(Reading time: 19 - 37 minutes)

'வ...சி...'  நின்றான் அவன். திரும்பவில்லை.

'அதான் வசின்னு கூப்பிட்டுட்டேன் இல்ல அப்புறம் ஏன் கோப படுறே?' திரும்பினான் அவன்.

'ப்ளீஸ் வசி...' அவள் கெஞ்சலாக பார்க்க மென்னகை ஓடியது அவன் இதழ்களில். அவன் கை நீட்டி வாவென அழைக்க அடுத்த நொடி அவள் அவன் கைகளுக்குள்ளே  சரணடைந்திருந்தாள் அருந்ததி.

'எதுக்குடா... செல்லம்... எதுக்கு அழறே இப்போ...' அதுதான் ஏனென்றே அவளுக்கும் புரியவில்லையே.!!!!!

'ஒண்ணுமில்லை.. போடா..' அவள் தேம்ப... அவன் கரம் அவள் முதுகை வருடிக்கொண்டே இருந்தது.

'சரிடா.. சரிடா...  ஒண்ணுமில்லைடா. எல்லாம் சரியாயிடுச்சு..'

சில நிமிடங்கள் கழித்து அவளை அள்ளிக்கொண்டு சென்று கட்டிலில் படுக்க வைத்தான் அவன். அவன் இதழ்கள் அவள் முகம் மொத்தமும் அளவெடுத்தன.

சில நிமடங்கள் இப்படியே கரைய  'தூங்குடா... கை சரியாகட்டும் அப்புறம் மத்தது எல்லாம்... சரியா' என்றான் அவன் கண் சிமிட்டிய படியே. சின்ன வெட்க சிரிப்புடன் அவனுக்குள் புதைந்தாள் அவள்.

'இந்த கட்டிலாவது உடையாம இருக்கணும். பக்கத்திலே குழந்தை வேறே தூங்குது' அவன் சொல்ல.... அவள் அழகாய் சிரிக்க.... அவன் அவளை இறுக்கிக்கொள்ள.... இது அவள் வாழ்வின் மிக அழகான பிறந்தநாள் என்றே தோன்றியது அவளுக்கு. இரவு முழுவதும் அவன் அணைப்பிலேயே உறக்கம். நிம்மதியின் எல்லையில் இருந்தனர் இருவரும்.

காலை அழகாக விடிந்திருக்க எழுந்தாள் அருந்ததி. இன்னமும் உறங்கிக்கொண்டிருந்தனர் அவனும் குழந்தையும். எழுந்து முகம் கழுவிக்கொண்டு வந்தவள்... நெற்றி பொட்டை தேடி திறந்தாள் அதை!!! தனது கைப்பையை!!! அப்போது கையில் தட்டுபட்டது அது!!! அந்த புகைப்படம்.!!!!

'என்னது இது???' என்றபடியே கையில் எடுத்தாள் அதை.

அதே நேரத்தில் அங்கே மயக்கத்தில் இருந்தார் ஜானகி. 'ரிஷி.. ரிஷி... என புலம்பிக்கொண்டிருந்தார் அவர்.' அவர் அருகில் நின்றிருந்தான் சஞ்சா.

'இவர் ஏன் இப்படி புலம்புகிறார்' நிஜமாகவே ஒன்றுமே புரியவில்லை சஞ்சாவுக்கு.

இப்போது தங்கையையும், மாப்பிளையையும் ஊருக்கு அனுப்பி விட்டு அவனும் கிளம்ப வேண்டும். என்ன செய்வது என சில நிமடங்கள் யோசித்தவன் தான் வரும் வரை அவர் ரிஷியுடன் இருப்பதே நல்லது என்ற முடிவுக்கு வந்திருந்தான்.

Episode # 16

Episode # 18

மழைச்சாரல் தொடரும்......

{kunena_discuss:886}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.