(Reading time: 29 - 57 minutes)

வளுக்கு இருக்கிற அக்கறை கூட அந்த முகுந்த்க்கு இல்லை! ஆக்ச்சுவலா அவனை தான் திட்டணும்! இந்த சசி மனசுக்குள்ளே என்ன கருவுனாளோ எனக்கு திட்டு விழுகுதே.. ’, என்று உள்ளுக்குள் புழுங்கியவன் அவள் அடுத்து சொன்னதை கேட்டு  திடுக்கிட்டு போனான்..

“ப்ச்... ஹர்ஷ் ஃப்ரண்ட்டா இருந்துகிட்டு இந்த கர்டசி கூட இல்லாம இருக்கீங்க”, என்று சொல்லி விட்டு கதவை நோக்கி எட்டு வைக்க போனவளை தடுப்பது போல எதிரில் வந்து நின்றவனின் முகத்தில் கோபம் தாண்டவமாடியது!

“என்னது??? ஹர்ஷ் என் ஃப்ரண்ட்டா????”, என்று காட்டமாக இவன் கேட்கவும்..

மிரண்டு விழித்தாள் இவள்.. ஹர்ஷ் மூலம் இவளுக்கு அறிமுகம் ஆனவர்கள் எல்லாம் அவன் நண்பர்கள் தான்..

“அவனோட கசின்னு யார்கிட்டயும் சொல்லாதேன்னு சொன்னேனே! அதையும் மீறி அவன் சொல்லியிருக்கானா.. நீங்க அவன் ஃப்ரண்ட்டா தான் இருக்க முடியும்!”, என்று இவள் லாஜிக் பேச....

“அது....வந்து...”, என்று அவளிடம் விளக்கம் கொடுக்க நினைத்தவன்.. பின் என்ன நினைத்தோனோ...

“ஓகே! இப்போ என்கிட்ட சொன்னது போல ஆபிஸ்ல யார்கிட்டயாவது உளறி வைக்காதே! அப்புறம் ஹர்ஷ்ஷிற்கு  தேவையில்லாத தலை வலியாகிடும்!”, என்று விரலை ஆட்டி பத்திரம் காட்டி மிரட்டும் தொனியில் எச்சரித்தவன்

அவன் பேச்சில் இருந்த தீவிரம் அஞ்சனாவை பதற வைத்தது.

“ஹர்ஷ்க்கு பிரச்சனை வருமா?”, நம்ப முடியாமல் இவள் கேட்க..

“இப்போ தான் ஷேர்ஸ் ஹர்ஷ் கைக்கு மாறியிருக்கு. இந்த நேரத்தில்..  எங்க ரிலேஷன்ஷிப்”, என்று சொல்ல ஆரம்பித்தவனை இடைமறித்தாள் அஞ்சனா..

தனது கம்பெனியை விற்கும் பொழுது ஹர்ஷ் எத்தனை புலம்பினான். மேக்ஸ் சாஃப்ட் பங்குகளை வாங்கிய பின்பு தான் அவன் நிம்மதி மீண்டுள்ளது..  

‘அந்த சந்தோஷத்தை கெடுப்பேனா?’ என்று  ஹர்ஷவர்தனுக்காக உள்ளம் அலைப்புற, ஆர்யமனிடம்,

“ஹய்யோ... ஹர்ஷ்க்கு ப்ராப்ளம் வரும்ன்னா  நான் எதுவும் சொல்லவே மாட்டேன்! அஞ்சனா மேல சத்தியம்”, பயமும், கவலையும் ஒரு சேர கையை தலை மீது வைத்து சத்தியம் செய்ய திகைத்தான் இவன்..

‘என்ன பெண் இவள்? என்ன ஏதென்று கூட விசாரிக்கும் ஆர்வம் கூட இல்லை. அவனுக்கு பிரச்சனை என்றால், சட்டென்று முகம் வாடி சத்தியம் செய்கிறாள்! ஹர்ஷின் மீது பாசமா.. இல்லை காதலா..’, என்னவென்று தெரியவில்லை இவனுக்கு.. ஆனால் அவள் வைத்திருந்த அன்பு இவனை மலைக்க வைத்தது..

“இதென்ன சத்தியம் செய்ற பழக்கம்! கையை எடு”, என்று கோபமாக கடிந்தவன்..

“லுக்... ஹர்ஷ் என்னோட ஃப்ரண்ட் - இன் ட்ர்ம்ஸ் ஆஃப் பிஸ்னஸ்! அவ்வளோ தான்! பெர்சனலா எந்த சம்மந்தமும் இல்லை!”, என்று அழுத்தமாக சொன்ன விதத்தில் ‘எட்ட நில்’, என்ற செய்தியும் சேர்ந்து இருந்தது.. 

‘இவனுக்கும் ராகு போல சத்தியம் செய்தா பிடிக்காது போல!’, என்று ராகவனைப் போல.. தன் மீது அக்கறை கொண்டவன் என்ற செய்தியை ஆழமாக பதித்தவளுக்கு அவன் சொல்ல நினைத்த செய்தி எட்டாமல் போனது.

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது.. கதவு தட்டப்பட, அங்கே நின்றது சசி. இவனுக்கு ஒரு நிமிடம் திக்கென்று இருந்தது. தான் அஞ்சனாவிடம் பேசியது கேட்டு இருக்குமோவென்று...

அந்த எண்ணம் தோன்றியதுமே ஆராய்ச்சியை ஓட்டியது அவன் பார்வை.. சசி முகத்தில் ஒரு வித வெறுப்பு தெரிந்ததே அன்றி எந்த வித அதிர்ச்சியும் இல்லை.

இப்பொழுது அஞ்சனா சசியிடம் ஏதுவும் சொல்லி விடுவாளோ என்று அடுத்த பயம் உருவாக...

சசியிடம்  இருந்து பார்வையை இவள் பக்கம் திருப்பியவன் மீண்டும்,

“சொன்னது நினைவு இருக்குல்ல..”, கேட்டதும் அவன் சந்தேகத்தை புரிந்தவளாக,

“சொல்ல மாட்டேன்.. அஞ்சனா மேல....”, இவள் கை தானாக தன் தலை மீது சத்தியம் செய்ய செல்ல..

“யேய்...”, என்ற அதட்டலுடன் அதை செய்யவிடாமல் இவன் கை தானாக அவள்  கரத்தைப்  பற்றி தடுத்தது...

அவளின் மென் கரம் என்ன உணர்த்தியதோ... சட்டென்று தன் கையை விலக்க..

அவளின் கால்களோ அதற்கு மேல் அங்கே நிற்காமல் சசியை நோக்கி ஓட்டம் பிடிக்க... அந்த வேகத்திற்கு இணையாக...

“லஞ்ச் முடிச்சிட்டு இங்கேயே வந்திடு”, என்ற இவன் கட்டளையும் போட்டி போட்டு பயணித்தது..

சொன்ன பின் தான் உணர்ந்தான் அவளை  ஒருமையில்  அழைத்திருப்பதை...

இவன் கட்டளைக்கு திரும்பி பார்க்காமலே தலை அசைத்து வெளியேறி... சசியின் கையை பிடித்து இழுக்காத குறையாக அழைத்துக் கொண்டு ஓடியவளை  கண்களால் தொடர்ந்தவன் சிறு முறுவலுடன்,

‘கிட்டிஷ்ஷா பிகேவ் செய்தா மரியாதை கொடுக்க எப்படி தோணும்!’, என்று எண்ணிக் கொண்டான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.