(Reading time: 14 - 27 minutes)

லோ இந்தக் கதையே வேண்டாம்.  நீங்க எல்லாரும் ஹரிக்கே சப்போர்ட் பண்ணுங்கோ.  எனக்கு எங்க மன்னி ஒருத்தர் போறும்.  நீங்க ஆயிரம் பேர் வந்தாலும் எப்படி சமாளிக்கணும்ன்னு அவா எனக்கு சொல்லித் தருவா”,என்று கூற, தீபா  முதலில் கௌஷிக்கிடம்..... கௌரியை அடக்க சொல்ல வேண்டும் என்று நினைத்தாள்.

“சரி நான் கிளம்பறேன் தீபா.  இப்போக் கிளம்பினாத்தான் சரியா இருக்கும்”

“ஹேய் ஸ்வேதா சொல்லிட்டே இருக்கேன்.  கேக்காம கிளம்பற.  ஸ்டேஷன் இங்க இருந்த ரொம்ப தூரம்மா.  அவ்ளோ தூரம் உன்னால நடக்க முடியாது”

“அது பராவாயில்லை தீபா.  இன்னைக்கு ஒரு நாள்தானே.... நாளைல இருந்து நீதான் வந்துடுவியே.    இங்க இருந்து ஸ்டேஷன் வரைக்கும் டாக்ஸி எடுத்துக்கறேன்”

“உனக்கென்ன ராக்ஃபெல்லர் ஃபாமிலின்னு நினைப்பா.  இங்க டாக்ஸிக்கு உன் சொத்தையே எழுதி வைக்கணும்.  டாக்ஸி சார்ஜ் தவிர டிப்புன்னு வேறத் தனியாத் தரணும்”

“என் ஒரு மாச சம்பளம் முழுக்க போனாலும் பராவாயில்லை.  நான் கிளம்பறேன்.  ஹரி வந்து நான் இல்லைன்னு தெரிஞ்சு நன்னா பல்பு வாங்கட்டும்.  இது ஒரு பாடம் அவருக்கு.  இனித் தேவையில்லாம என் பின்னாடி சுத்த மாட்டார்”

“ஸ்வேதா சொன்னாக் கேளு, நிஜமாவே first time  தனியாப் போகறது safe இல்லை”, ஸ்வேதா சீக்கிரம் கிளம்புவதை எப்படி ஹரிக்கு தெரிவிப்பது, என்று யோசித்தாள் தீபா.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா V யின் "காதலை உணர்ந்தது உன்னிடமே..." - காதலை எப்போது சொல்வேன் உன்னிடமே

படிக்க தவறாதீர்கள்... 

“என்ன ஹரிக்கிட்ட எப்படி சொல்றதுன்னு யோசிக்கறியா.  ஒண்ணும் பண்ண முடியாது கண்ணு.  உன் ஃபோனை எடுத்து ஒளிச்சு வச்சுட்டேன்.  அது எங்க இருக்குன்னு ஸ்டேஷன் போயிட்டு ஹரிக்கிட்ட கால் பண்ணி சொல்றேன்.  அவர் வந்து உனக்கு சொல்லுவார்.  வர்ட்டா......”,என்று ரஜினிகாந்த் ஸ்டைலில் ஸல்யூட் அடித்த ஸ்வேதா தீபாவைத் தாண்டிக்கொண்டு சென்று கதவைத் திறக்க..... அங்கே அரை பான்ட், புல் ஓவர் காதில் மாட்டிய ஹெட் ஃபோனுடன் சுவரின் மேல் சாய்ந்து கொண்டு நின்றிருந்தான் ஹரி.

(போச்சா போச்சா மறுபடி உனக்கு பல்பா ஸ்வேதா.  உன்னை நினைச்சா எனக்கு பாவமா இருக்கு.  நானும் உன்னைய கெலிக்க வைக்கணும்னுதான் பாக்கறேன்.  எங்க முடியுது.  பயபுள்ள அமெரிக்கா வந்து ஆனாலும் ரொம்ப அலெர்ட் ஆறுமுகம் ஆயிட்டான்)

ஸ்வேதா கதவைத் தாண்டி செல்லாமல் ஆணி அடித்தபடி நிற்பதைப் பார்த்த தீபா, இவளுக்கு என்ன ஆயிற்று என்று எட்டிப்  பார்க்க அங்கே ஹரி சிரித்தபடியே நின்றிருந்தான். அதைப்பார்த்த  தீபா கன்ட்ரோல் செய்ய முடியாமல் உருண்டு புரண்டு சிரிக்க ஆரம்பித்தாள்.

