(Reading time: 18 - 36 minutes)

வன் போனை வைக்கப்போகும் தருணம், “ஒரு நிமிஷம்…” என அவனை தடுத்தாள் அவள்…

“இப்போ என்ன?...” என அவன் எரிச்சலுடன் கேட்க,

ஒரு சிறு மூச்சை வெளியிட்டவள், “ஹேப்பி ப்ரெண்ட்ஷிப் டே…” என்றாள்…

சற்று நேரத்திற்கு அர்னவிடமிருந்து எந்த பதிலும் இல்லை…

“வொர்க் இருக்குன்னு சொன்னீங்கல்ல நீங்க பாருங்க… நான் வைக்குறேன்…” என அழைப்பை அவள் தாமதமாகவே கட் செய்ய, அவனுக்கு என்னவோ போல் ஆயிற்று…

சட்டென ஒரு மெஸேஜ் அனுப்பினான் அவளுக்கு…

போனை வைத்திருந்தவளின் கைகளில் அதிர்வு உண்டாக, யார் மெஸேஜ் அனுப்பியது என்று போனை பார்த்தவள், அதில் தெரிந்த பெயரைக் கண்டதும் உடனே அதை எடுத்து படித்தாள்…

“சாரி…” என்ற மெஸேஜ் பார்த்ததும், மனதினுள் சிரித்தவள்,

“எதுக்கு சாரி?...” என்றாள்…

“சும்மாதான்…” என அவனும் பதிலனுப்ப,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அன்னா ஸ்வீட்டியின் "மனம் கொய்தாய் மனோஹரி" - When U Marry a stranger...

படிக்க தவறாதீர்கள்...

“மூஞ்சியப்பாரு… பக்கி…” என்றாள் அவள்…

பதிலுக்கு அவனும் ஒரு ஸ்மைலியை அனுப்ப,

“இப்படியே சிரிச்சிட்டிருங்க, அது போதும்… இதான் நல்லாயிருக்கு…” என்றாள்…

“ஹ்ம்ம்….” என்று மட்டும் அனுப்பி அவளை வெறுப்பேற்ற அவன் நினைக்க,

“விஷ் பண்ணத்தான் போன் பண்ணினேன்… நீங்க கோபமா இருக்குறீங்கன்னு பேச ஆரம்பிச்சதுமே புரிஞ்சது… அதான் முதலிலேயே சொல்லலை… நீங்க கேட்டதுக்கும் சும்மான்னு சொல்லிட்டேன்… ஹ்ம்ம்… உங்களை டென்ஷன் பண்ணிட்டேன்ல காலையிலேயே…. சாரி…” என்றாள் அவள் மனதிலிருப்பதை மறைக்காமல்…

“நான் தான் சாரி சொல்லணும்… சாரி… கோபத்துல உங்கிட்ட கத்திட்டேன்…”

“ஹேய்… பரவாயில்லை… பிடிச்சவங்க கிட்ட தான கோபத்தை காட்ட முடியும்….”

“ஹ்ம்ம்….”

“இப்ப கூட சொல்லமாட்டீங்களா?...”

“என்ன சொல்லணும்?...”

“ஆ… மூஞ்சி…” என்று திட்டியவள், “ஒன்னுமில்லை…” என்றாள்…

“ஹேப்பி ஃப்ரெண்ட்ஷிப் டே லூசு…” என அவன் சொல்ல, அவளையும் அறியாமல் புன்னகைத்தாள் அவள்…

“என்ன லூசு?... பதிலைக்காணோம்?... எங்க போயிட்ட?...” என அவன் கேட்க,

“இங்க தான் இருக்குறேன்…” என்றாள் மெதுவாக…

“சாப்பிட்டியா?...” என்ற அவனின் குரலில் அக்கறை மட்டுமே தெரிய,

சந்தோஷத்துடன், “ஹ்ம்ம்… சாப்பிட்டேன்… நீங்க?...”

“சாப்பிட்டேன் லூசு…” என்றவன், மீண்டும் நினைவு வந்தவனாக,

“சாரிடி….” என சொல்ல, முகமெங்கும் மலர்ந்து விகசித்து தான் போனது அவளுக்கு…

“என்னடி… கோபமா?...” என அவன் மீண்டும் “டி…” சொல்லி அழைக்க இங்கே அவள் மனமோ குதியாட்டம் போட்டது…

அவளுக்கு அவனை ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்பவே பிடிக்கும்… வார்த்தைகளில் அதனை எப்போதும் வெளிப்படுத்திக்கொண்டே இருப்பது அவளது வேலை… அவனைப் பிடித்திருப்பதற்கு அவளிடம் அளவு எல்லாம் எதுவுமே கிடையாது…

அவனுக்கும் அவளை பிடிக்கும்… ஆனால் அதனை வார்த்தைகளில் அவன் வெளிப்படுத்திக்கொள்ளவே மாட்டான்… அவளிடம் பேசுவான்… ஆனால் அதில் எப்போதும் என்ன?.. சொல்லு… என்ற தொனியே இருக்கும் அதிகம்… அவனாகவே போன் செய்தாலும், சாப்பிட்டியா?... ஹ்ம்ம்… வேறென்ன?.. என்ற கேள்விகளோடு அவன் வாழ்வில் நடந்த சம்பவங்கள் தான் இருக்குமே தவிர, வேறு எதனையும் அவன் வெளிப்படுத்திக்கொண்டதில்லை...

அதிலும் அவன் டி சொல்வது ரொம்ப அரிது… அவளுக்கு தெரிந்து ஒரு ஆணிடத்தில் அவள் நட்பு ஏற்படுத்திக்கொண்டதே அவனிடம் மட்டும் தான்… அதிலும் டி எல்லாம் அவன் ஆரம்பத்தில் சொல்லியதே இல்லை… ஒருநாள் எதேச்சையாக அவன் டி சொல்லும்படி நேர, அந்த கணம் ஏனோ அவள் மனதிலும் இனம் புரியாத ஒரு உணர்வு… அதை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை…

பழக ஆரம்பித்த இத்தனை வருடத்தில் அவன் டி சொல்லியதே இரண்டு மூன்று தடவை மட்டுமே… அதிலும் ஒருதடவை இவள் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல் நீங்க டி சொல்லுறது பிடிச்சிருக்கு என சொல்லிவிட, அதன் பிறகு அவன் அந்த வார்த்தையை சொல்லியதே இல்லை அவளிடம்…

அவளும் அவனை கோப்படுத்தி பார்த்தாவது அந்த வார்த்தையை வாங்கிவிடலாம் என பலமுறை முயற்சித்ததுண்டு… ஆனால் அவனா அவளிடம் சிக்குபவன்?... கழுவுற மீனில் நழுவுற மீனாச்சே அவன்… அவள் என்ன தான் உருண்டு பிரண்டு அவனை கோபமுறச் செய்தாலும் அவன் அசையவே இல்லை… வார்த்தைகளில் மிக கவனமாக இருந்தான்… “சீ… போ…” என்று அவளை வெறுப்பேற்றுவானே தவிர டி சொல்லி அவளை மகிழ்வுற விட்டதில்லை அவன்… அவளும் நொந்து நூலுல்ஸ் ஆகி, இது இன்னைக்கு வேலைக்காகாது இனி என ஒதுக்கிதள்ளிவிட்டு மீண்டும் இன்னொரு நாள் முயற்சித்தாலும், அவனிடம் அவளின் எந்த முயற்சியும் பலிக்கவே இல்லை…

அப்படி இருக்கும்பட்சத்தில், தானாகவே அதுவும் இன்று அவன் டி சொல்ல, அவள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருந்தாள்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.