(Reading time: 23 - 45 minutes)

ராம் மேபி ஷி ஸ் ரைட்..என்னோட அனலிஸிஸ்படி அவங்க உங்களை கண்டுபிடிக்கல,..ஆனா பாயல்  பத்தின ஏதோஒரு க்ளு உங்ககிட்ட இருக்குநு அவங்களுக்கு தெரிஞ்சுடுச்சு..அக்கார்டிங் டு மை கெஸ் தே ஆர் திங்கிங் யு அஸ் கெர் பாய் ப்ரெண்ட் ஆர் ரிலேடிவ்,சோ நீங்க அத போலீஸ்கிட்ட குடுத்துடுவீங்களோநு மகி மூலமா உங்களை வார்ன் பண்ண ட்ரை பண்றாங்க,அவங்களுக்கு முழுசா எதுவும் தெரியுர வர உங்களையோ மகியையோ எதுவும் பண்ணமாட்டாங்க,பிகாஸ் ஆல்ரெடி தே ஆர் இன் பிக் ட்ரபிள் சோ தைரியமாயிருங்க நானும் டிபார்ட்மென்ட்ல பெர்ஸ்னலா உங்களுக்கு கார்ட்ஸ் அரேண்ஜ் பண்றேன்,சோ யு என்ஜாய் யுவர் மேரேஜ் பஷ்.,.அட்வான்ஸ் விஷ்ஷஸ் டு போத் ஆப் யு..அவரிடம் பேசியது ஏனோ மனதிற்கு நிம்மதி அளிப்பதாயிருந்தது..இந்த ஒரு கோணத்தை அவர்கள் யோசித்திருக்கவில்லை,சற்றே நிம்மதியாய் உறங்கச் சென்றனர்..மறுநாளிலிருந்து அவர்களுக்கு கார்ட்ஸ் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது,அதை மகியிடமும் கூறி வைத்தனர்..மகியோ ஆபீஸில் மிகவும் கவனமாய் நடக்க ஆரம்பித்தாள்,.தான் செல்லும் இடங்களுக்கு வருபவர்களை கண்காணிக்க ஆரம்பித்தாள்,..

இந்த நிலைமை இவ்வாறாக இருக்க கல்யாண வேலைகள் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன..மண்டபம்,சமையல் என அனைத்தையுமே ராஜசேகரே பார்த்துக் கொண்டார்..பத்திரிக்கையும் தயாராகி வந்துவிட ராஜி கொரியர் அனுப்ப வேண்டிய முகவரிக்கெல்லாம் அனுப்பி கொண்டிருந்தார்..இன்று முகூர்த்த புடவை எடுப்பதற்காக டீநகர் செல்வதாய் ஏறற்பாடு..ராம் அவனது தாய் தந்தையுடன் காரில் வந்து மகியையும் விஜியையும் பிக்கப் செய்து கொள்வதாய் கூறியிருந்தான்..அதன்படி மகி கிளம்பியவுடன் ராமை அழைத்தாள்..

ராம் நாங்க ரெடி நீங்க கிளம்பிட்டீங்களா??

யா மகி ஆன் தி வே 5 மினிட்ஸ்ல அங்க இருப்பேன்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

ஓ.கே ங்க வச்சுட்றேன்..என்று போனை வைத்து விட்டு வாசலில் காத்திருந்தனர்,ராம் வந்து காரை நிறுத்த அவன் அருகில் அவன் அப்பா அமர்ந்திருக்க பின்னால் பெண்கள் மூவரும் அமர்ந்திருந்தனர்,பொதுவான நலவிசாரிப்புகளுக்கு பின் ராஜியும் விஜியும் கல்யாண வேலைகளை பற்றி பேசத் தொடங்கிவிட்டனர்,ராமோ அவன் தந்தையோடு நடு நடுவே பேசியவாறு கார் ஓட்டுவதிலேயே கண்ணாயிருந்தான்,மகிக்கோ சப்பென்று ஆகிவிட்டது,இவருக்காக பாத்து பாத்து ரெடி ஆயிட்டு வந்தா கண்டுக்ககூட மாட்றாரே..எல்லாமே வேஸ்ட்..இதுக்கு நா ஆபீஸ்கே போயிருப்பேன்,சாரி எடுக்கவா வந்தேன் இவரை பாக்கலாம்நு தானே வந்தேன்..என்று தன்னுள் மருகிக் கொண்டிருந்தாள்,