“ஹா.... ஹா.... ஹா.... என்னால மிடில. ஒரே சிப்பு சிப்பா வருது”, தீபா சிரிக்க.... அவளை முறைத்தபடியே தொம் தொம்மென்று நடந்து வந்து சோஃபாவில் அமர்ந்தாள் ஸ்வேதா. 

இனி எப்படியும் அவளால் தனியாகப் போக முடியாது, ஹரி அவள் கையைப் பிடித்து இழுத்து அவனுடன் செல்ல வைத்து விடுவான், ஏதேனும் கேட்டால் ‘என்ன கையப் பிடிச்சு இழுத்தியா’ என்று வடிவேலு பாணியிலேயே அவளை வெறுப்பேத்துவான் என்று தெரியும்.   அதனால் மூஞ்சியை உர்ரென்று வைத்தபடியே அமர்ந்திருந்தாள்.

“எப்படி ஹரி இப்படில்லாம்.  சான்ஸே  இல்லை.  அது எப்படி ஸ்வேதா இவ்வளவு சீக்கிரம் கிளம்புவான்னுத் தெரியும்”

“ஆமா இந்த ரெண்டு பேரும் போடற பிளான் தெரியாதா.  இது ஒரு அரை டிக்கெட்.  கௌரி ஒரு அட்டு பீஸ்.  இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து என்ன சாணகியத்தனமாவா யோசிக்கப் போறாங்க.  சங்கி மங்கி மாதிரிதான் யோசிப்பாங்க”

“ஆனாலும் ஹரி நீங்க சூப்பர் போங்க.  இத்தனை நாளா ஸ்வேதா கூட இருக்கேன்.  ஓரளவு அவளைப் பத்தி தெரியும்.  அவ இப்படி எல்லாம் யோசிப்பான்னே எனக்குத் தெரியலை பாருங்களேன்”

“ஹேய் தீபா.... என் பேபிம்மாவைப் பத்தி தப்பா நினைக்காத.  அவளுக்கு இப்படி எல்லாம் கோக்கு மாக்காலாம் யோசிக்கத் தெரியாது.  இது எல்லாம் அந்த சகுனியோட ஐடியாவாதான் இருக்கும்.  பொறந்ததுலேர்ந்து அவக்கூட இருக்கேனே, அவ எந்த அளவு லூசுத்தனமா ஐடியா சொல்லுவான்னு தெரியாது”, ஹரியும், தீபாவும் கிண்டலாகப் பேச ஸ்வேதாவிற்கு பொங்கிக் கொண்டு வந்தது.  (நீயும் பொங்கலோ பொங்கல்ன்னு பொங்கிட்டுதான் இருக்க.... ஆனா ஒண்ணும் வேலைக்கு ஆகலையே பேபிம்மா)

“இங்க பாருங்கோ ஹரி... மன்னியப் பத்தி கிண்டல் பண்ணிப் பேசாதீங்கோ.  மன்னி எத்தனை அறிவாளித்  தெரியுமா....”

“உங்க மன்னிதானே... பெரிய அறிவாளிதான்.... ஒபாமாக்கே அட்வைஸ் கொடுக்க அவளைத்தான் கூப்ட்டாளாம், ஆனா ப்ராஜெக்ட் வேலை இருந்ததால அவளால  வர முடியலைன்னு ஈவினிங் பேப்பர்ல போட்டிருந்தா”, ஹரி சொல்ல.... தீபா சிரிக்க..... ஸ்வேதா பல்லைக் கடித்தாள்.

“ஓகே இப்போ எல்லாம் செட்டில் ஆயாச்சா.  நான் போய் குளிச்சுட்டு எட்டு மணிக்கு வரேன்.  ரெடியா இரு.  தீபா.... நான் அந்தப்பக்கம் போன உடனே மேடம் இந்தப் பக்கம் கிளம்புவாங்க.  அதனால நான் பாட்லாக் போட்டு கதவைப் பூட்டி சாவி எடுத்துண்டு போறேன்.  உனக்கு ஏதானும் வாங்க வெளில போகணுமா”, என்று கேட்க, தீபா இல்லை என்று தலை அசைத்தாள்.

“என்னோட கொலீக் எனக்காக Exchange Place  ஸ்டேஷன்ல வந்து காத்துண்டு இருப்பா”, ஸ்வேதா மோட்டு வளையைப் பார்த்தபடியே கூற.....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.