(Reading time: 8 - 16 minutes)

"ல்லாம் பார்த்துக்கலாம்...சொன்னது ஞாபகமிருக்கா?"

"தெய்வமே...!உன் தங்கச்சியை எப்படி என்கிட்ட கொடுத்தியோ!அப்படியே திருப்பி ஒப்படைக்கிறேன்!"

"பிழைச்சுப்ப!"-என்று நகர்ந்தவனின் கண்களில் லட்சுமி தென்பட்டாள்.இரு நொடி அவளருகே நின்றவன்,

"சிவன்யாவை பத்திரமா பார்த்துக்கோ!"என்று கூறிவிட்டு நகர்ந்தான்.திவாகரின் பார்வை ஒரு நொடி கூர்மையாக அவனை துளைத்தது.

அன்றிரவு....

மாடியில் தனிமையில் நின்றிருந்தான் திவாகர்.மனதுள் ஏதேதோ சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்தது...

ஆனால்,சிந்தனைகள் இன்பத்தை தரும் சிந்தனைகள் அல்ல என்பது அவன் முக வாட்டத்தை கொண்டே கண்டறியலாம்!!

"என்னங்க?"

"ஆ..!"-சிவன்யாவின் வருகை அவனை நிகழ்காலத்திற்கு இழுத்து வந்தது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் "என்னுள் நிறைந்தவனே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

"சொல்லும்மா!"

"என்னாச்சு?தனியா நிற்கிறீங்க?"

"ஒண்ணுமில்லைம்மா..!"-அவன் முக வாட்டத்தை அறியாதவள் இல்லை அவள்!!

"பொய் சொல்லாதீங்க!உங்க அம்மூ மேலே சத்தியம் பண்ணுங்க எதுமில்லைன்னு!"-என்று அவனது கரத்தை தன் தலையில் வைத்தாள்.

"ஏ...பைத்தியம்!"

"அப்போ உண்மையை சொல்லுங்க!"

"சந்தேகமா இருக்கும்மா!கல்யாணத்துக்கு அப்பறம்,மஹீ அளவுக்கு உன்னை பார்த்துக்க முடியுமான்னு சந்தேகமா இருக்கு!"

"................"

"அவன்கிட்ட நான் பொறாமைப்பட்ட விஷயம் இதுதான்!என் மேலே அன்புக்காட்ட உன்னை மாதிரி அன்பான ஒருத்தரையும் அந்த ஆண்டவன் விட்டுவைக்கலை..!"-அவன் குரல் அடைத்தது.சிவன்யா அவனை அணைத்துக் கொண்டாள்.

"இனி நான் இருப்பேன்!கடைசி வரைக்கும் உங்களுக்கு ஒரு அம்மாவா!நல்ல தோழியா!நல்ல மனைவியா!நிச்சயம் நான் இருப்பேன்!"-இந்த வார்த்தைகளுக்காக   தான் காத்திருந்தவனாய்,கண்ணீர் வடிக்க ஆரம்பித்தான் திவாகர்.

அவர்கள் இருவரும் அறியவில்லை...அவர்களின் அழகிய காதலை சற்று தூரத்தில் இருந்து உருவமில்லா இரு கண்கள் பார்த்துக் கொண்டிருப்பதை...!

"ஐ லவ் யூடி!"-அவளிடமிருந்து புன்னகை வெளியானது.

"நேரமாயிடுச்சு!போய் தூங்குங்க!"

"நீ வந்து தூங்க வைக்கிறீயா?உன் மடி மேலே படுத்து தூங்கணும் போல இருக்கு!"-ஏக்கமாக கேட்டான் அவன்.

"வாங்க!"-சிறு குழந்தையை போல அவனை அழைத்து சென்றவள்,அந்த அறைக்குள் சென்று மெத்தையில் அமர,தாய் மடி நாடும் குழந்தையை போல அவள் மடியில் படுத்துக் கொண்டான் திவாகர்.

அமைதியாக அவனது கேசத்தை கோதிவிட்டாள் சிவன்யா.

சிறிது நேரத்திற்கெல்லாம் நன்றாக உறங்கி இருந்தான் திவாகர்.

அவன் உறங்கியது உறுதியானதும்,அவனது தலையை தலையணை மீது வைத்துவிட்டு,அவனுக்கு போர்த்திவிட்டு நகர்ந்தாள் சிவன்யா.

ணி ஒரு 02:30 ஆகி இருக்கும்..!

ஏதோ உடையும் சத்தம் கேட்டு கண் விழித்தான் திவாகர்.

கும்மிருட்டு...!இரவு விளக்கு மட்டும் சிறு வெளிச்சத்தை தந்தது.

ஏ.சி. அணைந்திருந்த போதும் ஒரு வித குளிர்ச்சி உடலுக்குள் பரவியது!!

குடிப்பதற்காக தண்ணீர் பாட்டிலை தேடினான்.கிடைக்கவில்லை.

பெருமூச்சோடு எழுந்தவன்,தண்ணீர் பாட்டிலை எடுப்பதற்காக குளிர்சாதன பெட்டியை நோக்கி நடந்தான்.விளக்கை உயிர்பித்தவன்,குளிர்ந்த நீரை எடுத்து பருகினான்.கண நேரத்தில் அருகிலிருந்த கண்ணாடியில் தோன்றி மறைந்தது அந்த உருவம்!!

தண்ணீரை மீண்டும் வைத்துவிட்டு,மாடியில் ஏறினான்.

மீண்டும் ஏதோ உடையும் சப்தம் அவனது கவனத்தினை ஈர்த்தது.

சத்தம் வந்த திசை நோக்கி நடந்தான்!!அது அந்த பூட்டப்பட்ட அறையில் இருந்து வந்தது.ஒரு சந்தேகத்துடன் அக்கதவை.நெருங்கினான் திவாகர்.

சட்டென உதயமானது அக்கதவு திறக்காத நினைவு!!மீண்டும் அவன் திரும்பி நடக்க ஆயத்தமாக மீண்டும் ஏதோ உடையும் சத்தம்!!

குழப்பத்தோடு அந்த அறை கதவை தொட்டான்.தொட்ட வேகத்தில் அவன் அதை தள்ள,அது "கீறிச்!"என்று திறந்துக் கொண்டது.

உள்ளே சிறு வெளிச்சமும் இல்லை...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.