(Reading time: 14 - 28 minutes)

ன் ஆசையும் நிராசையா போனப்போ என்னால தாங்க முடியலை… அதனால வெறி பிடிச்சவளா மாறினேன்… ஆனா அந்த வெறி எல்லாம் எப்போ நீ அன்னைக்கு யாருக்கும் செய்யக்கூடாத காரியத்தை செஞ்சியோ அன்னைக்கே சிதறிடுச்சு பாட்டி… சிதறிடுச்சு…. இப்பவும் எனக்கு திமிரு இருக்கு… கர்வம் இருக்கு… அகம்பாவம் இருக்கு… ஆனா உன் மேல எனக்கு இருந்த கண் மூடித்தனமான பாசமும் இருக்கு… அது உனக்கு இப்பவும் புரியலைன்னா… நான்…” என பேச தடுமாறி பின், “வார்த்தைக்கு வார்த்தை உன்னை மரியாதை இல்லாம பேசியிருக்கேன்… அதுக்கு எல்லாம் சேர்த்து வச்சி தான பாட்டி, நீ எனக்கு கொடுத்த உரிமையை இல்லாம பண்ணிட்ட?... என்னை பழிவாங்கிட்டல்ல…” என ஆதங்கத்துடன் பேசியவற்றை கேட்டதும்

“விசித்திரா… இல்ல…. இல்ல…” என கதறினார் காவேரி…

“என் பேரை சொல்லக்கூட உனக்கு இத்தனை வருஷம் ஆகியிருக்குல்ல… அந்த அளவு நான் விரோதி ஆகிட்டேனா உனக்கு?... சொல்லு பாட்டி… நீ தூக்கி வளர்த்தவனை நான் குறை சொல்லுறேன்னு என்னை ஒதுக்கி வச்சியே… எல்லாரும் சேர்ந்து என்னை ஒதுக்கி வச்சீங்களே… அப்போ நான் யாரை போய் குறை சொல்ல?... சொல்லு… என்னை விட்டு ஒதுங்கி இருந்ததால உனக்கு மட்டும் என்ன கிடைச்சது?... கஷ்டமும் வலியும் தானே?... அதை உன்னால இல்லன்னு சொல்லமுடியுமா?...” என விசித்திரகன்யா அவரைப் பார்த்து கேட்டதும் காவேரி மளமளவென்று அழுதார்…

“தினம் தினம் மனசுக்குள்ள நான் அழுகுற அழுகை யாருக்கு கேட்குதோ இல்லையோ பாட்டி… உனக்கு கூட கேட்கலையா?...” என அவரின் முகம் பார்த்து கேட்ட கன்யா, அவர் முகம் மறைத்து அழுவதைப் பார்த்துவிட்டு,

“என்னதான் நான் உன்னை திட்டி பேசினாலும் அதெல்லாம் எனக்கு என் வாழ்க்கையில வந்த வெறுப்பினால மட்டுமே… எதுவுமே என் மனசில இருந்து நான் பேசலை… நான் பட்ட வலி, காயம் என்னை அப்படி பேச வச்சது… அதுக்கு என்னை மட்டுமே காரணமாக்கணும்னு நீங்க எல்லாரும் நினைச்சீங்கன்னா நான் அதை பெரிசா எடுத்துக்கப்போறது இல்ல… ஏன்னா இப்போ வரை என்னை மட்டும் தான நீங்க எல்லாரும் குறை சொல்லுறீங்க… யாரும் நான் ஏன் இப்படி நடந்துக்குறேன்னு யோசிச்சது கூட இல்லையே… நீ கூட என்னை புரிஞ்சிக்காம தான என் வாழ்க்கையில ஒருத்தனை கொண்டு வந்த… எவ்வளவோ நான் போராடியும் என்னால அதை தடுக்க முடியலையே… அந்த வேதனை தான் என்னை இப்போவரை நான் நானா இல்லாம இருக்க விடாம செஞ்சிட்டு… செஞ்சிட்டிருக்கு…. இப்போ கூட உன்னை வந்து பார்த்து பேசினது என்னோட இத்தனை வருஷ மனக்குமுறலை உங்கிட்ட சொல்லிட்டு, இப்படி என்னை இந்த கோலத்துல நிக்க வைக்குறதுக்கு தானா இந்த கல்யாணம் செஞ்சு வச்சன்னு கேட்டுட்டு போகத்தான் வந்தேன்… சந்தோஷப்பட்டுக்கோ நீ தூக்கி வளர்த்த பொண்ணுக்கு நீ இப்போ கொடுத்திருக்குற கோலத்தை பார்த்து பார்த்து…” என விழி நீர் வழிய சொன்னவள், வாசலுக்கு சென்றாள் வேகமாக…

