உள்ளே எட்டிப் பார்த்தான்.கீழே இரண்டு ஜாடிகள் விழுந்து நொறுங்கி இருந்தன....
ஓரடி உள்ளே நுழைந்தான் திவாகர்.
சட்டென அந்த கதவு சாத்திக் கொண்டது.
மீண்டும் அக்கதவு திறக்கும் போது,அவன் சாதாரணமாக வெளியே வந்தான்.ஆனால்,அவனது கண்களில் என்றுமில்லா பழி உணர்வு!!
கண்களில் என்றுமில்லா தீக்ஷணம்!!
அவன் அக்கதவை பார்க்க,அது தன்னிச்சையாக மூடிக்கொண்டது.
மெல்ல நடந்தவன்,நேராக சிவன்யாவின் அறை நோக்கி நடந்தான்.
அவன் அந்த அறை கதவை திறந்தான்.
அவள் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தாள்.
அவளை காணும் போது ஒரு நொடி அவன் முகம் இயல்பானது!!
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
VJ Gன் "அனு என் அனுராதா..." - காதல் கலந்த குடும்ப தொடர்
படிக்க தவறாதீர்கள்...
அவன் உள்ளே செல்ல ஓரடி எடுத்து வைக்க,அவன் செல்ல இயலாதப்படி மர்மமான அக்னி பிழம்பு தடுத்தது.மீண்டும் முயற்சித்தான்.மீண்டும் தடங்கல்!!!குழப்பத்தோடு நிமிர்ந்தவனது கண்களில் தென்பட்டது சிறிய வடிவிலான ஸ்படிகலிங்கம்!!!
அதை கவனித்தவனது கண்களில் கோபம் கொப்பளித்தது.
அதே கோபத்தோடு அமைதியாக கதவை சாத்திவிட்டு சென்றான் அவன்.
மறுநாள்....
மூடப்பட்டிருந்த அந்த அறை திறந்திருந்தது.அது மிகவும் சுத்தமான,நேர்த்தியான அறையாக மாறி இருக்க,திவாகர் ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்தப்படி ஆடிக் கொண்டிருந்தான்.
அவனது கண்கள் மூடியப்படி ஏதோ சிந்தித்துக் கொண்டிருந்தது.
"ஏங்க..சாப்பிட வாங்க!"-சிவன்யா கத்தியப்படி வர,அவன் மௌனமாய் அமர்ந்திருப்பதை கண்டு திடுக்கிட்டாள்.
"ஏங்க..!"-மெல்ல கண் விழித்து பார்த்தான் அவன்.
"ம்?என்னம்மா?"
"இ்ந்த ரூம் பூட்டி இருந்ததே!எப்படி திறந்தீங்க?"
"இந்த ரூம் சும்மா தான்மா பூட்டி இருந்தது!சாவி போட்டதும் திறந்துவிட்டது!"-என்றான் கேலியாக!
சிவன்யா அவனை சிரிப்பே வரவில்லை என்பது போல பார்த்தாள்.
"சிரிப்பு வரலை?"-அவள் இல்லை என்று தலையசைத்தாள்.
"சரி...உள்ளே வா!ஏன் வெளியே நிற்கிற?"-அவள் அமைதியாக உள்ளே நுழைந்தாள்.உள்ளே நுழைந்த ஓர் நொடி மனதில் ஒரு வித மின்சாரம் பாய்ந்தது அவளுக்கு!!
"ராத்திரி சரியா தூங்கலையா?கண் எல்லாம் சிவந்திருக்கு?"
"உன்னை நினைச்சிட்டு நான் சரியா தூங்கி பல வருஷமாச்சு மதி!"என்றான்.
"மதி?"
"ம்...மதி!உன்னை சின்ன வயசுல எல்லாரும் அப்படி தான் கூப்பிடுவாங்கன்னு மகேஷ் தான் சொன்னான்!எனக்கும் பிடித்து போயிடுத்து!நானும் கூப்பிட்டுகிறேன்!"-அவள் முகம் சட்டென மாறியது.
"எல்லாரும் அப்படி கூப்பிட்டது இல்லை!"என்றாள்.திவாகரின் கண்கள் மேலும் சிவந்தன.
"யார் கூப்பிட்டா என்ன?நான் இனி உன்னை அப்படி தான் கூப்பிடுவேன்!"என்றான்.
"சரி...நீங்க சாப்பிட வாங்க!"
"நீ போம்மா வரேன்!"
"ம்....!"-சிவன்யாவின் மனம் தெளிவாக குழம்பி இருந்தது.
4 வருடங்களுக்கு முன்,நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சக்கரம்,மீண்டும் அதே இடத்தில் இருந்து சுழல்வதாய் ஒரு பிரமை!!
திவாகர் அவள் செல்வதையே கவனித்துக் கொண்டிருந்தான்.அவன் கண்களில் என்றுமில்லாத பகை உணர்வு!!!
தொடரும்
{kunena_discuss:991}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.