(Reading time: 29 - 57 minutes)

ந்த ஆர்யமன் தினேஷ்ஷை கைக்குள்ளே போட்டு எல்லா நல்லா ரிசோர்ஸ்சையும் அள்ளிட்டு போயிடுறான்... அதைக் கூட பொறுத்துக்குவேன் சசி. ஆனா, உன்னையும்...”, என்று ஆர்யமன் சிரிக்காமல் சொல்லிக் காட்ட..

தினேஷ் சிரித்துக் கொண்டே, “நிஜமாவே அப்படி தான் சொல்லியிருப்பானா?”

“காமெடி வெர்ஷன்னா இந்த ஆர்யமன் சுகுமாரை கைக்குள்ளே போட்டு நல்லா சிப்ஸ்சையும் அள்ளிட்டு போயிடுறான்.. அதைக் கூட பொறுத்துக்குவேன் சசி. ஆனா, உனக்கு வைச்சதையும்..”, என்று சொல்லிக் காட்ட... அப்பொழுது பார்த்து,

“தல.. ஸ்னாக்ஸ் காலியாகிடும் போல... இந்தா பிடிங்க”, என்று அவன் கையில் சிப்ஸ் பாக்கெட்டை சுகுமார் கொடுத்து விட்டு செல்ல... இருவரும் சிரித்தனர்.

“சீக்கிரமா அவன் டீம்க்கு நல்ல ஆளுங்களா எடுத்து அனுப்பி விடு. இல்லை என்னை கருவிகிட்டே தான் இருப்பான்..”, என்றான் ஆர்யமன்...

“ஹூம்.. என்னத்தை!! இதோட முப்பது பேரை ரிஜெக்ட் செய்துட்டு.. இப்போ தான் ஒருத்தன் இவன் எதிர்பார்ப்பு படியே அமைஞ்சான்!  ஆனா, கம்யூனிக்கேஷன் ஸ்கில் செம வீக்!  தினமும் கிளையன்ட்கிட்ட பேச வேண்டியிருக்குமேன்னு மனசே இல்லாம தான் ரிஜெக்ட் செய்தான்..”, என்று சொன்னான் அவன்.

“ஹ்ம்ம்... முகுந்த் சொல்றான்னா கண்டிப்பா நல்ல ஆளா தான் இருப்பான்! எங்க வொர்க் பண்றான்?”, என்று விசாரித்தான் ஆர்யமன்..

“ஏதோ ஸ்டார்ட் அப் கம்பெனியில் தான் இருக்கிறான்... சம்பளம் கம்மியாக தான் இருந்தது! நாமளும் ஒரு காலத்தில் கஷ்டபட்டவங்க என்றதாலோ என்னவோ.. அந்த பையனைப் பார்க்க பாவமா இருந்தது....”

இந்த வார்த்தைகள் ஆர்யமன் மனதை தைத்தது..

“ரெஸ்யூம்மை ஃபார்வேட் செய்! எங்க டீம்ல ஃபிட் ஆவானான்னு பார்க்கிறேன்!”, 

என்ற அவன் சொன்னதுமே, “மறந்தாலும் மறந்திடும்.. இப்பவே செய்துடுறேன்! ”, என்றவாறு தினேஷ் அலைபேசியில் மின்னஞ்சலை தட்டி விட..

அப்பொழுது ஆர்யமனுக்கு தனது அலைபேசி அஞ்சனாவிடம் இருப்பது நினைவுக்கு வந்து.. அவளை நோக்கி திரும்ப,

அவள், “ஸ்வீட் பாவா!!”, கொஞ்சும் குரலில் அலைபேசியில் பல முறை முத்தமிட...

‘இவ கொஞ்சுறதுக்கு என் ஃபோன் தான் கிடைத்ததா?’, என்ற  எண்ணம் தோன்றும் பொழுதே...

“இதுக்கு தான் உன் ஃபோன்னை பார்த்திட்டு இருந்தியா?”, என்றான்  தினேஷ் நக்கலாக கேட்டான்.

அஞ்சனா, எப்பொழுதும் போல பவதாரிணியிடம் பேசி முடிக்கும் பொழுது கொடுக்கும் முத்தங்களை வழங்கி விட்டு இணைப்பை துண்டித்து நிமிர... அவள் எதிரே ஆர்யமன்!

பவதாரிணியிடம் பேசி விட்டோம் என்று மனதை நிறைத்த மகிழ்ச்சியில் இருந்தவள்..

“தேங்க்ஸ் ஃபார் தி டைம்லி ஹல்ப்!”, என்று நன்றி பொங்க சொல்லிக் கொண்டே அவனது அலைபேசியைக் கொடுக்க...

இவனோ அதை வாங்கவில்லை..

“மத்தவங்க போன்ல இப்படி தான் செய்வியா? துடைச்சிட்டு கொடு”,

ஏதோ சாதாரணமாக பேசுவது போல முகத்தை வைத்துக் கொண்டு... பேச்சில் மட்டும் அத்தனை கடுமை காட்டினான்.

இவன் சொன்னதும், “என்னது... துடைக்கணுமா?”, முழிக்க...

‘இது கூடவா விளங்கலை!!!... சரியான லூசு’, என்று இவன் மனதுக்குள் திட்டியது அவளுக்கு கேட்டு விட்டதோ என்னவோ..

‘ரஸ்ட் மூளை.. கமான் கெட் அப் பேபி”, என்று அவள் நரம்பு  மண்டலம் சிக்னல் கொடுக்க... மனதிற்குள் மின்னல்!!!

“ஓ...யு மீன் இச்..... மார்க்ஸ்!!!!”, இவள் கேட்க...

இவன், ‘பரவாயில்லை நீ லூசு இல்லை.. அரை லூசு!!’, என்று இவன் மனது அவளுக்கு பதவி உயர்வு கொடுத்த சமயம்...

அவள், “டப்பா சாம்சங் போனுக்கு இவ்வளோ பந்தா விடுறீங்க...”, என்று அவன் அலைபேசியை இளக்காரமாக பார்க்க... அப்பொழுது திரையில் மிளிர்ந்த

“Resume of Bharanidharan”, என்ற மின்னஞ்சல் செய்தி இவள் கண் முன் பட்டது..

தொடரும்

Episode 07

Episode 09

{kunena_discuss:922}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.