட்டாம அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க ஃபிரண்ட்ஸ். தாங்க்ஸ் எ லாட்..

Episode # 11

Episode # 13

மழைச்சாரல் தொடரும்......

{kunena_discuss:886}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.