(Reading time: 14 - 28 minutes)

றுநாள் காலையிலேயே சுப்ரபாத தரிசனத்திற்கு ஆஜராகி விட்டான் ராம்.  அவன் இத்தனை சீக்கிரம் வருவான் என்று ஸ்வேதா நினைக்கவே இல்லை. காலையில் ஸ்வேதா ஹரியுடனும், தீபா இன்றைய முன்னணிக் கதாநாயகனுடனும் டூயட் பாடிக் கொண்டிருக்கும்போது காலிங் பெல் சத்தம் கேட்டது.  கனவில் யாரடா அது காலிங் பெல் அடிப்பது என்று கடித்தபடியே இருவரும் டூயட்டை கண்டின்யூ  செய்தார்கள்.  இரண்டு மூன்று முறை காலிங் பெல் அடித்தும் யாரும் கதவைத் திறக்காததால், ராம் ஸ்வேதாவை மொபைலில் அழைத்தான்.

தூக்கக்கலக்கத்துடனேயே ஃபோனை எடுத்த ஸ்வேதா, அது ராமின் கால் என்று தெரிந்தவுடன், அச்சோ இவன் வர முடியாதுன்னு சொல்லப்போறானா  என்ற கலக்கத்துடனேயே கால் பட்டனை ஆன் செய்தாள்.

“என்ன ராம் கார்த்தாலையே கூப்பிட்டு இருக்க.  ஏதானும் அவசர வேலை வந்துடுத்தா,  இன்னைக்கு ப்ரோக்ராம் கான்ஸலா”

“ஏய்... நானே என்னோட ஆள் கூட முதல் முதலா வெளிலப் போகப் போறேன். ஏன் இப்படி அபசகுனமா பேசற.   வெளில வந்து கதவைத் திற.  எத்தனை வாட்டி காலிங் பெல் அடிக்கறது”

“என்னது வெளில நிக்கறியா.  விடிஞ்சு ரொம்ப நேரம் ஆச்சா.  அவ்ளோ நேரமா தூங்கிட்டேன்.  சாரி ராம்.  ஒரே நிமிஷம் வரேன்”, என்றபடியே அவள் ரூமை விட்டு வெளியில் வந்தவள், ஹாலில் இருந்த கடிகாரம் ஆறு மணியானதை அறிவிக்க, கடுப்பாகிவிட்டாள்.  அந்தக் கடுப்புடனே கதவைத் திறந்து ராமை முறைத்தாள் ஸ்வேதா.

“ஹாய் ஸ்வேதா.  என்ன இது மணி ஆறு ஆச்சு இன்னும் கிளம்பாம இருக்க?”

“ஹான்..... ஏன் நீ போய் அங்க வாசத்தெளிச்சு கோலம் போடற ஐடியால இருக்கியா?  எனக்கு அந்த மாதிரி எதுவும் இல்லை, அதனால தூங்கறேன்”

“ஹி ஹி ரொம்ப சீக்கிரம் வந்துட்டேனா....”

“ரொம்ப இல்லை... ரொம்பபபபபப..........”

“அது தீபாக் கூட முதல் வாட்டி வெளில போறேன் இல்லை, so ரொம்ப எக்சைட்டடா  இருந்துது.  தூக்கமே வரலை.  அதான் சரி இங்க வந்தாலாவது அவளை சைட் அடிக்கலாம் அப்படின்னு கிளம்பி வந்துட்டேன்.  எங்க தீபா”

“மணி என்ன ஆறா.... இப்போதான் தீபாக்கு  midnight ஆகி இருக்கு... இன்னும் குறைந்த பட்சம் ஒரு நாலுலேர்ந்து அஞ்சு மணிநேரம் தூங்குவா”

“என்னது பத்து மணிக்குதான் எழுந்துப்பாளா... அதெல்லாம் வேலைக்காகாது.  அவளை சீக்கிரம் எழுப்பு.  எத்தனை நேரம் நான் உன்னோட ரம்பம் போடறது”

