(Reading time: 21 - 41 minutes)

னால் உள்ளே ஒரு படுக்கையில் இறக்குகிறான் இவளை என்று உணர்ந்த போது….. ஏதோ இவளுள் தடுக்க….எங்கோ ஒரு திறக்காத தாழ் ஒன்று இதயத்தில் இறுக்க….சட்டென இறங்கி நின்றாள்….

அவனோ அடுத்து வெகு இயல்பாய் அறையை சுற்றிப் பார்க்க….. அவசரமாய் நெற்றி சுருக்கி நகம் கடித்தவள் அடுத்து என்ன செய்ய என தெரியாமல் அவனை சலனமின்றி தொடர்ந்தாள்…..

அது மூன்று தளங்களை கொண்ட வீடு….ஒவ்வொரு தளத்திற்கும் நான்கு படுக்கை அறை என்பது போன்ற அமைப்பு…… 12 பெட் ரூம்…. அதாவது இவனது அம்மா இருக்கும் அந்த வீட்டைப் போலவே அமைப்பு…

“அப்பா நாம க்ரிகெட் டீம் ஆரம்பிக்கனும்னு நினச்சாங்க போல….” அவன் சொல்ல முதலில் ஒன்றும் புரியாமல் ஒரு கணம் விழித்தவள்

“ஒரு ரூம்க்கு ஒரு பேபி….நமக்கு ஒரு ரூம்…ஆக 12….” என அவன் விளக்கிய போது முறைத்தாள்….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

தேன்மொழியின் "தேன்'ன் விசாரணை கோப்புகள்..." - chillzeeயின் இன்ஸ்பெக்டர் தென்றல்வாணன் தோன்றும் துப்பறியும் நாவல்...

படிக்க தவறாதீர்கள்...

“ஹப்பா…. இப்டிலாம் முறைக்கலைனா இது என் மனுதானானு இருக்கு….” வார்த்தையில் வம்பிழுத்தாலும் வந்து இவள் வலக் கையோடு தன் இடக்கையை அவன் சுற்றிக் கொள்ள ஒரு வகை இளகிய மன நிலையிலேயே வீடு முழுவதையும் அவனோடு சென்று பார்த்தாள் இவள்….

நிச்சயம் ஏதாவது ஒரு அறை அவனுக்கு எல்லா வகையிலும் இவர்களுக்கு சரியானதாய் தோன்றும்தான்…….ஆனால் இவளிடம் அவன் எதையும் குறிப்பாக கூட சொல்லவில்லை…. எப்படி சொல்வான்? எதை சொன்னாலும் எப்டியும் இவ பாஞ்சு கடிச்சுறுவான்னு அவனுக்கு இன்நேரத்துக்கு புரிஞ்சிருக்குமே….

“எந்த ரூம் நல்லா இருக்கும் மனுப்பா…?” பொறுத்து பொறுத்துப் பார்த்துவிட்டு இவளே கேட்டாள்.

ஒரு கணம் இவள் கண்களை ஊடுருவியன் “பெட்ரூம்னா ஃபர்ஸ்ட் ஃப்ளோர் எனக்கு சரியா படும்….ஆனா உன் இஷ்டம்…..நீ எங்க இருந்தாலும் நானும் அங்க  சந்தோஷமா இருப்பேன்…. அதாவது திரும்பி வந்தபிறகு…”

சுருக் என்கிறது இவளுக்கு….இப்போ அவன் கூட இருக்றது இவளுக்குதான் பிடிக்கலைனு ஆகிட்டுதுல்ல? ஸ்விஸ் வரமாட்டேன்னு சொல்லிட்டாளே….அவனை விட்டுட்டு இங்க இருக்றது இவளுக்கு ரொம்ப நால்லா இருக்குன்னா நினைச்சுகிட்டு இருக்கான்?....

அவன் கிளம்பும் நேரம் நெருங்க நெருங்க ஏதோ முடிவில்லா முள் காட்டில் தலை கூட இல்லாமல்…..தரை பாவ கால்களும் இல்லாமல்….உடல் என்றோ உருவம் என்றோ ஏதும் இல்லாமல்…..அருவமாய்…..அடக்கி ஆள தனக்கு தானே இல்லாமல் போனது போல்…..கிழிபடுவதும்…..கொடும் கனவில் மாட்டிக் கொண்டு விழித்து எழ முடியாமல் தவிப்பது போலவும்தானே இருக்கிறாள்….

ஆனாலும் அவனோடு போகத்தான் ஏனோ சுயம் விடவில்லை…..

அடுத்து அவன் முகத்தை ஆயிரம் வகையில் ஆராய்ந்து இந்த ரூம் தான் அவன் ச்சாய்ஸா இருக்கும் என ஃபர்ஸ்ட் ஃப்ளோரில் ரெண்டாவது பெட்ரூமை இவள் செலக்ட் செய்ய…. அவளை அங்கே விட்டுவிட்டு அவன் கிளம்பினான்….

“திடீர்னு நீ இங்க தங்குறதுன்னு ப்ளான் செய்துட்டல்ல….அதனால போற வழியில கொஞ்சம் வேலை இருக்கு மனும்மா…. அதனால நான் அப்டியே ஏர்போர்ட் போய்டுவேன்…..பத்…..சந்தோஷமா இரு…… சீக்கிரம் வந்துடுறேன்….அடிக்கடி பேசுறேன்…..” அவன் இவள் கண் முன்னே இவளைப் பிரிந்து போக……

ஏதோ மொத்த வீடும் இவள் மீது ஏறி உட்கார்ந்திருப்பது போல்…..மூச்சு விடவே முடியாதது போல் எதற்குள்ளோ மாட்டிக் கொண்டது போல் இவள்…..

 கடவுளே மனுனு இல்ல யாருமே என்ன இந்த அளவு கஷ்டபடுத்னது இல்லையே…….நான் ஏன் என்னை இந்த பாடுபடுத்துறேன்….நொந்தாள் இவள்.

இம்மி அளவு கோபமோ குத்தலோ அவன் புறம் எதுவும் இல்லை….வெகு இயல்பாக இருந்தான்…. வேலை இருக்குன்னு போனது நிச்சயமா இவளோட பாதுகாப்பு ஏற்பாட இவ முடிவுக்கு தக்க மாத்தவாதான் இருக்கும்….. ஆனால் அதை மட்டுமல்ல பத்ரமா இருன்னு கூட அவன் சொல்லலை…. ஆனால் மத்தபடி ஏர்போர்ட் போகும் முன்…போன பின்…போர்டிங் டைமில் என ஃபோன் செய்து பேசினான்….

கடைசி குட் நைட்டின் முடிவில் மொத்த வீட்டிலும் விளக்குகள் மின்னொளி வீசிக் கொண்டிருந்தாலும் கும்மி இருட்டை உணர்ந்தாள் இவள்.

அத்தனை பெரிய வீடு…..அவள் மட்டும் தனியாய்….. இரவெல்லாம் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள்…..எப்போது தூங்கினாளோ…..

காலையில்  இன்பாவின் அழைப்பில் தான் விழித்தாள்…. “ப்ரேக் ஃபாஸ்ட் எடுத்துட்டு வந்துருக்கேன் மனோ….”

இத்தனை சூழலில் இவளுக்கு கிடைத்த முதல் ஆறுதல் இன்பா தான்.... அடுத்து நாள் முழுவதும் அவளுடன் கழிய…..இடையில் மித்ரன் தான் சென்று சேர்ந்துவிட்டதை இவளிடம் சொல்ல….ஒருவாறு சற்று இயல்பாகிக் கொண்டிருந்தாள் மனோ…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.