(Reading time: 12 - 24 minutes)

              " டொன்..ட...டொன்..ட..டொன்ட...டையின்...டொன்டடையின்... "

ந்த சுவருல முட்டிக்கலாம் என்று சுற்றி பார்த்தவன், இப்போ வேண்டாம்னு முடிவு செய்து  பேக்- ஐ  தேடலானான்.

பார்க்க கொஞ்சம் பாவமாக இருக்க, பேக் எங்குள்ளது என்பதை ஒரு குட்டி பாப்பாவிடம் சொல்லி அவனிடம் சொல்ல சொன்னாள். அந்த பாப்பாவும் அவனிடம் சென்று,

" ஹரி மாமா, அதோ அங்க செகண்ட் ஷெல்ப் கார்னர்ல இருக்காம், அக்கா சொல்ல சொன்னங்க " என்றது.

ஆனால் இதை அந்த பாப்பா மெஹெந்தி கையோடு, அவனுக்கு மிகவும் பிடித்த கிரீம் நிற சட்டையை பிடித்திழுத்து சொல்லியிருக்க வேண்டாமோ!!!

'அக்கா சொல்ல சொன்னங்க', கஷ்டப்பட்டு கடுப்பை கண்ட்ரோல் செய்தவன், சின்ன பசங்க முன்னாடி சின்ன பசங்க போல சண்டையிட பிடிக்காமல், " மகதி, கொஞ்சம் வெளிய வா " அவ்வளவு எரிச்சல் அவன் குரலில்.

அவள் வேண்டுமென்றே ஏதும் செய்திருந்தால் கூட இப்படி பயந்திருக்க மாட்டாளோ. 'செமய வாங்கப் போறோம். கடவுளே காப்பாத்து' என்று எண்ணியவாரே எழுந்து வந்தாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

புவனேஸ்வரியின் "இத்தனை நாளாய் எங்கிருந்தாய்" - காதல் கலந்த குடும்ப கதை...

படிக்க தவறாதீர்கள்...

அவங்க பார்வையிலிருந்து நகர்ந்த அடுத்த நொடி, அவன் தொடங்கிவிட்டான்.

" ஏய், உன்கிட்ட நான் ஹெல்ப் கேட்டேனா?? "

" இல்ல ஹரி, நிஜமா நான் வேணும்னு பண்ணல இதை. நம்பு "

" உன்னைத்தானே நம்பனும்.!! .கொடும. சரியான இம்சைடி நீ.. எப்போ பாரு சும்மா இரிடெட் பண்ணிக்கிட்டு. உன்ன பாத்தாலே எரிச்சலா வருது"

காரிடாரில் நின்று அவன் திட்ட, அவர்களை க்ராஸ் செய்தவர்கள் சிலர். அவர்களையே நோக்க, மகதிக்கு கடுப்பாயிற்று.

" உபகாரம் பண்ணலைனாலும் உபத்திரவம் பண்ணாம இருக்கணும்னு சொல்வாங்களே. அது சென்ட் பெர்சென்ட் உனக்கு தான். பண்றது எல்லாம் கேடித்தனம், பாக்க மட்டும் பச்சப் புள்ள லுக். உன்னை எல்லாரும் தலைல தூக்கிவச்சு ஆடுற எகத்தாளம் "

அவன் எங்கிருந்து எதற்கோ தாவ, மகதியும்,

" யப்பா சாமி, தெரியாம உனக்கு ஹெல்ப் பண்ணிட்டேன். இனி நீயே கேட்டாலும் செய்யல. போதுமா!!!!. அதுக்கு தேவை இல்லாததை எல்லாம் இழுக்குற. பாக்க பிடிக்கலனா போ. இப்போ யார் உன்னை கூப்டா. சும்மா வெறுபேத்திகிட்டு. எனக்கும் தான் உன்ன பாத்தா எரிச்சலா வருது. நான் சொல்லிகிட்டா இருக்கேன். நீ ஒன்னும் எனக்கு அவ்ளோ முக்கியமானவன் கிடையாது, நீங்க பேசலைனா நான் பீல் செய்ய!. பீ இன் யுவர் லிமிட்ஸ்! “

நிஷவிடன் தனக்கு கிடைத்ததை வட்டியும் முதலுமாக திருப்பி கொடுக்கும் வேகம் மட்டுமே இருந்தது அவளிடம். ‘என்ன பேசுகிறோம், எதற்கு பேசுகிறோம்..’ என்று எதையும் யோசிக்காது அவள் பேச, அவள் கண்களையே  ஊடுருவியபடி நின்றிருந்தான் அவன்.

'நான் உனக்கு முக்கியமானவன் அல்ல'. தன் மனம் அறிந்த ஒன்றாகிலும், அவள் வாய் மொழியில் கேட்க, வலிக்க தான் செய்தது அவனுக்கு. ஏன் என்று மட்டும் அவன் அறியவில்லை.

    Why Am I So Afraid Of Losing You, When You Are Not Even Mine??

சண்டைகள் தொடரும்

Episode 03

Episode 05

{kunena_discuss:954}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.