(Reading time: 14 - 27 minutes)

ஹேய் இதுக்குதான் இங்கிலீஷ் படம்  பாக்கணும் அப்படிங்கறது.  நிறைய கிஸ் அடிக்கற சீன்ஸ் பார்த்து இந்த நேரத்துக்கு இம்மியூன் ஆயிருப்ப.  எப்போப் பார்த்தாலும் சிவாஜி படமாப் பார்த்து இப்படி பேபியாவே இருக்கயே.  ரெண்டு பேர் பக்கத்துல வந்த உடனே  பூவையும், பறவையையும் காட்டியே உன்னை ஏமாத்தி வச்சிருக்கா”

ஹரி சொல்வது முற்றிலும் உண்மை.  நம்ம லட்ச்சு மேடத்தோட ஆதர்ஸ கதாநாயகர்கள் சிவாஜியும், MGR-ம்.... அதனால் அவர்கள் அனைவரும் சேர்ந்து பார்க்கும் படம் எப்பொழுதும் இவர்கள் நடித்தப் படமாகவே இருக்கும்.  கௌஷிக் அவன் நண்பர்களுடன் சேர்ந்து புதுப் படம் பார்த்து விடுவான்.  ஸ்வேதா தனியாக தோழிகளுடன் சென்று படம் பார்த்ததில்லை.  வருடத்திற்கு ஒரு முறை ஏதேனும் புதுப் படம் பார்த்தால் அதிகம்.  அதுக்கூட வேலைக்கு சேர்ந்த பிறகு தீபா படுத்தும் பாடு தாங்காமல்  அவளுடன்  சென்று பார்த்தது.

“இந்த விஷயத்துலலாம் நான் வளரணும்ன்னு அவசியமே இல்லை.  எது எது தெரிஞ்சுக்கணுமோ அதுதான் தெரிஞ்சுக்கணும்.  நீங்களும் கண்டதையும் பாக்காம நேரா கதவை மட்டும் பாருங்கோ”, என்று அவனையும் கதவைப் பார்க்க வைத்து நிற்க வைத்தாள்.  ஹரியும் சிரித்தபடியே அவள் சொன்னதை நல்ல பிள்ளையாக செய்ய இருவரும் தரைத்தளம் வந்து சேர்ந்தார்கள்.  அங்கிருந்து கார் எடுத்துக் கொண்டு ஸ்வேதாவை அவள் அலுவலகத்தில் விட்டுவிட்டு மாலை அவனே வந்து அவளை அழைத்து செல்வதாகக் கூறிவிட்டு தன் அலுவலகம் நோக்கிச் சென்றான் ஹரி.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

VJ Gன் "அனு என் அனுராதா..." - காதல் கலந்த குடும்ப தொடர்

படிக்க தவறாதீர்கள்... 

பிளான் 1 படு பயங்கர சொதப்பலில் முடிய, அடுத்து என்ன செய்வது என்று கெளரியிடம் கேட்கவேண்டும் என்று நினைத்தபடியே தன் அலுவலகம் நோக்கி சென்றாள் ஸ்வேதா.     

தொடரும்

Episode # 07

Episode # 09

{kunena_discuss:964} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.