(Reading time: 18 - 36 minutes)

ஹேய்… என்னடி இந்த நேரத்துல போன் பண்ணியிருக்குற?...”

“ஒன்னுமில்லை ஜன்ன்ன்னி… சும்மாதான்…” என்ற ஜானவியை ஏகத்துக்கும் திட்டி தீர்த்தாள் ஜனனி…

“ஏண்டி பிசாசே… என் பேரை கொலை பண்ணுறதுக்காகவே மெனக்கெட்டு இப்போ போன் பண்ணிருக்கீயா?...”

“எதுக்குடி இப்படி திட்டுற?... நான் ஆசையா தான கூப்பிட்டேன்?....” என அவள் கொஞ்சம் குரலை கீழிறக்க,

“என்னடி சோக வயலின் வாசிக்குற?... என்னாச்சு?...”

“ஹ்ம்… ஒன்னுமில்லைடி… நீ என்ன பண்ணுற?..”

“ஏண்டி இத கேட்கவா ராத்திரி 11.30 மணிக்கு போன் போட்ட?..”

“ஆமா… வேற என்ன கேட்கணும்?...”

“அடி வாங்காதடி சொல்லிட்டேன்…”

“எதுக்குடி ஜன்னி மறுபடியும் என்னை திட்டுற?..”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜோஷினியின் "ஹேய்... சண்டக்காரா" - இது ஒரு காதல் சடுகுடு...

படிக்க தவறாதீர்கள்...

“ஆ… உன்னை திட்டணும்னு ஆசை அதான்…

“அப்போ திட்டிக்கோ ஜன்னி…”

“திட்டுறதா, வர்ற கோவத்துக்கு உன்னை தூக்கி போட்டு மிதிச்சாலும் தப்பில்லை…”

“எதுக்குடி பாவி இப்படி கொலைவெறி உனக்கு?..”

“பின்ன நீ பண்ணுறது உனக்கே நியாயமா படுதாடீ?...” என்ற ஜனனியின் குரலில் தூக்க கலக்கம் நன்றாகவே தெரிந்தது…

“ஏண்டி, இப்பவே உனக்கு என்ன தூக்கம்?...”

“அதுசரி… ராத்திரி பூரா முழிச்சிருக்க நான் என்ன உன்னை மாதிரி பேயா? பிசாசா?...”

“சரி சரி… கொஞ்சினது போதும்… ஓவரா இன்னைக்கே கொஞ்சாத… நாளைக்கும் கொஞ்சம் மிச்சம் வை…”

“மிச்சம் வேற வைக்கணுமாடி உனக்கு மிச்சம்?... நீ நாளைக்கு ஆஃபீஸ் வாடி.. உன்னை அங்க பேசிக்கிறேன்…” என படபடவென்று ஜனனி பொரிய, மறுமுனையில் சத்தமே இல்லை…

“என்னடி இருக்கீயா இல்லையா?...” என்ற ஜனனியை மீண்டும் ஜானவி வெறுப்பேற்ற ஆரம்பிக்க, ஜனனி தலையில் கைவைத்துக்கொண்டாள்…

“ஏண்டி… உனக்கு நான் என்னடி பாவம் பண்ணினேன்… வீட்டுல எல்லாரும் தூங்கிட்டாங்க… என்னை தூங்க விடுடி… தூக்கம் வேற கண்ணை கட்டுது…” என சொல்லி கொட்டாவி விட, மறுமுனையில் சத்தம் வராமல் சிரித்தாள் ஜானவி…

“தூங்கலாம்… தூங்கலாம்… இப்பவே என்ன அவசரம்…” என அவள் இலகுவாக சொல்ல, ஜனனிக்கு கோபம் தலைக்கேறியது…

“பிசாசே… நீ படுத்துற பாட்டுக்கு நாளைக்கு நான் ஆஃபீஸ்க்கு லீவ் போடுறேன்னா இல்லையான்னு பாரு… தனியா நாளைக்கு வேலை பாரு… அப்பதான் நீ எல்லாம் திருந்துவ… எருமைமாடே…” என திட்டி முடிக்கவும் மணி சரியாக 12-ஐ தொட்டது…

அதற்காகவே காத்திருந்தது போல், “ஹேப்பி பர்த்டே ஜன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னீனீனீனீ டார்லிங்க்….” என போனில் கத்தினாள் ஜானவி…

ஒரு விநாடி திகைத்துவிட்டு சட்டென சுவற்றில் தொங்கிக்கொண்டிருந்த காலண்டரை பார்க்க அது ஆகஸ்ட் 4 என காட்டியது…

முகத்தில் மென்னகை பரவ இருந்தவளை, ஜானவியின் குரல் கலைக்க,

“என்ன டார்லிங்க்… சிரிக்குறீயா?... அதை கொஞ்சம் சத்தமா தான் சிரியேன்… நானும் கேட்பேன்ல….”

“ஜானு…. தேங்க்ஸ்டா…”

“பர்த்டே அதுவுமா எங்கிட்ட திட்டு வாங்காத சொல்லிட்டேன்… இப்போ என்னத்துக்கு நீ தேங்க்ஸ் எல்லாம் சொல்லுற?... நான் உன்கிட்ட கேட்டேனா?...”

“சரி சரி ஜானு… கோச்சிக்காத…”

“ஹ்ம்ம்… இப்போ தூங்கு… நான் மார்னிங்க் பேசுறேன்… அப்புறம் லீவ் எதாவது இன்னைக்கு போட்ட… அவ்வளவுதான்… மரியாதையா ஆஃபீஸ் வந்து சேரு…” என்றவள் மீண்டும் ஒருமுறை விஷ் பண்ணிவிட்டு போனை கட் செய்ய அங்கே ஜனனியின் முகத்தில் சற்றே நிறைவான புன்னகை…

றுநாள் காலையிலேயே ஜனனிக்கு போன் செய்து அம்மாவை பேச வைத்த ஜானு, ஆஃபீஸ் போனதும், ஜனனியைக் கட்டிக்கொண்டு வாழ்த்து சொல்லியதோடு ஒரு கிப்ட் பாக்ஸையும் நீட்டினாள்…

“ஹேய்… விடுடி… என்னை..” என அவளிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்டவள்,

“எதுக்குடி இதெல்லாம்?...” எனக் கேட்க,

“நீ இப்போ ஒபன் பண்ணி பார்க்கப் போறீயா இல்லையா?...” என மிரட்டினாள் ஜானவி…

“சரிடி… பண்ணுறேன்…” என அதை பிரித்தவளுக்கு அந்த பரிசு ரொம்ப பிடித்து போனது…

ப்ளூ கலரில் பூ வேலைப்பாடுகள் நிறைந்த ப்ளவர் வாஸ் அதுவும் கண்ணாடியில்…

“பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு ஜானு…” என்றவளிடம் இன்னும் இரண்டு பரிசை கொடுத்தவள், ஒன்று அப்பா சார்பாகவும், இன்னொன்று அம்மா சார்பாகவும் என சொல்ல, ஜனனிக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.