ராமோ மனதிற்குள் நொந்து கொண்டிருந்தான்..ஓரளவு தூரத்தில் வரும் போதே பார்த்துவிட்டான் தன்னவளை..கருநீல நிற க்ரீப் சில்க் புடவையில்,தளர பின்னவிட்ட ஜடையில் அதன் நீளத்திற்கு தொங்கவிடப்பட்ட மல்லிகையோடு,கண்ணுக்கு அழகாக மையிட்டு அதிக ஒப்பனையின்றி தங்கசிலையாய் மிளிர்ந்தாள்..இது பத்தாதென்று கட்டியிருக்கும் புடவையின் நிறத்திற்கு நேரரெதிராய் எலுமிச்சை வண்ணத்தில் சிறியதாக எட்டிப்பார்க்கும் அவளின் கொடியிடை..அய்யோ இவகிட்ட நா படுறபாடு தாங்கல அடிக்கடி மனுஷன இப்படி டார்ச்சர் பண்றாளே..சும்மா வந்தாலே நாம காலி இதுல புடவை வேற ராம் உன்னோட மனக்கட்டுபாட்டுக்கு வந்த சோதனையாடா இது,எக்காரணத்தை கொண்டும் கடைக்கு போறவர அவளை பாத்துராத அப்புறம் உன் இஷ்டம்..இந்த நிலைமைல ஹீரோ கார் ஓட்டிட்டு இருக்குறது தெரியாம மகி பாவம் வருத்தப்பட்டுட்டு இருக்காங்க..

ஒரு வழியாக கடையை வந்தடைந்தனர்..காரை பார்க் பண்ணிவிட்டு பெரியவர்கள் மூவரும் முன்னே செல்ல ராம் மகியோடு உள்ளே வந்தான்..அப்போதும் அவன் அமைதியாகவே வர பொறுக்கமாட்டாதவளாய்..போங்கப்பா உங்களுக்காக தான் பாத்து பாத்து ரெடி ஆயிட்டு வந்தேன் நீங்க என்னடா நா இப்படி வரீங்க..என்றாள் உண்மையான வருத்தத்தோடு..

ஹே குட்டிமா அப்படிலா ஒண்ணுமில்லை..உன்ட ஒண்ணு சொல்லவா??என்று இழுத்தான்..

என்னராம் சொல்லுங்க..

கல்யாணதுக்கு முன்னாடி என்கூட இருக்கும் போது மட்டுமாவது புடவை கட்டிட்டு வராதயேன் ப்ளீஸ்,சல்வார் ஜீன் எதுனாலும் ஓ.கே என்றான் படு சீரியஸாய்..

ஏன் ராம் நல்லாயில்லயா??

ஏன் குட்டிமா நீ குழந்தையாவே இருக்க..கல்யாணத்துக்கு அப்புறம் என் நிலைமை ரொம்ப கஷ்டம்..நல்லாயில்லயாவா??தேவதை மாறியிருக்க அதுனால தான் வேண்டாம்நு சொல்றேன்..இப்படி செமயா ட்ரெஸும் பண்ணிக்கோ என்ன பக்கத்துலயும் வரவிடாத நா என்னதான்டி பண்றது..நா பாவம்டீ பொண்டாட்டி...

ச்சீ போங்க ராம் நீங்க ரொம்ப மோசம்..அப்போ என்ன பாத்தீங்களா நீங்க??

ம்ம்ம் அதெல்லாம் எப்பவோ பாத்துட்டேன்..கார்ல வரும்போது மேடம்க்கு என் மேல எவ்ளோ கோவம்..கல்யாணத்துக்கு அப்புறம் மட்டும் நீ இப்படி என் முன்னாடி வந்து நில்லு உன்னவிட்டு அங்கஇங்க கண்ணை நகர்த்தவே மாட்டேன்..இன்னும் 20 டேஸ்க்கு அப்பறம் நீ சாரி மட்டும் தான் கட்டுற வீட்டுல எப்பவுமே..உனக்கு கஷ்டமாயிருந்தா சொல்லு நானே கட்டிவிடுறேன்,என்ன டீல் ஓ.கே வா??

ராம்…….அவங்க நம்மளை தேட போறாங்க வாங்க போலாம்..

அதான நீ எவ்ளோ நாள் இப்படியே எஸ்கேப் ஆகுறநு பாக்குறேன்..வா போலாம்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.