(Reading time: 12 - 24 minutes)

" ன்னங்க பயங்கர எப்பக்ட் எல்லாம் கொடுக்குறீங்க. அட,என்னனு  சொன்னால் தானே என் ரியாக்ஷன் பத்தி நான் உறுதி குடுக்க முடியும். "

" அது… அது வந்து.. "

" வரட்டும்… அப்புறம்.."

ஒரு நீண்ட மூச்சை எடுத்துக் கொண்டவள்,

" மகி, நீங்க தான் ஹரிய கட்டிக்க போற பொண்ணா? இல்ல உங்க ரெண்டு பேருக்குள்ள காதல்னு ஏதும் உண்டா? " கண்மூடி கேட்டு முடித்திருந்தாள் நிஷா.

ஒரு பயத்துடன் மெல்ல திரும்பி மகதியின் முகம் பார்க்க, அவளோ கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்க முயன்று, முடியாமல் குபீரென்று சிரித்துவிட்டாள்.

தொடர்ந்து சில நொடிகள் அங்கு அவள் சிரிப்பு சத்தம் மட்டுமே ஒலித்தது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

அன்னா ஸ்வீட்டியின் "மனம் கொய்தாய் மனோஹரி" - When U Marry a stranger...

படிக்க தவறாதீர்கள்...

ஒருவாறு முடித்தவள், நிஷாவிடம்

" இதுக்கா இவ்ளோ பில்ட் -அப் . நானு.. போயும் போயும் அவனை.. நல்ல காமெடி பண்றீங்க நிஷா. இருந்து இருந்து எனக்கு அந்த காட்ஸில்லா கூடவா காதல் வரும்னு நினச்சீங்க? கண்டிப்பா எனக்கு இதுக்கு கோபம் பயங்கரமா வரணும்" என்று மேலும் சிரித்தாள்.

நிஷா கல்லென இறுகியிருக்க, அதை அறியாமல் மகி, " அவனுக்கு அவ்ளோ ஸீன் எல்லாம் இல்ல. அவனை போய் யாரவது காதலிபாங்களா? " என ,

" ஏன், அவருக்கு என்ன குறைச்சல்? " என்று சூடாக பதில் வந்தது நிஷாவிடமிருந்து.

எப்போதும் போல் ஹரியை கலாய்க்க வேண்டும் என்பதே மகதியின் மோடிவ் ஆக இருக்க, விளையாட்டாகவே தான் பேசிக்கொண்டிருந்தாள். அனால் நிஷாவின் சீரியஸ் டோன் அண்ட் ப்பேஸ் இவளுக்குள் அலாரம் அடிக்க, அவளின் பேச்சைக்  கவனிக்கலானாள்.

"நிஷா நான்..."

" ப்ஷ்.. நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம்.  ஹரியை  பத்தி உங்களுக்கு தெரில "

" யாரு.. எனக்கா?? ", ஆல் மை டைம்ஸ் என்று எண்ணிகொண்டாள் மகதி.

" ஆமா. ஹீ இஸ் சோ ஸ்வீட். அகாடமிக்ஸ், எக்ஸ்ட்ரா கரிகுலர் அக்டிவிடிஸ்னு எல்லாத்துலையும் அசத்துவாரு. அவருக்கு ஒரு பேன் கிளப்பே உண்டு என் காலேஜ்ல. முக்கியமா பொண்ணுங்க. பட் அவர் எந்த பொண்ணுக்கிட்டயும்  தேவை இல்லாம ஒரு வார்த்தை பேசி  நான் பார்த்ததே இல்ல. பக்கா ஜென்டில் மேன்.

' இறைவா!!! இது என்ன மகிக்கு வந்த சோதனை. அவன் அவைப் புலவர் ரேஞ்சுக்கு வாசி வாசினு வாசிக்குறாளே அவன் புகழை' இது மகியின் மைண்ட் வாய்ஸ்.

