(Reading time: 29 - 57 minutes)

மிழ் பாட்டை பாடச் சொல்லவும்,  சற்றே யோசித்த அஞ்சனா,

“தமிழ் பாட்டு.. ஆரம்பம் மட்டும் தான் தெரியும்! முழு லிரிக்ஸ் தெரியாதே...”, என்று அஞ்சனா சொல்ல...

“நோ பிக் டீல்! யூட்யூப் ல Karoke போட்டு பாடலாமே”, என்று இவன் சொன்னதும்..

“அதானே! டக்குன்னு ஸ்ட்ரைக் ஆகலை”, என்று சொல்லிக் கொண்டே தனது அலைபேசியை எடுக்க போனவளுக்கு அப்பொழுது தான் அது உயிரற்று போனது தெரிய...

“அய்யோ.. சார்ஜ் டவுன்..”, என்றவளுக்கு

இப்பொழுது தான் பவதாரிணியிடம் பேசாதது  நினைவு வந்தது.. எப்படி வரும்.. கேம்ஸ் விளையாண்டால் உலகமே மறந்து போய் விடுமே அவளுக்கு!!!

‘பேசவே இல்லையே... பாவா கண்டிப்பா ஃபீல் பண்ணியிருப்பாங்களே... செல்ஃபிஷ்ஷா இருந்துட்டியே அஞ்சனா!!!’, குற்ற உணர்வா.. இத்தனை நேர பிரிவா.. ஏதோ ஒன்றை பெரிதாக அவளைத் தாக்க..

“ஆர்யா உங்க ஃபோன் தாங்க.. ஒரு கால் செய்துட்டு வந்துடுறேன்..”, என்றவளது குரலும், முகமுமே அவள் கவலையை காட்டி விட...

“சரி! உன் ஃபோனையும் கொடுத்திட்டு போ”, என்று அவள் அலைபேசியை வாங்கிக் கொண்டவன்.. அது ஏன் என்று கூட கேட்கத் தோன்றாமல் நின்றவளிடம் தனது அலைபேசியை கொடுக்க...

கையில் வாங்கிக் கொண்டவள் வேக வேகமாக பவதாரிணி எண்ணை டயல் செய்த படியே காரிடர் நோக்கி நடக்க...

இவன் சுகுமாரைப் பார்த்து, “இதுக்கு சார்ஜர் எதுவும்...”, என்று இவன் ஆரம்பிக்கும் பொழுது...

“கொடுங்க தல! நான் பார்த்துக்கிறேன்.. அவங்களை சீக்கிரமா வரச் சொல்லுங்க!”, என்று அதை வாங்கி கொண்டு அங்கிருந்து சென்ற சமயம்....

பவதாரிணி அழைப்பை எடுத்ததும், “பாவா!!!! ஸாரி பாவா!!!”, சற்றே உணர்ச்சி வசப்பட்ட அஞ்சனாவின்  குரல் உயர....

கூட்டத்தின் நடுவில் இருந்தாலும் இவள் கணீர் குரல் ஆர்யமன் காது வர விழ.. அனிச்சையாக இவன் பார்வை காரிடருக்கு சென்று... அவள் மீது பதிந்தது..

எதிர் முனையில் பேசும் அந்த ‘பாவா’, ஏதோ சமாதான படுத்தி கொண்டு இருக்க வேண்டும் - “ம்ம்ம்”, கொட்டுவதை போன்ற அவள்  தலையசைப்புகள்... ஒவ்வொரு தலையசைப்புக்கும் நடுவே கொஞ்சம் கொஞ்சமாக இவள் முகம் இயல்பு நிலை வந்து கொண்டிருப்பதை பார்த்து..

‘வெரி எக்ப்ர்ஸ்ஸிவ்!!! பாவா ரொம்ப நெருக்கமானவர் போல’, என்று தனது ஆராய்ச்சிக்கு  தீசிஸ் ரிப்போர்ட் எழுதி கொண்டிருந்த சமயம்..

“ஹே ஆர்சி”, என்றழைத்த படி அவன் தோளில் தட்டினான் - அந்த நிறுவன ஹச். ஆர். முதன்மை பொறுப்பில் வகிக்கும் அவன் பள்ளி நண்பன் தினேஷ்! 

பொதுவாக தன் பெயரை சுருக்கி கூப்பிடுவது ஆர்யமனுக்கு பிடிக்காது. ஆனால், ஆர்சி என்பது ஆர்யமன் சிவநேசன் என்பதன் சுருக்கம் - சிவநேசன்  மீதிருந்த மதிப்பால், பள்ளி நண்பர்கள் தன்னை அப்படி அழைப்பதை தடுக்கவில்லை!

தினேஷ் அழைக்கவும் அவன் பக்கம் திரும்பியவன்,

“ஹரே மேன்!!! கிளாஸ்மேட்டை சைட் அடிச்சா படிப்பு வராது... டீம் மேட்டை சைட் அடிச்சா வேலை ஆகாதுன்னு கொள்கையே பறக்க விட்டியா காத்துல? வந்த அன்னைக்கேவா...?”, வட இந்தியன் என்பதால், கொஞ்சம் ஜூனூன் தமிழில் பேச...

அவன் கேட்டதும் முதலில் திகைத்தவன் பின் அஞ்சனாவை வைத்து ஓட்டுகிறான் என்பது புரிபட...

‘அவள் மீதான ஆர்வத்தில் இல்லை - அவள் மனநிலையை புரிந்து கொள்ளும் நோக்கத்தில் தானே பார்த்தேன்!’ என்று தனக்குள் ஆதங்கப் பட்டவன், 

“ஹே... இப்பவும் அதே கொள்கை தான்! நான் ஒன்னும் அவளை பார்க்கலை.. என் போனை தான் பார்த்துகிட்டு இருந்தேன்”, என்று சீறினான் இவன்.

“அச்சா.. அச்சா”, என்று சிரிப்பை கட்டுப்படுத்த முயன்ற தினேஷ்.

“அஞ்சனா ஜோவியலான பொண்ணா தெரியுது! உனக்கு இனி நல்லா பொழுது போகும்”, என்றான் அவன் சிரிப்பினோடே  - ஹச். ஆர் சார்ப்பாக தினேஷ் தான் அன்று காலை அவளை இண்டர்வ்யூ செய்திருந்ததால் இப்படி சொன்னான்!

“தலை வலி தனக்கு வந்தா தான் தெரியும்!”, அலுப்புடன் சொன்னவனுக்கு, தினேஷ் ஓட்டுவது சுத்தமாக பிடிக்கவில்லை.

வேறு பேச்சிற்கு மாற வேண்டும் என்று இவன் நினைத்ததை தினேஷே செய்து விட்டான் - காரணம் முகுந்த்..

“ஆர்சி, உதர் தேக்கோ..”, என்று பார்வையால் சுட்ட.. அங்கே முகுந்த் இவர்கள் இருவரையும் தான் எரிப்பது போல பார்த்துக் கொண்டிருந்தான். ஆர்யமன் பார்வை முகுந்த் மீது விழவும், அருகிலிருந்த சசியிடம் ஏதோ சொல்வது போல பார்வையை விலக்கிக் கொண்டான் அவன்...

“முகுந்த்க்கு லிப் சிங்க் செய் பார்க்கலாம்”, என்று தினேஷ் கேட்க, ஆர்யமனும்.   முகுந்தின் வாயசைவிற்கு ஏற்ப,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.