தரையில் சட்டென்று அமர்ந்துவிட்ட காவேரியை வாசலில் நின்று பார்த்தவள், “விசித்திரகன்யான்னு பேரு வச்சதும் நீ தான்… என்னை இப்படி விசித்திரமா பலர் பார்க்குறதுக்கு காரணமும் நீ தான்…. இப்போ இப்படி ஒரு நிலைமையில நான் இருக்குறதுக்கும் காரணம் நீ தான்…” என்றவள், “நானும் ஒரு பொண்ணு தான் பாட்டி… எனக்கும் மனசு இருக்கு… எனக்கும் வலிக்கும்…” என சொல்லிவிட்டு அவரின் பதிலுக்கு கூட காத்திராது வேகமாக சென்றுவிட்டாள் அங்கிருந்து…

அவள் சென்றதும், “அம்மா… எழுந்திருங்கம்மா… எழுந்திருங்க…” என காவேரியின் அருகில் ஓடினாள் பவித்ரா…

“பவித்ரா…” என அவளைப் பார்த்து அவர் அழ,

“அம்மா… வேண்டாம்மா… ப்ளீஸ்… முதலில் எழுந்திருங்க…” என அவரை எழுப்ப முயற்சித்தாள் அவள்…

அவர் அசையாது இருக்கவே, அவள் பயந்து வெளியே ஓடினாள்… ஓடியவளின் எதிரே ருணதி வர, அவளிடம் விஷயத்தை சொன்னவள், ருணதியை பார்த்துக்க சொல்லிவிட்டு மீண்டும் வெளியே ஓடினாள்…

ஓடியவள் யார் மேலேயோ மோதி நிற்க, யார் என்று பார்த்தவள், எதிரே நிற்பது புதுமுகமாக தெரியவும் கண்களில் இருந்த கண்ணீருடன், முகத்தில் இருந்த பதட்டத்துடன், வேகமாக விலகினாள்….

“சாரிங்க…” என அவளின் எதிரே நின்றவன் சொல்ல,

அவள் அது எதையுமே காதில் வாங்கவில்லை… “மாணிக்கம் தாத்தா…” என கத்தினாள்…

“என்னம்மா…” என பதட்டத்துடன் ஓடிவந்த வாட்ச்மேன் மாணிக்கம் தாத்தாவிடம்,

“உடனே ஒரு ஆட்டோவை கூப்பிடுங்க… காவேரி அம்மாக்கு உடம்பு சரியில்ல… சீக்கிரம் தாத்தா…” என அவள் அவசரப்படுத்த,

“ஐயா… நீங்க ஆட்டோ கூப்பிட வேண்டாம்… என் வண்டியிலயே போயிடலாம்… வாங்க…” என்றான் அவன்…

“நீங்க யாரு சார்?...? என வினவினாள் பவித்ரா…

“நான்… “ என அவன் சொல்ல ஆரம்பித்த போது,

ருணதியின் குரல் உள்ளே இருந்து கேட்க, “நீங்க யாரு எவருன்னு தெரிஞ்சிக்கிற நிலைமையில நான் இல்ல சார்…” என்றவள், “தாத்தா… நீங்க போய் ஆட்டோவை கூப்பிடுங்க… இப்போ நீங்க போறீங்களா இல்ல நான் போகட்டுமா?...” என அவரிடம் கூற,

“இதோ போறேன்மா…” என்றபடி அவர் சென்றார்…

“காவேரி அம்மாவை பார்க்கத்தான் நான் வந்தேன்… வந்த இடத்துல அவங்களுக்கு முடியலைன்னு சொல்லுறீங்க… நான் உங்களுக்கு உதவி செய்யுறேன்னு தான சொல்லுறேன்… அதை ஏன் வேண்டாம்னு சொல்லுறீங்க…” என அவனும் கேள்வி கேட்க

“முன்ன பின்ன தெரியாதவங்க உதவி எங்களுக்கு தேவை இல்லை… முதலில் வழியை விடுங்க சார்…” என கலங்கிய குரலோடு பேசியவள், அங்கே அடுத்து வந்தவனை பார்த்ததும் அவனருகே சென்றாள்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.