(Reading time: 11 - 21 minutes)

ன்னையும் அறியாம மாப்பிள்ளை மேல ஒரு உரிமை உணர்வு வந்திருக்கு..நான் ஹாஸ்பிட்டல்லையே அதையெல்லாம் கவனிச்சேன்.அதுமட்டுமில்லாம உன்னை அந்தப் பையன் கூட விட்டுட்டு,சரண் போயிருக்கான்னா..நிச்சயம் நல்ல பையனா இருக்கும்னு தோனுச்சு..”என்றவர் மேலும் விசாரிக்கும் முன்,தன்னுடைய மச்சானிடம்..

“இந்த சரண் நமக்கு எதுவுமே தெரியாதுன்னு நினைச்சுட்டு எல்லா வேலையும் பண்ணிட்டு இருக்கான் மாப்ள..அவனுக்கு முதல்ல ஒரு ஷாக் ட்ரீட்மென்ட் கொடுக்கணும்.இல்லைன்னா பையனுக்கு நம்ம மேல இருக்க பயம் போயிடும்..நீ என்னடா சொல்ற குட்டிமா”என்று மகளிடமும் கேட்டுக்கொண்டார்.

அப்பாவைப் போலத்தானே மகளும் இருப்பாள்..

“கண்டிப்பா ட்ரீட்மென்ட் கொடுத்தே ஆகணும்ப்பா..உங்ககிட்ட இருந்து எவ்வளவு நாள்,அவன் சொல்லாம மறைச்சிருக்கான் பாருங்க”என்று எடுத்து வேறு கொடுத்தாள்.

சாரதி மகனை மருமகளிடம் கூட விட்டுக்கொடுக்காமல்,”நீயும் தான எதுவும் சொல்லாம,அவனுக்கு உதவி செய்திருக்க..உனக்கும் தண்டனை நிச்சயம்..இன்னைக்கு அவன் வரட்டும்..அலற விடறேன்”என்று உறுதியெடுத்துக் கொண்ட சாரதி..அவசரமாக அருகில் இருக்கும் பிரிண்டிங் அலுவலகத்திற்கு சென்று,ஒரே ஒரு திருமண பத்திரிக்கையை மட்டும் அடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்துவிட்டார்.

அதேநேரம் சரணும் வந்துவிடவும்,”வாடா..வந்துட்டியா..இங்க வந்து உட்கார்”என்று பாசமாக அழைக்கவும்..

‘எதுவும் வில்லங்கமா இருக்கப் போகுதுடா..பார்த்துப் பேசு’என்று எச்சரித்துக்கொண்டவனாய்..பவ்யமாய் அப்பாவின் அருகில் சென்று அமர்ந்தான்.

இதில் தூணில் சாய்ந்து நின்ற அவந்திகாவிடம்,”என்ன விஷயம்”என்று சைகையில் கேட்க..அவளோ அழுது வடிந்த முகமாக,தனது நடிப்பை அரங்கேற்றிக் கொண்டிருந்தாள்.

“உனக்கும் செவ்வந்திக்கும் கல்யாணம் முடிவு பண்ணியிருக்கோம்.பத்திரிக்கை கூட அடிச்சாச்சு..”என்று அவன் கையில் கொடுக்க..உலகமே தலைகீழாக சுற்றுவது போல தான் அவனுக்கு தோன்றியது.

“என்னைக் கேட்காம ஏன் இப்படி பண்ணீங்க”

“நீ தானடா செவ்வந்தி +2 படிச்சிட்டு இருக்கும் போது,அவளை காதலிக்கறேன்னு வந்து நின்ன..அப்போ நான் உன்னை என்ன சொல்லி சமாதானம் செய்தேன்னு கொஞ்சம் நினைவுபடுத்திப் பாரு”என்றதும்,அவன் கொசுவத்தி சுருளை சுற்றிவிட்டு..

“செவ்வந்தி காலேஜ் முடிக்கும் போது,கல்யாணம் பண்ணி வைக்கறோம்..அதுவரைக்கும் பொறுமையா இருன்னு சொல்லி அட்வைஸ் பண்ணீங்க”என்றவனுக்கோ நாக்கில் வேப்பங்காயை அழுத்தி தேய்த்த உணர்வு..!!

“நான் சொன்ன மாதிரி நீ பொறுமையா இருக்கும் போது,நான் சொன்னத நிறைவேத்தனுமா இல்லையா..என்ன நான் சொல்றது”என்று விளக்கம் கேட்டு அவனை திணறடித்துக் கொண்டிருக்கும் போது,கோவிலுக்கு சென்றுவிட்டு மல்லிகா வீட்டுக்கு வந்திருந்தார்.

கணவரின் கையில் பத்திரிக்கையை பார்க்கவும்,அதை வாங்கியவருக்கு பரவசத்தில் கண்ணீரே வந்துவிட்டது..

யாரும் இவரை எதிர்பார்க்கவில்லை என்பதால் சூழ்நிலையை கையால தெரியவில்லை..

“என் தங்கம்”என்று அவந்திகாவை கொஞ்சியவர்..

பாண்டியனிடம்..”இவ்வளவு சீக்கிரம் ஏற்பாடு பண்ணுவேன்னு நினைக்கலைண்ணா..உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.என் மருமகளை கண்ணுக்குள்ள வைச்சு பார்த்துப்பேன்”என்று உணர்வுப்பூர்வமாக கூறிவிட்டு,பூஜையறையில் இருந்த அம்பாளின் பாதத்தில் பத்திரிக்கையை வைத்து வணங்கினார்.

சரண் நடப்பது உண்மையென்று நம்பிவிட,அவந்திகாவோ மல்லிகாவிடம் ஒரு வார்த்தை மறுத்துப் பேசவில்லை..

அத்தையை எந்த விதத்திலும் காயப்படுத்தும் துணிவில்லை அவளுக்கு.அவரது பேச்சுக்கு எதிர்பேச்சுப் பேசும் எண்ணமில்லாமல்,எது நடந்தாலும் அதை சுமூகமாக கையாளும் முடிவுக்கு வந்தாள்.

இவர்களின் வீட்டுக்குள் நடக்கும் விவாதம் வெளியாட்களுக்கு தெரியும் முன்னே..இரண்டு பேரின் காதுக்கு...இன்விடேஷன் அடித்த விஷயம் சென்றது.

ஒருவன் யஸ்வந்த்..

இன்னொருவன்.....அவளவன்...அப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கின்றான்.இறுதி மூச்சு வரைக்கும் சொல்வான்.

எஸ்..இறுதி மூச்சு வரைக்கும்!

  

தொடரும்

Episode # 06

Episode # 08

{kunena_discuss:1004}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.