(Reading time: 23 - 45 minutes)

ரி AK நீங்க உடம்பை பாத்துகோங்க…

போனை வைத்தவனுக்கு நினைவுகள் அதுவாகவே அவரை சந்தித்த முதல் தருணத்தை நோக்கிப் பயணித்தது..

மர்நாத் பவன்…

வானுயர கம்பீரமாக நின்றது அந்த வீடு,இல்லை இல்லை மாளிகை..வீட்டின் வாசலில் அத்தனை பாதுகாப்பு இதை மீறி யாரும் உள்ளே நுழைய முடியாது என்று உறக்கச் சொன்னது..பாதுகாப்பு சோதனைகளை கடந்து உள்ளே நுழைந்தால் இருபுறமும் கண்களுக்கு குளிர்ச்சியாய் பச்சைபசேலென தோட்டம் அங்கு இல்லாத வண்ணங்களே இல்லை எனும் அளவிற்கு பூக்கள் கொட்டிக்கிடந்தன.,.பச்சை வண்ண கம்பளம் விரிக்கப்பட்டார் போன்று சீராக வெட்டி விட பட்டிருந்த புல்வெளி..இவைகளை கடந்து உள்ளேயிருக்கும் வீட்டின் வாயில் படிகளும் கம்பிகளுமே அத்தனை அழகாய்..அதன்பிறகு இருந்த வரவேற்பறை  அந்த காலத்தில் மன்னர்கள் இப்படிதான் வாழ்ந்திருப்பார்களோ என வியக்க வைக்கும் அளவிற்கு ஆடம்பரமான பொருட்களுடன் மிடுக்காய் காட்சியளித்தது..அங்கிருந்த காவலாளி அவனை அங்கேயிருக்கும் நாற்காலியில் அமரும்படி கூறினான்..இவனும் யாரேனும் வரட்டும் என காத்திருந்தான்..பத்து நிமிடத்தில் யாரோ வரும் அரவம் கேட்டது திரும்பி பார்த்தான் நேர்த்தியான உடையமைப்பில் நவநாகரீகமாக ஒரு பெண் நடந்து வந்தாள்..அருகில் வரவும் எழுந்து நின்றவன் சிநேகமாக புன்னகைத்தான் பதிலுக்கு புன்னகைத்தவள்,மிஸ்டர் ராம்???

யெஸ் கேம் ஃபார் தி இன்டர்வியூ..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "பேசும் தெய்வம்" - அன்பென்றாலே அம்மா...

படிக்க தவறாதீர்கள்...

ஓ,ஐ அஅம் சாக்ட்சி,.நேத்து உங்களோட போன்ல பேசினது நான் தான்..சரி வாங்க உள்ளே போலாம் என்றவாறு முன்னே நடந்தாள்..அவளை பின் தொடர்ந்தவன் வீட்டை சுற்றி பார்த்துக் கொண்டே வந்தான்,கண்டிப்பாக உள்ளே சென்றால் யார் உதவியுமின்றி வெளியே வரமுடியாதோ என்றே தோன்றியது..எங்கு பார்த்தாலும் அறைகள்..சுவர் முழுக்க சித்திரங்களும் கண்கவர் அலங்காரங்களும்..ஏதோ அருங்காட்சியகத்திற்கு வந்தது போன்ற உணர்வு..அனைத்தையும் தாண்டி இறுதியாக ஒரு அறை வாசலில் சென்று நின்றாள் அந்தப் பெண்..காலிங் பெல்லை அழுத்தினாள்..சில நொடிகளுக்குப்பின் கம்பீரமான ஒரு குரல் கேட்டது..யெஸ் கம் இன்..

கதவை திறந்து உள்ளே நுழைய அங்கே ஒரு சாய்வு நாற்காலியில் முதுகு காட்டி அமர்திருந்தார் முதியவர் ஒருவர்..வாங்க மிஸ்டர் ராம்..ப்ளீஸ் டேக் யுவர் சீட்..