"நான் அவர் கிளாஸ்மேட் வர்ஷாவோட சிஸ்டர். அவங்க ஜூனியர்"

'ஓ சின்ன புள்ளையா நீ!!!!!!' தட் ஸேம் மானம் கெட்ட மைண்ட்.

" எனக்கு ஹரினா ரொம்ப இஷ்டம். நான் இதை ரீசெண்டா அவர் கிட்ட சொன்னேன்."

'ஆ' னு லைட்டா வாயை பிளந்தவள் மனதில், முன் மாலையில் ஹரி கிருஷ்ணனை இவள் செல்லமாக 'க்ரிஷ்' என்று அழைத்த ஸீன் அநியாயமாக ப்ளாஷ் ஆனது. இவ்வளவு நேரம் கருத்தில் பதியாத நிஷாவின் அழகும் தானாக மனதில் பதிகிறது. ஆடம்பரமற்ற அடக்கமான அழகி அவள் என்பதும் உரைக்கிறது.

( லைட்டா கருகுற வாசம் வருதே... )

"பட் அவர்க்கு அப்படி எந்த ஐடியாவும் இல்லையாம். என்னை ஒழுங்க படிக்கற வேலைய பார்க்க சொல்லிட்டாரு"

தானாக விரிகிறது அவள் இதழ், புன்னகையில்.  'இங்கயும் படிப்பு  தானா, போடா படிப்ஸ் பக்கோடா'

(மவளே பக்கத்துல இருக்குறவ உன் புன்னகைய பார்த்தால், கண்டிப்பா கைமா தான் நீ.. சொல்லிபுட்டேன்)

"அவன் கிடக்குறான் விடுங்க நிஷா "  ஆறுதலாக தான் சொன்னாள் மகதி.

அனால் அவளோ, " நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம். என் க்ரிஷ் பத்தி எனக்கு தெரியும். என்னைக்காவது ஒரு நாள் என் அன்பு அவருக்கு புரியும். அதுவரை நான் வெயிட் செய்வேன். எல்லா பொண்ணுங்க கிட்டயும் ஒரு ஒதுக்கம் கட்டுறவர் உங்க கிட்ட நல்ல பேசுறாரே, வேற ஏதோவோனு நினச்சேன் .அப்டி எதுவும் இல்லனு உங்க பதில்ல இருந்தே தெரியுது. அப்புறம் எதுக்கு நீங்க இப்டி ஒட்டி உறவாடுறீங்க?? நான் உங்ககிட்ட இருந்து ஒன்னே ஒன்னு தான் கேட்டுகுறேன், பீ இன் யுவர் லிமிட். அவ்வளவு தான் " சொல்லிவிட்டு அவள் எழுந்து சென்றுவிட்டாள்.

ஆனால் மகதிகோ, சுள்ளென்று ஏறியது கோபம்.

‘என் அத்தான் கிட்ட நான் எப்டி பேசனும்னு நீ யாரு சொல்ல?' இப்படி ஒரு பக்கம் மனம் கொதிக்க, மறுபுறம் 'எல்லாம் இந்த ஹரி எரும கொடுக்குற இடம்' என்ற எண்ணம் எண்ணெய் வார்த்தது.

" வ்ளோ திமிர் பாரேன் அந்த நிஷாக்கு. என்னை.. என்ன பார்த்து இப்டி சொல்லிட்டாள். இவ யாரு நான் எப்டி இருக்கனும்னு சொல்ல!!! வர ஆத்திரத்துக்கு அவளை..... "

மூச்சுவிடாமல் நிஷாவை வருத்தெடுத்துக் கொண்டிருந்த அக்காவை பார்த்த தங்கைக்கே தாகம் எடுக்க, பாட்டிலில் இருந்த தண்ணீரை ஒரு மடக்கு குடித்தாள். சரியாக அந்த சமயம் மகதி,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.