“அடப்பாவி உனக்கு வந்து கதவைத் திறந்தேன் பாரு..... என்னை சொல்லணும்..... அப்படியே குளிர்லையே நில்லுன்னு விட்டிருக்கணும்”

“கோச்சுக்காத ஸ்வேதா.   அவளை எழுப்பி விடேன்.  எத்தனை நேரம்தான் நீயும் நானுமே பேசிட்டு இருக்கறது”

“ஏன் இன்னைக்கு சனிக்கிழமை அப்படிங்கறதால சனி பகவான் உன் வாழ்க்கையோட விளையாடினா பரவாயில்லையா.  தீபா சாதாரணமா நான் கோவிலுக்கு போகலாம்ன்னு ஒரு ஒன்பது மணிக்கு எழுப்பினாலே அந்தக் காய் காய்வா.  இதுல நீ ஆறு மணிக்கு எழுப்ப சொல்ற.... உன் காதல் அப்பறம் கந்தல்தான் பரவாயில்லையா....”

“வேண்டவே வேண்டாம் தாயே.... உன் திருவாயை வைக்காத.  அவளே எழும்பும்போது  எழும்பட்டும்”, ராம் டெபாஸிட் இழந்த அரசியல்வாதியாக பின்வாங்கினான்.

பின்னர் ஸ்வேதா சென்று இருவருக்கும் காஃபி கலந்து வர.... அதை அருந்தியபடியே பேசிக்கொண்டிருந்தார்கள்.  அன்று ராமை சனி பகவானுக்கு பதிலாக குரு பகவான் பார்த்துவிட்டார் போல.  உலக அதிசயமாக தீபா எட்டு மணிக்கே எழுந்து வந்தாள்.

அரை குறை தூக்கத்தில் இருந்த தீபாவிற்கு அங்கிருந்த ராமைத் தெரியவில்லை...  அவன் அமர்ந்திருந்த மூவர் அமரும் சோஃபாவில்  நன்றாக கால் நீட்டிப் படுத்து போதாத குறைக்கு தலையை வேறு அவன் மடியில் வைத்துத் தன் தூக்கத்தைத் தொடந்தாள்.  ஸ்வேதாவால் சிரிப்பை அடக்க முடியவில்லை.  ராம் இறக்கை இல்லாமலேயே வானில் பறக்க ஆரம்பித்தான்(வாழ்வுதான் உனக்கு ராம்).  எட்டு மணிக்கு ஜாக்கிங் முடித்து வந்த ஹரி கண்டது இந்தக் காட்சியைத்தான்.  என்னடா நடக்குது இங்க என்று குழம்பிவிட்டான் ஹரி.

“ஏய் ஸ்வேதா என்ன இது.  தீபாவும், ராமும் லவ் பண்றாளா.  நான் கேட்டதுக்கு ராமை அவ்வளவா தெரியாதுன்னு சொன்னா”, ஹரி ஸ்வேதாவின் காதுக்கருகில் கிசுகிசுத்தான்.

“ஹான் அதெல்லாம் இல்லை.  தீபா தூக்கக் கலக்கத்துல வந்து ராம் மடில படுத்துட்டா”, முதலில் ராம் லவ் பண்ணுவதை ஹரியிடம் சொல்லலாமா என்று யோசித்த ஸ்வேதா, பின்னர் தாங்கள் ஹரியை வெறுப்பேற்ற போட்ட திட்டம் அப்பறம் பிசுபிசுத்துவிடும் என்பதால் அதை சொல்லாமல் விட்டுவிட்டாள்.

“ஹேய் என்ன நீ.... கூலா சொல்லிட்டு சிரிச்சிண்டு இருக்க..... அவளை எழுப்பி விடு.  அப்பறம் ரொம்ப ஆக்வார்டா ஃபீல் பண்ணுவா அவ....”, ஹரி கூற, தனக்கு வில்லனாக வந்த ஹரியை ராம் முறைக்க, ஸ்வேதா சிரித்தபடியே சென்று தீபாவை எழுப்பினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.