குரலுக்கும் வயதிற்கும் சம்மந்தமேயில்லை..அத்தனை ஆளுமை அந்த குரலில்..மெதுவாகச் சென்று அவர் முன்னிருந்த இருக்கையில் அமர்ந்தான் ராம்…எதிரிருந்தவரை பார்த்தவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை..ஏனெனில் அவன் யாரை சந்திப்பதற்காக வந்தானோ அவர்தான் அங்கிருந்தார் அமர்நாத்…

என்ன மிஸ்டர் ராம் இவ்ளோ ஷாக் ஆகுறீங்க??

ஹா..சாரி சார்,உங்களை கவனிச்சுக்கதான் ஆள் தேவைனு போட்ருந்தாங்க நீங்களே இன்டர்வியூ பண்ணப் போறீங்கநு தெரிஞ்சதும் ஐ வாஸ் ஸ்டன்ட்…என்று மனதிலிருப்பதை மறைக்காமல் கூறினான்..

அதாவது நல்லாயிருக்குற இவனுக்கென்ன கேர் டேக்ர்நு யோசிச்சீங்களா?என்றார் புன்னகையுடன்..

ஐயோ அப்படிலா இல்ல சார்..என்றான் பதட்டமாய்..

கூல் யெங் மேன்..ஜஸ்ட் பார் ஃபன்..சோ என்ன படிச்சுருக்கீங்க எதுநால இந்த ஜாப்க்கு வந்தீங்க??

நா கிரிமினல் லா யு.ஜி பண்ணிருக்கேன் சார்..ஐ.ஏ.எஸ் ஆர் ஐ.பி.எஸ் ஆகனும்நு ஆசை,பிரிப்பேர் பண்ணிட்டு இருக்கேன்..அதுவரை பார்ட் டைம் ஜாப் பண்ணலாமேநு தான்,

ஓ..குட்..உங்க வீடு எங்கயிருக்கு..

என் நேட்டிவ் தமிழ்நாடு..படிப்புக்காக இங்க தங்கியிருக்கேன் சார்..

தட்ஸ் குட்..,ஓ.கே ராம் யு ஆர் அப்பாய்ண்டட்..சாக்ட்சிகிட்ட மத்த டீடெய்ல்லாம் வாங்கிக்கோங்க..நாளைக்கே ஜாயின் பண்ணிக்கலாம்..ஆல் த பெஸ்ட்..

ராமிற்கோ ஒன்றும் புரியவில்லை..இது ஒரு இன்டர்வியூவா..எதை வச்சு என்ன செலக்ட் பண்ணாரு??ஒரு வேளை நம்ம மேல டவுட் வந்துருக்குமோ..

வெளியில் வந்தவன் அவளிடம் என்னங்க இது டக்குனு செலக்ட் பண்ணிட்டாரு…

மென்மையாக சிரித்தவள்,உங்களோட முதல் பதில்லயே உங்களை கண்டிப்பா தாத்தாவிற்கு பிடிச்சுருக்கும் அதான் செலக்ட் பண்ணிட்டாங்க..அதுவும் போக இந்த வேலைக்கு வர முதல் அண்ட் கடைசி ஆள் நீங்களாதான் இருப்பீங்க..எஸ்.எம் குரூப்நு பேரை கேட்டாளே யாரும் வரமாட்டாங்க,இங்க தான இருக்க போறீங்க போகப் போக புரியும் உங்களுக்கே..சரி நாளைக்கு மார்னிங் 9க்குல்லாம் ஷார்ப்பா வந்துடுங்க..நா வொர்க் டீடெய்ல்ஸ் அண்ட் அதர் இன்பர்மேஷன்ஸ் குடுத்துற்றேன்..

ராமோ இன்னும் அவள் பேச்சின் முற்பாதியிலேயே நின்றான்,இருந்தும் அவள் கூறிய அனைத்திற்கும் பொதுவாய் தலையசைத்து வைத்தான்..

ராமிற்கு என்ன வேலை குடுக்கப்பட போகிறது,ராம் அவனுக்குத் தேவையான வேலையை எப்படி முடிக்கப் போகிறார்...அவரின் திருமணம் எவ்வாறு நடக்கும் பொறுத்திருந்து வரும் வாரங்களில் பார்ப்போம் ப்ரெண்ட்ஸ்....

தொடரும்

Episode # 08

Episode # 10

{kunena_discuss:952}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.