(Reading time: 23 - 45 minutes)

ருவரும் பெரியவர்கள் இருந்த இடத்திற்குச் செல்ல..மகிக்கான புடவை தேடல் ஆரம்பமானது..ஒவ்வொரு புடவையாக அவள் அன்னை அவள் மேல் வைத்துப் பார்க்க மகியோ கண்ணாடி வழியே தன்னவனிடம் அனுமதி வாங்கிக் கொண்டிருந்தாள்..ஒரு வழியாக ராமிற்கு பிடித்த புடவையை அவள் எடுத்துக் கொள்ள விஜி அவளிடம்,மாப்பிள்ளைட்ட ஒரு வார்த்தை கேட்ரு மகி,பிடிச்சுருக்காநு..அதைக் கேட்ட ராஜியோ அண்ணி இவ்ளோ நேரம் அவ அததான பண்ணிட்டு இருந்தா மறுபடியும் முதல்லயிருந்து ஆரம்பிக்க சொல்றீங்களே என்றார் புன்னகையோடு..மகியோ அசடு வழிந்தாள் தன் அன்னையிடம்..அடுத்ததாக ரிசப்ஷனுக்கென்று புடவை தேர்வு ஆரம்பமாக..டிசைனர் சாரி செக்ஷனையே புரட்டி போட்டுக் கொண்டிருந்தனார் மகியும் ராமும்..பெரியவர்கள் குடும்பத்தில் மற்றவர்களுக்கு புடவை எடுக்க சென்றனர்..இறுதியாக ஒரு புடவையை செலக்ட் செய்ய அதிலும் முழு திருப்தியில்லை ராமிற்கு,வெறுத்து போன சேல்ஸ் கேள்ளோ சார் டிசைனர் சாரிலா சும்மா பாக்குறதவிட கட்டினா தான் அழகாத் தெரியும் மேடம் வாங்க இத ட்ரையல் பாருங்க என அங்கிருந்த கண்ணாடியின் முன் நிற்க வைத்து மேலோட்டமாக கட்டிவிட்டாள்,சரியாக அந்த நேரம் பெரியவர்களும் வர..மகியை பார்த்த அனைவருக்கும் சந்தோஷமாயிருந்தது,ராமிற்கோ கேக்கவே வேண்டாம்,மனம் அதுவாக பாடலை ஒலித்தது…

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கன்னங்கள் ரோசபூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகை பூ

சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யா பூ
அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர் பூ
மை விழி ஜாடைகள் முல்லை பூ
மணக்கும் சந்தன பூ
சித்திர மேனி தாழம் பூ
சேலை அணியும் ஜாதி பூ
சிற்றிடை மீது வாழை பூ
ஜொலிக்கும் செண்பக பூ
சித்திரை மாத நிலவொளி
அவள் சில்லென தீண்டும் பனி துளி
கொஞ்சிடும் பாத கொலுசுகள்
அவை கொட்டிடும் காதல் முரசுகள்
பழத்தை போல இருப்பவள்
வெல்ல பாகை போல இனிப்பவள்
சின்ன மை விழி மெல்ல திறப்பவள்
அதில் மன்மத ராகம் படிப்பவள்
உச்சியில் வாசனை பூ முடித்து
உலவும் அழகு பூந்தோட்டம்
மெத்தையில் நானும் சீராட்ட பிறந்த மோகனம்

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கன்னங்கள் ரோசபூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகைப் பூ

ராஜி அவள் அருகில் சென்று நெட்டி முறித்து இப்போவே கல்யாணகளை வந்துடுச்சுடா மகி உனக்கு..விஜிக்கோ கண்களில் நீர் துளிர்த்தது..ராமோ சூப்பர் என்று செய்கையிலேயே கூறி யாரும் அறியா வண்ணம் கண்ணடித்தான்..இவ்வாறாக ஆடைகள் அனைத்தையும் வாங்கி முடித்தவர்கள் மதிய சாப்பாட்டை அருகில் ஒரு ஹோட்டலில் முடித்துவிட்டு மாங்கல்யம் வாங்குவதற்காக அந்த பிரபல நகை கடைக்குள் நுழைந்தனர்…மாங்கல்யம் மற்றும் நிச்சயத்தன்று மாற்றுவதற்கான மோதிரம்,இன்னபிற நகைகளும் வாங்கிக் கொண்டு கிளம்பும் போது லேசாக இருட்டியேவிட்டிருந்தது..அவர்களை விடுதியில் விட்டுவிட்டு தன் வீட்டிற்கு வந்தவனுக்கு காலையிலிருந்து அலைந்த அலைச்சலால் லேசாக தலை வலி வந்திருந்தது..சிறிது தூங்கி எழுந்தால் சரி ஆகிவிடும் எனத் தோன்ற அப்படியே உறங்கியும் போனான்..சிறிது நேரத்தில் அவனது கைப்பேசி அழைப்பு எங்கோ ஒலிப்பதாய் தோன்ற சற்றே தூக்கம் கலைந்தவன் தன்னுடைய கைப்பேசிக்காக துழாவினான்.,தலையணையின் அடியில் இரூந்தது,கண்களை திறக்காமலே எடுத்து காதில் வைத்தான்..

ஹலோ ராம் ஸ்பீக்கிங்..

ஹவ் ஆர் யு ராம்..

A.K…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "மூங்கில் குழலானதே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

அடுத்த நொடி எழுந்து அமர்ந்தான் முழு தூக்கமும் சென்ற திசை தெரியவில்லை…A.K என்று நெருங்கியவர்களால் மட்டும் அழைக்கப்படும் அமர்நாத் கௌஷல் தி ப்சினஸ் மேக்னெட் அவனை அழைத்திருக்கிறார்..

ஹலோ ராம் ஆர் யு தேர்??

யா AK எப்படி இருக்கீங்க..

ம்ம்ம் ஏதோ இருக்கேன்..உன் வேலைலா எப்படி போய்ட்டு இருக்கு?

நல்லபடியா போகுது சார்,.எனக்கு மேரேஜ் பிக்ஸ் ஆயிருக்கு,

ரொம்ப சந்தோஷம் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்…

தேங்க்ஸ் AK..என்ன திடீர்நு கால் பண்ணிருக்கீங்க..உடம்புக்கு ஒண்ணும் இல்லையே,?

லேசாக சிரித்தவர்,இந்த அன்புக்காக தான் கால் பண்ணேன் ராம்..கொஞ்ச நாள் பழகினாலும் என்னவோ எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சுருச்சு..சரிப்பா நீ கல்யாண வேலையெல்லாம் பாரு,எதுவும் உதவி வேணும்னா தயங்காம கேளு..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.