(Reading time: 12 - 24 minutes)

" ப்படியாம், ஹரிய காதலிக்குறீங்களாவாம்.. கல்யாணம் பண்ண போறீங்களாவாம்.. இப்போ என்ன ? அவன் என் அத்தான். நான் காதலிப்பேன் கல்யாணம் பண்ணுவேன். இவளுக்கு என்னவாம்? " என்றாள்.

இதை கேட்ட அனு, குடித்த தண்ணி புரைக்கேற கஷ்டப்பட்டு சிரிப்பை கண்ட்ரோல் செய்தாள். ஆம், இப்போது மகி சொன்னதை மறுபடியும் அனு அவளுக்கே சொன்னாள் தரும அடி கொடுப்பாள் என்பது அவளுக்கு நிச்சயம். 'எதுக்கு சும்மா போற சிங்கத்தைச் சொரிஞ்சுவிடுவானே, அப்புறம் அது சுத்தி சுத்தி கடிக்குறதை வாங்குவானே' என்று சைலென்டானாள் அனன்யா. (புத்தியுள்ள பிள்ளை).

சிறிது நேரம் அவளை புலம்பவிட்டவள் பொறுமையாக,

" விடுக்கா, அவ கிடக்கா. நமக்கென்ன அவ சொந்தமா பந்தமா !!! "

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

பிரேமாவின் "கண்ணாமூச்சி ரே ரே.." - காதல் கலந்த குடும்ப கதை...

படிக்க தவறாதீர்கள்...

" ஹ்ம்ம்.."

" ஒருவேள சொந்தமயிடுவளோ? " மெல்ல விழி உயர்த்தி அனு மகியை பார்க்க, அவள் முகம் தானாக வாடியது.

'பார்றா!!!!' இதை மனதில் ஸ்டார் சிம்பல் போட்டு மார்க் செய்துக் கொண்டாள்.

" உன்னை எப்படி சரி செய்யணும்னு எனக்கு தெரியுமே. டூ மினிட்ஸ். வெயிட் கரோ " என்றவள் வெளியே சென்று தன் வாண்டு கூட்டத்தை அழைத்து வந்தாள்.

" குட்டீஸ், நம்ம பாஸ் மகி, உங்க எல்லாருக்கும் அழகா மெஹெந்தி வச்சுவிட போறாங்க. எல்லாரும் ஒரு க்ளப் பண்ணிட்டு அவங்க கன்னத்துல ஒரு கிஸ் குடுங்க பாப்போம் " என்று அனு சொல்லி முடிக்க, உற்சாகமான பிள்ளைகள் மகதியை சூழ்ந்துக் கொண்டனர். கடமை முடிந்ததென்று அனன்யா கழன்றுக் கொண்டாள்.

சுவிட்ச் போட்ட போல், சட்டென இயல்பிற்கு வந்திருந்தாள் மகதி. அவளுக்கு இது போல பெயிண்டிங், டிசைனிங் போன்றவைகள் கொள்ளை பிரியமானவைகள். அதுவும் குட்டி பசங்களுக்கு என்றால், டபுள் டமாக்கா தான்!! அவர்களிடம் கதை அளந்தவாறே மெஹெந்தியிட  தொடங்கினாள்.

அவர்கள் இருந்த அறை சற்று சிறியது. மணமக்கள் முகுர்ததிர்க்கு அணிய வேண்டிய உடை, வந்திருந்த உறவினர்களின் சூட்- கேஸ், பேக்  போன்ற சில முக்கிய பொருட்கள் அங்கு வைக்கப்பட்டு இருந்தது. ஒவ்வொருவர்காய் அவள் மெஹெந்தியிட, குட்டீசும் அவள் சொல்லும் கதை கேட்டு சமத்தாக அமர்ந்திருந்தனர்.

தோ வேலையாக அந்த அறைக்குள் வந்த ஹரி, வாசலிலே நின்றுவிட்டான். கண்களை விரித்து, சுருக்கி, கைகளை கொஞ்சம் ஆட்டியவாறே, பல எக்ஸ்ப்ரேசனுடன் அவள் கதை சொல்வதை பார்த்தவனுக்கு, ஒரு நல்ல பீல்.

ஒரு நொடி இந்த காட்சியை ரசித்து நின்றவனை, இயல்பிற்கு கொண்டு வந்தது அவன் செல்-போன். அனுவிடமிருந்து வங்கி வைத்திருந்தான் அதை.

'ஹம் ஹெயின் இஸ் பல் யஹான் ப்ளூட்' டோன் ஒலிக்க, மகி அண்ட் கோ திரும்ப, அவசரமாக அதை எடுத்து ஆன் செய்தான்.

பின்பு அவன், அங்கு இருப்பவளை கண்டு கொள்ளாதது போல் அறைக்குள் நுழைந்து அங்கு வைத்திருந்த பைகளை நோண்டிக் கொண்டிருந்தான்.

"சொல்லு மா. நீ சொன்ன ரூம்ல தான் இருக்கேன். இங்க கண்ணன் நாளைக்கு போட வேண்டிய டிரஸ் எந்த பேக்ல இருக்கு?"  போனில் மகேஸ்வரியிடம் கேட்டான்.

'இதை என்கிட்ட கேட்டால், நானே சொல்ல போறேன். கெத்து காட்றானாம். தேடு மகனே' என்று அவளும் அவனை கண்டுக் கொள்ளவில்லை. பட், அமைதியா இருக்க முடிஞ்சா அது மகதி இல்லையே..

             “ தேடும் கண் பார்வை… தவிக்க…. துடிக்க "

அவளே தான். பாடினாள். (கேட்க கஷ்டமா இருந்தாலும் பொறுத்தருள்க)

அவனுக்கு தான் பாட்டுனு தெரிஞ்சும், திரும்பிடுவானா ஹரி!!! "அம்மா பேக், ரெட் கலரா? இங்க நிறைய ரெட் கலர் பேக் இருக்கே”

            “ தேடும் முன்பே வந்த பொருள் வாழ்வில் நிலைப்பதில்லை..

              தேடி தேடிக் கண்ட பொருள் எளிதில் தொலைவதில்லை… “

கடுப்பானவன் " அம்மா இங்க இல்ல மா. எங்க வச்சீங்களோ!!! நீங்க கால் கட் பண்ணுங்க. தேடி எடுத்து வரேன் " ஒழுங்காக தேடாமல் வீர வசனம் பேசினான்.

           

          “ தேடி கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை

            தேடி பார்ப்போம் என்று மெய் தேடல் தொடங்கியதே….

            தேடி.. தேடி.. தேடி.. தேடி தீர்ப்போமா.. “

இப்போதும் திரும்பாமல், யாருக்கோ கால் செய்வது போல் பாவலா காட்டி போனை காதில் வைத்து,

"இவங்க பெரிய ஸ்ரேயா கோஷல்.. பாடியே  ஸீன்-ஐ இம்ப்ரோவைஸ் செய்றாங்க. இப்படியே போய்கிட்டு இருந்தால், இந்த மண்டபத்துல ஒரு கொலை விழும் சொல்லிடேன். என்னை தேவை இல்லாம வேலு நாயக்கர் ஆக்கிடாத.." ஒரு ப்ளோல அவன் பேச, தலை நிமிராமலே, மெஹெந்தி இட்டபடியே அவள்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.