(Reading time: 29 - 57 minutes)

விளையாட்டிற்குள் மூழ்கிப் போய் இருந்த அஞ்சனாவின் காதிலிருந்த ஹெட்போனை ஒரு கரம் வந்து தட்டி விட...

நிமிர்ந்தவளின் முன்னே சசி!

“அஞ்சு, எத்தனை தடவை கதவை தட்டினேன்.. அது கூட தெரியாம என்ன செய்துகிட்டு இருக்கே?”, என்றவளது கவனம் இப்பொழுது தான் அந்த கணினி திரையில் பதிந்தது...

“ஹே... கேம் விளையாடிகிட்டு இருக்கே? அதுவும் கேமிங் லேப்டாப் வைச்சு! யாராவது பார்த்தா என்ன ஆவது? உனக்கு தைரியம் ஜாஸ்தி தான் ”, இவள் பதட்டத்துடன் சொல்ல..

“கூல் சசி!!! என் ஃப்ரண்ட் தான் என்னை விளையாட சொல்லிட்டு லேப்டாப் கொடுத்திட்டு போனார்!”, என்றாள்..

“ஆர்யமனே விளையாட சொன்னாரா?”, என்று கேட்ட சசியால் அதை நம்பவே முடியவில்லை...

‘தன்னிடம் அத்தனை கடுமை காட்டியவன் இவளிடம் இறங்கி போகிறான்.. அதுவும் கேம் விளையாட விட்டுருக்கிறான்.’, என்ற எண்ணம் சசி மனதில் வர,

‘யாருக்கும் இவ்வளோ சுதந்திரம் கொடுக்க மாட்டானே அவன்’, என்ற யோசனை வந்த அடுத்த விநாடியே...

‘ஆர்யமனோட ஒவ்வொரு மூவ்வும் ஏதோ காரியம் சாதிக்க தான் இருக்கும்’, முகுந்த் அவனைப் பற்றி சொன்னது சசியின் மனதில் வந்து போனது.

“ம்ம்.. ஆமா ஆர்யா தான்.. இந்த லேப்டாப்பை விளையாட கொடுத்தார்...”

“நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதே! உன்னோட ஃப்ரண்ட்டின் இன்னொரு முகம் உனக்கு தெரியாது! கன்னிங் பெர்சினாலிட்டி! மறுபடியும் சொல்றேன். அவன்கிட்ட கவனமா இரு!”,

என்று அவள் எச்சரித்த பொழுது,

கதவை தட்டும் சத்தம் கேட்டு இருவரும் திரும்ப, கதவை திறந்த  ஆர்யமனின் பார்வை சசி மீது பதிந்தது...

‘இங்கே என்ன வேலை உனக்கு?’, என்ற குற்றம் சாட்டும் கேள்வியைத் தாங்கியது அந்த பார்வை!

அதே சமயம்.. சசி கொதிக்க....

“ஆபிஸ் டைம் முடிஞ்சிடுச்சு அஞ்சு!”, என்றாள் இவள் அஞ்சனாவிடம்.. அந்த செய்தி என்னவோ தனக்கு தான் என்று புரிந்து கொண்டவனாக,

“அவங்க ரிவ்யூ முடிஞ்சதும் வருவாங்க!”, என்றவன் கதவை பிடித்துக் கொண்டு  நின்றதே சசியை,

‘வெளியே போ..’, என்று சொல்லாமல் சொல்லியது. அதை அவமானமாக உணர்ந்த சசி,

“இதுக்கு கெட் அவுட்ன்னே சொல்லி இருக்கலாம்!!!”, என்று  மனதில் உள்ள குமறலை வெளிப்படையாக கொட்ட...

ஒன்றும் சொல்லாது... அமைதியாக நின்றவன் உதட்டிற்குள் சிரித்தான்.

இவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்த அஞ்சனாவிற்கு நடப்பதை கிரகிக்க சற்றே சிரமமாக இருந்தது.

‘ஆர்யா கெட் அவுட் சொல்லவே இல்லை! இவ ஏன் இப்படி சொல்றா... இவனாவது அப்படி இல்லைன்னு வாயைத் திறந்து சொல்லலாம்ல ‘, என்று ஆதங்க பட்டவள்...

சசி சென்றதும், உள்ளே வந்தவனிடம்,

“அல்ரெடி சசி உங்களை தப்பா நினைக்கிறா.. நீங்க கெட் அவுட்ன்னு எல்லாம் சொல்லலைன்னு எனக்கு புரியது... பட், சசி அப்படி நினைக்கிறப்போ.. கன்வின்ஸ்ஸிங்கா பேசியிருக்கலாமே! சும்மா பாத் எடுக்கிற buffalo மாதிரி நின்னுகிட்டு இருக்கிறீங்க!”,

என்று இவள் ஆரம்பிக்க.. ‘பாத் எடுக்கிற buffaloவா!’ டென்ஷனானவனை அடங்கு அடங்கு என்று அடக்கிய மூளை...

‘இந்த புள்ள பூச்சியை கண்டுக்காதே.. இப்போ சசி நம்மளை பத்தி என்ன சொல்லி வைச்சிருக்கான்னு இவள் வாயை வாலண்டியரா வாசிக்க வைக்கணும்..’, என்றது..

“லுக்!!! சசிக்கு என் மேல நல்ல மரியாதை இருக்கு! அவங்க விளையாட்டா சொன்னதை ஊதி ஊதி பெருசாக்கி நீயா ஏதாவது ஃப்ரேம்  பண்ணாதே!”, என்றான் எதிர்பதமாக...

“ஹய்யோ... நானா!!! ஃப்ரேம் பண்றேன்னா.. இல்லவே இல்லை... நிஜமாவே சசியே  அவ வாயாலே உங்களை  கன்னிங் பெர்சனாலிட்டின்னு சொன்னா... இது அஞ்சனா மேல சத்தி...”, என்று சத்தியம் செய்ய போனவள்...

பின் நினைவு வந்தவளாய் இவன் முகத்தைப் பார்க்க.. இவன் முகத்தில்  இருந்த கடுமையைப் பார்த்ததும்... அப்படியே நிறுத்திக் கொண்டாள்..

“ஸாரி.. ஸாரி..ஸாரி....”, வேக வேகமாக சொல்லி விட்டு...

“சத்தியம் செய்தா பிடிக்காதுல்ல”, என்றவள்...

“ஆனா, சசி சொன்னதை எப்படி நம்ப வைக்கிறதாம்...”, என்று முழிக்க...

“நீ ஏதாவது சொல்லாமலா அவங்க அப்படி சொல்லியிருப்பாங்க”, என்றான் இவன்..

“நானா???? நான் சும்மா கேம் விளையாண்டுகிட்டு இருந்தேனா...”, என்று ஆரம்பித்தவள்...

சசி அறைக்குள் நுழைந்தது முதல் அங்கிருந்து சென்றது வரை அடிபிறழாமல்

ஒப்பிக்க....

‘சும்மாவே கொதிச்சு போய் இருக்கும் எண்ணச்சட்டி. இப்படி கேம் விளையாட சொன்னேன்னு பத்த வைச்சிட்டியே காஞ்சனா!!!!’

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.